சாதிமல்லி
அக்ரகாரச் சாக்கடையில் – நீ
ஆகாயத் தாமரைப்பூ
வக்ரகாரக் காடுகளில்
வளர்ந்ததொரு குறிஞ்சிப்பூஆரியச் சந்தையினில்
அவளோர் அரளிப்பூ
ஆதித்தமிழன் நான்
அவள்தான்என் முல்லைப்பூமனமெல்லாம் மரிக்கொழுந்து
மயிலே! நீ மல்லிகைப்பூ
மல்லுகட்டும் சிறுக்கி நீ
மறுநொடியில் மருதப்பூசிலநேரம் வேண்டுமென்றே
செய்திடுவாய் தப்பு
சென்றுநான் வரும்வரை நீ
சிலையான நெய்தல்பூஆரியத்தின் உதடுகளில்
சேரியின் உதடுகள்
செய்கின்ற காரியத்தில்
சிலிர்த்திடும்உன் பூரிப்புதுக்கத்திலும் தூக்கத்திலும்
துளிர்ந்துஎழும் உன்நௌப்பு
கக்கத்தில் என் காதல்ஏறி
முத்தம்தரும் தித்திப்புஉள்ளத்தில் எனைக்கிடத்தி
ஒளித்துவைத்த மாராப்பு
சொல்லவாய் திறக்க அய்யோ
சிவந்தமுகம் மத்தாப்பூஎள்ளளவும் குறையாது
எனைப்பற்றி யோசிப்பு
எப்படிநாம் சேர்வது; உன்
எண்ணமெங்கும் படபடப்புஅத்திப்பூ ஆசைப்பூ
அழகுவனச் சோலைப்பூ
எப்பொழுதும் நம்வாழ்வில்
இல்லையடி பாலைப்பூ– கவிஞர் வெண்ணிலவன்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleஅன்பிற்குரிய பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களுக்கு,
Next Article ஒரு நாள்
