Home Dr.அம்பேத்கர் எழுத்தும் பேச்சும் (page 2)

எழுத்தும் பேச்சும்

அறிவாற்றல் இல்லையெனில் அரசியல் அதிகாரம் இல்லை

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ் உழைக்கும் வர்க்கங்கள் வாழ நேரிடுமாயின், அதைத் தங்கள் நலன்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அந்த வர்க்கங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைய வேண்டுமானால், இரண்டு செயல்களை அது செய்ய வேண்டும் என்பது என் கருத்து. முதலாவதாக, தொழிற்சங்கங்களை அமைப்பதை மட்டுமே இந்தியாவில் தொழிலாளர்களின் இறுதி லட்சியமாக, குறிக்கோளாகக் கொள்வதைக் கைவிட வேண்டும். அரசாங்கம் தொழிலாளர் கைகளுக்கு வருவதைத் தனது லட்சியமாக அது பிரகடனப்படுத்த வேண்டும். இதன் பொருட்டு, ஒரு தொழிலாளர் கட்சியை ஓர் அரசியல் …

காந்தியின் உண்ணாவிரதம்

தீண்டப்படாதவர்கள் குறித்தும், அரசியல் சட்டப்பாதுகாப்புகள் வேண்டுமென்ற அவர்களது கோரிக்கைகள் குறித்தும் வட்டமேசை மாநாட்டில் திரு.காந்தி காட்டிய மனப்பான்மை சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிக்கை, 19 செப்டம்பர் 1932 மகாத்மா காந்தி, சர் சாமுவேல் ஹோர், மற்றும் பிரதமர் ஆகியோரிடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்தை அண்மையில் பத்திரிகைகளில் படித்தேன். பிரிட்டிஷ் அரசாங்கம் தானாகவே முன்வந்தோ அல்லது பொதுஜன அபிப்பிராயத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டோ தனது கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும், இல்லையேல் நான் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளமுடிவு செய்துள்ளேன் என்று திரு. காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததைப் படித்துத் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தேன். …

அண்ணல் அம்பேத்கர் வெளியிட்ட தேர்தல் அறிக்கை (பகுதி – 2)

வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்று எண்ணும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். தன் நலனைவிட, பொது நலனே முக்கியம் என்பதை நம்பும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும்.வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்று எண்ணும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். தன் நலனைவிட, பொது நலனே முக்கியம் என்பதை நம்பும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு (Scheduled Castes Federation), பட்டியல் சாதியினருக்காக நிறுவப்பட்ட அகில இந்திய அரசியல் கட்சியாகும். இனிவரும் பக்கங்களில் அதன் கோட்பாடுகள், கொள்கை, செயல் …

ஷெட்யூல்டு வகுப்பினரின் துயரங்கள்

பிரிட்டிஷ் இந்தியாவில் வாழும் ஷெட்யூல்டு வகுப்பினரின் குறைகளை எடுத்துக்கூறி, அவற்றிற்கு தீர்வுகாண அவசியப்படும் நடவடிக்கைகள் பற்றி யோசனைகளை வழங்குகிறது இந்த கோரிக்கை மனு. குறைகளைப் பட்டியலிட்டுக் கூறும்போது, மத்திய சர்க்காரால் மட்டுமே தீர்வு காணக்கூடிய குறைகளை மட்டுமே நான் கவனத்தில் கொண்டேன். இந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள குறைகள் மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டு தனியாக விவாதிக்கப்பட்டுள்ளன: (1)அரசியல் ரீதியான குறைகள் (2) கல்வி சார்ந்த குறைகள் (3)மற்ற குறைகள் அரசியல் குறைகளை பகுதி I பரிசீலிக்கிறது; பகுதி II கல்வி சார்ந்த குறைகளையும்: பகுதி III …

அண்ணல் அம்பேத்கர் வெளியிட்ட தேர்தல் அறிக்கை

வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்று எண்ணும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். தன் நலனைவிட, பொது நலனே முக்கியம் என்பதை நம்பும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும்.வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்று எண்ணும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். தன் நலனைவிட, பொது நலனே முக்கியம் என்பதை நம்பும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு (Scheduled Castes Federation), பட்டியல் சாதியினருக்காக நிறுவப்பட்ட அகில இந்திய அரசியல் கட்சியாகும். இனிவரும் பக்கங்களில் அதன் கோட்பாடுகள், கொள்கை, செயல் …

அடிமைகளும் தீண்டாதோரும்

இந்துக்கள், தீண்டாமையைப் பற்றி வெட்கப்படுவதற்குப் பதிலாக அதை ஆதரித்துப் பேசுகிறார்கள். இந்துக்கள் அடிமை முறையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், ஆனால் மற்ற நாடுகளின் மக்கள் அதை மோசமானதல்ல என்றும் அவர்கள் வாதம் செய்கிறார்கள். காலஞ்சென்ற லாலா லாஜ்பத்ராய் ‘மகிழ்ச்சியற்ற இந்தியா’ என்ற தமது புத்தகத்தில் இந்த வாதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த எதிர்க் குற்றச்சாட்டை மறுத்துக் கூறுவதில் காலத்தை வீணாக்க அவசியம் இருந்திராது. ஆனால், இந்த வாதம் பொருத்தமானதாகத் தோன்றுவதனால் அடிமை முறையைவிட மோசமான எதையும் கண்டிராத வெளி உலகம், தீண்டாமை அடிமை முறையைவிட மோசமாக …

சமத்துவத்தின் சட்டத்தை நிலை நிறுத்தவே போராடுகிறோம்

கனவான்களே! இதிலிருந்து நாம் தொடங்கியுள்ள போராட்டத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். சத்தியாகிரகக் குழு உங்களை மகத்துக்கு அழைத்தது, வெறுமனே மகத்தில் உள்ள சவுதார் குளத்தின் நீரை அருந்துவதற்கு மட்டும்தான் என்று தவறாக அனுமானித்து விடாதீர்கள். சவுதார் குளத்தின் நீரை அருந்துவது, நம்மை சாவற்றவர்களாக ஆக்கிவிடும் என்பதல்ல. அதை குடிக்காமலேயே நாம் இத்தனைக் காலமும் நன்றாகவே வாழ்ந்திருக்கிறோம். நாம் சவுதார் குளத்திற்குச் செல்வது, வெறுமனே அதன் நீரை குடிப்பதற்காக மட்டுமல்ல. அந்தக் குளத்திற்கு நாம் செல்வது, நாமும் பிறரைப் போல மனிதர்கள் தான் என்பதை அறிவிப்பதற்கு. …

பவுத்தத்தை முறியடிக்கவே பார்ப்பனர்கள் மரக்கறி உண்டனர் – II

அக்காலத்தில் பார்ப்பனர்கள் வீட்டிற்கு யாரேனும் விருந்தினர்கள் வந்தால், அவர்களை கவுரவிப்பதற்கு பசுவைக் கொன்று அவருக்கு விருந்தளிக்க வேண்டியிருந்தது. இதனால் அந்த விருந்தாளி “கோக்னா’ என்று அழைக்கப்பட்டு வெறுக்கப்பட்டார். இதுபோன்றே பசு வதையைச் செய்பவர்கள் என்று பார்ப்பனர்கள் அனைவரும் வெறுக்கப்பட்டு வந்தனர். இத்தகைய இக்கட்டான நிலைமையில், ஒரு வழிபடும் முறையாக யக்ஞத்தை நிறுத்துவதையும், பசு வதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் தவிர பவுத்தர்களுக்கு எதிராக தங்கள் நிலைமையை மேம்படுத்திக்கொள்ள  பார்ப்பனர்களுக்கு வேறு வழியில்லை. மாட்டிறைச்சி உண்பதை பார்ப்பனர்கள் நிறுத்தியதன் நோக்கம் பவுத்த பிக்குகளிடமிருந்து மேலாதிக்கத்தைக் கைப்பற்றுவதே என்பது, …

யோக்கியனாக இருப்பதைவிட இந்துவாக இருப்பது தான் முக்கியமெனில், எக்கேடும் கெட்டுப் போங்கள்!

தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் நுழைவினை விரும்புகின்றனரா, இல்லையா என்பதுதான் முக்கியக் கேள்வி. இக்கேள்வி தாழ்த்தப்பட்ட மக்களால் இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது. ஒன்று, வாழ்வியல் சார்ந்த பார்வை. அதிலிருந்து, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உயர்விற்கான உறுதியான வழி கல்வி, உயர் வேலைவாய்ப்பு மற்றும் மேம்பட்ட வருமானத்திற்கான வழிகளில் இருப்பதாகவே நினைக்கின்றனர். சமூக வாழ்வில் நல்ல இடத்தில் தாங்கள் அமர்ந்து விட்டால், பழமைவாதிகள் இவர்கள் மீது கொண்டிருக்கும் மதம் சார்ந்த பார்வை மதிப்பானதாக மாறும் என்று நம்புகின்றனர். ஒருவேளை அப்படி மாறாவிடினும், அது எந்த விதத்திலும் அவர்களுடைய வாழ்வியல் நலன்களைப் பாதிக்கப் போவதில்லை என நம்புகின்றனர். …

புத்தர் கொள்கைகள் காலத்தால் அழியாதவை

கிறித்துவ மதம் அய்ரோப்பாவில் நுழைந்தபோது ரோம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகள் பெரும் துன்பத்தில் இருந்தன. மக்களுக்குப் போதிய உணவு கிடைக்கவில்லை. அந்நேரத்தில் ஏழை மக்களுக்கு “கிச்சடி’ உணவு வழங்கப்பட்டது. கிறித்துவை யார் பின்பற்றினார்கள்? ஏழை களும் ஒடுக்கப்பட்ட மக்களும்தான் பின்பற்றினார்கள். ஏழைகளும் அடித்தள வகுப்பினருமே கிறித்துவர்களாக மாறினார்கள். “பிச்சைக்காரர்களின் மதமே கிறித்துவம்’ என்று கிப்பன் கூறுகிறார். கிப்பன் தற்போது உயிருடன் இருந்தால், அய்ரோப்பாவில் உள்ள அனைவருடைய மதமாக கிறித்துவம் எப்படி மாறியது என்றும் கூறியிருப்பார். பவுத்தம் ‘மகர்’ மற்றும் ‘மாங்கு’களின் மதம் என்று …

12Page 2 of 2

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

அசோகர் விஜயதசமி

அசோகர் விஜயதசமி என்ற ஆயுதபூசை வாழ்த்துக்கள் சாம்ராட் அசோகர் கலிங்கத்தின் மீது படையெடுத்து வென்றார். லட்சக் கணக்கான வீரர்களை …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,227 other subscribers

Stay Connected