(*சூ – சூடாமணி நிகண்டு
*தி – திவாகர நிகண்டு
*நா – நாமலிங்காநுஸாசநம் நிகண்டு
*பி – பிங்கல நிகண்டு
*ம – மணிமேகலை
*வே – வேறுநூல்கள் )
1) அகளங்கமூர்த்தி – சூ.
2) அகளங்கன் – தி.
3) அண்ணல் – சூ. தி.
4) அத்வயவாதி – நா.
5) அநந்தலோசனன் – தி.
6) அர்க்கபந்து – நா.
7) அரசுநிழலிருந்தோன் – சூ.
8) அருங்கலைநாயகன் – தி.
9) அருணெறிகாக்குஞ்செல்வன் – தி.
10) அருளறம்பூண்டோன் – ம.
11) அறத்தகைமுதல்வன் – ம.
12) அறம்பகர்ந்தகோன் – வே.
13) அறவாழியாள்வோன் – ம.
14) அறவியங்கிழவோன் – ம.
15) அறவோன் – ம.
16) அறிவன் – பி.
17) ஆதி – சூ. தி.
18) ஆதிதேவன் – சூ.
19) ஆதிபுங்கவன் – பி.
20) ஆதிமுதலவன் – ம.
21) ஆதிமுனிவன் – ம.
22) ஆரியன் – ம.
23) இயல்குணன் – ம.
24) உரகர்துயரமொழிப்போன் – ம.
25) உலோகஜித் – நா.
26) எண்ணில்கண்ணுடையோன் – சூ.
27) எண்பிறக்கொழியவிருந்தோன் – ம.
28) ஏகதேவன் – தி. ம.
29) ஒருவன் – ம.
30) கண்பிறர்க்களிக்குங்கண்ணோன் – ம.
31) கந்தன் – வே.
32) கலைகட்கெல்லாம்நாதன் – சூ.
32) காமற்கடந்தோன் – ம.
33) கௌதமன் – நா.
34) சாக்கியமுனி – நா.
35) சாக்கியன் – சூ.
36) சாக்கியஸிஹ்மன் – நா.
37) சாந்தன் – சூ. தி. பி.
38) சாஸ்தா – நா.
39) சினந்தவிர்ந்தோன் – சூ.
40) சினன் – சூ. தி. பி.
41) சினேந்திரன் – ம.
42) செல்வன் – சூ.
43) சைனன் – சூ. தி.
44) சௌத்தோதனி – நா.
45) தசபலன்- நா.
46) ததாகதன் – சூ. நா.
47) தயாவீரன் – ம.
48) தர்மராஜன் – சூ. நா.
49) தருமதலைவன் – ம.
50) தருமன் – பி.
51) தன்னுயிர்க்கிரங்கான் – ம.
52) தீநெறிக்கடும்பகைகடந்தோன் – ம.
53) தீமொழிக்கடைத்தசெவியோன் – ம.
54) துறக்கம்வேண்டாத்தொல்லோன் – ம.
55) நரகர்துயர்கெடநடப்போன் – ம.
56) நல்லறம்பகர்ந்தோன் – வே.
57) நற்றவமூர்த்தி – தி.
58) நாதன் – ம.
59) பகவன் – சூ. தி. பி. ம.
60) பகவான் – நா.
61) பஞ்சதாரைவிட்டவுணர்க்கூட்டியபெருமான் – சூ. தி.
62) பரதுக்கதுக்கன் – வே.
63) பார் – வே.
64) பார்மிசநடந்தோன் – பி.
65) பாரின்மிசையோன் – தி.
66) பிடகன் – பி.
67) பிணிப்பறுமாதவன் – ம.
68) பிறர்க்கறமருளும்பெரியோன் – ம.
69) பிறர்க்கறமுயலும்பெரியோன் – ம.
70) பிறர்க்குரியாளன் – ம.
71) பிறவிப்பிணிமருத்துவன் – ம.
72) புங்கவன் – தி.
73) புண்ணியமுதல்வன் – சூ. தி.
74) புண்ணியமூர்த்தி – சூ. தி.
75) புத்தஞாயிறு – ம.
76) புத்தன் – தி. நா.
77) புலவன் – ம.
78) புனிதன் – தி. பி.
79) பூமிசைநடந்தோன் – சூ. நா.
80) பெரியவன் – ம.
81) பெருந்தவமுனிவன் – ம.
82) பெருமகன் – ம.
83) பேரறிவாளன் – ம.
84) பொதுவறிவிகழ்ந்து புலமுறுமாதவன் – ம.
85) போதித்தலைவன் – ம.
86) போதிநாதன் – ம.
87) போதிப்பகவன் – ம.
88) போதிமாதவன் – ம.
89) போதிமூலத்துநாதன் – ம.
90) போதியுரவோன் – ம.
91) போதிவேந்தன் – தி. பி. வே.
92) பௌத்தன் – வே.
93) மன்னுயிர்முதல்வன் – ம.
94) மாயாதேவீசுதன் – சூ. நா.
95) மாரனைவென்றவீரன் – ம.
96) மாரஜித் – நா.
97) மிக்கோன் – ம.
98) முக்குற்றங்கடிந்தோன் – தி.
99) முக்குற்றமில்லோன் – தி.
100) முத்தன் – தி.
101) முழுதுமுணர்ந்தோன் – ம.
102) முற்றவுணர்ந்தமுதல்வன் – ம.
103) முன்னவன் – ம.
104) முனி – நா.
105) முனீந்திரன் – சூ. நா.
106) முனைவன் – பி.
107) வரதன் – வே.
108) வரன் – சூ. தி. பி.
109) வாமன் – சூ. தி. பி. ம.
110) வாய்மொழிசிறந்தநாவோன் – ம.
111) விநாயகன் – சூ. நா.
112) ஜினன் – நா.
113) ஸ்ரீகனன் – நா.
114) ஷடபிஜ்ஞன் – நா.
115) ஸந்மார்க்கநாதன் – வே.
116) ஸமந்தபத்ரன் – நா.
117) ஸர்வஜ்ஞன் – நா.
118) ஸர்வார்த்தஸித்தன் – நா.
119) ஸித்தார்த்தன் – வே.
120) ஸூகதன் – நா. ம.
( இன்னும் பலவுள )
** அறிஞர் உ.வே.சா. பதிப்பித்த மணிமேகலை காப்பியத்தின் பின்னிணைப்புகளுள் ஒன்றாகும் மேலே உள்ளது.