1951, செப்டம்பர் 27, அண்ணல் அம்பேத்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாள்.
நேரு அமைச்சரவையின் பிற்போக்கான பல்வேறு நடவடிக்கைகள் முற்போக்குச் சிந்தனையுள்ள அண்ணல் அம்பேத்கருக்கு ஒவ்வாவமையை அளித்தாலும் அவர் தனது மத்திய சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் இருந்தன.
1.இந்துசட்ட மசோதாவை நிறைவேற்றி பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்க வேண்டும்.
2.OBC ஆணையம் அமைத்து பிராமணர்களைக் (ஆண், பெண்) கணக்கெடுத்து அவர்களுக்கு தனியாக OBC இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்.
3.காஷ்மீர் பிரச்சனையில் அரசு காஷ்மீரிகளுக்கு முழுவுரிமையை வழங்க வேண்டும். ஆனால் இந்தியாவின் தலையீடு மேலும் மேலும் காஷ்மீர் மக்களின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது.
இதுகுறித்து பதவி விலகியதற்கான காரணங்களை விளக்கி 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாளன்று அம்பேத்கர் வெளியிட்ட அறிக்கையில் அவர் இப்படி கூறுகிறார்,
“The issue on which we have been fighting most of the time is, who is in the right and who is in the wrong. The real issue to my mind is not who is right but what is right. Taking that to be the main question, my view has always been that the right solution is to partition Kashmir. Give the Hindu and Buddhist part to India and the Muslim part to Pakistan as we did in the case of India.”
பெண்களுக்கு சொத்துரிமை அளிப்பது குறித்து இறுதியாக அம்பேத்கருக்கும் நேருவிற்கும் இடையே நடந்த உரையாடல்.
Nehru : Nation is not ready for your modern thoughts on the issue of giving rights to Hindu girls in family property.
Ambedkar : As the country has become independent, it is our duty to create that type of awareness through a law.
ஆனாலும் அம்பேத்கரால் உருவாக்கி அளிக்கப்பட்ட பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கும் இந்து சட்ட மசோதாவை நிறைவேற்ற நேரு மறுத்துவிட்டார்.
நான்கு ஆண்டுகாலம் போராடியும் இவ்வாறான பல்வேறு முற்போக்கான செயல்திட்டங்களை நிறைவேற்ற பிரதமராக இருந்த நேருவும் அவரது சகாக்களும் மறுத்துவிட்டதால் தனது மத்திய சட்ட அமைச்சர் பதவியை அம்பேத்கர் ராஜினாமா செய்தார்.
ஆனால் ஒரு நாள் கழித்து 29.10.1951 அன்று வெளியான The Hindu ஆங்கில நாளிதழ், ‘Ambedkar resigns for general election’ என்று தலைப்பிட்டு, ‘A member of the Congress party, Dr. Ambedkar led the Scheduled Castes Federation, one of two all-India organisations representing those people. In that capacity he felt he needed at least two months to organise them properly for the general election.’ என்று பாராளுமன்றத் தேர்தலுக்காக பட்டியல் சாதி மக்களை தனது தலைமையிலான பட்டியல் சாதிகள் கூட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைப்பதற்காக குறைந்தபட்சம் இரு மாதங்கள் வேண்டும் என்பதற்காக அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
திருத்தம் செய்யப்பட்ட இந்து சட்ட மசோதா பின்னர் நிறைவேற்றப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு பிறகுதான் வி.பி சிங் அரசால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
1.The Hindu செய்தியின் இணைப்பு : http://www.thehindu.com/2001/09/29/stories/10291045.htmn
பதவி விலகியதற்கான காரணங்களை விளக்கி 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாளன்று அவர் வெளியிட்ட அறிக்கையின் இணைப்பு http://www.chandrabhanprasad.com/Historical%20Doc/Ambedkar’s%20Regisnation.doc