Home Dr.அம்பேத்கர் எழுத்தும் பேச்சும்

எழுத்தும் பேச்சும்

மகளிரும்  எதிர்ப்புரட்சியும்

மகளிரும்  எதிர்ப்புரட்சியும் டாக்டர் அம்பேத்கர் ……………..மநு, சூத்திரர்களைவிட  மகளிரிடம்  அதிக அன்புகாட்டியவர் என்று சொல்லவிட  முடியாது.  பெண்களைப் பற்றி மிக மோசமான  கருத்துடன்  மநு தொடங்கு கிறார். அவர் கூறுகிறார். 2.213 இவ்வுலகில்  ஆண்களை மயக்குவதே  பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும்  விழிப்புடனிருக்கிறார்கள். 2.214 இந்த உலகில்  முட்டாளை  மட்டுமின்றி  அறிவாளியையும்  தவறான  வழிக்கு  இட்டுச் செல்வதுடன்,  ஆசைக்கும்,  கோபத்திற்கும்  அவர்களை அடிமையாக்குவதில்  வல்ல வர்கள் பெண்கள். 2.215 தாய், மகள், சகோதரி  எப்பெண்ணுடனும் தனியிடத்தில்  அமர்தல் கூடாது. புலன்கள் …

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் செய்தி

என்னுடைய 55வது பிறந்த நாளை முன்னிட்டு உங்களுடைய சிறப்பு மலருக்கு ஒரு செய்தி அனுப்புமாறு என்னை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவில் அரசியல் தலைவர் தீர்க்கதரிசியின் அந்தஸ்தில் வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது துரதிருஷ்டவசமான உண்மை யாகும். இந்தியாவுக்கு வெளியில் தமது தீர்க்கதரிசிகளின் பிறந்த நாளை மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் மட்டுமே தீர்க்கதரிசிகளின் பிறந்த நாட்கள் போன்றே அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களும் கொண்டாடப் படுகின்றன. அது இவ்வாறு இருப்பது பரிதாபத்திற்குரியதே. தனிப்பட்ட முறையில், என்னுடைய பிறந்த நாள் கொண்டாடப் படுவதை நான் விரும்பவில்லை. நான் …

இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டும்

நண்பர்களே! தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான் பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில் நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. நமது மனிதமே நசுங்குமளவுக்குப் பெரும் சுமைகளை சுமந்தோம் என்னும் குறைபாடு, நமக்கு இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நமது போராட்டத்தால் …

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஏன் நீதிபதியாகவில்லை?

அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே! நான், பஞ்சாப் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்பே எண்ணியிருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது… நான் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அனைவரிடம் பேச வேண்டும் என்று, இந்தியா முழுவதும் உள்ள தீண்டத்தகாத மக்கள் விரும்புகிறார்கள். இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய துணைக் கண்டத்தில் ஒரு தனி மனிதரால் இரண்டு ஆண்டுகளில் கூட, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்துவிட முடியாது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, மக்களின் விருப்பங்களை நிறைவு செய்ய …

சூத்திரர் என்போர் யார்?

சூத்திரர்கள் ஆரியரல்லாத பூர்வகுடி இனத்தவராக இல்லையெனில் அவர்கள் யார்? இக்கேள்வியை இப்போது நாம் எதிர்கொள்ள வேண்டும். நான் முன்வைக்கப் போகும் கொள்கை நிலையை பின்வரும் மூன்று கருத்துக்கள் தெளிவுபடுத்தக்கூடும்: 1) சூத்திரர்களும் ஆரியர்களே. 2) சூத்திரர்கள் சத்திரிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 3) பழங்கால ஆரிய சமுதாயத்தினரின் மிகச் சிறந்த சக்தி வாய்ந்த மன்னர்களில் சிலர் சூத்திரர்களாக இருந்தனர் என்பதால் சூத்திரர்களும் சத்திரியர்களின் ஒரு முக்கிய வர்க்கத்தினராக இருந்தனர். சூத்திரர்களின் தோற்றுவாய் சம்பந்தப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரை ஒரு புரட்சிகரமான ஆய்வுக்கட்டுரையாக இல்லாவிடினும் திகைப்படையச் …

பௌத்த மதமாற்றப் பேருரை

பௌத்த மதமாற்றப் பேருரை    பத்தாண்டு கால இடையறாத சமூகப் போராட்டத்தின் பின்னணியில் இன்றைய அரசியல், சமூக நிலைமைகளை மீள்பார்வை செய்யும் நோக்கில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் மாநாடு ஒன்றை 1935, ஞாயிற்றுக் கிழமையன்று, நாசிக் மாவட்டம் இயோலாவில் நடத்தத் தீர்மானித்தார். 1935, அக்டோபர் 12 சனிக்கிழமையன்று காலை 11 மணிக்கு டாக்டர் அம்பேத்கர் நாசிக்கை அடைந்தபோது, அவர் பெரும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டு பெரும் ஊர்வலத்துடன் நகரத் திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், நாசிக் நகரில் ஒரு நூலகத்தை அவர் …

சாதிகளால் பிளவுண்ட மக்கள் ஒரு தேசமாக முடியுமா?

சமூக, பொருளாதார வாழ்க்கை முறைகளில் இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் இன்னும் சமத்துவத்தை மறுக்கப் போகிறோம்? நாம் நீண்ட நாட்களுக்கு இதை மறுத்தால், அரசியல் ஜனநாயகத்தை ஆபத்தில் தள்ளுவதில்தான் அது முடியும். நாம் இந்த முரண்பாடுகளை மிக விரைவில் அகற்றியாக வேண்டும். இல்லையெனில், சமமற்றத் தன்மையால் பாதிக்கப்படும் மக்கள், நாம் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பையே தகர்த்தெறிந்து விடுவர். இரண்டாவது முக்கியத் தேவை, சகோதரத்துவக் கொள்கைக்கான அங்கீகாரம். சகோதரத்துவம் என்றால் என்ன? அனைத்து இந்தியர்களையும் சகோதரர்களாகக் கருதும் ஒரு உணர்வு – …

மனு நீதி எரிப்போம் மகத் நீரைக் குடிப்போம்

பெருமக்களே,  சத்தியாக்கிரகக் குழுவின் அழைப்புக்கிணங்க வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவரையும் குழுவின் தலைவன் என்ற முறையில் நான் அன்புடன் வரவேற்கிறேன். மார்ச் 19ம் நாள் நாம் அனைவரும் இங்கு சவுதார் குளத்திற்கு வந்திருந்ததை உங்களில் பலர் நினைவில் வைத்திருப்பீர்கள். மஹதைச் சேர்ந்த சாதி இந்துக்கள்.  நம்மீது எந்தத் தடையும் விதிக்கவில்லை . ஆனால் நாம் இங்கு வந்ததற்கான எதிர்ப்பை அவர்கள் நம்மைத் தாக்கியதன் மூலம் வெளிப்படுத்தினார்கள். அந்தச் சண்டை ஒருவர் எதிர்பார்க்கத்தக்க விளைவுகளையே ஏற்படுத்தியது ஆவேசம் கொண்ட சாதி இந்துக்கள் நான்கு மாதக் கடுங்காவலுக்குட்பட்டு …

அறிவாற்றல் இல்லையெனில் அரசியல் அதிகாரம் இல்லை

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ் உழைக்கும் வர்க்கங்கள் வாழ நேரிடுமாயின், அதைத் தங்கள் நலன்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அந்த வர்க்கங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைய வேண்டுமானால், இரண்டு செயல்களை அது செய்ய வேண்டும் என்பது என் கருத்து. முதலாவதாக, தொழிற்சங்கங்களை அமைப்பதை மட்டுமே இந்தியாவில் தொழிலாளர்களின் இறுதி லட்சியமாக, குறிக்கோளாகக் கொள்வதைக் கைவிட வேண்டும். அரசாங்கம் தொழிலாளர் கைகளுக்கு வருவதைத் தனது லட்சியமாக அது பிரகடனப்படுத்த வேண்டும். இதன் பொருட்டு, ஒரு தொழிலாளர் கட்சியை ஓர் அரசியல் …

காந்தியின் உண்ணாவிரதம்

தீண்டப்படாதவர்கள் குறித்தும், அரசியல் சட்டப்பாதுகாப்புகள் வேண்டுமென்ற அவர்களது கோரிக்கைகள் குறித்தும் வட்டமேசை மாநாட்டில் திரு.காந்தி காட்டிய மனப்பான்மை சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிக்கை, 19 செப்டம்பர் 1932 மகாத்மா காந்தி, சர் சாமுவேல் ஹோர், மற்றும் பிரதமர் ஆகியோரிடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்தை அண்மையில் பத்திரிகைகளில் படித்தேன். பிரிட்டிஷ் அரசாங்கம் தானாகவே முன்வந்தோ அல்லது பொதுஜன அபிப்பிராயத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டோ தனது கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும், இல்லையேல் நான் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளமுடிவு செய்துள்ளேன் என்று திரு. காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததைப் படித்துத் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தேன். …

12Page 1 of 2

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

குழந்தை திருமண ‘தனிப்பட்ட சட்டங்களை’ மக்களிடையே பரப்பி வரும் ‘மத ஏஜென்ட்கள்’ குற்றவாளிகளாக்கப்படவேண்டும்

பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமைக் குற்றமாகும் என இந்தியத் தலைமை நீதிமன்றம் …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,093 other subscribers

Stay Connected