இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம், அரக்கோணம் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட குருவராஜாபேட்டை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 14 எதிரிகள் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று 07.05.2021-ம் தேதி 7 எதிரிகள் மீது இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு. R.சிவக்குமார், இ.கா.ப., அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. A.R.கிளாஸ்டன் புஷ்பராஜ் இ.ஆ.ப., அவர்களின் உத்திரவின் படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.