சாதிமல்லி

அக்ரகாரச் சாக்கடையில் – நீ
ஆகாயத் தாமரைப்பூ
வக்ரகாரக் காடுகளில்
வளர்ந்ததொரு குறிஞ்சிப்பூ

ஆரியச் சந்தையினில்
அவளோர் அரளிப்பூ
ஆதித்தமிழன் நான்
அவள்தான்என் முல்லைப்பூ

மனமெல்லாம் மரிக்கொழுந்து
மயிலே! நீ மல்லிகைப்பூ
மல்லுகட்டும் சிறுக்கி நீ
மறுநொடியில் மருதப்பூ

சிலநேரம் வேண்டுமென்றே
செய்திடுவாய் தப்பு
சென்றுநான் வரும்வரை நீ
சிலையான நெய்தல்பூ

ஆரியத்தின் உதடுகளில்
சேரியின் உதடுகள்
செய்கின்ற காரியத்தில்
சிலிர்த்திடும்உன் பூரிப்பு

துக்கத்திலும் தூக்கத்திலும்
துளிர்ந்துஎழும் உன்நௌப்பு
கக்கத்தில் என் காதல்ஏறி
முத்தம்தரும் தித்திப்பு

உள்ளத்தில் எனைக்கிடத்தி
ஒளித்துவைத்த மாராப்பு
சொல்லவாய் திறக்க அய்யோ
சிவந்தமுகம் மத்தாப்பூ

எள்ளளவும் குறையாது
எனைப்பற்றி யோசிப்பு
எப்படிநாம் சேர்வது; உன்
எண்ணமெங்கும் படபடப்பு

அத்திப்பூ ஆசைப்பூ
அழகுவனச் சோலைப்பூ
எப்பொழுதும் நம்வாழ்வில்
இல்லையடி பாலைப்பூ

– கவிஞர் வெண்ணிலவன்

Load More Related Articles
Load More By sridhar
  • அறிவின் ஊற்று

    உமது உருவப்படம் பார்க்கையிலும் ஊற்றெடுக்கும் எமது அறிவின் தாகம். வானம் வழுக்கி விழுந்ததென …
  • தீண்டத்தகாதவன்

    உனது மயிரை உனக்கு சிரைக்கத் தெரியாது உனது செருப்பை உனக்கு தைக்கத்தெரியாது உனது நெல்லை உனக்…
  • இவரே தமிழ்த் தாத்தா!

    ஓதியுயர் மெய்ஞா னங்கள் உலகினிலே புத்தர் தந்தார்! போதிமரம் அமர்ந்த காலை புத்தரெனும் அறிவன் …
Load More In கலை இலக்கியம்

Leave a Reply

Your email address will not be published.