அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
(பள்ளி மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டது)
அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
தொகுப்பாசிரியர்கள் : பூங்கா மனோகரன், சாந்தமூர்த்தி
முதல் பதிப்பு : 14 அக்டோபர், 2009 | பக்கம் : 64
வெளியீடு டாக்டர் அம்பேத்கர் இண்டர்நேஷனல் மிஷன்,
19/44, திருநகர், வில்லிவாக்கம், சென்னை – 600049
தொகுப்பாசிரியர்கள் குறிப்புகள்
பூங்கா மனோகரன்
பூங்கா மனோகரன், காஞ்சிபுரத்தில் அர. பூங்காவனம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) – காசியம்மாள் அவர்களின் மூத்த மகனாக 16.06.1954 அன்று பிறந்தார். சென்னை இலயோலா கல்லூரியில் வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், இளம்கலை வணிகவியல் பயின்றபோதே, செட்யூல்டு மாணவர் போராட்டக் குழுவை அமைத்தார். 1984ல் வேலூர் – திருப்பத்தூரைச் சார்ந்த சிறந்த சமூக சேவகரான, வெல்ல வியாபாரி எத்துராஜ் – திருமதி. கமலம்மாள் அவர்களின் மகள் திருமதி எ. இராஜகுமாரி அவர்களை மணம் முடித்தார். மகன் கௌதம், மகள் சங்கமித்ரா இருவரையும் பௌத்த முறைப்படி நெறிப்படுத்தி முழுமையான பௌத்த குடும்பமாக வளர்த்து வருகிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.மூர்த்தி அவர்களுடன் இணைந்து இந்தியக் குடியரசுக் கட்சியின் மாணவர் பிரிவுச்செயலாளராகப் பணியாற்றினார். 1992முதல் 1995 வரை, இந்தியக் குடியரசுக்கட்சி- டாக்டர். சேப்பன், சக்திதாசன், சாந்தமூர்த்தி ஆகியோருடன் இணைந்து மாநிலப் பொருளாளராகச் செயல்பட்டார். கடந்த 2007 ஆண்டு முதல் திரு. சாந்தமூர்த்தி, திரு. எம்.வி. ஜெயசீலன் ஆகியோருடன் இணைந்து கொள்கைப்பரப்புச் செயலாளராக பணியாற்றி வருகி றார். புத்திஸ்ட் சொசைட்டி ஆப் இந்தியாவின் தமிழ்நாடு பிரிவு, டாக்டர் அம்பேத்கர் இண்டர்நேஷனல் மிஷன் தமிழ்நாடு பிரிவு ஆகிய சமூக அமைப்புகளில் பணியாற்றி வருகிறார். ஒரு சிறந்த எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் அறியப்பட்ட பூங்கா மனோகரன் அவர்கள் ஒரு பௌத்த குடும்பத்தைச் சார்ந்தவர். பௌத்த நெறிகளைப் பின்பற்றுவதுடன், அவற்றை மக்களி டையே எடுத்துச்செல்வதில் பெரும் முனைப்புக் காட்டிவருகிறார்.
சாந்தமூர்த்தி
சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், எளிய வாழ்க்கை வாழும் தன்னலம் கருதாத் தலைவராகவும் அறியப்படும் சாந்தமூர்த்தி அவர்கள் தனது 14 வயதிலிருந்து பொதுவாழ்க்கையில் காலடி வைத்தவராவார். திருவாளர் சீனிவாசன் – திருமதி லட்சுமி அம்மாள் இணையருக்கு ஆயிரம் விளக்குப் பகுதியில் மூத்த குமாரனாகப் பிறந்த இவர், தனது பள்ளிப்படிப்பை ஆயிரம் விளக்குப் பகுதியில் பயின்றார். கிண்டி தொழிற் பயிலகத்தில் தொழிற்கல்வி பயின்றார். மெட்ராஸ், ஆயிரம்விளக்குப் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் இரவுப் பாடசாலைகளைத் தொடக்கி, இளம் மாண வர்களிடம் அம்பேத்கரின் அரிய தொண்டினை விளக்கிச் சொல்லி விழிப்புணர்வை ஊட்டினார். தனது 18 ஆவது வயதில் இந்தியக் குடியரசுக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு செயல் பட்டார். 1978ல் திருமதி. கலா அவர்களை இல்லறத் துணையாக ஏற்றுக்கொண்டு பௌத்த வாழ்க்கை வாழ்ந்து வரும் பௌத்த முன்னோடியாவார்.1981ல் தனது மகள்கள் பிரதிபா, பிரியவர்தினி உட்பட குடும்பத் துடன் மகாபோதி சங்கத்தில் இணைந்து பௌத்தம் ஏற்றார். அகில இந்திய அளவில் கோபர்கடே தலைமை யிலான இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்து சென்னை மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியத் தொடங்கிய இவர், படிப்படியாக உழைத்து, உயர்ந்து மாநிலத் தலைமை ஏற்று பணிபுரிந்தார். இண்டர் நேஷனல் மிஷன் மற்றும் இந்திய பௌத்த சங்கம் ஆகிய அமைப்புகளின் தலைவராகப் பொறுப்பேற்று தமிழகத்தில் பௌத்தத்தைத் தீவிரமாகப் பரப்பும் பெரும் பணியைச் செய்து வருகிறார்.
முன்னுரை
அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை சாதியின் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களும் சாதிக் கொடுந்தன்மைக் குச் சாதகமாக இருப்பவர்களும் கவனத்துடன் படிக்கவேண்டும். ஒரு நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வளர்ந்துவிட்ட நாடுகளுடன் போட்டியிட வேண்டுமானால் அந்த நாட்டிலுள்ள அனைவரின் அனைத்துத் திறமைகளை வெளிப்படுத்தவும் செயல்படுத்தவும் வழிவகை செய்ய வேண்டும். சாத்திரங்கள் வேதங்களை முன்னுதாரணப்படுத்தி பெரும்பகுதி மக்களின் உணர்வுகளையே புரிந்துகொள்ளாமல் புறந்தள்ளுவது, அந்த புறந்தள்ளப்பட்ட மனிதர்களுக்கு மட்டும் அது தீங்காக அமையாது. புறந்தள்ளுவதற்குக் காரணமான மனிதர்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாவார்கள்.
120கோடி மக்களைக்கொண்ட இந்தியா, சாதியின் பாகு பாடால் பிரிக்கப்பட்டுள்ளதால் எந்தவொரு துறையிலும் வல்லமை பெறமுடியாமல் போகிறது. ஒருவேளை ஒருசில துறைகளில் ஒரு சாதிப்பிரிவைச் சார்ந்தவர்கள் முதன்மை பெற்றால் அந்த சாதியின் பிரிவைமட்டுமே முதன்மைப் படுத்து கிறார்கள். ஆனால் ஒருசில தவறுகள் ஒருசில மக்களால் நடை பெறும்போது அதிலும் குறிப்பாக ஷெட்யூல்டு இன மக்கள் எவராவது அதுபோன்ற தவறைச் செய்துவிட்டால் அந்தச் சாதிப் பிரிவையும் அதன் ஒட்டுமொத்த மக்களையும் அந்தத் தவறு செய்துவிட்டதாகக் குற்றம் சுமத்துகிறார்கள்.
இதுபோன்ற பாகுபாட்டை நிலைநிறுத்தி தனிமனிதனின் வெற்றியையோ தவறையோ ஒரு குறிப்பிட்டச் சாதிப்பிரிவைச் சார்ந்தவர்கள் மேல் சுமத்தாமல் அந்தத் தனி மனிதனிதனின் தகுதி, திறமை, தவற்றை வெளிப்படுத்தும்போது தனிமனிதன் மட்டுமல்ல சமூகமே பொறுப்புடன் நடந்துகொள்ளும் சூழல் ஏற்படும். மேலும் மனித வளத்தின் மூலம் நல்ல முன்னேற்றம் கண்டு மேலை நாடுகளுடன் போட்டியிட்டு வெற்றிகாண முடியும்.
இதற்கு உதாரணமாக, ஷெட்யூல்டு இன மக்களின் பிரதிநிதிதான் அண்ணல் அம்பேத்கர் என்று கூறி, அவரின் தனித்திறமை, வெற்றி ஆகியவற்றைப் புறக்கணித்து, அந்த மாபெரும் மனிதஇயல் சமூக வல்லுநரை குறைவு செய் கிறார்கள். மாறாக அவரை உயர்த்திப் போற்ற வேண்டியது அனைத்து இந்திய மக்களின் கடமையாகும்.
இதன் அடிப்படையில் அண்ணல் அம்பேத்கரின் எளிய வாழ்க்கை, நெடிய பயணம், கொடிய துன்பங்கள், கடின உழைப்பு, கல்வியில் தெளிவு, தேச நலன்களுக்கான உழைப்பு, சமூகத்திற் கான விடியலைத் தேடுதல் இவற்றை உள்ளடக்கிய அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கைக் குறிப்பை இளைய சமுதாயம், மாணவர் சமுதாயம் படித்து அறிந்துகொள்ளுமானால் தங்கள் வாழ்வில் அண்ணல் அம்பேத்கர் பெற்ற வெற்றியை, புகழை அடையமுடியும் என்று ஆணித் தரமாகச் சொல்லமுடியும்.
படித்துப் பயன் பெறுங்கள்.
தொகுப்பாசிரியர்கள்
பூங்கா மனோகரன்
சாந்தமூர்த்தி
அணிந்துரை
–யாக்கன்
இரண்டாயிரம் ஆண்டுகால இந்திய வரலாற்றில் புத்தருக்குப்பின், இந்து வேத – இதிகார புரட்டுகளை உலகளாவிய அளவில் அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். புரட்சியாளர் என்று அவரைப் புகழ்வது மிகப் பொருத்தமானதாகும். சாதியத்தின் பிடியில் சிறைப்பட்டு இழிவையும், விவரிக்க இயலாத கொடுமைகளையும் அனுபவித்து வந்த தீண்டத்தகாத மக்களின், மனித மாண்புகளை மீட்டெடுத்தார் அவர். இழந்த உரிமைகளை வென்றெடுத்தார். அவை மட்டுமல்ல, இரண்டாயிரம் ஆண்டுகாலமாக இந்திய வரலாற்றில் பார்ப்பனர்களுக்குச் சமமானவர்கள் எவருமில்லை என்றிருந்த கொடும் நிலையை ஒழித்து, இந்தியாவில் வாழ்ந்துவரும் அனைத்து மக்களையும், சட்டத்தின் முன் சமமாக்கினார். தன்னந்தனியான ஆளாக இருந்துகொண்டு எண்ணிப்பார்க்கவியலாத சமூகப் புரட்சிகளை நடத்தினார். எனவே, இந்திய மண்ணில் புரட்சியாளர் என்று அழைப்பதற்குத் தகுதி படைத்தவர் அண்ணல் அம்பேத்கர் ஒருவரே.
அவரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்கிறவர் எவரும் தனியாத தன்னெழுச்சியைப் பெறமுடியும். இந்தியச் சாதிய வரலாற்றை அறிந்துகொள்ள முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘இந்திய தேசப்பிதா’ என அழைக்கப்படும் காந்தியின் ‘சுய ரூபத்தை’ அறிந்துகொள்ள முடியும். தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக வாழ்விற்கும் அரசியல் எழுச்சிக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்த அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ளவேண்டிய தேவை, வேறு எவரையும் விட தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அமைப்புகள் நடத்திவரும் தலைவர்கள் பலர், அம்பேத்கரை முழுமையாக அறிந்துகொண்டதாகத் தெரியவில்லை. இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நேர்ந்த பெரும் கேடாகும்.
இத்தகையச் சூழலில், அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்ற மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற நூலாகப் பதிப்பித்திருக்கும் டாக்டர் அம்பேத்கர் இண்டர்நேஷனல் மிஷனின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
இந்தியாவில் சாதிய அமைப்பு
இந்தியாவில் மக்கள் சாதியின் அடிப்படையில் பிரித்தாளப்பட்டனா.; நான்குவகை வர்ணங்களை உள்ளடக்கிய இந்து மதத்தில் பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்று வரையறுக் கப்பட்ட பிரிவுக்குள்அடங்காத தீண்டப்படாதோரையும் இந்துக்கள் என்றே கூறிக்கொள்கின்றனர். 1950ல் இந்திய அரசியல்அமைப்புச் சட்டம் தீண்டாமையை ஒழிப்பதற்கு வழிவகை செய்வதற்கு முன்னர்வரை தீண்டப்படாதவர், தொடக்கூடாதவர், பார்க்கக்; கூடாதவர் என்ற முப்பிரிவினராகத் என்று பிரிக்கப்பட்டிருந்தனர். அன்றைய ஒட்டுமொத்த இந்திய மக்களின் கூட்டுத்தெகையில் 30 கோடி (இந்தியர்களில்) ஐந்தில் ஒருபகுதியாக 6 கோடி மக்கள் தீண்டப்படாதவர்கள் என்று கணக்கிடப்பட்டிருந்தனர்.
தீண்டப்படாதவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலவகையான பெயர்களில் அழைக்கப்பட்டனர். தீண்டப்படாதவர்கள் பறையர், பஞ்சமர், ஆதி சூத்திரர், நாம சூத்திரர், மகர், சமார், புலையர், மாலா, மதிகா, அந்நிய ஜாஸ் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தொட்டால், இவர்களின் நிழல்பட்டால், குரல்கேட்டால் தீட்டாகிவிடுவோம் என்று சாதி இந்துக்கள் கருதுகின்றனர்.
இவர்கள் படும் துன்பம் அளவிடமுடியாதது. இவர்கள் கல்லாதவர்களாக, தீண்டப்படாதவர்களாக இழிவாக நடத்தப் பட்டவர்கள். எனவே காவல்துறை, இராணுவம் உட்பட அனைத்துப் பொது ஊழியத்துறைகளிலும் இவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆதலால் பரம்பரைத் தொழில்களையே செய்து வருகின்றனர்.
தாழ்ந்த இழிந்த தொழில்களாகக் கருதப்படும் தெருக் கூட்டுதல், மலம் அள்ளுதல், செருப்பு தைத்தல் போன்றவற்றைச் சிலர் செய்கின்றனர். இறந்தமாடுகளின் தோலை உரித்தல், அவற்றைப் பதப்படுத்துதல் போன்றவற்றைச் சிலர் செய்கின்றனர். இவர்களுக்கு சமுதாய, மத மற்றும் குடிமை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆதனால் இவர்களுடைய வாழ்க்கை நிலையை உயர்த்திக்கொள்ள வாய்ப்பே இல்லை.
இந்தச் சூழ்நிலையில்தான், தீண்டப்படாத மக்களின் இழிநிலை போக்கவும், அவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூகவியலில் முன்னேறவும,; வழிகாட்டவும் மராட்டிய மாநிலத்தில் மகர் சமுதாயத் தில் இருந்து விடிவெள்ளியாய்த் தோன்றியவர்தான் டாக்டர். பிம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்.
அம்பேத்கரின் இளமைப்பருவம்
இந்திய மாநிலங்களில் மகாராட்டிரம் ஓர் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் ஆகும். அது ஒரு இனத்தின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள மாநிலம் ஆகும். ‘மகர்” என்னும் மக்கள் இந்த மாநிலத்தின் பூர்வீகக்குடிகள் என்று ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த மகர் இன மக்கள் வீரம் செறிந்தவர்களாகவும் இணைந்து வாழும் இயல்பு கொண்டவர்களாகவும் அறிவில் சிறந்தவர்களாகவும் விளங்கி வருகின்றனர்.
அம்பேத்கரின் தந்தை
அந்த மகர் இனத்தில் தோன்றியவர் ராம்ஜி சக்பால் ஆவார்;. இவர் அம்பாவதே என்னும் கிரமத்தில் பிறந்தவர். பம்பாய் மாகாணம் என்று பிரிந்திருந்த காலத்தில் இரத்தினகிரி மாவட்டத்தை உள் அடங்கியதுதான் அம்பாவதே கிராமம் ஆகும். ராம்ஜி சக்பால் இராணுவப் பள்ளியில் ஆசிரியராகப் பணி ஆற்றி பதவி உயர்வு பெற்று மேஜர் சுபேதார் பதவியை அடைந்தவர். பீமாபாய் என்னும் அறிவில் சிறந்த நங்கையை மணம் முடித்தார். அவர் பிறந்த குடும்பமும் ஒரு போர்வீரர் குடும்பமாகும். இந்த தம்பதியர்களுக்கு 14வது குழந்தையாய் 14.04.1891-ம் ஆண்டு மோவ் என்ற ஊரில் பிறந்தவர்தான் அண்ணல் அம்பேத்கர். இவரது இயற்பெயர் பீம்ராவ். இளைய குழந்தையான பீம்ராவ் குடும்பத்தில் உள்ள அனைவராலும் அன்புடன் வளர்க்கப்பட்டார்.
ராம்ஜி இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ‘தபோலி” என்ற கிராமத்தில் குடிஅமர்ந்தார். அம்பேத்கர் தன் தொடக்கக் கல்வியை ‘தபோலி” என்ற கிராமத்தில் தொடங்கினார்.
அந்த கிராமத்தில் தங்கி பிள்ளைகளைப் படிக்கவைக்க போதிய வருமானம் இல்லாததால் ராம்ஜி அவர்கள் ‘சதாரா” என்ற நகரத்தில் இருந்த இராணுவப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். அங்கு குடியமர்ந்த சில நாட்களிலேயே அம்பேத்கரின் தாயார் பீமாபாய் இறந்துபோனார். அப்போது ஆறு வயது குழந்தையாக இருந்த அம்பேத்கரை ராம்ஜியின் சகோதரி அன்புடன் வளர்;க்கும் பொறுப்பைப் பெற்றார்.
பள்ளிப்பருவம்
அம்பேத்கர் அவர்கள் தபோலியில் தொடக்கக் கல்வியை முடித்தபின் ‘சதாரா”வில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அந்த நாளில் மகர் இனமக்களை தீண்டப்படாத மக்களாக ஒதுக்கி வைத்திருந்ததால் மகர் இன மாணவர்கள் கல்வி நிலையங்களில் மற்ற மாணவர்களுடன் சமமாக நடத்தப்பட்டதில்லை. தீண்டப்படாத மாணவர்கள் கல்விக் கூடங்களுக்குச் செல்ல அனுமதி கிடையாது. அப்படியே ஒரு சில பள்ளிகளில் அனுமதித்தாலும் சக மாணவர்களுடன் சமமாக அமர்ந்து கல்வி பயிலக்கூடாது. வகுப்பறையில் ஒரு மூலையில் தனியாக அமரவேண்டும். அதிலும் தரையில் அமரக்கூடாது. காரணம் தரையில் அமர்ந்தால் தீட்டாகிவிடுமாம். அதனால் அவர்கள் வீட்டிலிருந்த கோணியை எடுத்துவந்து அதன் மீதுதான் அமர்ந்து பாடம் பயிலவேண்டும். வகுப்பறையில் பின்புறம் மற்ற மாணவர்கள் அருகில் வந்திடா வண்ணம் கோணிப்பையின் மேல் அமர்ந்து கல்வி பயில வேண்டும். பயின்றபின் வீட்டிற்கு அந்த கோணிப்பையை எடுத்துச்செல்ல வேண்டும்.
மேலும் ஆசிரியர்கள் தீண்டப்படாத மாணவர்களைத் தவறிக்கூட தொடமாட்டார்கள். மற்ற மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களை தீண்டப்படாத மாணவர்கள் தொட்டுவிடக்கூடாது. வெகு தொலைவில் அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கேட்டுத்தான் பயில வேண்டும். சக மாணவர்களுடன் சேர்ந்து புத்தகம் வாசிக்கவோ பாட்டுபாடவோ எந்தவித உற்சாகத்தையும் ஆசிரியர்கள் தீண்டப்படாத மாணவர்களுக்கு அளிக்க மாட்டார்கள்.
தீண்டப்படாத மாணவர்கள் வகுப்பில் இருக்கும்போது தாகம் எடுத்தால் தண்ணீர் எடுத்துக் குடிக்கக்கூடாது. இரக்கம் கொண்ட ஒரு சில மாணவர்கள் தீண்டப்படாத மாணவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வாயில் ஊற்றுவார்கள். எந்தப் பொருளையும் தீண்டப்படாத மாணவர்கள் தொடமல் நீர் அருந்த வேண்டும். இந்த கொடுமையை சந்தித்து கல்வி பயின்றார் அம்பேத்கர்.
ஒரு நாள் ஆசிரியரின் கட்டளைப்படி கரும்பலகையில் ஒரு கணக்கைப் போட்டுக்காட்ட அம்பேத்கர் சென்றார். உடனே மற்ற மாணவர்கள் கரும்பலகைக்குப் பின்புறம் வைத்திருந்த தங்களின் உணவுப் பாத்திரங்களை ஓடிச்சென்று எடுத்துவைத்துக் கொண்டனர். காரணம் அம்பேத்கர் ஒரு தீண்டப்படாத வகுப்பைச் சேர்ந்தவர். அவர்களின் பாத்திரத்தை அம்பேத்கர் தொட்டுவிட்டால் தீட்டாகிவிடும் என்று அவ்வாறு நடந்துகொண்டனர்.
அம்பேத்கர் பெயர் வரக்காரணம்
அம்பேத்கரின் குடும்பப்பெயர் அம்பவடேகர். அம்பவடே என்பது இவருடைய சொந்த ஊர் என்பதால் அம்பவடேகர் என்ற குடும்பப் பெயர் ஏற்பட்டது. அதனால் அவரது தந்தை இராம்ஜி சக்பால் அம்பேட்கர் என்று அழைக்கப்பட்டார். தந்தையின் பெயரை தன் பெயரோடு அம்பேத்கர் இணைத்துக்கொண்டார்.
அம்பேத்கர் கல்வியில் கவனம் செலுத்தி ஆசிரியர்கள் பாராட்டும் அளவிற்கு பாடங்களைப் பயின்றார். அம்பேத்கரின் தந்தை அம்பேத்கரை மேலும் மேலும் நன்கு படிக்க வைக்கவேண்டும் என்று எண்ணினார். மகனுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுத்தர எந்தவித தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தார் இராம்ஜி.
இராம்ஜியின் குடும்பம் பம்பாய்க்கே செல்லும் சூழ்நிலை உருவாயிற்று. அது அம்பேத்கரின் கல்விக்கு பெரிதும் உதவியாக இருந்தது. பம்பாய் சென்றதும் அம்பேத்கர் மராத்தா உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ராம்ஜி இராணுவப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியிருந்ததாலும், ஆங்கிலக் கல்வியில் வல்லமை பெற்றிருந்ததாலும் அம்பேத்கருக்கு ஆங்கிலத்தில் நன்றாக எழுதவும் படிக்கவும் மொழிபெயர்க்கும் அளவிற்குத் திறமையை வளர்த்துக்கொள்ளவும் உதவியாய் அமைந்தது.
பம்பாய் வந்த சிலமாதங்களுக்குப் பிறகு அம்பேத்கர் வேறோரு பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதன் பெயர் எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளி. பம்பாயில் இருந்த மிகச்சிறந்த பள்ளிகளில் இதுவும் ஒன்று. அந்தப் பள்ளியில் சேர்ந்ததும் சிறுவர் அம்பேத்கர் மேலும் கருத்துடன் படிக்கலானார்.
எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளி ஓர் அரசாங்கப் பள்ளியாக இருந்த போதிலும் அங்கும் சாதிக் கொடுமைகள் அதிகமாகவே இருந்தது. அந்தப் பள்ளியில் சமஸ்கிருதம் மொழிப்பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். ஆனால் உயர்சாதி ஆசிரியர்கள் தீண்டப்படாத ஒரு மாணவன் சமஸ்கிருதம் பயில்வதா? கூடவே கூடாது என்று ஆவேசத்துடன் பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தனர். எனவே பள்ளியில் சமஸ்கிருதம் பயிலும் வாய்ப்பை இழந்தார் அம்பேத்கர்.
ஆனால், பிற்காலத்தில் சில சமஸ்கிருத பண்டிதர்களின் உதவியுடன் அம்மொழியைக் கற்றுக்கொண்டு அந்த மொழியில் புலமை பெறும் அளவிற்கு விளங்கினார். அதனால்தான் சமஸ்கிருத மொழியில் எழுதிவைத்திருந்த சாதிய பாகுபாடுகளை மக்களுக்கு எளிதாய் புரிந்துகொள்ள அம்பேத்கருக்கு முடிந்தது.
தந்தையின் வழிகாட்டுதல் பேரிலும், அண்ணன் சகோதரிக ளின் ஆதரவின் பேரிலும் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றிபெற்று சிறந்த மாணவனாக வெளிவந்தார்அம்பேத்கர்.
திருமணம்
அந்தநாளில் குழந்தைத் திருமணம் நடைமுறையில் இருந்தது . மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றிபெற்றவுடன் 9 வயதே நிரம்பிய இராமாபாய் என்ற பெண்ணுடன் தன் 17வது வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார். தீண்டப்படாதவர்களின் திருமணங்கள் போன்றவை மரியாதைக்குரிய இடங்களில் நடத்தவும் தடை விதித்திருந்தார்கள். ஒரு புதுமையான இடத்தில் பீமின் திருமணம் நடந்தது. பம்பாயில் பைகுல்லா மீன் மார்கெட்டில் ஒரு திறந்த கொட்டகையில் பீமின் திருமணம் நடந்தது. மீன் கடை மார்க்கெட்டில் பகல் வியாபாரம் முடிந்தவுடன் இரவில் மணமகனும் அவருடைய உறவினர்களும் அகன்றிருந்த மேல் கூரையில்லாத கொட்டகையின் ஒரு மூலையில் குழுமினார்கள். மற்றொரு மூலையில் மணமகளும் அவருடயை உறவினர்களும் கூடினார்கள். அவர்கள் இருந்த இடத்தில் சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருந்தது. பகலில் பொருட்களை வைத்து விற்கும் கல் மேடைகள் அவர்கள் அமர்வதற்கும் பெஞ்சு களாயின. அந்த மார்க்கெட் முழுவதும் திருமணக் கூடமாயிற்று. மீன் கடையின் நாற்றம் ஒருபுறம், விடிந்தால் மீன்கடை திறக்க வழிவிடவேண்டுமே என்ற அவசரம் ஒருபுறம். இதற்கிடையில் அவசரம் அவசரமாக திருமணம் நடந்தேறியது.
அம்பேத்கரின் கல்வி வளர்ச்சி : உயர்நிலைக் கல்வி
பம்பாய் வந்த சில மாதங்களுக்குப் பிறகு அம்பேத்கரின் தந்தை அம்பேத்கரை பெரிய கல்விமானாக ஆக்கவேண்டும் என்று எண்ணினார். படிப்பதற்குத் தேவையான புத்தகங்களை தன் ஓய்வூதிய பணத்திலும் சிறு சிறு சேமிப்பு மூலமும் வாங்கிக் கொடுத்தார். பம்பாய் நகரத்தில் இருந்த சிறந்த அரசுப் பள்ளிகளில் ஒன்றான எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்கலானார் அம்பேத்கார். எவ்வளவு இடையூறுகள் இருந்தாலும் அதை தகர்த்தெறிந்து தன் கல்வியைத் தொடர்ந்தார் அம்பேத்கர்.
வீட்டில் மின்விளக்கில்லை;. அரிக்கோன் விளக்கில்தான் படித்தார். படிப்பதற்கு என்று ஒரு தனி அறை கிடையாது. சமைக்கும் இடம் படுக்கும் இடம் எல்லாம் ஒரே அறைதான். அதில் எல்லோரும் தூங்கிய பிறகு அம்பேத்கரும் அவர்களுடன் சேர்ந்தே தூங்குவார். அதிகாலை இரண்டு மணிக்கு அம்பேத்கரை இராம்ஜி அவர்கள் எழுப்பி படிக்க வைத்துவிட்டுத்தான்தான் தூங்கச் செல்வார். விடியும் வரை பாடங்களை கவனத்துடன் படிப்பார் அம்பேத்கர்.
கல்வியில் கவனத்துடன் பயின்றதாலும் அப்பாவின் அரவணைப்பாலும் அண்ணன் உதவியாலும் மெட்ரிகுலேஷன் தேர்வில் நல்ல மதிப்பெண்பெற்று வெற்றிபெற்றார். இந்த வெற்றிக்காக தீண்டப்படாத அனைத்து மக்களும் ஒன்றுகூடி பெரிய பாராட்டு விழாவினை நடத்தினார்கள்.
உள்நாட்டில் உயர்கல்வி
மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றிகண்ட அம்பேத்கருக்கு கல்லூரியில் சென்று பயில வேண்டும் என்ற ஆசை பெரிதும் இருந்தது. ஏழைகளுக்கும் தீண்டப்படாத மக்களுக்கும் கல்விக்காக உதவி செய்பவர் அப்போது யாரும் இல்லை. சில செல்வந்தர்களும் சமஸ்தான மன்னர்களும் தகுதியுள்ள மாணவர்களுக்காக சிறு தொகையை ஒதுக்கிவைத்திருந்தார்கள். அந்தத் தொகைகளும் உயர்சாதி மாணவர்களுக்குத்தான் கிடைக்கும். அப்படி இருந்தும் தன் மகனை கல்லூரியில் படிக்கவைக்க முன்வந்தார் இராம்ஜி.
அம்பேத்கர் அவர்கள் எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்க்கப் பட்டார். அம்பேத்கரின் மேல் படிப்பிற்கு பண உதவி செய்ய முடியாமல் இராம்ஜி மிகவும் சிரமத்திற்கு உள்ளானார். அந்த சமயத்தில் கிருஷ்ணாஜி அர்ஜூன் கெலுஸ்கா அம்பேத்கருக்கு உதவ முன்வந்தார். அவர் பரோடா மன்னர் சரபோஜின் ராவ் உதவியைப் பெற்றுத் தந்தார். மாதம் ரூபாய் 25ஃ- கல்வி உதவித்தொகை பரோடா மன்னா ; வழங்கினார்.
பேராசிரியர் முல்லர் என்பவர் கல்லூரியில் மிகவும் நேர்மையுள்ள மனிதர். கல்லூரியில் படிக்கும் நன்றாக படிக்கும் மாணவர்களுள் அம்பேத்கரும் ஒருவர் என்பதைக் கண்டறித்து அவருக்கு உதவ முன்வந்தார். அம்பேத்கருக்கு வேண்டிய நூல்களைப் பெற்றுத் தந்தார். சில நாட்களில் உணவும் கொடுத்து உபசரித்தார். கல்லூரிப் பேராசிரியர் ஊக்கம் தந்ததாலும் தந்தையின் அரவணைப்பு அதிகம் இருந்ததாலும் கல்வியில் கவனம் செலுத்தி பயின்று பி.ஏ. பட்டப்படிப்பில் அம்பேத்கர் தேர்வுபெற்றார். அம்பேத்கர் தந்தை இராம்ஜி சக்பால் கண்ட கனவு நனவாயிற்று.
வெளிநாட்டில் உயர்கல்வி
அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு படிக்க 1913ம் ஆண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது என்று பரோட மன்னர் சாயிஜிராவ் கெய்க்வாடு அவர்கள் ஆணை பிறப்பித்திருந்தார். அந்த ஆணையின்படி அம்பேத்கருக்கு நிபந்தனையுடன் கூடிய கல்வி உதவித்தொகை கிடைத்தது. நிபந்தனையாக, குறிப்பிட்டுள்ள பாடங்களை நன்கு படிப்பேன் என்றும் படித்தபின் பரோடா அரசில் பத்து ஆண்டுகள் பணியாற்றுவேன் என்றும் ஓர் ஒப்பந்தத்தில் அம்பேத்கர் கையெழுத்து இட்டார். அதன் பின்னரே, 1913ம் ஆண்டு ஜூன் மாதம் உயர்கல்வி பயில அமெரிக்கா சென்றார் அம்பேத்கர். அமெரிக்க பல்கலைக் கழகத்தில் உயர்நிலைப் பட்டம் பெறுவது மட்டுமே அவருடைய நோக்கமாக இருந்ததில்லை. இந்தியாவில் ஆங்கில மொழியுடன் பெர்சி மொழியையும் படித்து பி.ஏ.பட்டம் பெற்றதைப் போன்று அமெரிக்காவில் அரசியல், விஞ்ஞானம். நீதியியல், தத்துவம், மானிடவியல், சமூகவியல், பொருளாதாரம் ஆகிய துறைகளிலும் படிப்பதற்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்தபின் சிறப்பான மதிப்பிற்கரிய இனிய வெற்றி கிடைத்தது. பண்டைய இந்தியாவின் வாணிபம் (Ancient Indian commerce) என்ற ஆய்வுக் கட்டுரைக்காக 1915ம் ஆண்டு எம்.ஏ.பட்டம் பெற்றார்.
1916ம் ஆண்டு மே மாதத்தில் டாக்டர் கோல்டன் வைய்சர் நடத்திய மனித இனவரலாறு பற்றிய கருத்தரங்கில் ‘இந்தியாவில் சாதிகளஅவற்றின் இயக்கம் தோற்றம் வளர்ச்சி;” என்ற ஆய்வுக் கட்டுரையைப் படித்தார். அக்கட்டுரையில் கொடுஞ்செயலுடன் மனு, சாதி பாகுபாடு களைத்தொகுத்து விதிகளாக எழுதியிருந்ததை வெளிப்படுத்தினார். சாதி விதிகள் மனு தொகுத்து வைப்பதற்கு முன்பே இருந்தது. அதில் மனிதாபிமானமற்ற முரட்டுக் கருத்துக்களை இடைகச்செருகல் செய்துள்ளார் இந்த மனு, என்று அம்பேத்கர் அவர்கள் எடுத்துக் கூறினார்.
அதேநேரத்தில் மற்றொரு ஆய்வுக் கட்டுரையையும் எழுதிக்கொண்டிருந்தார். ‘இந்தியாவின் ஆதாயப் பங்கு – ஒரு வரலாற்று ஆய்வுக்கண்ணோட்டம்” என்ற கட்டுரையைப் பல நாட்கள் தன் முழுகவனத்தையும் கடும் உழைப்பையும் செலவிட்டு எழுதி முடித்தார். 1916ம் ஆண்டு இவவாய்வுக் கட்டுரையை கொலம்பியா பல்கலைக் கழகம் ஏற்றுக் கொண்டது. மேலும் விரிவுபடுத்திய இந்தக் கட்டுரையை எட்டு ஆண்டுகள் கழித்து ‘பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதியின் பரிமாண வரலாறு” (The evolution of Provincial finance in British India) என்ற தலைப்பில் அம்பேத்கர் வெளியிட்டார். அதை பி.எஸ்.கிங் அண்டு சன்ஸ் என்ற கம்பெனி இந்தியாவில் புத்தகமாக வெளியிட்டது.
இந்த ஆய்வுக்கான கட்டுரையை ஏற்றுக்கொண்டு கொலம்பியா பல்கலைக் கழகம் தத்துவவியல் டாக்டர் (Doctor of Philosophy) என்ற பட்டத்தை அதிகாரப் பூர்வமாக அம்பேத்கர் அவர்களுக்கு வழங்கியது.
அம்பேத்கர் அவர்கள் 1916 ஜூன் மாதம் அமெரிக்காவை விட்டுப் புறப்பட்டார். சில நாட்கள் பயணத்தில் கழிந்தபின் இலண்டன் நகரை அடைந்தார். உடனடியாக 1916 அக்டோபர் மாதத்தில் சட்டம் பயிலுவதற்காகக் ‘கிரேஸ் இன்” சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானத்திற்கான சிறப்பு வாய்ந்த இங்கிலாந்து கல்லூரியில் பொருளாதாரம் பயில அந்தக் கல்லூரியில் சேர்ந்தார்.
இந்தச் சூழ்நிலையில் கல்வி உதவித் தொகைக்கான காலம் முடிந்து விட்டது என்று பரோடா மன்னர் அறிவித்ததால் தாய் நாடு திரும்பவேண்டிய கட்டாயம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது. தாராள மனங்கொண்ட இங்கிலாந்து பேராசிரியர் எட்வின் கன்னான் அவர்கள் பரிந்துரையின்பேரில் 1917 அக்டோபர் மாதத்திலிருந்து நான்கு ஆண்டுகள் முடிவதற்குள் மீண்டும் அவருடைய படிப்பைத் தொடருவதற்கான அனுமதியை இலண்டன் பல்கலைக் கழகத் திலிருந்து பெற்றுக்கொண்டார்.
இலண்டனில் தன் படிப்பை முடிக்க வேண்டும் என்ற அடங்காத விருப்பம் அவர் உள்ளத்தில் இருந்து கொண்டே இருந்தது. இதை எப்படியும் அடைந்தே தீருவது என்று தீர்மானித்தார். நல்லெண்ணம் கொண்ட ஒரு பார்சி நண்பர் வழியாக பம்பாயில் இரண்டு மாணவர் களுக்குப் பாடம் கற்றுத்தரும் வாய்ப்பு அவருக்குக் கிட்டடியது. இருப்பு மட்டும் பங்கு மார்க்கெட் பற்றிய வணிகத்தில் இருப்பவர்களுக்கு ஆலோசனை கூறும் வணிக நிறுவனம் ஒன்றையும் அதே நேரத்தில் தொடங்கினார். ஆலோசனை கூறும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு தீண்டப்படாதவர் என்று வாடிக்கையாளர்களுக்குத் தெரிந்து விட்டது. எனவே இவர் இதையும் மூடும் நிலை ஏற்பட்டது. அதன்பின் சிலகாலம் ஒரு பார்சி முதலாளியிடம் கடிதம் போக்கு வரத்து மற்றும் கணக்கு எழுதும் வேலையைக் கவனித்து வந்தார்.
1920 ஜூலை மாதம் சட்டப்படிப்பையும், பொருளாதாரப் படிப்பையும் முடித்திட வேண்டும் என்ற இலட்சியத்துடன் இலண்டனுக்கு பயணமானார். லண்டனில் கல்வியில் கவனம் செலுத்தி படிக்கத் தொடங்கினார். 1920 செப்டம்பரில் இலண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானக் கல்லூரியில் பொருளியல் கல்வியை அம்பேத்கர் தொடர்ந்தார். இப்பொழுது அவருடைய கவனம் அருங்காட்சியகத்தின் பக்கம் திரும்பியது. காலை 8மணி முதல் மாலை 5மணி வரை படிப்பது என்பது அம்பேத்கரின் இலண்டன் வாழ்நாளில் அடிக்கடி நிகழ்ந்தது.
அம்பேத்கரின் ஆய்வுப்பணி அருங்காட்சியக நூலகத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. இந்திய அலுவலக நூலகம் இலண்டன் பல்கலைக்கழக நூலகம் மற்றும் பொருளாதார நூல்களுக்காகப் புகழ்பெற்றிருந்த இலண்டன் நகரிலிருந்த நூலகங்கள் ஆகியவற்றில் பொருளாதார நூல்கள் மற்றும் பழைய பலப்பல அறிக்கைகளைப் படித்தார்.
நாட்கள் உருண்டோடின. அம்பேத்கரின் அரும்பெரும் ஆய்வுப்பணி படிப்படியாக ஒரு முடிவு நிலைக்கு வந்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் பேரரசின் நிதியை மாகாணங்களுக்குப் பிரித்தளித்தல் (Provincial Decentralisation of Imperial finance in British India) என்ற ஆய்வுக் கட்டுரையை அவா ;முதலில் எழுதிமுடித்தார். இதற்காக 1921 ஜூன் மாதத்தில் அவருக்கு எம்.எஸ் (Master of Science) பட்டம் வழங்கப்பட்டது. 1922 அக்டோபரில் அவருடைய புகழ்மிக்க ‘ரூபாயின ;சிக்கல்” (The problem of the Rupee) என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதி முடித்து லண்டன் பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்தார்.
இதற்கிடையில் ஐரோப்பாவில் புகழ்பெற்றிருந்த மற்றொரு கல்வி நிலையமான ஜெர்மனியில் உள்ள பான் பல்கலைகக்கழகத் தில் மூன்று மாதம் கடுமையாக கவனத்துடன் பயின்றார். அதற்குபின் 1923 மே மாதம் ரூபாயின் சிக்கல் என்ற ஆய்வுக்கட்டுரையை இலண்டனில் சமர்ப்பித்தார். அதற்காக டி.எஸ் (Doctor of Science) என்ற பட்டத்தைப் பெற்றார்.
மேலும் அம்பேத்கர் பாரிஸ்டர் பட்டத்தை இலண்டனில் பெற்றார். இத்துடன் அறிவியலில் இலண்டன் பல்கலைக்கழத்தில் டாக்டர் பட்டம், பான் பால்கலைக்கழகத்தில் கற்ற கல்வி ஆகியவை அம்பேத்கருக்கு அணிசேர்த்தன. முழு தகுதிவாய்ந்த வழக்கறிஞர் ஆனார். இந்தியாவில் உள்ள பொருளாதார சமூகவியல் அறிஞர் களுக்கு அறைகூவல் விடுமளவிற்குச் சிறந்த வல்லுனரானார். இத்தகுதிகளுடன் இந்திய அரசியல் களத்தில் புயலென நுழைந்தார் அம்பேத்கர்.
அம்பேத்கர் சந்தித்த தீண்டாமைக் கொடுமைகள்
பள்ளியில்
சதாராவில் உள்ள தொடக்கப்பள்ளியில் பீம்ராவ் சேர்ந்தார். தொடக்கப்பள்ளியில் கல்வி கற்று முடிந்ததும் அதே ஊரில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அந்தப்பள்ளியில் அம்பேத்கரை வகுப்பரையின் ஒரு மூலையில் தனியாக அமர வைத்தனர். அதிலும் தரையில் உட்கார்ந்தால் தீட்டு ஒட்டிக்கொள்ளும் என்பதால் ஒரு கோணியை விரித்து அதன்மேல்தான் உட்காரவேண்டும் வீட்டுக்குச் செல்லும்போது அந்தக் கோணியை எடுத்துச் சென்று விடவேண்டும். ஆசிரியர்கள் தவறிப்போய் கூட அம்பேத்கரைத் தொடமாட்டார்கள். அவ்வளவு ஏன்? அம்பேத்கரின் நோட்டுப்புத்தகங்களைக் கூட எந்த ஒரு ஆசிரியரும் தொடமாட்டார்கள். ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டு தானாகவே பயின்று தேர்வில் வெற்றிபெற்றவர்தான் டாக்டர் அம்பேத்கர். பள்ளிக்கு வந்து போவதைத்தவிர வகுப்பில் பாடம் படிக்கவோ சகமாணவர்களுடன் சேர்ந்து பாடல்பாடவோ அனுமதிக்கவே இல்லை. வகுப்பறையில் தாகம் எடுத்தால் தண்ணீர் குடத்தில் இருந்து நீர் எடுத்துக் குடிக்கவே கூடாது. தாகம் எடுத்த குழந்தைகள் அண்ணார்ந்து கொண்டு ‘ஆ” வென்று வாயைத் திறக்க வேண்டும். இரக்கம் கொண்ட உயர்சாதிப்பிள்ளைகள் குடிதண்ணீரை ஒருபாத்திரத்தில் எடுத்து வாயில் ஊற்றுவார்கள். ஒருவேளை எந்த உயர்சாதி மாணவரும் தண்ணீர் கொடுக்கவில்லை என்றால் அன்று பொழுதும் தாகத்தோடுதான் இருக்கவேண்டும். இந்த கொடுமைக்கு உள்ளானவர்தான் டாக்டர் அம்பேத்கர்.
கிராமத்தில் இருந்த பள்ளியில்தான் இந்தக் கொடுமை என்றால் பம்பாய்க்கு குடிபெயர்ந்து அங்கே சிறந்த அரசுப் பள்ளியான நியூ எல்பின்ஸ்டன் பள்ளியில் சேர்ந்து படித்தபோதும் ஓர் துயர நிகழ்ச்சி அம்பேத்கா ;மனதை பெரிதும் புண்படுத்தியது.
அம்பேத்கர் நன்றாக படிப்பதை அறிந்து பல உயர்சாதி ஆசிரியர்கள் பொறாமைப்பட்டனர். சிலர் நேரடியாக வெறுப்பைக் காட்டவும் செய்தார்கள். அம்பேத்கர் அதைக்கேட்டு வருந்தினார். ஆசிரியர்கள் மட்டுமே அப்படி இருந்தார்கள் என்று நினைக்க வேண்டாம் உயர்சாதி மாணவர்களும் அம்பேத்கரை கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்.
ஒரு நாள் கணக்குவகுப்பு நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் அம்பேத்கரை கணக்கு ஒன்றை கரும்பலகையில் போடச் சொல்லி அழைத்தார். ஆசிரியரின் ஆணைப்படி கணக்குபோட அம்பேத்கர் எழக்கூடவில்லை. உயர்சாதி மாணவர்கள் ஒரே கூச்சலிட்டுக் கொண்டு பின்புறம் வைத்திருந்த தங்கள் உணவுப்பாத்திரங்களை எடுத்துக்கொண்டு விலகி ஓடினார்கள். கரும்பலகை அருகில் வரும் அம்பேத்கர் தங்கள் உணவுப்பாத்திரங்களை எங்கே தொட்டு விடுவாரோ அதனால் தங்கள் உணவு மற்றும் பாத்திரம் தீட்டாகி விடுமோ என்ற பயம்தான் அந்த மாணவர்களை அவ்வாறு நடந்து கொள்ளச் செய்தது. அந்த நிகழ்ச்சி அம்பேத்கரின் அடிமனதில் ஆழமாகப்பதிந்து ஒரு மாறாத வடுவை ஏற்படுத்திவிட்டது.
பள்ளியில் சமஸ்கிருத மொழிப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் நினைத்தார். அவருடைய அண்ணனும ;படிக்கும்போது சமஸ்கிருதம் எடுத்துப்படிக்க ஆசைப்பட்டார். இருவரும் தங்கள் விருப்பத்தை தெரிவித்தும் உயர்சாதி ஆசிரியர்கள் வெகுண்டு எழுந்தனர்.
தீண்டப்படாத மாணவர்கள் சமஸ்கிருதம் படிப்பதா? என்று கூச்சலிட்ட பள்ளி ஆசிரியர்கள் கூடவே கூடாது என்று தங்களுடைய எதிர்ப்பை, கண்டனத்தைத் தெரிவித்தார்கள். பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்கள் எதிர்ப்பால் கட்டுண்டு அம்பேத்கருக்கும் அவரது அண்ணனுக்கும் சமஸ்கிருதம் பயிலும் சந்தர்பத்தைத் தடுத்து நிறுத்தியது. அதன்மூலம் அம்பேத்கர் சமஸ்கிருதம் எடுத்துப் படிக்கக் கூடாது என்ற கடுமையான அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டார்.
கல்லூரியில்
பம்பாயில் சைடன் கோம் கல்லூரியில் பொருளியல் வர்த்தகப் பிரிவில் பொருளாதாரப் பேராசிரியராக 1918 நவம்பரில் பதவி ஏற்றார். சைடன கோம் கல்லூரியில் இந்தப் புதிய பேராசிரியரிடம் மாணவர்கள் பாடம் பயில அதிக அக்கரை காட்டவில்லை. உயர்சாதி இந்து மாணவர்களுக்கும் மற்றும் சமூகத்தில் முன்னேறிய வீட்டுப்பிள்ளை களுக்கும் ஒரு தீண்டப்படாதவர் என்ன கற்றுத்தந்துவிடப் போகிறார் என்று எண்ணி அவர் வகுப்பை புறக்கணித்தார்கள். அம்பேத்கரின் ஆழ்ந்த படிப்பறிவு விளக்கமாக எடுத்துரைக்கும் திறமை சிந்தனை யைத் தூண்டும்படியான பேச்சு ஆகியவை மெல்லமெல்ல மாணவர் களின் மனங்களை ஈர்த்தன. இதன் விளைவாக மற்ற கல்லூரி களிலிருந்தும் இவர் வகுப்பிற்கு வந்து பாடம் கேட்டனர். ஆனால் பேராசிரியராக பெற்ற இவர் வெற்றி தீண்டாமைத் தீயைத் தனித்திடவில்லை. புனிதமான கல்வி கற்கும் சூழ்நிலையில் கூட பேராசிரியர்களுக்கு வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப்பானையில் இருந்து தண்ணீர் குடிக்கக் கூடாது என குஐராத்தில் இருந்து வந்த போராசிரியர்கள் போர்க்கொடி தூக்கினார்கள் என்றால் எவ்வளவுதூரம் தீண்டாமைக்கொடுமை அம்பேத்கரைவிடாமல் தொடர்;ந்து வாட்டியது என்பதை நாம் இங்கு உணரலாம்.
சமூகவாழ்வில்
அம்பேத்கர் அவர்கள் தான் அனுபவித்த கொடுமைகள் மனதில் நீங்காமல் இருந்த ஒருசில நினைவுகளை அவரே பகிர்ந்து கொள்வதை இங்கு காண்போம். 1901ம் ஆண்டு வாக்கில் சதாரா வில் நாங்கள் இருந்தபோது நிகழ்ந்தவை இதோ ………
- முதல் அனுபவம்
என் தாயார் அப்போது உயிருடன் இல்லை. சதாரா மாவட்டத்தில் கடாங் தாலுக்காவிலுள்ள கோரேகான் என்ற இடத்தில் காசாளராகப் பணியாற்ற என் தந்தையார் சென்றிருந்தார். பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்து கொண்டிருந்தனர் அங்கே பஞ்சத்தால் அடிப்பட்ட மக்களுக்கு வேலை கொடுப்பதாக பம்பாய் அரசு ஒரு பெரிய குளத்தை வெட்ட ஏற்பாடு செய்திருந்தது. என் தந்தையார் கோரேகானுக்குச் சென்றிருந்தபோது என்னையும் என் மூத்த சகோதரனையும் மறைந்த என் மூத்த சகோதரியின் இரு மகன்களையும் என் அத்தை மற்றும் சில நல்ல அண்டை வீட்டுக் காரர்களின் பராமரிப்பில் விட்டுச் சென்றார்.
எங்கள் அத்தை தம் இயலாமையால் சமைக்க முடியாத நிலையில் இருந்ததால் உணவு தயாரிப்பது எங்களுக்கு பிரச்சனை யாக இருந்தது. காசாளர் பொறுப்பில் இருந்ததால் எங்கள் தந்தையால் சதாராவுக்கு வந்து எங்களை சந்திக்க முடியவில்லை. எனவே கோடை விடுமுறைக்கு அவருடன் கழிக்க கோரோகானுக்கு செல்ல திட்டமிட்டிருந்தோம்.
எங்கள் பிரயாணத்தைக் குறித்து தந்தையார் எல்லா விபரங்களையும் கொடுத்திருந்ததுடன் எங்களை இரயில் நிலையத்தில் சந்தித்து கோரேகானுக்கு அழைத்துச் செல்ல அவரது வேலையாளை அனுப்புவதாகக் கடிதத்தில் எழுதியிருந்தார். இந்த ஏற்பாட்டில் நான் என் அண்ணன் என் சகோதரியின் இரண்டு மகன்கள் ஆகியோர் சதாராவில் இருந்து கோரேகானுக்கு இரயில் மூலம் புறப்பட்டோம். இரயிலில் பயணம் செய்த எங்களுக்கு மிகுந்த உற்சாகமாக இருந்தது. கோரேகானுக்கு அருகில் உள்ள மாசூரில் மாலை சுமார் 5 மணி அளவில் இரயிலில் இருந்து இறங்கினோம். சில நிமிடங்களில் இரயிலில் உடன் பயணம் செய்த பிரயாணிகளும் இறங்கிச் சென்று விட்டனர். எங்கள் தந்தை அனுப்புவதாகச் சொல்லி இருந்த வேலையாள் வராததால் பிளாட்பாரத்திலேயே நெடுநேரம் காத்திருந்தோம்.
ஒரு மணி நேரம் கழித்தபின் இரயில் நிலைய அதிகாரி வந்து எங்களை விசாரித்தார். நாங்கள் கோரேகானுக்குப் போக வேண்டியதையும் எங்கள் தந்தை அனுப்பிய வேலையாள் வராததையும் எடுத்துக் கூறினோம். நாங்கள் நன்கு ஆடை அணிந்திருந்தோம் அதைக்கண்ட இரயில் நிலைய அதிகாரி நாங்கள் பிரமாணச் சிறுவர்கள் என்று எண்ணி, நாங்கள் இருந்த நிலையைக் கண்டு மிகவும் வேதனை அடைந்தார். இந்துக்களின் வழக்கப்படி நாங்கள் யார் என்று கேட்டார் ஒரு நிமிடமும் தாமதியாது நாங்கள் ‘மகர்” இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினேன். அவர் திடுக்கிட்டுப் போனார். அவர் முகத்தில் திடீர் மாற்றம் தோன்றியது. ஒரு விசித்திரமான அருவருப்பு உணர்வு அவரைத் தாக்கியதாக எங்களுக்குத் தோன்றியது. என்னுடைய பதிலைக் கேட்டவுடன் அவர் தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டார்.
நாங்கள் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தோம். அரை மணி நேரம் கழிந்து திரும்பவும் வந்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று வினாவினார். நாங்கள் இரயில் நிலைய அதிகாரிக்கு மகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என்று கூறியது வெளியில் இருந்த வண்டிக்காரர்களுக்குத் தெரிந்துவிட்டது. அவர்கள் யாரும் தீண்டப்படாதவர்களாகிய எங்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு கோரோகான் செல்ல முன்வரவில்லை. இரண்டு மடங்கு வாடகையை தருகிறோம் என்று கூறியும் அவர்களை பணம் ஒன்றும் செய்யவில்லை. தீண்டாமையை கடை பிடிப்பதே பணத்தின் வருவாயை விட அதிக பலம் வாய்ந்ததாக இருந்தது. எங்களுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இரயில் நிலைய அதிகாரி உங்களுக்கு வண்டி ஓட்டத்தெரியமா? என்று கேட்டார். தெரியும் என்று கூறினோம். நாங்கள் வண்டிக்காரருக்கு இருமடங்கு வாடகை கொடுக்க வேண்டும் என்றும் நாங்களே வண்டியை ஓட்டிச்செல்ல வேண்டும் என்றும் வண்டிக்காரன் எங்கள் வண்டியுடன் நடந்தே வருவான் என்றும் சமாதானம் செய்து வைத்து இரயில் நிலைய அதிகாரி எங்களை அனுப்பிவைத்தார்.
நாங்கள் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டோம். விரைவில் கோரேகானைச் சென்றடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் வண்டிக்காரனும் விரைவில் சென்று விடலாம் என்று கூறிய கூற்றை நம்பிப் புறப்பட்டோம். இரயில் நிலைய அதிகாரிக்கு நன்றி சொல்லி விட்டு மாட்டுவண்டியில் பயணத்தை துவக்கினோம். வண்டிக்காரன் தொடர்ந்து எங்கள் வண்டியின் பின்னே நடந்து வந்தான்.
இரயில் நிலையத்துக்கு அருகே ஓர் ஆறு ஓடிக் கொண் டிருந்தது. அங்கு தண்ணீர் தேங்கியிருந்த போன்ற குட்டை தென்பட்டது. இந்த இடத்திலேயே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வண்டியின் வாடகைப் பணத்தில் முன்பணமாக ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று கூறி அருகில் இருந்த கிராமத்திற்குச் சென்று விட்டான் அந்த வண்டிக்காரன்.
எங்களுக்கு மிகவும் பசியாக இருந்ததால் சாப்பிடுவதற்கு ஒரு சந்தர்பம் கிடைத்ததே என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தோம். உணவுப்பொட்டலங்களைப் பிரித்து உண்டபின், குடிப்பதற்காக நீர் எடுத்துவர ஆற்றுப்படுகையில் இருந்த தண்ணீர் குட்டைக்குச் சென்று பார்த்தோம். அப்போதுதான் தெரிந்தது. அந்தத் தண்ணீர் உண்மையிலேயே குடிப்பதற்கு உகந்த நீர் இல்லை என்று மேலும் அந்தத் தண்ணீர் எருமை மாடுகளும் இளங்கன்றுகளும் மிதித்த கால் தடையங்களில் தேங்கியிருந்த மாட்டுக் கோமியங்களுடன் கலந்த நாற்றம் எடுக்கும் நீர் குட்டைபோல் காணப்பட்டது. அந்தத் தண்ணீர் மனித உபயோகத்திற்கு உகந்தது இல்லை என்பதைக் கண்டு கடும் துயர் கொண்டோம். தண்ணீர் அருந்தாமலேயே உணவை அரைகுறையாக உண்டபின் வண்டிக்காரனுக்காகக் காத்திருந்தோம்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு வண்டிக்காரன் திரும்பி வந்தான். அவன் வந்தவுடன் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். நாலைந்து மைல் நாங்கள் ஓட்டிச் சென்ற வண்டியுடன் நடந்தே வந்த வண்டிக் காரன் திடீரென்று வண்டியில் ஏறிக்கொண்டு வண்டியைதானே ஓட்ட முன்வந்தான். தீட்டு பட்டுவிடுமோ என்ற பயத்துடன் நடந்தே வந்த வண்டிக்காரன் இந்து மதப ;பண்பாட்டையும் மீறி எங்களுடன் அமர்ந்து பயணம் செய்தது எங்களுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. களைப்புடன் நடந்து வந்ததால் ஏற்பட்ட உடல்வலி தீட்டுபட்டு விடும் என்ற எண்ணத்தையும் மாற்றிவிடும் என்பதை அப்போது நாங்கள் உணர்ந்து கொண்டாலும் விரைவில் நாங்கள் செல்ல வேண்டிய இடம் கோரேகான் வந்து விடும் என்ற எண்ணத்திலேயே இருந்தோம்.
இரவு 10 மணியாகியும் கோரேகான் நெருங்கிவிட்டதற்கான எந்தவித ஒரு அடையாளமும் தென்படவில்லை என்பதால் கோபத்துடன் வண்டிக்காரனைத் திட்டினோம். நீண்டநேரம் எங்களுடைய அழுகையும் முனகலும் தொடர்ந்தன. வண்டிக்காரன் எந்த பதிலும் அளிக்கவில்லை சிறிது தூரத்தில் ஓர் விளக்கு ஒளி தென்பட்டது. அந்த இடம் சுங்கச் சாவடி என்றும் இரவு அங்கேயே கழித்தபின் காலையில் கோரேகான் சென்றுவிடலாம் என்று வண்டிக்காரன் கூறியது எங்களுக்கு சற்று ஆறுதலாய் இருந்தது. நடு நிசியில் சுமார் இரவு பன்னிரண்டு மணி அளவில் சுங்கச்சாவடி வந்தடைந்தோம். எங்களைப்போல சில வண்டிக்காரர்கள் இரவைக் கழிப்பதற்காக அங்கே காத்திருந்தனர்.
எங்களுக்கு பசி அதிகமாக இருந்ததால் உணவு உட்கொள்ள ஆசைப்பட்டோம். ஆனால் மீண்டும் தண்ணீர் பிரச்சனை எழுந்தது. தண்ணீர் கிடைப்பதற்கு ஏதேனும் சாத்தியக் கூறு இருக்கிறதா என்று எங்கள் வண்டிக்காரனைக் கேட்டோம். நாங்கள் ‘மகர்” என்ற உண்மையை இந்துவான சுங்கஅதிகாரியிடம் சொன்னால் எங்களுக்கு தண்ணீர் கிடைக்காது என்று வண்டிக்காரன் எங்களை எச்சரித்தான். முகமதியர்கள் என்று கூறுங்கள். உங்கள் நல்ல நேரத்தைப் பார்க்கலாம் என்றான். அந்த யோசனையின்படி நான் சுங்கத் தலைவரிடம் போய் எங்களுக்கு கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா என்று கேட்டேன். அதற்கு அந்த சுங்கத்துறை அதிகாரி நீங்கள் யார் என்று கேட்டார். நாங்கள் முஸ்லீம்கள் என்று பதிலுரைத்தேன். முஸ்லீம் என்பதைப்பற்றி சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக எனக்கு நன்கு தெரிந்த உருதுமொழியில் பேசினேன். ஆனால் இந்த தந்திரம் பலிக்க வில்லை. அவர் நறுக்குத் தெரித்தார்போல் பதிலளித்தார் ‘உங்களுக்கு யார் இங்கே தண்ணீர் வைத்திருக்கிறார்கள.; பக்கத்தில் உள்ள குன்றில் தண்ணீர் இருக்கிறது. வேண்டுமென்றால் போய் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். என் அண்ணன் அதற்கு செவிசாய்க்காமல் அனைவரையும்படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டார். வண்டியில் இருந்த அடிப்பலகையில்படுத்துக் கொண்டோம். பத்திரமான இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தும்; என்ன நடந்தது என்பதைப்பற்றி எண்ணி கவலைப்பட்டோம். எங்களிடம் ஏராளமான உணவும் பொட்டலங்கள் (பொருட்கள்) இருந்தும் பசியால் வாடினோம். குடிக்கவே தண்ணீர் கிடைக்காதது நாம் தீண்டப்படாதவர் என்பதால் தானே என்று எண்ணி வருந்தினோம்.
பொழுது விடிந்ததும் காலை 6மணிக்கு கோரேகான் புறப்படலாம் என்று வண்டிக்காரன் கூறினான். அதை மறுத்து காலை 8 மணிக்கே புறப்பட சம்மதித்தோம். பசியின் கொடுமையை பொறுத்துக்கொண்டு சுமார் 11 மணியளவில் கோரேகான் வந்தடைந்தோம். எங்களைக ;கண்ட எங்கள் தந்தை ஆச்சரியப்பட்டார். வேலையாள் வராததைக் கேட்டு வருத்தப்பட்டார்.
இந்த நிகழ்ச்சி எனது வாழ்வில் மிகமுக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சி நடந்தபோது எனக்கு வயது ஒன்பது ஆனால் அந்த நிகழ்வு என் அடி மனதில் அழியாத தழும்பை ஏற்படுத்திவிட்டது.
இரண்டாவது அனுபவம்
பாரோடா அரசின் உதவியால் நான் கல்வி பயின்றேன் அதனால் அந்த அரசுக்கு சேவை செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. இலண்டன் பல்கலைக் கழகத்தில் 1917ம் ஆண்டு பொருளாதாரத் துறையில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்தேன். கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டதால் படிப்பை முடிக்க இயலாமல் இந்தியா திரும்பவேண்டியிருந்தது. வந்தவுடன் பரோடா அரசில் பணியாற்ற பரோடாவிற்கு இரயில்மூலம் சென்றடைந்தேன். இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் என்னை மிகவும் வாட்டியது ஒரு கேள்விதான். எங்கே போவது எங்கே தங்குவது யார் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்பதுதான். நான் மிகவும் அமைதி யுற்றிருந்தேன்.
அங்கே ‘விஷிஸ்” என்ற இந்து ஓட்டல் இருப்பது எனக்குத் தெரியும் ஆனால் அவர்கள் என்னை தங்க அனுமதிக்க மாட்டார்கள். ஆள்மாராட்டம் செய்வதே அங்கு தங்கும் இடவசதிபெற உள்ள ஒரேவழி. அதற்கு நான்தயாரில்லை காரணம் என்னை மகர் சாதியைச் சேர்ந்தவன் என்று கண்டு பிடித்துவிட்டால் அதனால் ஏற்படும் பயங்கர விளைவுகளைப் பற்றி நான் அறிவேன்.
இரயில் நிலையத்தின் வெளியில் இருந்த குதிரை வண்டிக்காரர்களில்; ஒருவரை அழைத்து தங்க ஏதாவது இடம் இருக்கிறதா என்று கேட்டேன். அருகில் ஒரு பார்சி ஓட்டல் இருப்பதாகவும் அதில் பணம் செலுத்தி தங்கிக் கொள்ளலாம் என்றும் அந்த வண்டிக்காரர் யோசனை கூறினாh.; அவர் கூற்றுப்படி பார்சி பயணியர் விடுதிக்குச் சென்றேன். காரணம் பார்சி மதத்தில் தீண்டாமை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதால் பார்சி ஓட்டலில் தைரியமாகத் தங்கலாம் என்ற எண்ணத்துடன் அங்கு சென்று தங்கினேன்.
அந்த பயணிகள் விடுதி ஒரு இரண்டு மாடிக்கட்டிடம் வயதான பார்சிக்காரர்; தமது குடும்பத்துடன் கீழ்தளத்தில் வசித்து வந்தார். அந்த விடுதியின் காப்பாளரும் அவரே. மேல் மாடியில் ஒதுக்கப்பட்ட அறையில் வந்த களைப்பினால் மேல் ஆடையைக் களைந்து சற்று இளைப்பாறினேன். இதற்கிடையில் தன்கையில் ஒரு புத்தகத்துடன் மேலே வந்த காப்பாளர் மேலாடை இல்லாமல் இருந்த என்னைப் பார்த்துவிட்டு ‘தான் ஒரு பார்சி என்பதை அடையாளம் காட்டும் சத்ராவோ” காஸ்த்தியோக இல்லாததைக்கண்டு கடுமையான குரலில் நீ யார் என்று கேட்டார். அந்த பயணிகள் விடுதி பார்சியால் பார்சிமக்களுக்காக நடத்தப்படும் ஓட்டல். அந்த விடுதி காப்பாளர் கேட்ட கேள்விக்கு நான் ஒர் இந்து என்று பதில் கூறினேன். பதறிப் போன அவர் அங்கே இந்துக்கள் தங்கக் கூடாது என்று கூறிவிட்டார். அவருடைய பதில் என்னை மேலும் அதிர்ச்சிக்குள் ஆக்கிவிட்டது.
பல நாட்கள் எந்த சுற்றுப் பயணியும் அந்த விடுதிக்கு வராமல் இருந்ததாலும் பணம் அந்த விடுதிக் காப்பாளருக்கு தேவைப் பட்டதாலும் நான் என் பெயரை ஒரு பார்சியின் பெயராக மாற்றி அங்கே தங்கிக் கொள்கிறேன் என்று கூறியதாலும் அங்கே தங்க என்னை அனுமதித்தார்.
ஆனால,; இந்த பயணிகள் விடுதியில் நான் தங்கியதின் சோக முடிவை விளக்குவதற்கு முன்பு நான் அங்கே தங்கிஇருந்த சிறிது காலத்தில் எப்படி எனது நேரத்தைக் கழித்தேன் என்பதை விளக்க வேண்டும். பயணிகள் விடுதியின் முதலாவது மாடியில் ஒருசிறு படுக்கை அறையும் அதை ஒட்டிய இடத்தில் தண்ணீர் குழாயுடன் கூடிய சிறிய குளியல் அறையும் இருந்தது. எஞ்சியது ஒரு பெரிய கூடம்.
நான் அந்த விடுதியில் தங்கி இருந்தபோது அந்த பெரிய கூடத்தில் எல்லாவிதமான குப்பை கூளங்களும் மரப்பலகைகளும் பெஞ்சுகளும் உடைந்த நாற்காலிகளும் இருந்தன. இந்தச் சூழலின் மத்தியில் தனியாக அங்கு தங்கி இருந்தேன். சுமார் 10 மணி அளவில் காலையில் விடுதியை விட்டு அலுவலகம் செல்வதும் இரவு 8 மணிக்கு மேல் விடுதிக்குத் திரும்புவதும் என் வழக்கமாக்கிக் கொண்டேன். பயணிகள் விடுதியில் பேசுவதற்கு எந்த சக மனிதரும் கிடையாது. தனியாகவே இருந்ததால் விளக்குவசதிகூட இல்லாத இடத்தில் புத்தகம் படிப்பதிலேயே என் நேரத்தைக் கழித்துவந்தேன்.
அன்று பயணிகள் விடுதியில் தங்க ஆரம்பித்த 11வது நாள.; நான் காலை உணவை முடித்துக்கொண்டு நூலகத்தில் இருந்து படிப்பதற்காக எடுத்து வந்த புத்தகங்களை திருப்பிக்கொடுக்க அவற்றை எடுத்துக்கொண்டிருந்தேன.; அப்போது மாடிக்கு ஒருசிலர் மேலே வரும் சத்தம் கேட்டது. மாடியில் தங்கவரும் பார்சி பயணி களாக இருக்கும் என்று எண்ணி அவர்களைப் பார்க்கச் சென்றேன். உயரமான, கோபக்கனல் தெரிக்கும் பலசாலியான பத்துப் பனிரெண்டு பார்சிகள் கையில் ஆளுக்கு ஒரு கம்புடன் என் அறைக்கு முன் வரிசையாக நின்றுகொண்டு நீ யார் – நீ ஏன் இங்கு வந்தாய்? நீ எப்படி பார்சி பெயரை வைத்துக் கொண்டு ஆள்மாராட்டம் செய்தாய்? அயோக்கியனே என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.
நான் மௌனமாக நின்று கொண்டிருந்தேன். என்னால் எந்த பதிலும் அளிக்க இயலவில்லை. நான் ஒரு பார்சிதான் என்று கூறி இருந்தால் அந்த முரட்டுக் கூட்டம் என்னைக் கொன்றே இருக்கும். நான் மௌனமாக இருந்தேன் நீ உடனே இந்த விடுதியை காலி செய்து விடவேண்டும் என்று எச்சரித்தனர். நான் ஒருவார காலம் அவகாசம் கேட்டதற்கும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
விடுதியை காலி செய்துவிட்டு சக ஊழியராக வேலை செய்யும் ஒரு இந்து நண்பரை அணுகினேன். அவரும் உடன்வந்து தங்கு வதற்கு ஒப்புதல் அளித்தார். ஆனால் அவர் வீட்டில் வேலைசெய்யும் வேலையாள் நான் மகர் என்பதைத் தெரிந்தால் நின்றுவிடுவார்கள் என்று கூறியதால் அங்கு செல்வதற்கும் தடை ஏற்பட்டது.
மற்றும் ஒரு கிறிஸ்தவ நண்பர் பிராமண குடும்பத்தில் இருந்து மதம் மாறிய பெண்ணை மனைவியாக ஏற்றுக் கொண்ட கிருஸ்தவர் வீட்டில் தங்க உதவிகேட்டேன். கிறிஸ்தவ நண்பர் நல்லவராக இருந்தாலும், போதிய சமூக சிந்தனையில் வளர்ச்சிபெறாத அவர் மனைவி ஒரு மகர் தம் வீட்டில் வந்து தங்குவதை ஏற்க மறுத்ததால் அவர் வீட்டில் தங்கும் வாய்ப்பும் வீணானது.
வேறு வழியின்றி பம்பாய் திரும்ப திட்டமிட்டேன் இரவு 9 மணிக்குத்தான் பம்பாய் செல்லும் இரயில் புறப்படும் என்பதை தெரிந்து கொண்டேன். மாலை 5 மணி வரை அருகில் இருந்த ஒரு பூங்காவில் நேரத்தைக் கழித்து விட்டு இரவு 8 மணி அளவில் அறையில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு, விடுதி காப்பாளரிடம் செலுத்த வேண்டிய தொகையையும் கொடுத்து விட்டு அன்றிரவே பம்பாய் திரும்பினேன்.
ஒரு டசன் பார்சிகள் அச்சுறுத்தும் விதத்தில் கையில் கம்புடன் என ;முன்னே வரிசையாக நிற்க அவர்களிடம் மன்னிப்பு கேட்டு பீதி நிறைந்த பார்வையுடன் அவர்கள் முன்னே நான் நின்ற காட்சி என் வாழ்நாளில் என்றும் மறையாத வடுவாக மாறிவிட்;டது.
அந்தக் காட்சியை தெளிவாக என்கண்முன் கொண்டுவரும் போதெல்லாம் என் கண்களில் நீர் ததும்புகிறது.
இந்துக்களுக்கு ஒருவன் தீண்டத்தகாதவன் என்றால் அவன் பார்சிக்காரர்களுக்கும் தீண்டத்தகாதவன் என்பதை அப்போதுதான் முதன் முதலாகத் தெரிந்துக் கொண்டேன் என்று எடுத்துரைத்தார்.
மூன்றாவது அனுபவம் :
1929ம் ஆண்டு தீண்டப்படாதவர்களின் குறைகளைக் குறித்து விசாரிக்க பம்பாய் அரசு ஒரு குழுவை நியமித்தது. நானும் அந்தக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டேன். தூலியா இரயில் மார்க்கத்தில் இருந்த ஒரு கிராமத்தில் சமூக பகிஷ்காரத்தைப் பற்றி விசாரிக்க வேண்டி இருந்தது. சமூக பிரச்சனையைக் குறித்து விசாரணை நடத்திவிட்டு நேராக பம்பாய் செல்ல திட்டமிட்டிருந்தேன். சாலிஸ்காவோன் என்ற கிராமத்தைச் சேர்ந்த தீண்டத்தகாதவர்கள் என்னை அவர்களுடன் தங்க வேண்டிக்கொண்டதாலும், இரயில் நிலையத்தில் என்னை மாலை மரியாதையுடன் வரவேற்று கண்டிப்புடன் கேட்டுக்கொண்டதாலும் அவர்கள் கிராமத்திற்குச் செல்ல ஒப்புக் கொண்டேன்.
இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2மைல் தூரத்தில் இருந்தது அவர்களின் குடியிருப்பு. அதை அடைவதற்கு ஒரு வாய்க்கால் வழியாகச் செல்ல வேண்டும். இரயில் நிலையத்தில் வாடகைக்கு பல குதிரைவண்டிகள் இருந்தன. இரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் பகுதிக்குச் செல்ல குறைந்த தூரம்தான். இருந்த போதிலும் என்னை உடனே அழைத்துச் செல்லவில்லையே ஏன் என்று யோசித்தேன். ஒருமணிநேரம் கழித்து ஒரு டாங்கே (ஒற்றை குதிரைவண்டி) வந்தது. அதில் ஏறிக்கொண்டு பயணம் ஆனேன். டாங்கே 200 அடிதூரம் சென்றிருக்காது. அது ஒரு மோட்டார் காருடன் மோதிவிடுமளவிற்கு வண்டியை ஓட்;டினார். டாங்கோவை கவனக்குறைவாக ஓட்டு பவரைப்பற்றி எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் இப்படி கவனக் குறைவாக வண்டி ஓட்டுகிறார் என்று எண்ணினேன்.
விபத்து தவிர்க்கப்பட்ட பின,; அந்த வழியே வந்த ஆற்றைக் கடந்து செல்லவேண்டும்;. ஆற்றைக் கடக்க பாலம் ஒன்று இருந்தது. பாலத்தின் பக்கவாட்டில் தடுப்புச் சுவர் இல்லாமல் 5 அடிக்கு ஒரு கல் தடுப்பாக வைக்கப்பட்டிருந்தது. ஆரம்பித்திலிருந்த முதல்பக்கவாட்டுக் கல்மீது டாங்கோவின் சக்கரம் பலமாக மோதியதால் நான் தூக்கி ஏறியப்பட்டேன். அந்த குதிரையும் வண்டியும் வாய்க்காலில் விழுந்தது. நான் விழுந்ததில் எனக்கு மயக்கம் ஏற்பட்டது. என்னைப் பார்க்க வந்திருந்த ஆண்கள், பெண்கள், குழுந்தைகள் அழுகுரல்களுக்கிடைய என்னை ‘மகர்” வாடாவுக்குத் தூக்கிச் சென்றனர். எனக்கு படுகாயம் ஏற்பட்டு கால் எலும்பு முறிந்துவிட்டது. பல நாட்கள் இதனால் நடக்கஇயலாமல் இருந்தேன். எந்நாளும் டாங்கோக்கள் அந்த பாலத்தில் விபத்து ஏற்படாமல் சென்றவர்களுக்கு நான் சென்ற அன்று மட்டும் ஏன் விபத்து நடந்தது என்று எண்ணிப்பார்த்தேன் விசாரித்ததில் ஓர் உண்மை தெரிந்தது.
டாங்கோவின் உரிமையாளர்கள் யாரும் தீண்டப்படாதவரை ஏற்றிச்செல்ல முன்வராத நிலையில் மகர் இனத்தவரே டாங்கோ வண்டியை ஓட்டிச்சென்றால் என்னை ஏற்றிக்கொள்ள அனுமதித்த னர். மகர் இனமக்களில் யாருக்கும் டாங்கோ வண்டியை ஓட்டிச் சென்ற அனுபவம் இல்லை. குதிரையின் கடிவாளத்தை சரியாக இறுக்கிப் பிடிக்கத் தவறியதால் அந்த விபத்து நேர்ந்தது. என்னை நடக்க வைத்து இட்டுச்செல்ல விரும்பாமல் ஓட்டத்தெரியாத குதிரை வண்டியில் என்னை ஏற்றி, கவுரவத்திற்காக வண்டியில் அமர்த்தி இட்டுச்செல்ல எண்ணி என் உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வந்திருந்தார்கள். அப்போது தான் புரிந்தது ஓர் இந்து டாங்கோவாலா ஒரு கடைநிலை வேலைக்காரனைப் போன்ற நிலையில் இருந்தாலும,; மற்ற எல்லா தீண்டத்தகாதவர்களையும்விட, ஏன் பாரிஸ்டர் பட்டம் பெற்றவரைவிட தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் கொண்டவன் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
நிலமையை இவ்வாறு சுருங்கச் சொல்லலாம். மகர் என்று தெரிந்தால் எந்த இந்துவும் குடிக்கக்கூட தண்ணீர் தரமாட்டான். சலவைத் தொழிலாளி காசு கொடுத்தாலும் மகர் இன தீண்டப்படாதவர் துணிகளை சலவை செய்து தரமாட்டான். முடி வெட்டமாட்டான். சவரம் செய்ய மாட்டான். குளத்தில் இறங்கி நீர் அருந்த விடமாட்டான் கோயிலில் நுழைய விடமாட்டான் இவை தீண்டப்படாத மக்களின் அன்றாட கொடுமைகள் என்று உணர்ந்து அவற்றின் விடுதலைக்கு என்ன வழி என்று சிந்திக்கத் தொடங்கி னேன்.
நான்காவது அனுபவம் :
1934ம் ஆண்டு தீண்டப்படாத வகுப்பினர் இயக்கதில் என்னுடன் பணி செய்தவர்கள் ஒரு சுற்றுலாவிற்குச் செல்லவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். சுற்றுலாவின் ஓர் முக்கிய இடம் தவுலாதாபாத். எங்கள் சுற்றுலாக் குழுவினரின் எண்ணிக்கை முப்பது பேரைக் கொண்டிருந்தது. இயோலா, நாசிக் நகரத்திலிருந்து அவுரங்கதாபாத் செல்லும் வழியில் இருந்தது. எங்கள் பயண திட்டத்தை வேண்டும் என்றே நாங்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஒரு தீண்டத்தகாதச் சுற்றுலாப்பயணி நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் கஷ்டங்களைத் தவிர்ப்தற்காகவே பிறர் அறிந்துகொள்ளா வண்ணம் பயணத்தை திட்டமிட்டோம். எதிர்பார்த்தபடியே தவுலாதாபாத் நகரத்தில் நிலைமை வேறுவிதமாக இருந்தது. அங்கு நாங்கள் வருவதைப்பற்றி எங்கள் மக்களுக்கு அறிவித்திருந்தோம். எங்களுக்கு சிறப்பான வரவேற்பை மக்கள் தவுலதாபாத்தில் ஏற்பாடு செய்தி ருந்தனர். அவர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டு இருட்டும் முன்பு முகமதியர் தொழுகை நடத்தும் நேரத்திற்கு முன்பாக தவுலாபாத் கோட்டைக்குச் சென்றோம்.
முகமதியர்கள் நோன்பு இருந்த ரம்சான் மாதம் அது. பிரயாணத்தின்போது ஆடைகள், முகங்கள் புழுதியடைந்திருந்தது. நாங்கள் எல்லோரும் உடலைக் கழுவிக்கொள்ள விரும்பினோம் அதிகம் சிந்தனை செய்யாமல் எங்களில் ஒருசிலர் முகத்தையும் கைகால்களையும் கோட்டையில் இருந்த குளத்தில் கழுவிக்க கொண்டனர்.
கோட்டைக்குள் செல்ல அனுமதிபெறவேண்டி கோட்டைக் காவலாளியிடம் அனுமதிகேட்க ஆரம்பித்தோம.; இதற்கிடையில் பின்னாலிருந்து வந்துகொண்டிருந்த ஒரு வயதான முதியவர் தீண்டத்தகாதவர்கள் குளத்தை அசுத்தம் செய்து விட்டனர் என்று கூப்பாடு போட்டார். அங்கு இருந்த இளம் மற்றும் வயதான முகமதியர்கள் எங்களை வசைபாட ஆரம்பித்தனர். தீண்ப்படாதவர்கள் தங்களின் நிலையை மறந்து குளத்தை அசுத்தப்படுத்தியதற்கு தண்டனை வழங்க வேண்டும் என்று எங்களை அச்சுறுத்தினா.; இந்தக் குளத்தில் தீண்டத்தகாதோர் இறங்கக் கூடாது என்று இருக்கும்போது எப்படி குளத்தில் இறங்கலாம் என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.
நாங்கள் வெளியூர்க்காரர்கள.; தெரியாமல் குளத்தில் இறங்கிவிட்டோம் என்று அமைதியாக் கூறிய என்னுடைய விளக்கத்தை முகமதியர்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. எங்களை எரிச்சலூட்டும் அளவுக்கு ஆபாசமாகத் திட்டினார்கள். இருப்பினும் நாங்கள் அமைதி காத்தோம். தீண்டத்தகாதவர்கள் பொதுக்குளத்தில் உளள தண்ணீரை உபயோகிக்கக் கூடாது என்ற பொருளில் ஒவ்வொருவரும் அவர்களது மத ஆச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று கூட்டத்திலிருந்த ஒரு முஸ்லீம் இளைஞர் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்தார். நான் பொருமையை இழந்து ஒருவித கோபக்குரலில் கேட்டேன் இதைத்தான் உங்கள் மதம் போதிக்கிறதா? முகமதியனாக ஒரு தீண்டத்தகாதவன் மாறினால் அவனை இந்தக் குளத்தில் இருந்து தண்ணீர் எடுக்கக் கூடாது என்று தடுப்பீர்களா?
இந்தக் கேள்வி அந்த முகமதியரிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. வந்திருந்த முகமதியர்கள் அமைதியானார்கள். பிறகு நாங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்ட்டோம். ஆனால் கோட்டைக் குள் இருந்த எந்த தண்ணீரையும் தொடமால் இருக்க ஒரு காவல் காரன் எங்களைப் பின் தொடர்ந்து வந்தான்.
ஒருவன் இந்துவுக்குத் தீண்டத்தகாதவன் என்றால் அவன் பார்சிக்கும், முகமதியனுக்கும் தீண்டத்தகாதவனே! என்பதை இந்த நிகழ்ச்சி படம் போட்டுகாட்டுகிறது. இவைகள் என் வாழ்நாளில் ஏற்பட்ட நீங்காத அவமானச் சின்னங்களாகும்.
அலுவலகத்தில் :
உயர்கல்வி படிப்பிற்காக பரோடா மன்னருடன் கல்வி உதவித்தொகை பெறப்பட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததால் பரோடா மன்னரின் அரசில் பத்தாண்டு காலம் பணி புரிய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றபின் அம்பேத்கார் நிதி அமைச்சராக அமர்த்திட அரசர் விரும்பினார். எனவே மன்னரின் இராணுவச் செயலாளராக உடனடியாக நியமிக்கப்பட்டார்.
ஆனால் அங்கும் அம்பேத்கர் தீண்டப்படாதவர் என்று அறிந்து கொண்ட சாதி இந்துவைச் சார்ந்த ஊழியர்கள் அலுவலகத்தில் அனைத்து நிகழ்வுகளையும் தலைகீழாக மாற்றினர். அம்பேத்கருடன் வேலை செய்த ஏவலர்களாலும் உடன் அலுவல் புரிந்தவர்களாலும் அம்பேத்கர் அவர்கள் ஒரு தொழு நோயாளியைப் போல நடத்தப்பட்டார். அலுவலகக் குறிப்புத் தாள்களையும் கோப்புக களையும் அவருடைய மேசை மீது வீசி ஏறிந்தனர். அவரிடம் நேரில் அந்த கோப்புக்களையும் குறிப்புதாள்களையும் கொடுத்தால் தீட்டாகிவிடுவோம் என்று கருதி அம்பேத்கரைப் புறக்கணித்தனர். கல்வியில் மேதையாக விளங்கியவரின் அருமையை உணராத, படிப்பறிவே இல்லாத, ஏவல் வேலை செய்யும் ஏழ்மை நிலையில் இருந்தவர்களே அம்பேத்கரை இழிவாக பார்ப்பதும் நடத்துவதும் கண்டு மனம் வெதும்பினார். அம்பேத்கர் அவர்கள் அலுவலக இருக்கையில் இருந்து புறப்பட எழுந்த போது எங்கே நடைபாதையில் உள்ள மிதியடி பாய் போன்றவற்றை மிதித்து விடுவாரோ, அதனால் தீட்டாகிவிடுமோ என்று எண்ணி மிதியடியையும் பாயையும் அப்புறப்படுத்தி விடுவார்கள். மனிதாபிமானம் அற்ற இந்த செயல் அவர் கண்முன்னே நடப்பதைக் கண்டு பெரிதும் மனவேதனை அடைந்தார். அவருடைய அறையில் குடிக்கக்கூட குடிநீர் வைப்ப தில்லை. ஏவலரை அழைத்தாலும் உடனே வருவதில்லை. வந்தாலும் கொடுக்கும் வேலையை முழுமைப்படுத்தாமல் புறக்கணித்தனர். இப்படி இழிவுடன் நடத்தும் செயலால் வேதனையுற்று தன் மனச் சுமையை தாங்கிக் கொள்ள நூலகம் சென்று நூல்களில் ஆழ்ந்து படிக்கத் தொடங்கிவிடுவார். இறுதியாக இந்தக் கொடுமைகளி லிருந்து விடுபட பரோடா மன்னரின் ஆட்சி அதிகாரத்தை உதறித் தள்ளிவிட்டு பம்பாய் திரும்பினார்.
சமூகப் போராளி :
பத்திரிக்கை ஆசிரியர்
அம்பேத்கர் தொடங்கிய முதல் பத்திரிக்கை ‘மூக் நாயக்” (ஊமைகளின் தலைவன்.) இரண்டாவது பத்திரிக்கை ‘பகிஷ்கிரித் பாரத்” (புறக்கணிக்கப்பட்ட இந்தியா). மூன்றாவது பத்திரிக்கை ‘சமத்துவம்”. நான்காவது பத்திரிக்கை ‘ஜனதா”. மக்கள் என்று பொருள்படும்படி இந்த பத்திரிக்கையை தன் ஆதரவாளர்களின் மேற்பார்வையில் நடத்தினார்.
ஊமைகளின் தலைவன் என்ற முதல் பத்திரிக்கை தீண்டப் படாத மக்களிடம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அப்பத்திரிக்கையின் வாயிலாக அம்பேத்கர் அவர்களுக்கு நேரிட்ட துன்பங்கள், அவமானங்கள், அனைத்தையும் எழுதியதுடன் அவற்றைப் போக்கும் வழி முறைகளையும் எடுத்தியம்பினார். இதன் மூலம் தீண்டப்படாத மக்கள் தங்கள் தலைவனின் தன்னலமற்ற தியாகத்தைப் புரிந்துகொள்ள ஒரு தூண்டு கோலாய் இருந்தது. சமத்துவப் பத்திரிக்கையோ மற்ற மக்களைப் போன்று தீண்டப்படாத தோரும் சமமாக வாழ வேண்டும் என்ற எழுச்சியை ஊட்டியது.
‘ஜனதா” பத்திரிக்கை சமத்துவம,; சுதந்திரம,; சகோதரத்துவம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தீண்டப்படாத வகுப்பு மக்கள் இந்த சமூகத்தில் இணைந்து வாழ விரும்புகின்றனர் என்பதை எடுத்துரைத்தது.
உரிமைப் போர்
1.சௌதார் குளம்.
அம்பேத்கர் வாழ்வில் சிறப்பான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதுதான் மகத் போhராட்டம். பம்பாய் மாகாண சட்டசபைக்குத் தீண்டப்படாதவர்கள் சார்பில் முதலாவதாக நியமிக்கப்பட்ட எஸ்.கே.போலே அவர்களால,; பம்பாய் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான், மகத் சௌதார் குளம் நீர் அருந்தும் போரட்டத்திற்கான மூலமாகும். 1923-ல் நிறைவேற்றப்பட்ட திரு.போலே தீர்மானம் 1926-ல் சிறிய மாறுதல்களுடன் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் மகத் நகராட்சி சொளதார் குளத்தை தீண்டப்படாதவர்கள் பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. ஆனால் நகராட்சியின் தீர்மானம் செயல்வடிவம் பெறவே இல்லை.
1927 மார்ச் 19, 20 ஆகிய நாட்களில் கொலாபா மாவட்ட தீண்டப்படாத மக்கள் மாநாட்டை மகதில் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. மாநாட்டிற்கான எல்லா வசதிகளும் செய்யப்பட்டன. மாநாட்டின் வெற்றிக்காக அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப் பட்டன. தலைமை உரையை அம்பேத்கர் ஆற்றினார். தீண்டப் படாதவர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டுள்ள நாம,; ஒரு காலத்தில் மிக முன்னேறிய வகுப்பினரை காட்டிலும,; கல்வியில் மிகவும் உயர்ந்திருந்தோம். நாட்டின் மத்திய பகுதியில் நம் வகுப்பு மக்களின் செயல்பாடுகளும் ஆளுமையும் உயிரோட்டமும் அதிகார செல்வாக் கும் பெற்றிருந்தன எனக் குறிப்பிட்டார்.
மாநாட்டினர் ஊர்வலமாக சென்று சௌதார் குளத்தில் நீர் எடுப்பதன் மூலம் தீண்டப்படாதவர்கள் தண்ணீர் எடுக்கும் உரிமையை நிலை நாட்டிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஊர்வலம் சௌதார் குளம் நோக்கிச் சென்றது. அம்பேத்கரும் அவர் தொண்டர்கள் ஆயிரக்கணக்கான மகர் இனத்தவர் சௌதார் குளத்தில் தண்ணீர் பருகி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சி நடந்த இரண்டு மணி நேரம் கழித்து, தீய எண்ணம் கொண்ட சில சாதி இந்துக்கள் தீண்டபடாதவர்கள் வீரேஸ்வரர் கோயிலுக்குள் நுழையவும் திட்டமிட்டுள்ளார்கள் என்று புரளி பரப்பினர். இதை நம்பிய கயவர் கூட்டம,; கைகளில் மூங்கில் தடிகளுடன் நகரின் தெருக்கோடிகளில் கூடியது. இந்து மதத்திற்கே ஆபத்து. கடவுளையே களங்கப்படுத்தப் பார்க்கிறார்கள் என்று கூச்ச லிட்டனர். வீரேஸ்வரர் கோயிலின் புனிதத்தன்மை கெடப்போகிறது என்ற எண்ணத்தாலும் தங்களுடைய மதத்திற்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதே என்றும் தவறாகக் கருதி, கொதிப்படைந்த சாதி இந்துக்கள் மாநாட்டுப் பந்தலில் இருந்தவர்கள் மேல் பாய்ந்தனர். அவர்கள் உண்டு கொண்டிருந்த உணவை எட்டி உதைத்தனர். மாநாட்டிற்கு வந்திருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று அறியும் முன்னரே கடுமையாக தாக்கப்பட்டனர்.
மாநாட்டிற்கு வந்தவர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்ட சேதி காட்டுத் தீ போல் பரவியது. அம்பேத்கரிடம் ஒரு சில இளைஞர்கள் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று முறையிட்டனர். ஆனால் அம்பேத்கர் பொறுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் போராட்டம் அமைதியாக முடிந்தது.
காலாராம் கோயில் நுழைவுப் போராட்டம்
இந்தியச் சமூகப் புரட்சியின் தந்தையான அம்பேத்கர் நாசிக்கில் அமைந்துள்ள காலாராம் என்று சொல்லப்படும் கருப்பு இராமர் கோயிலில் நுழையும் போராட்டத்தைத் துவக்குவதற்கான முன்னேற்பாட்டு வேலைகளை மூன்று மாதங்களாக கவனித்தார். புகழ்பெற்ற காலாராம் கோயிலைத் தீண்டப்படாதவகுப்பு மக்களுக்காகத் திறக்காவிடில் சத்தியகிரகம் செய்வோம் என்றும் சத்யாகிரகம் குழுவின் செயலாளரான பாவ்ராவ் கெய்க்வாடு மூலமாகச் செய்வோம் என்றும் கோயிலின் அறங்காவலர்களுக்குத் தெரிவித்தனர். அதே வேளையில் அக்கோயிலில் உள்ள இராமனை வழிபடும் உரிமையைப் பெற்றிட நாசிக்கில் அணிதிரளுமாறு தீணடப்படாத வகுப்பு மக்களுக்கு எழுச்சிமிக்க அறைகூவல் விடப்பட்டது. சத்யாகிரகக் குழுவின் வேண்டுகோளை ஏற்று சுமார் 15000த்திற்கும் மேற்பட்ட தொண்டர்களும் பிரதிநிதிகளும் மாநாட்டுப் பந்தலிலும் மகர் மக்களின் வாழும் பகுதிகளிலும் கூடினர்.
1930ம் ஆண்டு மாhச் 2 ஞாயிற்றுக்கிழமை காலை 10மணி அளவில் நடைபெற்ற சத்யாகிரகத்திற்கு அம்பேத்கர் அவர்கள் தலைமை தாங்கினார். பிற்பகல் மூன்று மணிக்கு அம்மாநாட்டிற்கு வந்திருந்தவர்கள் ஊர்வலமாக செல்வதற்காக நான்கு நான்கு பேராக வரிசையில் நின்றனர். அந்த வரிசை ஒரு மைல் நீளத்திற்கு மேல் நின்றது. நாசிக்கின் வரலாற்றில் அதுதான் மிக்பெரிய ஊர்வலமாகும். ஊர்வலத்தின் தலைப் பகுதியில் இசையை இராணுவப் பாணியில் இசைத்துக்கொண்டு நடந்தனர். அந்த ஊர்வலத்தில் இராணுவத்தில் பணியாற்றிய பலர் இருந்தனர். ஊர்வலத்தில் இரண்டாவது அணியாக சாரணர் பிரிவு சென்றது. அவர்களைத் தொடர்ந்து பெண் சத்யா கிரகிகள் வீரநடை இட்டனர். அவர்களைத் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கானவர்கள் நடந்தனர்.
ஆயினும் அந்த ஊர்வலம் கட்டுப்பாட்டுடனும் ஒழுங்குடனும் உறுதிப்பாட்டுனும் சென்றது. கோயிலின் எல்லா நுழைவு வாயில்களும் மூடப்பட்டு விட்டதால் ஊர்வலத்தினர் கோதாவரி படித்துறைப் பக்கம் சென்றார்கள். அங்கே அந்த ஊர்வலம் ஒரு பொதுக் கூட்டமாக மாற்றப்பட்டது.
கோயிலின் நான்கு நுழைவாயில்களும் மூடப்பட்டு விட்டதால் சாதி இந்துக்களும் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த முட்டுக் கட்டையை நீக்குவது எப்படி என்று சாதி இந்துத் தலை வர்கள் இரகசியமாகக் கூடிப் பேசினார்கள். சாதி இந்துக்களுக்காக கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டிருக்குமானால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கும் என்ற பயம் சனாதன இந்துக்களை பிடித்தாட்டியது. அதனால் அவர்கள் கலகக்கரார்களாக மாறினார்கள். அவர்கள் கூட்டத்தின் மீது கற்களையும், செருப்புக்களையும் வீசினார்கள். தீண்டப்படாத மக்களுக்கு கோயிலைத் திறந்து விடு என்று கடவுள் இராமனே வந்து சொல்லி இருந்தாலும் வெறி தலைக்கேறி இருந்த வைதீக இந்துக்கள,; அந்த இராமனையே தூக்கி ஏறிந்திருப்பார்கள் என்று கூறுமளவிற்கு நிலைமை மோசமாக இருந்தது. இந்த சத்யாகிரகம் போராட்டம் தொடர்ந்து ஒரு மாதம் நடந்தது. ஏப்ரல் 9-ம் நாள் இராமனின் உருவத்தைத் தேரில் வைத்து ஊர்வலாமாக இழுத்து செல்லும் நாள் வந்தது.
தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கும் சாதி இந்துக்களு மிடையே ஓர் உடன்பாடு உருவாக்கப்பட்டது. இரு தரப்பிலும் உள்ள இளைஞர்கள் தேரை இழுத்து செல்வதென முடிவு செய்யப்பட்டது. அக் காட்சியைக் காண அன்று பகற்பொழுதில் ஆயிரக்கணக்கான வர்கள் கோயிலின் வாயிலருகே கூடினார்கள். தான் தேர்தெடுத்த சிறந்த மல்லர்களுடன் அம்பேத்கர் அக்கோயிலின் வாயில் அருகில் நின்றார். ஆனால் அம்பேத்கரின் போராட்ட வீரர்கள் தேரை தொட்டி ழுப்பதற்குள் சாதி இந்துக்களின் வெறியர்கள் அவர்கள் மீது பாய்ந்து அவர்களோடு சண்டை இட்டனர்.
முன்னரே திட்டமிட்டவாறு முட்கள் நிறைந்த ஒரு குறுகலான தெரு வழியே தேரை இழுத்துச் சென்றனர். அத் தெருவின் இரு முனைகளிலும் ஆயுதம் ஏந்திய காவல் துறையினர் அரணாக நின்றிருந்தனர். கத்ரேக்கர் என்ற பெயர் கொண்ட பந்தரி இளைஞர் ஒரு திண்டப்படாத இளைஞர் சுடுவதற்குத் தயராக நின்றிருந்த போலீஸ் அரணையும் துணிச்சலாக உடைத்துக் கொண்டு தேரை நோக்கிப் பாய்ந்தான். அடுத்த நொடியில் தீண்டப்படாத வகுப்பு மக்கள் பெருங் கூட்டமாகத் தங்கள் மீது எறியப்படும் கற்களையும் பொருட்படுத்தாமல் பாய்ந்து முன்னேறி சென்று அத்தேரின் கயிற்றை கைப்பற்றினார்கள். படுகாயமடைந்த இளைஞன் கத்ரேக்கர் இரத்த வெள்ளத்தில் கீழே வீழ்ந்தான். அம்பேத்கரை அவருடைய தோழர்கள் பாதுகாத்தனர். ஆனாலும் அம்பேத்கருக்கு இலேசான காயம் ஏற்பட்டது. நாசிக் நகரம் முழுவதும் தீண்டப்படாத மக்களும் சாதி இந்துக்களும் தடுப்பாரின்றி மோதிக் கொண்டனர்.
அந்த சத்யாகிரகம் நாசிக் மாவட்டம் முழுவதுமாக இருந்த சாதி இந்துக்களின் மனங்களில் தீண்டப்படாத வகுப்பு மக்களின் மீது பகையுணர்வை ஏற்படுத்தியது. அதன் விளைவாகப் பள்ளிகளி லிருந்து தீண்டப்படாத வகுப்பு மணாவர்கள் துரத்தப்பட்டனர். பொது வீதிகளில் தீண்டப்படாத வகுப்பினர் நடந்திட அனுமதி மறுக்கப்பட்டது. கடைகளில் தீண்டப்படாத மக்களுக்கு அத்யாவசியப் பொருட்கள் விற்க மறுத்தனர். சாதி இந்துக்களுக்குச் சமமாக உரிமைகள் வேண் டும் என்று கேட்டதால் அவர்களுக்கு இக் கேடுகள் செய்யப்பட்டன. அத்தகைய துன்பங்களுக்கிடையேயும் நாசிக் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்கள். இரண்டு பிரிவினருக்குமிடையே உடன் பாடு ஏற்படாததால் காலாராம் கோயிலை ஓராண்டு காலம் மூடியே வைத்திருக்க நேர்ந்தது.
அம்பேத்கர் அவருடைய தோழர்களுடன் 1930 மார்ச் 14ம் நாள் நாசிக்கில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். கோயில் நுழைவுப் போராட்டம் மக்களின் உரிமைகளும் சுதந்திரமும் முதன்மை வாய்ந்தவை என்று சாதி இந்துக்களுக்கு உணர்த்தப்பட்டது.
சமூகப்போராளி
அம்பேத்கர் அவர்கள் தாம் பெற்ற பதவியைப் பற்றி குறிப்பிடும் போது பதவி தம் வாழ்வின் குறிக்கோளைக் கொண்டிருக்கவில்லை. மாறாக இதை ஒரு கருவியாகவே கருதினார். வேண்டுமென்றே சுமத்தப்பட்ட இழிவுகளும் இழைக்கப்பட்ட அவமானங்களும் தீண்டாமைப் பிரச்சனையின் ஆணிவேரைக் காணுமாறு அம்பேத் கரைத்; தூண்டின. ஆகவே மெல்லமெல்ல தீண்டப்படாதவர்களின் நாடித் துடிப்பைக் கண்டறியத் தொடங்கினர். இதற்காக ஆதரவு தரும் மையங்களுடன் அமைதியாகத் தொடர்பு கொண்டார்.
இக்கட்டத்தில் மாண்டெகு ஜேம்ஸ் போர்டு அறிக்கையின்படி வாக்குரிமை வழங்குவது தொடர்பாகச் ‘சவுத் பரோ குழு” இந்தியாவில் பல்வேறு வகுப்பு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிய வந்தது. இக்குழுவின் முன் சாட்சியம் அளிப்பதற்காக ஷிண்டேவும், அம்பேத்கரும் அழைக்கப்பட்டனர். தீண்டப்படாதோருக்கு தனி வாக்குரிமையும் தீண்டப்படாத வகுப்பு மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடும் தேவை என்று அம்பேத்கர் கோரினார்.
தீண்டப்படாதவர்களுக்குக் கல்வியையும் அறிவையும் தந்து உயர்த்துவதூன் முன்னேறிய வகுப்பினர் செய்ய வேண்டிய முதலாவது கடமை ஆகும் எனக் குறிப்பிட்டார். முதன்மை வாய்ந்த மாநாடு நாகபுரியில் 1920 மே மாத கடைசியில் நடைபெற்றது. அங்கு அம்பேத்கரின் குரல் ஒலித்தது. தீண்டப்படாதவரின் அனைத்திந்திய முதல் மாநாடு இதுதான். கோலாப்ப+ர் மன்னர்தான் இம் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். அவ்வேளையில் கர்மவீரர் ஷிண்டே ஒடுக்கப்பட்ட வகுப்புகள் கழகத்தின் சார்பில் ஒரு கருத்தை வெளியிட்டார். தீண்டப்படாதவர்களின் பிரதிநிதிகளை தீண்டப்படாதவர்களின் அமைப்புகள் தேர்ந்தெடுக்கக் கூடாது. அரசாங்கமும் தேர்ந்தெடுக்கக் கூடாது அவர்கள் சட்டசபை உறுப்பினர்களால்; தெரிவு செய்ய வேண்டும் என்று அதில் கூறினார்.
நாகபுரி மாநாடு இக்கருத்தை ஏற்க வேண்டும் என்பதற்காக தன் ஆட்களை ஷிண்டே அனுப்பி வைத்தார். ஷிண்டேயின் கருத்தை அம்பேத்கர் அவர்கள் கடுமையாக எதிர்த்து முழக்கமிட்டார். இத்தன்மையில்; அரசு எடுக்கும் நடவடிக்கையை எதிர்த்து தனியாக தீர்மானம் மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றப்பட்டது. ஷிண்டேவின் கருத்துக்கு எதிராக அம்பேத்கர் தன் கருத்துக்களை இம் மாநாட்டில் வைத்த போதுதான் அம்பேத்கரின் நுண்ணிய அறிவாற்றலும் சூழ்நிலைக்கேற்ப வாதிடும் திறமையையும் உலக மக்கள் குறிப்பாக தீண்டப்படாத மக்கள் உணரத் தொடங்கினர். பொது வாழ்வில் சமுகப் பிரதிநிதியாக உலகுக்கு வெளிப்படுத்தப்பட்ட இடம் இதுவேயாகும். தீண்டப்படாத மக்களின் பிரதிநிதியாக வாதத்திறமையை வெளிப்படுத்தி தன் முதல் வெற்றியைப் பெற்றார்.
முதல் வட்ட மேசை மாநாடு
பிரிட்டிஷ் அரசு இலண்டனில் வட்ட மேசை மாநாட்டை கூட்டியது. அதில் இந்தியப் பிரதிநிதிகள் பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதி கள் பிரிட்டிஷ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்திய மக்களின் கோரிக்கைகளை நிறைவு செய்யும் வகையில் இந்தியாவிற்கான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதுதான் அம் மாநட்டின் நோக்கமாகும்.
வட்ட மேசை மாநாடு 89 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. தீண்டப்படாத வகுப்பு மக்களின் பிரதிநிதியாக அம்பேத்கரும் ராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசனும் சென்றனர். 1930 செப்டம்பர் 6ம் தேதி இந்திய வைஸ்ராய் மூலமாக வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பை அம்பேத்கர் பெற்றார். இது தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கு வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வட்டமேசை மாநாட்டின் விளைவாகத்தான் மற்ற இந்தியர்களைப் போலவே இந்தியாவிற்காக அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கும் சம உரிமைபெற ஏதுவாயிற்று. வட்டமேசை மாநாடு 1930 நவம்பர் 12ம் நாள் தொடங்கியது. வட்டமேசை மாநாட்டிற்காக வந்திருந்தவர்கள் புலவர்களும் இலக்கிய வல்லுனர்களும் இருந்தனர். ஆனால் பலகலைக் கழகத்தில் முறையாகப் பயின்று அறிவியல் டாக்டர் பட்டம் பெற்றவர் அம்பேத்கர் ஒருவரே ஆவார்.
பிரிட்டிஷ் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினராக இருப்பவர்கள் கருத்தை தான் பிரதிநிதித்துவப் படுத்துவதாக மாநாட்டின் துவக்கத்திலேயே அம்பேத்கர் அறிவித்தார். இந்தியாவில் உள்ள மக்கள் இப்போது இருக்கின்ற அரசை மாற்றி அதற்குப் பதிலாக மக்களலால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படுகின்ற மக்களால் ஆளப்படுகின்ற ஒர்; அரசு அமையவேண்டும் என்று விரும்புகின்றனர் என அம்பேத்கர் அறிவித்தார்.
மேலும் தம் குரலை உயர்த்தி இப்போதுள்ள எங்கள் நிலையையும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முந்தைய எங்களின் அவல நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, முன்னேறுவதற்கு பதிலாக முன்னேறுவதற்கான நாள் குறிப்பதிலேயே நாங்கள் நாட்களை கழித்துவிட்டோம் என்பதை கண்டறிய முடிகிறது. ஆங்கிலேயர் வரு வதற்கு முன் தீண்டாமை காரணமாக நாங்கள் வெறுத்தொதுக்கத் தக்க நிலையில் வைக்கப்பட்டிருந்தோம். இந்த நிலையை அகற்றிட ஆங்கிலேயர் ஆட்சி ஏதேனும் செய்ததா?
பிரிட்டிஷாரின் வருகைக்கு முன் கிராமங்களில் கிணறுகளில் நாங்கள் தண்ணீர் எடுக்க முடியாது. கிணற்றில் நீர் எடுக்கும் உரிமையைப் பிரிட்டிஷ் அரசு எமக்குப் பெற்று தந்ததா? ஆங்கிலேயர் ஆட்சி அமைவதற்கு முன் நாங்கள் கோயிலுக்குள் நுழைய முடியாது. இப்போது நாங்கள் நுழையும் நிலை வந்துவிட்டதா? பிரிட்டிஷ் அரசுக்கு முன்பு நாங்கள் காவல்துறையில் சேர்ந்து பணிபுரிந்திடத்; தடை யிருந்தது. இப்போது பிரிட்டிஷ் அரசு எங்களைக் காவல் துறையில் சேர்த்துக் கொள்கிறதா? பிரிட்டிஷ் அரசுக்கு முன்பு இரணுவத்தில் பணிபுரிய நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. இப்போது இராணுவப் பணி எங்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளதா? இவற்றில் எந்த ஒரு கேள்விக்கும் இந்த அவையினர் ஆம் என்று பதில் சொல்ல முடியாத நிலைதானே இருக்கிறது. ஆறாத புண்ணாகவே இன்னும் எங்கள் நிலை நீடிக்கிறது. ஆனால் 150 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சி உருண்டோடிவிட்டது. இப்படிப்பட்ட அரசாங்கத்தால் யாருக்கு என்ன நன்மை என்று அம்பேத்கர் வட்ட மேசை மாநாட்டினரை நோக்கிக் கேட்டார்.
உயர்சாதிப்படி நிலைகளிலிருந்து தோன்றிய அறிவாளிக் கூட்டம்தான் இங்கே அரசியல் இயக்கத்தை நடத்திக் கொண் டிருக்கிறது. இவர்கள் தங்கள் குறுகிய சாதிக் கண்ணோட்த்தைக் கைவிடவில்லை. ஆகவே எங்களுடைய துன்பங்களை எங்களைப் போன்று செம்மையாக எவராலும் துடைக்க முடியாது. அரசியல் அதிகாராம் எங்களுக்கு வராதவரையில் அவற்றை எங்களால் அகற்றிட முடியாது. அம்பேத்கரின் அஞ்சாமை செறிந்த துணிச்சல் மிக்க திறனாய்வு நிறைந்த வட்டமேசை மாநாட்டுப் பேச்சு வியத்தகு விளைவை ஏற்படுத்தியது. வட்டமேசை மாநாட்டில் பொதுவிவாதம் முடிந்தபின் 9 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒரு துணைக்குழு தவிர மற்ற 8 துணைக்குழுக்களிலும் அம்பேத்கர் இடம்பெற்றார். பல்வேறு துணைக்குழுக்களில் அறிக்கைகள் பதிவு செய்து கொண்டபின் 1931 ஜனவரி 31ம் நாள் வட்டமேசை மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.
அம்பேத்கர் அவருடைய குறிக்கோளை அடைவதற்காக ஒரு முக்கியமான பணியைச் செய்தார். தீண்டப்படாத வகுப்பு மக்களின் கலாச்சாராம,; மதம், பொருளாதாரம் முதலியவற்றைப் பாதுகாப்ப தற்கான அடிப்படை உரிமைகள் ஆவணத்தை அம்பேத்கர் தயாரித்தார். அந்த திட்டத்தை கடும் உழைப்பை நல்கி, தேர்ந்த மதி நுட்பத்துடன் தயாரித்து இந்தியாவின் எதிர்கால அரசியல் சட்டத்தில் சேர்ப்பதற்காகச் சிறுபான்மைத் துணைக் குழுவிடம் சமர்ப்பித்தார்.
சுயாட்சி பெற்ற இந்தியாவிற்கான எதிர்கால அரசியல் சட்டத்தில் தீண்டப்படாத வகுப்பு மக்களின் பாதுகாப்பிற்கான ஒர் அரசியல் காப்புத் திட்டம் என்று அத்திட்டத்திற்கு தலைப்பிட்டிருந்தார். அரசின் கீழ் உள்ள மற்ற குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது போன்றே தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கும் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அடிப்படை உரிமைகள் அறிக்கையில் கூறி இருந்தார்.
தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். தீண்டப்படாத வகுப்பு மக்களை அடிமைப்படுத்திட சட்டப் பாதுகாப்புடன் இருக்கின்ற தண்டனைகள் தடைகள் இயலாமைகள் சட்டத்தில் வேற்றுமை பாராட்டல் ஆகிய அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தினார். சட்டசபைகளில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். தனி வாக்காளர் தொகுதி மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அரசு ஊழியத்தில் மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதி நிதித்துவம் தரப்பட வேண்டும். அரசு வேலைக்கு ஆட்களைக் தேர்வு செய்து அவர்களின் பணியைக் கட்டுப்படுத்தும் தேர்வாணைக் குழுவில் தங்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் தரப்படவேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரியிருந்தார்.
வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமையை உடனே வழங்க வேண்டும் என்று அம்பேத்கர் கோரினார். வாக்குரிமையை சில பகுதியினருக்கு மட்டுமே அளிப்பது என்பது தீண்டப்படாத வகுப்பு மக்களை காட்டிக் கொடுக்கும் செயலாகும் என்று அம்பேத்கர் குறிப்பிட்டிருந்தார்.
இலண்டனில் அம்பேத்கர் அல்லும் பகலும் உழைத்தார். பலரை நேரில் கண்டு அளவளாவினார். பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப் பினர்கள் சிலரை அழைத்து கூட்டம் நடத்தி அவர்கள் தீண்டப் படாதவர்கள் பிரச்சினைகளை பற்றி முழுமையாக அறியுமாறு செய்தார். வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுவதற் கும் பத்திரிக்கைகளில் அறிக்கைகள் வெளியிடுவதற்கும் மற்றும் லண்டன் கூட்டங்களில் பேசுவதற்கும் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பினையும் அம்பேத்கர் பயன்படுத்திக்கொண்டார்.
அமைக்கப்படவுள்ள சட்டசபைகளில் பல்வேறு வகுப்பினரும் கோரிய இடஒதுக்கீடு தேர்தல் முறையில் தனிவாக்களர் தொகுதியை அளிப்பதா அல்லது கூட்டு வாக்காளர்கள் தொகுதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பதா என்பவற்றில் எழுந்த கருத்து வேற்றுமை காரணமாக வட்டமேசை மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. 1931 பிப்ரவரி 13ம் நாள் கப்பல் மூலம் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவிற்கு பயணமானார்.
இரண்டாவது வட்ட மேசை மாநாடு
இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கும் பெயர்பட்டியலில் அம்பேத்கர் பெயர் இடம் பெற்றிருந்தது. கூட்டாட்சி அமைப்புத் துணைக் குழுவில் அம்பேத்கர் உறுப்பினராக இடம் பெற்றிருந்தார். இந்தக் குழுதான் இந்தியாவுக்கு ஒரு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் முதன்மையாக விளங்கியது.
காந்தி வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி முடிவ செய்யப்படாமல் இருந்தது. 1931ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் நாள் பம்பாய் மலபார்; பகுதியில் அமைந்திருந்த மணி பவனில் காந்தியின் அழைப்பை ஏற்று காந்தியை அம்பேத்கர் முதன் முதலில் சந்தித்தார். அங்கு இருவரும் தங்கள் கொள்கையின் அடிப்படையில் தீண்டப்படாத மக்களுக்கு தொண்டு செய்வதைப் பற்றி விவாதித்துக் கொண்டனர். அம்பேத்கர் அவர்கள் காந்தியை சற்று கடினமாகவே கண்டித்தார்.
காந்தி – அம்பேத்கர் சந்திப்பு சோகம் கப்பியதாக முடிந்தது. இந்திய அரசியலின் மாபெரும் தலைவர் காந்தி. அரசியலில் அவர் ஒரு சக்ரவர்த்தி. சர்வாதிகாரியும் கூட. இந்திய மக்களின் முடிசூட மன்னர் ஆவர். காந்தியிடம் மறுத்துப் பேசுவது என்பதே நிலையான வெறுப்புக்கும் மாறாத கசப்புணர்வுக்கும் ஒருவர் ஆளாவது போன்ற தாகும். அவ்வாறு ஒரு இந்துத் தலைவர் பதிலுக்கு பதில் பேசுவது என்பது காந்தியின் கற்பனைக்கு எட்டாத ஒன்றாகும். காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான கொள்கைப் போராட்டம் எதிர்ப்பு வடிவம் எடுத்தது.
அம்பேத்கர் மிக துடிப்புடனும் கொள்கை ஆதாரத்துடனும் பேசவதைக் கண்ட காந்தி, அம்பேத்கர் ஒரு தீண்டப்படாத மகனாக இருக்க முடியாது. அவர் ஒரு பார்ப்பனர் என்றே எண்ணியிருந்தார். 1931 செப்டம்பர் 7ம் நாள் இரண்டாவது வட்ட மேசை மாநாடு துவங்கியது. வட்டமேசை மாநாட்டின் பணி கூட்டாட்சி அமைப்புக் குழுவிலும் சிறுபான்மைக் குழுவிலும்தான் பெரிதும் அடங்கி இருந்தது.
இந்து, முஸ்லீம,; சீக்கியர்கள் என்ற வட்டத்திற்கு மட்டுமே தனிச்சலுகை வழங்குவது என்பதை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. ஆனால் இந்த தனிச் சலுகை வேறுயாருக்கும் வழங்கக் கூடாது என்று காந்தி கூறினார். இது காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதவர்கள் மீது நடத்தும் போர் என்று அம்பேத்கர் கூறினார். மேலும் காந்தியை நோக்கி இந்த கூற்று உங்கள் சொந்தக் கருத்தா அல்லது காங்கிரஸ் கருத்தா என்று கேட்டார்.
ஆங்கிலோ இந்தியர்களையோ, தீண்டப்படாதவர்களையோ இந்திய கிறிஸ்துவர்களையோ காந்தி அங்கீகரிக்கத் தயாரில்லை என்பதை உணர்ந்த அம்பேத்கர் முதல் வட்டமேசை மாநாட்டின் போது சிறுபான்மை துணைக் குழு செய்தது போல தீண்டப்படாதவர்களை இந்தியாவின் எதிர்கால அரசியல் சட்டத்தில் அங்கீகரித்து ஏற்கா விட்டால் அக்குழுவில் நான் சேரமாட்டேன் என்றும் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவும் அளிக்கமாட்டேன் என்றும் முழங்கினார்.
காந்தி பேசியதைக் கேட்டபின,; என்னை அமைதியிழக்கச் செய்தது எதுவெனில் சிறுபான்மைக் குழுவை காலவரம்பின்றி ஒத்திப் போட வேண்டும் என்ற அவருடைய கருத்தைக் கூறுவதுடன் அவர் நிற்காமல் இந்த வட்ட மேசை மாநாட்டில் அமர்ந்திருக்கின்ற பல்வேறுபட்ட வகுப்புக்களின் பிரதிநிதிகளை அவமதிப்பு செய்யும் வகையில் பேசியிருப்பதுதான். பிரதிநிதிகள் அரசினால் நியமிக் கப்பட்டவர்கள். ஆதாலால் அவர்கள் பிறந்த வகுப்பின் கருத்தினை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று காந்தி கூறுகிறார். நாங்கள் அரசினால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டை மறுக்கவில்லை. என்னைப் பொறுத்த அளவில் இந்தியாவில் உள்ள தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கு ஒரு வாய்ப்பு தந்து இந்த மாநாட்டிற்கு தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புமாறு கேட்டிருந்தாலும் கட்டாயம் நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கே வந்திருப்பேன்.
ஆகவே, நான் அரசினால் நியமிக்கப்படவனாக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவானாக இருந்தாலும் என்னுடைய வகுப்பு மக்களின் கோரிக்கைகளை நான் பிரதிநிதித்துவப்;படுத்துகிறேன். இதைப் பற்றி எந்த மனிதனுக்கும் தவறான புரிதல் இருக்கக் கூடாது என்று முழங்கினார்.
மேலும் தொடாந்து பேசினார். காங்கிரஸ் தீண்டப்படாத வர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் என்னைவிட அல்லது மற்ற என் தோழர்களைவிடத் தீண்டப்படா தவர்களை காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் காந்தி சொல்லிக் கொண்டிருக்கிறார். பொறுப்பற்றவர்கள் கூறிக் கொண்டிருக்கிற பல பொய்களில,; இதுவும் ஒன்று என்றே நான் கூற விரும்புகிறேன் என்று கூறினார்.
பிரிட்டிஷாரிடமிருந்து அரசியல் அதிகாரம் மாற்றப்பட வேண்டுமானால் அது நிபந்தனைகளுடன் கூடியதாக இருக்க வேண்டும். அந்த நிபந்தனையின்படி அதிகாரத் தன்நலக் கும் பலிடமோ ஆதிக்கம் செய்யும் முகமதியர்களிடமோ இந்துக்களிடமோ அளிக்கப்படக்கூடாது. அப்பிரச்சனைக்கான தீர்வு என்பது எல்லா வகுப்பினருக்கும் அவரவர் விகிதாச்சரத்திற்கு ஏற்ப பகிர்ந்தளிக்க படுவதாய் இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறினார்.
சாதி இந்துக்களின் தலைவர்கள் அவர்களுடைய அரசியல் விடுதலைக்காக போராடினார்கள். ஆனால் அம்பேத்காருக்கோ தீண்டப்படாத வகுப்பு மக்களை மனிதர்கள் என்ற நிலைக்கு கொண்டு வருவதே தலையாயப் பணியாக இருந்தது. தீண்டப்படாவதவர்களை அரசு ஊழியத்திலும் இராணுவம் மற்றும் காவல்துறையிலும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் பஞ்சாபில் தீண்டப்படாதவர்களுக்கான பஞ்சாப் நில உரிமை மாற்றுச் சட்டம் நீடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கை அறிக்கையுடன் அம்பேத்கரும் இரட்டை மலை சீனிவாசனும் ஒரு துணை அறிக்கையைத் தயாரித்து அளித்தனர். இந்தியாவில் எல்லா மாகாண சட்டசபைகளிலும் மத்திய சட்டசபை களிலும் தீண்டப்படாதவர்களுக்கு தனி பிரதிநித்துவம் அவர்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப அளிக்கப்பட வேண்டும் என்று அத்துணை அறிக்கையில் கேட்டிருந்தனர்.
வட்ட மேசை மாநாட்டை முடித்துக்கொண்டு அம்பேத்கர் அவர்கள் 1932ம் ஆண்டு சனவரி 15ம் நாள் இலண்டனிலிருந்து பம்பாய் புறப்பட்டார். சனவரி 29ம் நாள் காலை பம்பாய் வந்திறங் கினார். அன்று மாலை 44 அமைப்புகள் சார்பில் அம்பேத்கருக்கு வரவேற்பு விழா நடத்தப்பட்டது. ‘சம உரிமை தந்து சமமாக நடத்தப்பட வேண்டும்” என்று எங்களின் கோரிக்கை வாளின் வலிமையான கைப்பிடியாக நீங்கள் உண்மையில் செயல்பட்டீர்கள் எங்களுக்காக நீங்கள் தீரமுடன் போராடி இருக்காவிட்டால் எங்கள் கோரிக்கைகளை புறக்கணித்திருப்பார்கள். எங்களின் உரிமையைப் பாதுகாப்பதற்காக ஒரு மனிதன் ஆற்றக்கூடிய எல்லா வகையான முயற்சிகளையும் நீங்கள் செய்தீர்கள். இலண்டனில் நீங்கள் ஆற்றிய அருஞ்செயலின் விளைவாக மிக விரைவில் நாங்களும் இந்தியாவில் உள்ள பெரிய வகுப்பினர்களுக்குச் சமமாக நடத்தபடப் போகிறோம். நம் சமூகம் இன்று பெற்றுள்ள பொறுப்புணர்வும் சிந்தனையோட்டமும் இந்தியா முழுவதும் உரிமையை நிலை நாட்டிக் கொள்ள முனைந்திருப்பதும் முழுக்க முழுக்க உங்களின் வழிகாட்டுதலின் விளைவேயாகும் என்று வரவேற்பு மடல் ஒன்று அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது.
பூனா ஒப்பந்தம்
1932ம் ஆண்டு மே மாதம் பூனாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தனக்கு அளிக்கபட்ட வரவேற்புக்கு அம்பேத்கர் பதிலளித்துப்; பேசினார். இந்து இந்தியாவில் இப்போது நான் மிகவும் வெறுக்கப்படும் மனிதானக இருக்கிறேன். இந்துக்களுள் எதிரி என்று கூறி நான் வெறுக்கப்படுகிறேன். இந்து மதத்தை அழிக்க வந்தவன் என்று என்னை வைகின்றனர். ஆனால் நான் சொல்வதை நம்புங்கள். இப்போதுள்ள வசைமாறி பொழியும் நிலை மறைந்த பின்னர் எதிர்காலத்து ஆய்வாளர்கள் வட்டமேசை மாநாட்டின் நடவடிக்கை களை விருப்பு வெறுப்பின் ஆய்வு செய்தபின் நான் இந்த நாட்டிற்கு செய்துள்ள தொண்டினை பெரிதும் போற்றுவார்கள். இந்து மதத்தின் எதிர்கால வருங்காலத் தலைமுறையினர் என்னை பாராட்டுவார்கள் என்று கூறினார்.
தீண்டப்படாத மக்கள் நான் செய்யும் பணியில் முழு நம்பிக்கையுடனும் நான் மேற்கொள்ளும் முயற்சிகளில் உள்ளார்ந்த ஈடுபாடும் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு மிகுந்த மனநிறைவு அளிக்கிறது. எந்த ஒடுக்கப்பட்ட மக்களிடையே பிறந்தேனோ வளர்ந்தேனோ வாழ்கின்றேனோ அந்த மக்களின்; உயர்வினுக்காக என் உயிரைக் கொடுத்தேனும் தொண்டு செய்ய வேண்டும் என்பது என் உள்ளக்கிடக்கையாகும். நியாயமிக்க குறிக்கோளில் இம்மி அளவும் விட்டுத் தரமாட்டேன் என்று மாநாட்டு உரையை முடித்தார்.
1932ம் ஆண்டு சூன் 7ம் நாள் அம்பேத்கர் லண்டன் சென்றடைந்தார். பிரிட்டிஷ் அரசின் உயர் அதிகாரிகளையும் எல்லா அமைச்சர்களையும் ஒரு வார் காலத்தில் சந்தித்தார். அவருடைய அறிவாற்றல் அனைத்தையும் திரட்டி அவருடைய கோரிக்கையைப் பற்றி அவர்களிடம் விளக்கினார். இருபத்திரண்டு பக்கங்களில் தட்டச்சு செய்யப்பட்ட அவருடைய கோரிக்கை விண்ணப்பத்தை பிரிட்டிஷ் அமைச்சகத்திடம் அளித்தார். அந்த கோரிக்கை பிரிட்டிஷ் அரசின் உயர்மட்டக் குழுவால் விவாதிக்கபட்டு பம்பாய,; சென்னை, மத்திய மாகாணம் ஆகியவற்றில் உள்ள தீண்டப்படாத வகுப்பு மக்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி வழங்கப்பட இருப்பதாக செய்தி வெளியானது.
1932ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் நாள் அம்பேத்கர் அவர்கள் பம்பாய் திரும்பினார். இந்தியாவின் வகுப்புப் பிரச்சனையில் பிரிட்டிஷ் பிரதமர் தன் தீர்ப்பை வழங்கிய மூன்று நாட்களுக்கு முன்பு 1932 ஆகஸ்ட் 14ம் நாள் அம்பேத்கர் பம்பாய் வந்து சேர்ந்தார். அத்தீர்ப்பின்படி தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கு மாகாண சட்ட சபைகளில் தனி இடஒதுக்கீடும் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க மற்றொரு வாக்குரிமையும் ஆக இரண்டு வாக்குரிமைகளும் அளிக்கப்பட்டிருந்தன. ஆயினும் வகுப்பு வாரித் தீர்ப்பு பெரும் அரசியல் சிக்கலை உருவாக்கிக்கொண்டிருந்தது. வகுப்புவாரித் தீர்ப்பு இந்தியர்களிடையே இருந்த பிரிவினையை நிலைக்கச் செய்தது. முஸ்லீம்கள,; சீக்கியர்கள,; ஐரோப்பியர்கள,; கிறிஸ்தவர்கள் ஆகிய அனைவருக்கும் தனி வாக்காளர் தொகுதியை வழங்கி இருந்தார்கள்.
1932 மாhச் மாதத் தொடக்கத்திலிருந்N;த காந்தி எரவாடா சிறையில் இருந்தார். 1930 ஆகஸ்ட் மாதத்தில் தீண்டப்படாதவர் களுக்கு வகுப்பு வாரித்தீர்ப்பில் தனி வாக்களர் தொகுதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே தீண்டப்படாவர்களுக்கான தனி வாக்காளர் தொகுதிமுறையை நீக்காவிட்டால் சாகும் உண்ணா நோன்பு இருக்கப் போவதாக காந்தி அறிவித்தார்.
தீண்டப்படாத வகுப்பு மக்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி அளிக்கப்பட்டதற்கு எதிராக சாகும் வரை உண்ணா நோன்பு இருக்கப் போவதாக காந்தி மேற்கொண்டுள்ள செயல் நேர்மையற்றதாகவே இருக்கிறது. இலண்டனில் சிறுபான்மையினர் குழுவின் கடைசிக் கூட்டத்தில் வகுப்புவாரிச் சிக்கலில் இறுதி முடிவெடுக்கும் தனி அதிகாரத்தை பிரிட்டிஷ் பிரதமருக்கு அளிக்கும் உறுதிமொழிப்பத்திரத்தில் காந்தியும் கையெழுத்திட்டிருந்தார். ஆகவே காந்தி பிரிட்டிஷ் பிரதமர் அறிவித்த வகுப்புவாரித் தீர்;ப்புக்குக் கட்டுப்பட்டவரே. அரசியலில் ஏமாற்றம் அடைந்திருந்த காந்தி உலகத்தின் கவனத்தை இந்தியாவின் பால் ஈர்த்திடவும் குறிப்பாக தீண்டப்படாதவருக்குத் தனி வாக்காளர் தொகுதியைப் பெற்றிட அம்பேத்கர் முயல்வதைத் தடுத்திடவும் சாகும்வரை உண்ணாவிரதம் என்பதை அறிவித்தார்.
சிக்கலுக்குத் தீர்வு காணவும் காந்தியின் உயிரைக் காப்பாற்ற வும் வேண்டி செப்டம்பர் 19ம் நாள் பம்பாயில் இந்துத் தலைவர்களின் மாநாடு ஒன்றை நடத்த எண்ணங் கொண்டிருப்பதாக பண்டிதர் மாளவியா சிம்லாவிலிருந்து அறிவித்தார். அதைப்பற்றி அம்பேத் கருக்கு அவர் தந்தி மூலம் தெரிவித்தார். மகாத்மாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் பிரிட்டிஷ் பிரதமரின் வகுப்பாவாரி ஒதுக்கீடு பற்றிய தீர்ப்பை மாற்ற வேண்டியது இன்றியமையாதது ஆகும். அவ்வாறு அதை மாற்றுவதற்கு அம்பேத்கரின் ஒப்புதலைக் கட்டாயம் பெற்றாக வேண்டியிருந்தது.
ஏனெனில,; அம்பேத்கர்தான் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கு அந்த உரிமைகளைப் போராடி பெற்றுத் தந்தார். அம்பேத்கர் தீண்டப்படாத வகுப்பு மக்களின் தலைவராக ஏற்க இதுவரை மறுத்து வந்த தலைவர்களும் பத்திரிக்கைகளும் இப்போது தீண்டப் படாதவர்களின் தலைவராகவும் பிரதிநிதியாகவும் அம்பேத்கரை ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்தத் தலைவர்களின் மாநாடு தொடங்கவிருந்த நிலையில் அம்பேத்கர் பத்திரிக்கைகளுக்கு ஒர் அறிக்கை வெளியிட்டார். என்னைப் பொறுத்த வரையில் நான் எந்த யோசனையையும் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறேன். ஆயினும் தீண்டப்படாத வகுப்பு மக்களின் உரிமைகள் எந்த வகையிலும் கறைக்கப்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன் என்று அந்த அறிக்கையில் அம்பேத்கர் கூறியிருந்தார்.
அம்பேத்கருக்கு எதிராக வெறித்தனமான பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அம்பேத்கர் அமைதியுடனும் உறுதியுடனும் செயல்பட்டார். பம்பாய் மாநாடு தொடங்குவதற்கு முன் அம்பேத்கர் மற்றுமோர் அறிக்கையை வெளியட்டார். தீண்டப்படாதவர் பிரச்சனை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இந்திய அரசியல் சட்டப் புத்தகத்தின் ஓர் இணைப்புதான் அது என்றும் காந்தி வட்டமேசை மாநாட்டில் பேசியதை இப்போது அந்த அறிக்கையில் நினைவுப் படுத்தினார். வட்ட மேசை மாநட்டின் விவாதம் முழுவதிலும் இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்பதை காந்தி இடைவிடாமல் வலியுறுத்திக் கொண்டிருந்தார். தீண்டப்படாத வகுப்பு மக்களுக்குத் தனி பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளதைக் காந்தி காரணமாகக் காட்டி இருப்பது வியப்பும் வருத்தமும் தருகின்றது. தனிவாக்களர் தொகுதி தீண்டப்படாதவர்களுக்கு மட்டுமா தரப்பட்டுள்ளது? இந்திய கிறிஸ்துவர்கள,; ஆங்கிலோ இந்தியர்கள,; சீக்கியர்கள் முதலானோர்க்கும் அல்லவா அளிக்கப்பட்டிருக்கிறது என்று அந்த அறிக்கையில் அம்பேத்கர் வினா எழுப்பியிருந்தார்.
முகமதியருக்கும,; சீக்கியருக்கும் தனி வாக்காளர் தொகுதியை தருவதால் இந்திய நாடு பிளவுபடாதென்றால் தீண்டப்படாதவர் களுக்கும் தனி வாக்காளர் தொகுதியை அளிப்பதால் இந்து சமுதா யம் இரண்டாகப் பிளவுப்படாது என்றும் அம்பேத்கார் வாதிட்டார்.
காந்தி மேற்கொண்ட சாகும் வரை உண்ணா நோன்பு என்பது தீண்டப்படாதவர்களின் நிலையை மக்கள் அறிந்திடச் செய்தது. தீண்டப்படாதவர்களின் உள்ளங்களில் குமுறிக்கொண்டிருக்கும் கோப உணர்ச்சிகளை சாதி இந்துக்கள் கண் திறந்து சிறிது நேர மேனும் பார்த்திட அது வழி செய்தது. அந்த மாநாட்டில் அமைதியான உறுதியான குரலில் அம்பேத்கர் பேசத் தொடங்கினார். தீண்டப்படாத வகுப்பு மக்களின் நலனுக்கு எதிராக காந்தி உண்ணா நோன்பைத் தொடங்கியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும். காந்தியின் ஒப்பரிய உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக என் மக்களின் நலனக்கு எதிராக முன் வைக்கப்படும் எந்த ஒரு திட்டத்தையும் நான் ஏற்கமாட்டேன் என்று கூறி முடித்தார்.
மாநாடு மீண்டும் கூடியது. அம்பேத்கரை மீண்டும் கருத்து கூற அழைத்தனர். தான் ஓர் இக்கட்டான நிலையில் நிறுத்தப் பட்டிருப்பதாகக் கூறிவிட்டு தன் பேச்சைத் தொடர்ந்தார். கொடியவ னாக நான் காட்சி தரும் நிலைக்கு இன்றைக்கு சூழ்நிலை உரு வாக்கப்பட்டுள்ளது. ஆயினும் உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என் கடமையிலிருந்து நான் பின் வாங்க மாட்டேன். அருகில் உள்ளதொரு விளக்குக் கம்பத்தில் என்னைத் தூக்கிலிட்டாலும் என் மக்களின் நியாயமான நலன்களுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். உண்ணாநோன்பை தள்ளிப் போடச் சொல்லுங்கள். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயலுங்கள் என்று கூறினார். அடுத்த நாள் செப்டம்பர் 21ம் நாள் பிற்பகல் 2 மணி வரை மாநாடு ஒத்திப் போடப்பட்டது.
சர் தேஜ் பகதூர் சாப்ரு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான முதல் கட்டத் தேர்தலுக்கான திட்டத்தையும், இரண்டாவது கட்டத் தேர்தலுக்கான திட்டத்தையும் உருவாக்கினார். ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு இடத்திற்கும் முதலில் தீண்டப் படாதவர்கள் தாங்களே மூன்றுபேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பிறகு அந்த மூவருள் ஒருவரைத் சாதி இந்துக்களும் தீண்டப்படாதவர்களும் கூட்;டாக சேர்ந்து தேர்தலில் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அத்திட்டம். தன் நண்பர்களுடன் கலந்தாலோசித்தபின் அவர்கள் கூறிய திட்டத்தை ஏற்பதாக கூறினார். ஆனால் பிரிட்டிஷ் பிரதமர் அவருடைய தீர்ப்பில் அளித்துள்ளதை விட அதிகமான இடங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்று கூறினார்.
ஆனால,; காந்தி தீண்டப்படாதாருக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள கூட்டு வாக்காளர் தொகுதி முறை இருப்பதை தாம் விரும்ப வில்லை என்று கூறினார். பிரிட்டிஷ் பிரதமர் தீண்டப்படாதவர்களுக்கு வழங்கிய தனி வாக்களர் தொகுதியை அம்பேத்கர் இழப்பதற்கு தயாராக இருப்பதாகவும் ஆனால் அதற்கு சரியான மாற்றுத் திட்டத்தை அளித்தால் மட்டுமே அவ்வாறு செய்திட முன்வர முடியும் என்று கூறினார்.
ஒதுக்கீடு செய்யப்படும் இடங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மாகாண சட்டசபைகளில் 197இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரினார். ஆனால் இந்துத் தலைவர்கள் அதை 126 ஆக குறைத்தனர். பத்துமணி நேரம் கலந்தாலோசித்த பிறகு சில செய்திகளைப் பற்றித் தீர்மானித்திட வேண்டி காந்தியின் பார்வைக்கு அவற்றை கொண்டு சென்றனர். முதல் கட்ட தேர்தல் பத்தாண்டு களுடன் முடிந்து விட வேண்டும். ஆனால் அதன்பின் 15 ஆண்டுகள் கழித்துத்தான் இட ஒதுக்கீடு பற்றித் தீண்டப்படாதவர்களிடையே கருத்து கணிப்பு நடத்தி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். மேலும் கூறும் போது இன்னும் இருபது ஆண்டுகளிலோ அல்லது அதன் பிறகோ தீண்டாமை ஒழிந்துவிடும் என்று நான் நம்பத் தயராக இல்லை என்று அம்பேத்கார் கூறினார்.
பேச்சு வார்த்தை மீண்டும் தொடர்ந்தது. மாகாண சட்டசபை களில் 148 இடங்களைத் தீண்டப்படாதவருக்கு அளிப்பது என்பதன் மூலம் மொத்த இடங்கள் பற்றிய பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. 1932 செப்டம்பர் 24ம் தேதி சனிக்கிழமை 5 மணிக்கு ஒப்பந்தம் கை எழுத்தானது. இதுதான் ப+னா ஒப்பந்தம். ப+னா ஒப்பந்தத்திற்கு பிரிட்டிஷ் அரசு ஒப்புதல் அளிக்குமாறு பாராளுமன்றத்திற்கும் பரிந்துரைக்கப் போவதாக செப்டம்பர் 26, 1932ல் பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. அன்று மாலை ஐந்தரை மணிக்கு ஏரவாடா சிறையில் கஸ்தூரிபாய் ஆரஞ்சு சாற்றினை காந்திக்கு கொடுத்து உண்ணா நோன்பினை முடித்தார்.
சுதந்திர தொழிலாளர் கட்சி தொடக்கம்
1936ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சுதந்திரத் தொழிலாளர் கட்சி ஐனெநிநனெநவெ டுயடிழரச Pயசவல என்கிற ஒரு புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தல,; நீக்குதல், பதவி உயர்வு அளித்தல் ஆகியவற்றை நெறிப்படுத்துதல், தொழிலாளர் வேலை செய்யும் நேரத்தின் அளவை நிர்ணயித்தல், நியாயமான கூலி பெற வழி காணல், ஊதியமுடன் கூடிய விடுமுறை அளித்தல், தொழிலாளர் களுக்கு மலிவானதும் தூய்மையானதுமான குடியிருப்புக்கள் அமைத்தல் போன்ற தொழிலாளர் நலத் திட்டங்களைச் செயல்படுத் துவதற்கான சட்டங்கள் இயற்றப்படும் என்று கட்சியின் அறிக்கை அறிவித்தது. வேலை இல்லாதவர்களுக்குத் தரிசு நிலங்களைத் தருவது அவர்களை மராமத்து வேலைகளுக்கு ஈடுபடுத்துவது ஆகியவற்றின் மூலம் வேலை இன்மையை ஒழிக்க முடியும் என்று அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டது.
1937 பிப்ரவரி 17ம் நாள் தேர்தல் நடந்தது. அம்பேத்கர் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் பம்பாயில் வெற்றி பெற்றார். புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் அம்பேத்கரின் சுதந்திர கட்சி பம்பாய் மகாணத்தில் 17 இடங்களுக்கு போட்டியிட்டு 15 இடங்களில் வென்றது.
தொழிலாளர் தலைவர்
1937ல் பம்பாயில் விவசாயிகள் பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். அப்பேரணி பம்பாய் மாகாண சட்டசபையை நோக்கி செல்வதாக திட்டமிட்டப்பட்டிருந்தது. பம்பாய்க்கு அருகில் இருந்த தாணா, கொலாபா, இரத்தினகிரி, சத்தாரா, நாசிக் ஆகிய மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் தொடர் வண்டிகளிலும் இயந்திரப் படகுகளிலும் பம்பாய் வந்தனர். கிழிந்த உடை உடுத்தியிருந்த அந்த விவசாயிகள் போர்வைகளையும் மூட்டை முடிச்சுக்களையும் தம் தோள்களில் தொங்க விட்டுக் கொண்டு கைகளில் தடிகளுடன் தங்கள் குறைகளை அரசுக்கு உணர்த்திட வேண்டி பம்பாயில் திரண்டனர். மூன்று முனைகளிலிருந்தும் விவசாயிகளின் பேரணி சட்டசபையை நோக்கி சென்றது. விக்டோரியா டெர்மினஸ் அருகில் இருந்த எஸ்பிளனேடு திடலை அடைந்தது.
இருபது பேர் மட்டும் ஒரு குழுவாகக் சென்று பம்பாய் மாகாண முதலமைச்சரை சந்தித்து கோரிக்கையை கொடுத்தனர். விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை அமல்படுத்த வேண்டும் என்பதை அவர்களுடைய முதல் கோரிக்கையாக வலியுறுத்தினர். இரண்டாவது கோரிக்கையாக நிலவரி பாக்கியை வசூலிப்பதை தள்ளி வைத்திருப்பது போலவே குத்தகை பாக்கியையும் வசூலிக்காமல் தள்ளிப் போட வேண்டும் என்று கேட்டனர்.
மாகாண முதலமைச்சரை சந்தித்தப்பின் பொதுக் கூட்டத்தில் அம்பேத்கர் அவர்கள் கம்ய+னிஸ்ட் பற்றி கருத்துச் செறிந்த உணர்ச்சி மிக்கதோர் உரையை அம்பேத்கர் ஆற்றினார். அதன்பின் அம்பேத்கர் அவர்கள் விவசாயிகளையும் இரயில்வே தொழிலாளர்களையும் அணி திரட்டினர். 1938 பிப்ரவரி 12-13 தேதிகளில் தீண்டப்படாத இரயில்வே தொழிலாளர்கள் மாநாட்டைக் கூட்டி அதில் உரையாற்றினர்.
நம் நாட்டில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிராக இரண்டு சக்திகள் இருக்கின்றன. ஒன்று பார்ப்பணீயம். மற்றது முதலா ளித்துவம். பார்ப்பணீயம் எல்லா சமூகத்திலும் சாதிய கட்டுப்பாட்டை விடாப்பிடியாக வைத்துக் கொண்டு தீண்டப்படாதவர்களுக்கு செய்யும் கொடுமையைப் பற்றியே குறிப்பிடுகிறேன் என்றார்.
தொழிலாளர் அமைச்சர்
பம்பாய் வைசிராயின் நிர்வாகக் குழுவில் 1942ம் ஆண்டு ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் டாக்டர் அம்பேத்கர் சேர்க்கப்பட்டார். நசுக்கப்பட்ட மக்களான தீண்டப்படாதவர்களின் குறைகளை களைந்திட தன் வாழ் நாளெல்லாம் முமுமூச்சுடன் களம்பல கண்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிய அம்பேத்கருக்கு தொழிலாளர் நல அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பம்பாய் மகாணத்தின் இந்திய தொழிலாளர் கூட்டமைப்பின் செயற்குழு, தொழிலாளர் அமைச்சரான டாக்டர் அம்பேத்கருக்கு பம்பாயில் 1943 மே 10ம் நாள் அன்று தேனீர் விருந்தொன்றை அளித்தது.
அப்போது அம்பேத்கர் தொழிற்சங்கங்களின் நோக்கங்கள் அவற்றின் வலிமையுற்ற நிலை ஆகியவற்றைப் பற்றித் திறனாய்வு செய்து பேசினார். தொழிலாளர்கள் இந்தியாவில் தொழிலாளர்களின் அரசை ஏற்படுத்துவற்காகப் பாடுபட வேண்டும். இதுதான் என் நோக்கமாகும். இந்திய சுதந்திரம் அடைவது மட்டும் போதாது. அதை விட முக்கியமானது அந்த சுதந்திரம் யாருடைய கையில் இருக்க வேண்டும் என்பதே ஆகும் என்று குறிப்பிட்டார்.
தொழிலாளர் முத்தரப்பு மாநாடு தொழிலாளர் நல அமைச்சர் அம்பேத்கர் தலைமையில் டில்லியல் 1943 செப்டம்பர் 6, 7 ஆகிய நாட்களில் நடைபெற்ற கூட்டத்தில் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கான கோரிக்கைகளை அம்பேத்கர் முன் வைத்தார். உணவு, உடை, உறையுள், கல்வி, கலாச்சார மேம்பாட்டு வசதிகள,; மருத்துவம் ஆகியவையே தொழிலாளர்கள் கோரும் தேவைகள் என அம்பேத்கார் விளக்கினார்.
தொழிலாளர்களின் கூலி மற்றும் வருவாய் விபரங்கள் கண்டறியவும் அவ்வாறு திரட்டிய புள்ளி விவரங்களின் அடிப்படையில் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதுகாப்பிற்கான ஒரு கொள்கை திட்டத்தை உருவாக்கவும் அரசு முன் வர வேண்டும் எனக் கோரினார்.
தன்னுடைய முயற்சியால் மத்திய சட்டசபையிலும் மத்திய மேல் சட்டசபையிலும் தீண்டப்படாத வகுப்பினர்களுக்கான பிரதி நிதித்துவம் கூடுதலாகப் பெற்றது பற்றி அம்பேத்கர் மன நிறைவு கொண்டார். தீண்டப்படாத வகுப்பினர் இராணுவத்தில் உயர் அதிகாரிகளாகப் பதவி வகிக்கக் கூடாது என்று இருக்கின்ற தடையை நீக்க வேண்டும் என்று கோரி ஐக்கிய மாகாணங்களைச் சார்ந்த தீண்டப்படாத வகுப்பு உறுப்பினரான பியாரிலால் குரீல் தாலிப் மத்திய சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானம் 1943 அக்டோபரில் நிறைவேறியது. தான் அமைச்சரான பிறகு தீண்டப்படாத வகுப்பின ருக்காக தான் பெற்றுத் தந்துள்ள நன்மைகளை 1943 நவம்பரில் தில்லியில் தீண்டப்படாத வகுப்பு தலைவர்களிடமும் தொழிலாளர் களிடமும் விளக்கிப் பேசினார்.
தீண்டப்படாதவர்களுக்கு மத்திய அரசு அலுவல்களில் 8.33 விழுக்காடும,; இலண்டனில் தொழிற்கல்வி படிப்பில் தனி இட ஒதுக்கீடும், மத்திய சட்டசபையில் கூடுதலாக ஒரு இடமும் மாகாணங்கள் அவையில் புதியதாக ஒரு இடமும் புதிய உரிமை களாகப் பெறப்பட்டுள்ளதை அம்பேத்கர் விளக்கினர்.
1944 ஏப்ரல் மாதத்தில் அம்பேத்கர் தொழிலாளர்களின் நலனை மேலும் உயர்த்துவதற்காக புதியதொரு நடவடிக்கையை மேற்கொண்டார். நிலையாக இயங்கிக் கொண்டிருந்த தொழிற் ;சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரும் ஒரு திருத்த மசோதவை மத்திய சட்டசபையில் முன் மொழிந்தார்.
பாராளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர்
புதிய வைசிராய் மௌண்ட் பேட்டன் பிரபு இந்தியாவில் நிலவிய சூழ்நிலையை ஆராய்ந்தபின் இலண்டன் சென்றார். மீண்டும் இந்தியாவிற்கு திரும்பிய பின் 1947 ஜூன் 3ம் நாள் அவருடைய அரசியல் திட்டத்தை அறிவித்தார். இரண்டு மத்திய அரசுகள் இரண்டு அரசியலமைப்புச் சட்ட அவைகள் இத்திட்டத்தில் இடம் பெற்றிருந்தன. அம்பேத்கர் அவர்கள் அரசியலமைப்புச் சட்ட அவையின் கொடி வடிவமைப்புக் குழுவின் ஓர் உறுப்பினராக இருந்தார். 1947ம் ஆண்டு ஜூலை 22ம் நாள் அரசியலமைப்பு சட்டஅவை, அசோகச் சக்கரத்துடனான மூவண்ணக் கொடியை இந்திய நாட்டின் தேசியக் கொடியாக ஏற்றுக் கொண்டது. அடுத்து எல்லை நிர்ணயக்குழு செய்ய வேண்டிய பணிகளில் இந்திய அரசு தன் கவனத்தை முழுவதுமாகச் செலுத்துமாறு அம்பேத்கர் வலியுறுத்தினார்.
1947 ஜூலை 15ம் நாள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கும் மசோதா நிறைவேற்றியது. பிளவு பட்ட இந்தியாவிற்கு மட்டும் சட்டம் எழுதப்பட்டது. அதனால் அரசியல் அமைப்புச் சட்டஅவைக்கு வங்காளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பலர் தங்கள் பதவியை இழந்தனர். வங்காளத்தி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பேத்கரும் இதனால் தம் இடத்தை இழக்க நேரிட்டது. பின் பம்பாய் மாகாண சட்டசபையின் மூலம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1947 ஆகஸ்டு 3ம் நாள் சுதந்திர இந்திய அரசின் அமைச்சர்க ளில் ஒருவராக அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 1947 ஆகஸ்டு 15ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. பாக்கிஸ்தான் நாடு நம்மிடையே விட்டு பிரிந்தது. 1947 ஆகஸ்டு 29ல் அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு ஒன்று அமைந்தது. அதில் என் மாதவராவ், சையத் முகமது சாதுல்லா, சர்.அல்லாடி கிருஷ்ணசாமி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, மற்றும் இருவர் அடங்கிய சட்டவரைவுக் குழுவுக்கு அம்பேத்கர் தலைவராக நியமிக்கப்பட்டார். அம்பேத்கர் வாழ்வில் இது ஒரு பெரிய சாதனையாகும். 1948 பிப்ரவரி மாதக் கடைசி வாரத்தில் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதி முடித்தார்.
பம்பாய் மருத்துவமனை ஒன்றில் டாக்டர் செல்வி சவீதா கபீரைச் சந்திக்க நேர்ந்தது. 1947 ஆகஸ்டு மாதம் முதலிலிருந்தே அம்பேத்காருடைய உடல் நலம் குன்றி இருந்தால், உடனிருந்து உடல் நலம் பேணிக்காத்த சவீதா கபீர் அவர்களை 1948 ஏப்ரல் 15ம் நாள் மணந்து கொண்டார்.
அமைச்சர் பதவியை துறந்தார்
1951ஆம் ஆண்டு அக்டோபர் 11ம் நாள் நாடாளுமன்றம் கூடியது. அன்று கேள்வி நேரம் இல்லை. தொகுதிப் பிரிவினை ஆணைகள் பற்றிய மசோதா முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அது முடிந்ததும் நாடாளுமன்ற அவைத்துணைத் தலைவர் தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்கு முறை மசோதாவை முன் மொழியுமாறு எச்.கே.மகதாப் அவர்களை அழைத்தார். அவ்வேளையில் அம்பேத்கர் முதலில் எழுந்து நின்று அவர் பேசிட முதலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரினார். அம்பேத்கர் படிக்கவுள்ள அறிக்கையின் நகலை முன்னரே என்னிடம் அளித்திருப்பின் அவரைப் பேச அனுமதித்திருப் பேன் என்று துணைத்தலைவர் கூறியதைக் கேட்டு அம்பேத்கர் வியப்படைந்தார்.
அம்பேத்கரை நோக்கி அவையின் துணைத்தலைவர் மாண்புமிகு அமைச்சர் அவர்களே! என்று கூறி தொடர்ந்து அவர் பேசுவதற்கு முன்னரே அம்பேத்கர் குறுக்கிட்டு ‘இப்போது நான் அமைச்சராக இல்லை. சர்வாதிகாரப் போக்கிற்கு அடிபணிய மாட்டேன்” என்று கூறி அவையை விட்டு வெளியேறினார். நாடாளு மன்ற நடைமுறை விதி பிரிவு 128ல் ஒரு அமைச்சர் பதவி விலகும் போதோ அல்லது மற்ற நேரத்திலோ நாடளுமன்றத்தில் அறிக்கை படிக்க விரும்பினால் அறிக்கையின் நகலை முன்னதாகவே அவைத் தலைவரிடம் அளிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக குறிப்பிடப் படவில்லை. அடுத்த நாள் அம்பேத்கரை நாடாளுமன்றம் எதிர்கட்சித் தலைவராக வரவேற்றது.
அம்பேத்கர் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த வுடனேயே அவருடைய அறிக்கையை பத்திரிக்கைகளுக்கு அளித்தார். ஐந்து காரணங்களால் அம்பேத்கர் அவர்கள் அமைச்சர் அவையிலிருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டடிருந்தார். அந்த ஐந்து காரணங்கள்.
- தனக்கு சட்ட அமைச்சர் பதவி அளிக்க முன் வந்த போது திட்ட அமைச்சர் பதவியை பிறகு அளிப்பதாக வாக்களித்த பிரதமர் நேரு அவர்கள,; ஒவ்வொரு அமைச்சரவைக் குழுவிலும் எவ்வாறு தன்னை சேர்க்காமல் விட்டுவிட்டார் என்பதை அம்பேத்கர் அவர்கள் அவ்வறிக்கையில் விளக்கியிருந்தார்.
- தீண்டப்படாத வகுப்பினரின் முன்னேறத்தில் அரசு அக்கறையற்று இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
- காஷ்மீர் குறித்த இந்திய அரசின் கொள்கையுடன் அம்பேத்கர் அவர்கள் முரண்பட்டு நின்றார். காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு சிறந்த வழி காஷ்மீரைப் பிரிப்பதே ஆகும். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது செய்தது போலவே இந்துக்களும், பௌத்தர்களும் வாழும் பகுதிகளை இந்தியாவுடனும், முஸ்லீம்கள் வாழும் பகுதிகளை பாகிஸ்தானுடனும் இணைத்திட வேண்டும் என்று கூறினார். இந்த ஆலோசனை நிராகரிக்கப்பட்டது.
- நண்பர்களை விட எதிரிகளையே அதிகமாக உருவாக்கும் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை ஏற்க மறுத்ததுடன் முரண்பட்டார்.
- இந்துச் சட்டத் திருத்த மசோதாவின் பால் பிரதமர் நேரு அவர்கள் கொண்டிருந்த அக்கரையின்மையும,; அதை எப்படியும் நிறைவேற்றிட வேண்டும் என்ற ஆர்வமும், மனஉறுதியும் நேருவிடம் இல்லாமல் போனதால் மசோதா நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இந்த ஐந்து காரணங்களுக்காக 1951 செப்டம்பர் 9ம் தேதி நேரு அமைச்சரவையில் இருந்து இராஜினாமா செய்தார்.
1952 ஜனவரி மாதத்தில் நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிலேயே டாக்டர் அம்பேத்கர் காங்கிரஸ் வேட்பாளர் N.ளு.கஸ்ரோல்கர் என்பவரிடம் தோற்றுப்போனார். மார்ச் 1952ல் இராஜிய சபை உறுப்பினராக பம்பாய் மாகாணத்தில் தேர்ந்தெடுக் கப்பட்டு பாராளுமன்றத்திற்கு திரும்பினார். இடைத்தேர்தல் பாந்திரா நாடாளுமன்ற தனித்தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.
புத்தம் தழுவுதல்
1950 மே 25ம் நாள் தன் மனைவியுடனும் சுதந்தர கட்சியின் செயலாளர் ராஜ்போக்வுடனும் அம்பேத்கர் விமானம் மூலம் கொழும்பு போய் சேர்ந்தார். அங்கு பத்திரக்கையாளர்களிடம் பேசியபோது புத்தமதச் சடங்குளையும் சம்பிரதாயங்களையும் பார்பதற்காகவும் புத்தசமயம் எந்த அளவிற்கு நடப்பில் இருக்கிறது என்பதை அதன்மூலம் கண்டறிவதற்காகவும் கொழும்புவிற்கு வந்திருப்பதாகக் கூறினார். கொழும்புவில் பௌத்த இளைஞர் சங்கத்தின் பிரதிநிதிகள் மாநாட்டில் அம்பேத்கர் ‘இந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். பிராமணீயக் கால கட்டத்தில்தான் பௌத்தம் தோன்றியது. பிராமணீயம் ஏற்றத்தாழ்வைப் பிரச்சாரம் செய்தது. பௌத்தமோ சமத்துவத்தைப் பிரச்சாரம் செய்தது. இந்தியாவில் பௌத்தம் தாழ்நிலைக்குச் சென்றதற்கான சில காரணங்களைக் கூறினார்.
அல்லாவுதீன் கில்ஜி படை எடுத்தபோது பீகாரில,; ஆயிரக் கணக்கான பௌத்தத் துறவிகள் படுகொலைசெய்யப்பட்டனர். இதற்கிடையில் பௌத்தர்களில் பெரும்பாலோர் இந்துமதத்தில் சேர்ந்துவிட்டனர். பௌத்தம் பின்பற்றுவதற்குக் கடுமையானதாக இருந்தது. இந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலை பௌத்தத்தின் வளர்ச்சிக்கு ஆக்கவும் தருவதாக இல்லாமலிருந்தது போன்ற காரணங்கள் என்று அம்பேத்கர் விவரித்தார்.
1950 செப்டம்பர் 29ம் நாள் பம்பாயில் ஓர்லியில் புத்தர் கோயிலில் ஓர் உரை நிகழ்ந்தினர் அம்பேத்கர். தீண்டப்படாத வகுப்பு மக்கள் அவர்களுடைய துன்பங்களுக்கு முடிவு கட்டுவதற்காக பௌத்தத் தைத் தழுவ வேண்டும் என்று அக்கூட்டத்தில் கூறினார். இனி எஞ்சியுள்ள தன்னுடைய வாழ்நாளை இந்தியாவில் பௌத்தத்தின் மறுமலர்ச்சிக்கும,; பரவலுக்கும் செலவிடப் போவதாக அறிவித்தார். 1954ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் அம்பேத்கர் மூன்றாவது உலகபௌத்த மாநாட்டில் கலந்துகொள்வ தற்காக இரங்கனுக்குச் சென்றனர். இந்த மாநாட்டில் பௌத்த சமயத்தின் குறிக்கோள,; அதை பரப்பவேண்டிய பணி ஆகியவை குறித்து அம்பேத்கர் சிந்தனையைத் தூண்டும்படியாக ஆற்றிய உரையை மாநாட்டினர் அசைவற்றுக் கேட்டனர்.
புது தில்லியில் குடியரசுத்தலைவரின் எழிலார்ந்த மாளிகையின் முகப்பில் புத்தரின் மணி மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளதையும் பாரதத்தின் சின்னமாக அசோக் சக்கரம் ஏற்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி இவை அனைத்தும் தன்னுடைய சொந்த முயற்சியினால் விளைந்த சாதனைகள் என்று கூறினார். இந்தியாவில் பௌத்தத்தை பரப்பிட முடியும். பௌத்தத்தைப் பரப்புவதற்கான அடித்தளம் இப்போது அமைக்கப்பட்டிருக்கிறது. நிதி உதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் என்னுடைய இலட்சியத்தை அடைந்தே தீருவேன் என்று அம்மாநாட்டில் சூளுரைத்தார்.
பௌத்தத்தைப்; பரப்பும் முயற்சியில் இப்போது அம்பேத்கர் தீவிரமாக ஈடுபட்டார். அம்பேத்கர் டி. வலின் சின்ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். பௌத்த சமயத்தில் சேரும்போது ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய சில சடங்குகளைத் தான் தொகுத்து உருவாக்கி இருப்பதாகவும் அதற்கு தம்ம தீட்ச சடங்குகள் என்று பெயரிட்டிருப்பதாகவும் அக்கடிதத்தில் அம்பேத்கர் குறிப்பிட்டிருந்தார்.
மதக்கோட்பாடுகள் பற்றி எதுவும் அறியாத பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக மதம் மாறுவது என்பது ஒரு மதமாற்றமாகாது என்றும், அது பெயரளவில் மட்டுமே மதம் மாறியதாக இருக்கும் என்றும் அம்பேத்கர் திடமாகக் கருதினார்;. பௌத்த மதத்தில் இருந்த பொதுமக்கள் புத்தரை வழிபடுவதுடன் நிற்காமல், பௌத்தத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகப் பார்ப்பனர்கள் உருவாக்கியிருந்த கடவுளர்களையும் கடவுளச்சுகளையும் ஊசலாட்ட மனப்பான ;மையுடன் வணங்குவதால்தான் பௌத்தம் அழிந்துவிட்டது என்று அம்பேத்கர் கூறினார். அதனால் பௌத்த மதத்தில் சேருவோர் ஒவ்வொருவரையும் சடங்குகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர் எண்ணினார். புத்தர் பற்றியும் பௌத்தம் குறித்தும் அம்பேத்கர் 1951 நவம்பர் மாதத்தில் ஒரு நூலை எழுதினார். அந்நூல் 1956ம் ஆண்டின் தொடக்கத்தில் எழுதி முடிக்கப்படும் நிலையில் இருந்தது. அந்த நூல் புத்தரும் அவருடைய தம்மமும் என்ற தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
1956ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கத்தில் அம்பேத்கர் பம்பாய் வந்தார். மே 24ம் நாள் ‘நரே” பூங்காவில் புத்தர் பிறந்தநாள் விழாவில் அம்பேத்கர் உரையாற்றியபோது வரும் அக்டோபர் மாதத்தில் பௌத்த சமயத்தில் சேரப்போவதாக அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் அம்பேத்கர் பௌத்தம் இந்து சமயத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும் என்று அக்கூட்டத்தில் விளக்கினார்.
இந்துமதம் கடவுளை நம்புகிறது. பௌத்தம் கடவுளை நம்புவதில்லை இந்துமதம் ஆத்மாவை நம்புகிறது. பௌத்தத் தத்துவத்தின்படி ஆத்மா என்பது இல்லை. இந்துமதம் நால் வருண அமைப்பையும் சாதிமுறையையும் நம்புகிறது. பௌத்தத்திலோ சாதிமுறைக்கும் நால் வருணத்திற்கும் இடமே இல்லை என்பதை அம்பேத்கர் விளக்கினார். மதம் மாற்றச் சடங்கு நிகழ்ச்சி நாக்பூரில் நடக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினர் காரணம் பண்டை நாளில் பௌத்தத் துறவிகளான நாகர்கள் நாகபுரியில் வாழ்ந்தனர் என்று கூறினார். புத்தரின் தருமச் சக்கரத்தை மீண்டும் சூழலச் செய்யப் போவதாகவும் அவருடைய கொள்கைகளை உலகின் எல்லா பகுதிகளிலும் பரவச் செய்யப் போதாகவும் குறிப்பிட்டார். அம்பேத்கர் பௌத்த சமயத்திற்கு மதமாற்றம் செய்வதற்கான சடங்கை நடத்துவதற்காக கோராக்பூர் மாவட்டத்தில் குசினாரா என்ற ஊரில் இருந்து ரெவரண்ட் பிக்கு சந்திரமணியை அம்பேத்கர் அழைத் திருந்தார்.
மதமாற்றச் சடங்கினை நீங்கள்தான் நடத்திவைக்க வேண்டும் என்று நாங்கள் மிகவும் விரும்புகின்றோம். இந்தியாவிலுள்ள பிக்குக்களில் நீங்கள்தான் மூத்தவர் என்பதால் இந்த மதமாற்றச் சடங்கினை நீங்கள் நடத்திவைப்பது சாலப் பொருந்தும் என்று நாங்கள் கருதுகிறோம் என பிக்கு சந்திரமணிக்கு எழுதிய மடலில் அம்பேத்கர் குறிப்பிட்டிருந்தோர்.
1956 அக்டோபர் 13ம் நாள் மாலை அம்பேத்கர் பத்திரிகை யாளர் கூட்டம் ஒன்றை நடத்தினார். நான் மேற்கொள்ள உள்ள பௌத்தம் பகவன் புத்தர் போதித்த கொள்கைகளின்படி இயங்கும். என்னுடைய பௌத்தச் சமயம் நவயானாவாக இருக்கும் என்று கூறினார். அக்டோபர் 14ம் நாள் 1956ம் ஆண்டு காலை வெள்ளை பட்டு வேட்டியும் வெள்ளைக் கோட்டும் அணிந்துகொண்டு மதமாற்ற சடங்கை ஏற்றுக் கொண்டார். அன்று அம்பேத்கரின் தொண்டர்கள் 5 லட்சம் Nபுர் அவருடன் பௌத்த சமயம் தழுவினார்கள்.
இறுதிப் பயணம்
அம்பேத்கர் உடல்நலம் நலிவுற்றிருந்த போதிலும,; அவருடைய நெருங்கிய நண்பர்களில் சிலர் நேபாள நாட்டின் தலைநகரான காட்மண்டுவில் நடைபெறஉள்ள உலக பௌத்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவரை இணங்கச் செய்து அவருடை பயணத்திற்கான ஏற்பாடுகளை ஆர்வமுடன் செய்து கொண்டிருந்தனர். 1956ம் ஆண்டு நவம்பர் 14ம் நாள் அம்பேத்கரும் அவருடைய குழுவினரும் விமானம் மூலம் காட்மண்டு சென்றனர். உலக பௌத்த சங்க நான்காவது மாநாடு காட்மண்டுவில் 1956, நவம்பர் 15ம் நாள் கூடியது. அம்மாநாட்டில் அம்பேத்கர் உரையாற்றிய போது நான் இம்மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருப்பதின் நோக்கம் எல்லா மதங்களைவிட பௌத்த மதம்தான் சிறந்ததாக இருக்கிறது என்பதால்தான்; என்று குறிப்பிட்டார். அதற்குப்பின் அம்பேத்கர் பௌத்தப் புண்ணிய இடங்களை இரண்டாவது முறையாகச் சென்று பார்த்துவிட்டு குசிநாராவிலிருந்து புறப்பட்டடு 1956 நவம்பர் 30ம் நாள் டில்லிக்கு வந்தடைந்தார்.
1956 டிசம்பர் 2ம் நாள் அசோக் விகாரில் தலாய்லாமாவிற்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் அம்பேத்கர் கலந்து கொண்டார். 1956 டிசம்பர் 4ம் நாள் அம்பேத்கர் மாநிலங்கள் அவையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். மாநிலங்கள் அவையின் வராந்தாவில் அமர்ந்து அம்பேத்கர் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். இதுதான் நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கரின் கடைசி வருகையாக இருக்கும் என்று எவரும் நினைத்துப்பார்க்கவில்லை. 1956 டிசம்பர் 6ம் நாள் காலை 6.30 மணியளவில் படுக்கையிலேயே தூக்கத்திலேயே இறந்துவிட்டார்.
பேரதிர்ச்சிதரும் அம்பேத்கரின் மறைவுச்செய்தி காட்டுத் தீ போல டில்லி முழுவதும் பரவியது. இதற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் அலிப்பூர் சாலை டில்லியில் கூடிவிட்டனர் அம்பேத்கர் உடல் ஒரு வண்டியில் அமைக்கப்பட்டிருந்த மேடைமீது வைக்கப்பட்டது. பாபாசாகிப் புகழ் நீடுழிவாழ்க போன்ற முழக்கங்களுடன் டில்லியில் அம்பேத்கருடைய இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் டில்லி விமான நிலையத்தை அடைய ஐந்துமணி நேரமாயிற்று மறுநாள் காலை டிசம்பர் 7ல் அம்பேத்கரின் பூதவுடல் பம்பாய் எடுத்துச் செல் லப்பட்டது. இறுதி ஊர்வலம் நன்பகல்வாக்கில் அலங்கரிக்கப்பட்ட வண்டியின் மீது வைத்துப் புறப்பட்டது. ஊர்வலம் நத்தைபோல் நகர்ந்து பின்னாளில் டாக்டர் பாபாசாகிப் அம்பேட்கர் சாலை என்று பெயரிடப் பட்டுள்ள வின்சன்ட் சாலை, போய்பாவதி, வடக்கு பம்பாய், சயானி சாலை, கோகலே சாலை ஆகியவற்றின் வழியாக தாதர் இடுகாட்டை சென்றடைந்தது.
1956 டிசம்பர் 7ம் நாள் அம்பேத்கரின் பூதவுடல் எரியூட்டப்பட்டு மறைவுற்றது.
குப்பை மேட்டில் பிறந்து தீண்டப்படாதவராக வாழ்க்கையைத் தொடங்கி சிறுவனாக இருந்தபோது தொழுநோயள போல் ஒதுக்கப்பட்டு இளமைப்பருவத்தில் முடிதிருத்தங்கள் உணவு விடுதிகள் தங்கும் விடுதிகள் கார்கள். கோயில்கள் அலுவலகங்கள் முதலானவற்றில் நுழையவும் விடாமல் விரட்டியடிக்கப்பட்டு இழிவாக நடத்தப்பட்ட அம்பேத்கருக்கு இவையாவும் பணவசதியின்மையால் பட்டினி கிடந்தேனும் படித்து உலகப்புகழ் பெற்றிருந்த பல்கலைக் கழகங்களில் மிக உயர்ந்த பட்டங்களைப் பெற்றிடவேண்டும் என்று உறுதிபூண்டவர்தான் டாக்டர் அம்பேத்கர். தன் நேரம் முழுவதையும் படிப்பதற்காகவே செலவிட்டார். வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும், முன்னேற்றத்திற்கும் கடுமையாகப் போராட வேண்டிய நிலைக்கும் ஆளானவராக, தீராப் பிணியை அறுவை சிகிச்சை செய்து அகற்றும் மருத்துவர் போலச் சமுதாயத் தீமை களைப் புரட்சி எனும் ஆயுதமேந்தி ஈவிரக்கமின்றி எதிரிகளைத் தாக்கியவர் அண்ணல் அம்பேத்கர். தன் குடும்பத்தின் வளத்திற்காக வும் தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காகவும் என்றெண்ணி எதையும் செய்துகொள்ளாமல் தன் வகுப்பு மக்களின் நலனுக்காக நாட்டின் உயர்வினுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். சமூகத்தில் பெரும் இடர்பாடுகளையும் அரசியலில் கடும் எதிர்ப்புகளையும் சந்தித்தவர் அம்பேத்கர். இத்தகைய வாழ்க்கையின் எதிர்ப்பை சந்தித்த டாக்டர் அம்பேத்கரின் செயல்கள் பெருஞ் சிறப்பிற்கு உரியது. துணிவுமிகக்து. வரலாற்றில் பொறிக்கத்தக்கது.
கட்சிப ;பத்திரிக்கையாலோ அல்லது கட்சியின் ஆர்வம்மிக்க கையாட்கள் போன்றவர்களாலோ போற்றித் துதி பாடி உயர்த்துதல் என்ற உதவியின்றியே தன்பெயரின் முதன்மையை புகழை நாட்டில் நிலைநாட்டியவர் அம்பேத்கர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வட்டமேசை மாநாட்டின் விளைவாக அமைக்கப்பட்ட வாக்குரிமைக் குழு, பொருளாதாரக்குழு, அரசியலைப்புக்குழு, ஆகியவற்றில் இடம்பெற்று அரும்பணியாற்றியவர். பிரிட்டிஷ் ஆட்சியில் தொழிலாளர் நல அமைச்சராகவும், சுதந்திர இந்தியாவின் முதலாவது சட்ட அமைச்சராகவும் திகழ்ந்தவர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைமை சிற்பி தன் இளமைப்பருவத்தில் எதிரிகளுக்கு ஆதாராமாக விளங்கிய அரசியல் சட்டத்தை மாற்றியமைக்கும் நிலைக்கு உயர்ந்தவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நசுக்கப் பட்டு துன்பத்தில் ஆழ்த்தப்பட்டிருந்த தீண்டப்படாத வகுப்பு மக்களின் பேரில் சுமத்தப்பட்டிருந்த தீண்டாமை என்னும் கரையைத் துடைத்தவர் அவர்களுடைய அடிமைத் தளைகளை அகற்றி தன்மானத்துடன் வாழ பௌத்த மார்க்கத்தின் வழியாக பல இலட்சம் மக்களை மீட்டெடுத்தவர்.
இந்து மதத்தின் தீண்டப்படாத வகுப்பில் தோன்றி கல்வி யாளராக, பொருளியல் வல்லுனராக, எழுத்தாளராக, பேராசிரியராக வழக்கறிஞராக மக்கள் தலைவராக புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கியவராக, இந்துமதக் கொடுமைகளிலிருந்து தன் சமூகமக்களை வென்றெடுத்த விடிவெள்ளியாக என்றென்றும் திகழ்வார்.
அம்பேத்கரின் கடைசி செய்தி
தன் உடல் நிலை மோசமாகி, படுக்கையில் இருந்தபோது தன்னுடைய சிறப்புச் செயலாளர் ரெட்டுவிடம் கூறிய செய்தி :
நான் இதுவரை செய்துள்ள சாதனைகள் என்வாழ்நாள் முழுவதும், கொடிய துன்பங்களுக்கும் முடிவில்லாத தொல்லைகளுக்கும் ஈடுகொடுத்து ஆற்றிய செயல்களாலும், என் எதிரிகளுடன் நடத்திய போர்களாலும் விளைந்தவைகளேயாகும் என்பதை என் வகுப்புமக்களிடம் கூறுங்கள.; இன்று நீங்கள் காணுகின்ற, உரிமைக்குப் போராடத் துணிந்து விட்ட இப்பெருங்கூட்டத்தைப் பெரிய தொல்லைகளுக்கிடையேதான் நான் வழிநடத்தினேன். அதன் வழியில் தடைகள் ஏற்பட நேர்ந்தாலும் இந்த மக்கள் தொடர்ந்து முன்னேறிச்செல்ல வேண்டும். என்னுடைய தளபதிகளால் அவர்களை முன்னோக்கிச் நடத்திச்செல்ல முடியாதுபோனால் இப்போது இருக்கும் இடத்திலேயே விட்டுவிடட்டும்; ஆனால் எக்காரணங் கொண்டும் அவர்கள் பின்னோக்கிச் செல்ல அனுமதிக்கக் கூடாது இதுவே என் மக்களுக்கு நான் கூறும் கடைசி செய்தியாகும் என்றுரைத்தார்.
அண்ணல் அம்பேத்கர் வழி நடப்போம். அவர் புகழ் பாடுவோம்.
2 Comments
அண்ணலின் வாழ்க்கை நிகழ்வுகளையும், பணிகளையும்,அவர் பட்ட பாடுகளையும் மிகவும் சிறப்பாக தொகுத்துள்ளீர்கள்.
அண்ணலின் வாழ்க்கை வரலாற்றை எளிதில் படிக்க நினைப்பர்கள் இதை கண்டிப்பாக படிக்க்க வேண்டும்.
அம்பேத்கர்.இன் இணையத்தாருக்கும், தொகுப்பாசிரியர்களுக்கும் மிக்க நன்றி.
இவண்
கலையரசன்
நன்றி!