Home நோக்கம்

நோக்கம்

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயர்ந்த மனித விழுமியங்களைக் கொண்ட இந்திய சமூகத்தை தனது வாழ்க்கை இலட்சியமாக்க் கொண்டு இயங்கிய கற்றறிந்த பேரறிஞர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் உயரிய மேதமையையும் அறிவார்ந்த சிந்தனைகளையும் ஒப்பரிய தியாகங்களையும் எண்ணற்ற போராட்டங்களையும் உலகத் தமிழ்ச் சமூகத்திடம் எடுத்துச் செல்லும் உயரிய நோக்குடனும்…..

மனித உரிமைகளுக்காகவும் சமத்துவ சமூகத்திற்காகவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, புரட்சிக் குரல் எழுப்பிய கௌதம புத்தர் தொடங்கி…நவீன அரசியல் கோட்பாடுகள் தோன்றிய 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மிக எழுச்சியோடு இயங்கிய, ’திராவிடர்’ ’தமிழர்’ போன்ற வலுவான தமிழ் இன மொழி அரசியலுக்கும் தமிழ் பௌத்த்திற்கும் வழிகாட்டிய பேராசான் பண்டிதர் அய்யோத்திதாசர் முதல், கொடும் இந்துப் பார்ப்பன சாதியத்திற்கு எதிராக இயங்கிய அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை இயக்க முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகள், படைப்புக்கள், போராட்ட வடிவங்கள் ஆகியவற்றை உலகறியச் செய்யும் துடிப்புடனும்….

சமத்துவத்திற்காகவும் சகோதரத்துவத்திற்காகவும் போராடி வரும் இருபத்தைந்து கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக கலை, இலக்கிய தளங்களில் தீவிரமாகப் பணியாற்றி வரும் படைப்பாளிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் குறித்த பதிவுகள், அவர்களின் படைப்புக்கள், நேர்காணல்கள்…

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்….

இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு….

இரண்டாயிரம் கால வரலாற்றோடு…

இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்…

www.ambedkar.in

 

 

 

 

Comments are closed.