ஒருசொல்
உனக்கு வளத்தைத் தருகிறது
எனக்கு வறுமையைக் காட்டுகிறது
ஒருசொல்
உனக்கு வாய்ப்புகளை வழங்குகிறது
எனக்கு வாய்ப்புகளை மறுக்கிறது
ஒருசொல்
உனக்கு மரியாதையைக் கொடுக்கிறது
எனக்கு அவமானத்தைத் தருகிறது
ஒருசொல்
உனக்கு அதிகாரத்தைத் தருகிறது
எனக்கு அடிமைத்தனத்தைக் கற்பிக்கிறது
ஒருசொல்
உன்னை முதல்வனாக்குகிறது
என்னை கடையனாக்குகிறது
உனக்கும் எனக்குமான
அச்சொல்
சாதி!
– திருமகன்