Home வன்கொடுமைப் பதிவுகள்

வன்கொடுமைப் பதிவுகள்

சாகடிக்கும் சாதி… எப்போது கிடைக்கும் நீதி? – நந்தீஷ் – சுவாதி படுகொலை…

இவர்களுக்கு எங்கே வலிக்கிறது… இல்லை, எங்கே நோகிறது என்று புரியவில்லை. இன்னும் எத்தனைக் காலம்தான் இப்படிக் காதல் மணம் புரிந்தவர்களைக் படுகொலை செய்து தங்களின் ஆதிக்கச் சாதியின் ‘பெருமை’யை நிலைநாட்டுவார்கள் என்பதும் தெரியவில்லை. அள்ளி அணைத்து, ஆசை ஆசையாய் முத்தமிட்டு, தோளிலிலும் மாரிலும் சீராட்டி வளர்த்த பிள்ளையையே கொடூரமாகக் கொலை செய்ய வைக்கிறது சுய சாதிப் பெருமை. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், கெவின் ஜோசப் வரிசையில் சாதியத்துக்கு இரையாகியுள்ளனர் ஓசூரைச் சேர்ந்த இளம் தம்பதியர் நந்தீஷ் – சுவாதி. பெண்ணின் தந்தையும் உறவினர்களுமே இந்த …

ஆத்தூர் சிறுமி கழுத்தறுத்து படுகொலை – எவிடன்ஸ் அறிக்கை.

தலையில்லாத என் மகளின் முண்டம் துடித்தது… வீட்டிற்குள் வீச்சரிவாளோடு உள்ளே வருகிறான் தினேஷ்குமார். சின்னப்பொண்ணுவும் அவரது 13 வயது மகள் ராஜலெட்சுமியும் பூக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். ராஜலெட்சுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் பற தேவிடியா முண்ட என்று அரிவாளால் வெட்ட முயல, அவனது கால்களைப் பிடித்துக் கொண்டு என் மகளை ஒன்றும் செய்துவிடாதே என்று கெஞ்சுகிறர் சின்னப்பொண்ணு. தள்ளிப்போடி பறத் தேவிடியா என்று சொல்லிக் கொண்டே ராஜலெட்சுமியின் பின்கழுத்தில் ஓங்கி வெட்டுகிறான் தினேஷ்குமார். வெட்டப்பட்டு ரத்த கசிந்த நிலையில் கிடந்த ராஜலெட்சுமியை …

`நாங்கள் எப்போதும் உடனிருப்போம்’ – அம்ருதாவை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல்

ஆந்திராவில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரனய் குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் வி.சி.க தலைவர் திருமாவளவன். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா  பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடைய தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த மாதம் 14-ம் தேதி மதியம் மருத்துவமனைக்குச் சென்றபோது மருத்துவமனை வாசலிலேயே பிரனயை கூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் வெட்டிச் …

`கணவரின் ஆணவக்கொலைக்கு நீதி வேண்டும்’ – பிரனய் மனைவி அம்ருதா உருக்கம் #JusticeForPranay

தெலங்கானாவில் 2 நாள்களுக்கு முன்னால், கர்ப்பிணி மனைவி (அம்ருதா)யின் கண்ணெதிரே கணவனை ஆணவக்கொலை செய்த சம்பவம் நாடு முழுக்க ஒரு பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது.  பிரனய்  பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்துக்காக, அம்ருதாவின் அப்பா இந்த கொடுஞ்செயலை செய்தார். தற்போது, அம்ருதா, தன் கணவர் பிரணயின் கொடூரமான மரணத்துக்கு நீதி வேண்டி, ‘ஜஸ்டிஸ் ஃபார் பிரனய்’  முகநூல் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே, ஆயிரக்கணக்கானோர் அவருடைய பக்கத்தை லைக் செய்ததோடு, அவருடைய போராட்டத்துக்கு தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.   அம்ருதா …

‘Casteism killed Pranay, we must uproot caste’: 21-year-old Amrutha vows to fight

Pranay was murdered in broad daylight on September 14, and his wife, Amrutha, has alleged that her father and uncle masterminded the crime. A pall of gloom has descended over Muthireddy Kunta in Telangana’s Miryalaguda. The streets which resonated with the slogans of ‘Jai Bhim’ and ‘Johar Pranay’ on Sunday evening now were shrouded in silence. The streets leading to …

கண்முன்பே கொல்லப்பட்ட காதல் கணவன்… நிலைகுலைந்த கர்ப்பிணி மனைவி.. அதிரவைத்த ஆணவக்கொலை!

தெலங்கானாவில் பட்டப்பகலில் மருத்துவமனை வளாகத்தில் காதல் மனைவி முன்பு கணவன் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்னும் பெண்ணைக் காதலித்து வந்தார். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளி நட்பு காதலாக மாறியது. அம்ருதாவின் தந்தை மாருதிராவ் ஒரு தொழிலதிபர். பிரனய் -அம்ருதா காதல் விவகாரம் இருவர் வீட்டிலும் தெரியவர பிரச்னை வெடித்தது. பிரனய் பட்டியலினச் …

கோகுல்ராஜ் வழக்கில் உண்மைகளை மறைத்தாரா ஸ்வாதி?

சேலம் பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அரசு தரப்பு வழக்கறிஞராக சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதியும், கோகுல்ராஜ் தாயாரின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜும் ஆஜராகி வருகிறார்கள். கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வனின் வாக்குமூலமும், குறுக்கு விசாரணையும் முடிவடைந்த பிறகு, இவ்வழக்கின் முக்கியச் சாட்சியான ஸ்வாதியிடம் ரகசிய விசாரணையும், திறந்தவெளி விசாரணையும் நடைபெற்றது. அதற்காக ஸ்வாதி முகத்தை மூடியவாறு தன் பெற்றோர்கள், உறவினர்கள் …

ஒரு கொடி, ஒரு இளவட்டக் கல், ஒரு மஞ்சுவிரட்டு – சாதிப் படுகொலை

பிணவறையின் வெளியே உள்ள திண்டு ஒன்றில் சடலமாக கிடந்தார் சபரீஸ்வரன். அவரது கிழிக்கப்பட்ட வயிற்று பகுதியை நூலால் தைத்துக் கொண்டிருந்தார் பிணம் அறுக்கும் தொழிலாளி. பிணம் தான் அதற்காக அம்மணமாக போட்டிருக்க வேண்டுமா? யாராவது ஒரு துணியைக் கொண்டு போர்த்துங்கள் என்று ஒரு பெரியவர் நெஞ்சுருகி கலங்கிக் கொண்டிருந்தார். ஐயா, கொலைகாரர்களுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுங்கள் என்று ஒரு பெரியவர் என் கைகளைக் பிடித்து கொண்டு விடாமல் பொறுமிக் கொண்டிருந்தார். நானூறுக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அழுது அழுது பலமின்றி …

‘தலித் சமைத்தால் சாப்பிட மாட்டோம்’ – அவிநாசியில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாரத்தில் உள்ள திருமலைக்கவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு தீண்டாமை வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த (ஜூலை) மாதம் 16ஆம் தேதி அவிநாசி வட்டாரம் ஒச்சாம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்த பாப்பாள் என்பவர் திருமலைக்கவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பணி மாறுதல் பெற்று வந்துள்ளார். அன்றைய நாள் முதலே அந்த பள்ளியில் அவரை சமைக்க அனுமதி மறுத்துள்ளனர் அந்த ஊரை சேர்ந்த ஒரு குறிப்பிடட பிரிவை சேர்ந்த மக்கள். …

சாதி உணவான சத்துணவு!

வெட்கமும் குற்றவுணர்வும் அருவருப்பும் இல்லாமல் சாதி நோய் பிடித்த மனிதர்களால் தலித் பெண் பாப்பாள் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவிநாசி அருகில் உள்ள திருமலைகவுண்டன்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையல்காரர் பாப்பாள். தலித் பெண் சமைக்கின்ற உணவினை எங்களது குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அந்த பெண் சமைக்கக்கூடாது. பாப்பாள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக்கூட வளாகத்திற்குள் அத்துமீறி உள்ளே வந்து தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர் சாதி வெறியர்கள். எட்டு வழி சாலை கூடாது என்று போராடுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ளுகிற மாநில அரசு …

123Page 1 of 3

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

அன்னை ஓரு ஆலமரம்

எனது அன்னை திருமதி,த மீனாம்பாள் சிவராஜ் அவர்கள், மறைந்து மூன்றாண்டுகள் ஆகிறது. எனது நினைவலைகளில் அம்மாவின் முகம் நிழலாடிக் …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,221 other subscribers

Stay Connected