தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கு மறு பெயர்தான் சீர் திருத்தம். லட்சக் கணக்கான தொழிலாளர்களை காண்டிராக்ட், காஷுவல் லேபராக வைத்துச் சுரண்டும் முதலாளிகள் இப்போது வேலைநேரத்தை அதிகரிக்க வேண்டும், குறைந்தபட்சக் கூலியைய் மேலும் குறைக்க வேண்டும் என்று கூக்குரலிட வாடிய முதலாளியைக் கண்ட போதெல்லாம் வாடும் அரசுகளும் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றத் துணிந்து விட்டன.
வேறு வழியில்லாத தொழிலாளர்களும் வேலை இருந்தால் போதும் என இதை ஏற்றுக் கொண்டு வேலை செய்யும் கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். கட்டாய வேலை என்பது துப்பாக்கி முனையில் நடப்பதல்ல. பொருளாதார, அதிகார ஏற்றத் தாழ்வு நிறைந்த சமுதாயத்தில் பெரும்பாலான மக்களின் பொருளாதார வாழ்வைக் கட்டுப்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் தன்னிச்சையாக எவ்விதக் கட்டுப் பாடுகளையும் தன் கீழ் வேலை செய்பவர்கள் மீது விதிக்கலாம். இதுவும் ஒரு வகையான கட்டாய வேலைதான். இது அரசியல் சட்டம் வழங்கியிருக்கும்
அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும். ஆனால் அதே அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை வைத்துதான் முதலாளிகளும் செயல் படுகின்றன. இதில் முரண்பாடு இல்லையா? இதற்கு விளக்கமளிக்கிறார் அரசியல் சட்ட வரைவுக் கமிட்டியின் தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கர்.
அடிப்படை உரிமைகள் குறித்து ஒரு குறிப்பு தருமாறு அவரிடம் கேட்கப் பட்டது. அரசின் அதிகாரத்தைக் குறைத்து தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதுதான் அரசியல் சடத்தின் நோக்கம் என்று அப்போது ஒரு கருத்து நிலவியது. ஆனால் அது ஒரு குறுகலான பார்வை என்றார் அம்பேத்கர். ஏனெனில் நாட்டின் சமூக, பொருளாதார வாழ்வில் பெரும் செல்வாக்கு செலுத்துவது தனி மனிதர்களும், தனியார் தொழில் நிறுவனங்களும்தான் என்ற உண்மையை தனி நபர் சுதந்திர வாதம் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை என்றார் அவர். அடிப்படை உரிமைகள் என்ற பெயரில் ‘தனியார் முதலாளியின் சர்வாதிகாரத்திற்கு’ வழிவகுக்கும் சாத்தியத்தை இல்லாமல் செய்வதே அரசியல் சட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.
தொழிலாளர் இயக்கங்களின் நீண்ட போராட்டத்தினால் கிடைத்தவைதான் நாட்டின் சுதந்திரமும், தொழிலாளர் நலச் சட்டங்களும். அவற்றின் நோக்கம் அதிகார ஏற்றத்தாழ்வைக் குறைப்பதுதான். எட்டு மணி நேர வேலையை உறுதி செய்யும் சட்டம் இயற்றப் படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் அம்பேத்கரr
(இன்றைய இந்து ஆங்கில இதழில் கவுதம் பாட்டியா எழுதியிருக்கும் கட்டுரையின் அடிப்படையில் எழுதப் பட்ட பதிவு)
|
|
|
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.