Home வன்கொடுமைப் பதிவுகள் (page 2)

வன்கொடுமைப் பதிவுகள்

தலித் காலனியில் உள்ள பள்ளியை புறக்கணிக்கும் இதர சமூகத்தினர்!

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள கோவிந்தவாடி அகரம் ஊராட்சி அரசுப் பள்ளி தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே, நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அதன்படி, தற்போது தலித் காலனியில் பள்ளி இருக்கும் இடத்திலேயே புதிய பள்ளிக் கட்டடத்தை கட்ட வேண்டும் என ஒரு பிரிவினரும், நபார்டு வங்கி நிதியின் மூலம் புதிய இடத்தில் பள்ளிக் கட்டடம் கட்ட வேண்டும் என மற்றொரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த பள்ளிக்கு, புதிய கட்டடம் கட்டுவதற்கு 3 கோடியே 77 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் 22 வகுப்பறைகள், …

மேலவளவு – கொடூர சாதி வெறி

வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்குகளில் மிகவும் கொடூரமானதும் துணிகரமானதுமான வன்கொடுமை, மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். 30.6.1997 அன்று நடைபெற்ற சம்பவம் தொடங்கி இன்றுவரை அவ்வழக்கு சந்தித்துள்ள / சந்தித்து வரும் திருப்பங்கள் திடுக்கிடச் செய்பவை. அவை குறித்து தனிப் புத்தகம் எழுதுமளவிற்கு தகவல் களஞ்சியம் கொண்டது அது. இவ்வழக்கில் குற்றவாளிகள் சார்ந்துள்ள ஆதிக்க சாதியினர், காவல் துறையின் பல்வேறு தகுதி நிலையிலான அதிகாரிகள், நீதித்துறையில் உள்ள பல்வேறு நீதிபதிகள், தலித் இயக்கங்கள் ஆகியோரின் பங்கேற்பு வன்கொடுமை …

கிணற்றில் குளித்ததற்காக 3 தலித் சிறுவர்கள் நிர்வாணமாக தாக்கப்பட்ட கொடூரம்

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோம் மாவட்டத்தில் உள்ள வகாதி என்ற கிராமத்தில் இருக்கும் கிணற்றில் கடந்த 10-ம் தேதி மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவர்களை ஆடைகளை அணிய விடாமல், நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர். சாதி வேறுபாடுகள் இந்தியாவில் இல்லை என்று கூறிக்கொண்டாலும், சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் இங்கு இன்று வரை குறையவில்லை, என்பதே ஒரு சோகமான உண்மை. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜால்கன் மாவட்டத்தில், இது போன்ற சாதி பாகுபாடு இன்றும் காணப்படுகிறது. இதனை சமீபத்தில் நடைபெற்றிருக்கும் …

சாவு ருசிகண்ட சாதி வெறி!

சாதிவெறி என்பது இந்தியாவின் தேசிய நோய் என்பதை நிரூபித்திருக்கிறது கேரளமும். காதலித்தவரையே கரம் பிடித்த மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த நீனுவின் சந்தோஷம், கல்யாணம் முடிந்த மூன்றாவது நாளே தொலைந்துவிட்டது. கணவர் கெவின் ஜோசப் ஆணவக்கொலைக்குப் பலியாக, கதறித் துடித்துக்கொண்டிருக்கிறார் நீனு. கோட்டயம் அருகே உள்ள நட்டாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கெவின் ஜோசப்புக்கும் நீனுவுக்கும் கல்லூரியில் படிக்கும்போது காதல் மலர்ந்துள்ளது. தென்மலையைச் சேர்ந்த நீனு, கோட்டயத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கிப் படித்தார். கோட்டயம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மே 25-ம் தேதி நண்பர்கள் உதவியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். …

“சுயமரியாதையோடு வாழறது தப்பா?” – கதறும் கச்சநத்தம்

தொடர்ச்சியாக நாடு முழுக்க நடக்கும் படுகொலைகளின் பட்டியலில் ஒன்றாகக் கரைந்துபோகாமல்,  கொடூரத்தன்மை காரணமாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம் காரணமாகவும் தமிழ்ச் சமூகத்தின் பொதுவெளிக்கு வந்திருக்கிறது கச்சநத்தம் படுகொலை. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் பட்டியலின மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்,  தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. இச்சம்பவத்தில் 3 பேர் இறந்துள்ளனர். இன்னும் 5 பேர் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்   தெய்வேந்திரனும், அவரது நண்பர் பிரபாகரனும், கால் மேல் கால் போட்டுத் தேநீர் அருந்திக்கொண்டிருந்ததைப் பொறுத்துக் கொள்ள …

கச்சநத்தம் மேலும் ஒருவர் பலி

கச்சநத்தம் கிராமத்தில் சாதி வெறியர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் பட்டியல் சாதி பள்ளர் சமூகத்தை சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.ஆறு பேர் கடும் காயத்துடன் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தனர்.இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் சிகிச்சை எடுத்துவந்த சந்திரசேகர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். லாரி ஓட்டுனராக பணியாற்றும் சந்திரசேகர் அவர்களுக்கு தவமணி என்கிற மனைவியும் 6 வயதில் மகளும் 5 வயதில் மகனும் இருக்கின்றனர்.

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கொலைகள்

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கொலைகள் சாதிய கொலைகளின் முதன்மை மாவட்டமாக சிவகங்கை சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், பழையனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் கச்சநத்தம். இக்கிராமத்தில் வசித்து வருகிற இந்து பட்டியல் சாதி பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் (31) த.பெ.அறிவழகன் மற்றும் ஆறுமுகம் (65) த.பெ.கோனான் ஆகியோரை சுமார் 20 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் நேற்று 28.05.2018 அன்று இரவு சுமார் 9.00 மணியளவில் அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தனசேகரன், …

“நான் தாலி வாங்கிட்டு இருந்தப்ப, அவளை அங்க கொன்னுட்டாங்க!’’ – ஆணவக்கொலையால் கதறும் ராணுவ வீரர்

கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தலித் சமூகத்தைச் சார்ந்த பிரிஜேஷுக்கும், ஈழுவச் சமூகத்தைச் சேர்ந்த ஆதிராவுக்கும் திருமண ஏற்பாடுகள் படுஉற்சாகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. திருமணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். பெண்ணுக்குத் திருமணப் புடவையும் தாலியும் மட்டுமே வாங்க வேண்டும். திருமணத்துக்கு ஒரு நாள் முன்னதாக உறவினர்களுடன் சென்று மணமகளுக்கான பட்டுப்புடவையும் தாலியும் வாங்கிக்கொண்டிருந்தார் மாப்பிள்ளை பிரிஜேஷ்.  உறவினர்கள், திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தனர். அப்போது டிவி-யில் ஸ்க்ராலிங் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. அதில், `திருமணத்துக்கு ஒருநாள் முன்னதாக மணமகள் கொல்லப்பட்டதாக ஒரு செய்தி. அடுத்த வரியில் `கொல்லப்பட்டவரின் பெயர் ஆதிரா ராஜன்’ எனக் …

உலர் கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பக கட்டுமான (தடை) சட்டம்

3.14 உலர் கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பக கட்டுமான (தடை) சட்டம் 1993. விதிகள். 1997.   3.14.1. உலர கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பக கட்டுமான (தடை) சட்டம் 1993.   46வது சட்டம் 1993 ஜுன் 5 1993   இச்சட்டம் உலர் கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளுவதையும் மற்றும் உலர் கழிப்பக கட்டு மானத்தையும் அல்லது இவற்றை தொடர்வதையும் தடை செய்கிறது. மேலும் உலர் …

கம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய சுந்தர்பான் – மரிச்சபி தலித் இனப் படுகொலை

இனப்படுகொலை எத்தனை பயங்கரமானதென நாம் அறிந்தே இருந்தோம். அது, மனிதநேயமும் நெறிகளும் முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் மீறலென நமக்கு தெரியும். வெறுப்புணர்வு எவ்வளவு வீரியமிக்கதென, மனித உயிர்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட வரலாறு நமக்குச் சொல்லியது. எனினும் மிக அண்மையிலும், மிக அருகிலும் இனப்படுகொலையின் நிகழ்காலப் பேரவலம் நடந்தேறியிருக்கிறது. இனவெறித் தாக்குதல்களின் வரலாறாகப் படித்தறிந்தவை எல்லாம் – இத்தனை நெருக்கத்தில் பார்வைக்கு கிடைக்குமென நாம் நம்பியிருக்கவில்லை. ஈழத்தின் கொலைக் களத்திலிருந்து தெறித்து விழுந்த ரத்தத்தின் கறை, நம் முகங்களில் காய்ந்து அப்பியிருக்கிறது. நாமெல்லோரும் அதை நினைத்து …

123Page 2 of 3

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

ஷெட்யூல்டு வகுப்பினரின் துயரங்கள்

பிரிட்டிஷ் இந்தியாவில் வாழும் ஷெட்யூல்டு வகுப்பினரின் குறைகளை எடுத்துக்கூறி, அவற்றிற்கு தீர்வுகாண அவசியப்படும் நடவடிக்கைகள் பற்றி யோசனைகளை வழங்குகிறது …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,226 other subscribers

Stay Connected