ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைகழகம் பாபாசாகேப் அம்பேத்கரின் சிறப்புகளையும், சாதனைகளையும் மதித்துப் போற்றுகின்ற வகையில் ‘இலக்கியத்தில்’ அவருக்கு சிறப்பு டி.லிட் டாக்டர் பட்டம் வழங்கிய நாள் இன்று.
***
1953 ஜனவரி 12 அன்று இதே நாளில் பாபாசாகேப் அவர்களுக்கு உஸ்மானியா பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. இந்த கவுரத்துக்கு பின்னால் மறைந்துள்ள அவமானம் என்ன தெரியுமா?
இந்தியாவில் பிறந்த ஓர் ஒப்பற்ற தலைவருக்கு இந்தியாவில் உள்ள எந்த பல்கலைகழகமும் அவரது சமூக பணிக்காகவோ, அரசியல் சட்ட பங்களிப்புக்காகோ, அறிவாற்றலுக்காகவோ கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கவில்லை. (ஏற்கெனவே 1917லேயே முனைவர் (Phd) எனும் டாக்டர் பட்டம் வாங்கிவிட்டார் என்பது வேறு செய்தி)
1952ல் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகம் தான் முதன் முதலில் பாபாசாகேப் அவர்களுக்கு அவரது சமூகப்பணியை பாராட்டி “A Great Social Reformer and A Valiant upholder of Human Rights” என்பதற்காக கௌரவித்து கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
பிறகு தான் 1953ல் இந்தியாவில் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அதுவும் உஸ்மானியா பல்கலைகழகத்தால் தான் கொடுக்கப்பட்டது.