Author: Sasikumar

இந்துக்களுக்கும் இந்து மதத்துக்கும் நான் பயன்படுத்தும் அளவுகோல் மிகவும் கடுமையானது. இந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால், இன்றுள்ள நமக்குத் தெரிந்த எல்லா மதங்களும் தோற்றே போகும் என்கிறார் ‘மகாத்மா’. என் அளவுகோலின் தரம் உயர்வானது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அவை உயர்வானவையுõ தாழ்வானவையுõ என்பதல்ல பிரச்சனை. அவை சரியானவையுõ என்பதே.சமூக நீதியின் அடிப்படையிலான சமூக அளவுகோலைக் கொண்டே மக்களையும் அவர்களின் மதத்தையும் மதிப்பிட முடியும். மக்களின் நன்மைக்கு அவசியமானதே மதம் என்று கொள்ளப்பட்டால், வேறு அளவுகோலைப் பயன்படுத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இந்துக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் நான் பயன்படுத்தும் அளவுகோலே மிகச் சரியானது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். அதைவிட சரியான வேறு எந்த அளவுகோலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.நமக்குத் தெரிந்த எல்லா மதங்களும் என் அளவுகோலின் முன் தோற்றுப் போகலாம் என்ற கருத்து உண்மையாயிருக்கலாம். ஆனால், இந்தக் கருத்து, ‘மகாத்மாவை’ இந்துக்களின் தானைத் தலைவன் என்பதாகவும்…

Read More

 “டைம்ஸ் ஆப் இந்தியா” அம்பேட்கர் ஆற்றல் மிககக, அருந்திறன் வாய்க்கப்பெற்ற பல்துறை வல்லுனராக விளங்கினார். இந்நாட்டிற்கும் அவருடைய வகுப்பு மக்களுக்கும் சிறந்த முறையில் அவர் தொண்டாற்றினார். `இந்துஸ்தான் னடைம்ஸ்” அம்பேட்கர் இந்நாட்டிற்கு ஆற்றிய அருந்தொண்டுகள் அழியாத நினைவுச் சின்னங்களாக என்றும் வாழும். அவர் காலத்தில் வாழ்ந்தவர்களின் நெங்சங்களில் அவரிடம் இருந்த பல்துறை சான்ற பண்புகள் நிலைத்து நிற்கும். “ ஸ்டேட்ஸ் மேன்” அம்பேட்கர் கொண்டிருந்த ஆழ்ந்த கல்வியறிவும், சட்டம், பொருளியல், சமூகவியல், தொழிலாளர் நலன், அரசியல் போன்ற பல்வேறுபட்ட குறைகளில் அவர் பெற்றிருந்த அனுபவமும் அவருக்கு இன்னும் நல்லிணக்கமான சூழ்நிலை வாய்க்கப் பெற்றிருப்பின் எழுத்துலுகிற்கு மேலும் ஒப்பரிய பங்களிப்பை ஆகியிருப்பார். “ நியூயார்க் டைம்ஸ்” தீண்டப்படாத வகுப்பு மக்களின் விடுதலைக்காகப் போராடும் தலைவர் என்ற முறையில்தான் அம்பேட்கரை அனைவரும் அறிந்திருக்கிறார்கள்; மதிக்கிறார்கள், ஆனால் இந்தியாவிற்கான பெரும்பகுதிச் சட்டங்களின் உருவாக்கத்தில் அவர் மாபெரும் பங்களிப்பை அளித்திருக்கிறார் என்பது இன்னும்…

Read More

எனது அன்னை திருமதி,த மீனாம்பாள் சிவராஜ் அவர்கள், மறைந்து மூன்றாண்டுகள் ஆகிறது. எனது நினைவலைகளில் அம்மாவின் முகம் நிழலாடிக் கொண்டிருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, என் உடன் பிறந்தாருக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கே ஒரு தாயைப் போல் சேவை செய்ததால் தான் அவர்களை எல்லாருமே “அன்னை மீனாம்பாள்” என்று அன்போடு அழைக்கிறார்கள். என்னைப்பெற்ற அன்னை இந்த சமுதாயத்தாயாக உயர்ந்ததில் என் உள்ளமெல்லாம் மகிழ்கிறது. ஏனெனில் எனக்கு நினைவு தெரிந்த சின்ன வயசிலிருந்தே என் அம்மா சமூகப் பிச்சனை சம்பந்தமாகவே பேசிக் கொண்டிருப்பார்கள். அதற்கான விடிவு தேடியே பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். ஒரு சின்னச் சம்பவம் என் நினைவில் சுழல்கிறது. அதாவது வெள்ளையர் ஆட்சி காலத்தில், ஒரு ஷெட்யூல்டு சமூகத் தொழிலாளி கைகடிகாரம் கட்டியிருந்ததாலேயே, பெரியமேடு போலீஸ்காரர்க ளால் கைது செய்யப்பட்டுவிட்டார். ஏனெனில் அந்த காலத்தில் கடிகாரம் கட்டுபவர்கள் கனவான்களாகவும், பெரிய பணக்காரர் களாகவும், அரசாங்க அதிகாரிகளாகவும் தான் இருப்பார்கள். அதனால் ஒரு தாழ்த்தப்பட் தொழிலாளிக்கு…

Read More

‘கொல்லாதீர், திருடாதீர், பொய் கூறாதீர், மதுக்குடியினின்றும் விலகியிருப்பீர். சிற்றின்ப, ஒழுக்கக் கேட்டினின்றும் தவிர்ந்து கொள்வீர். இரவில் பொருந்தா உணவை ஏற்காதீர்‚” ‘தங்கள் பெற்றோரை நன்கு பேணுங்கள். நல்வழிப்பட்ட வணிகத்தை மேற்கொள்ளுங்கள். இவ்வாறாய் இல்லறத்தார் உயர்நிலை எய்துதற்குரியோராதல் வேண்டும்.” ‘உயர்ந்த எண் மார்க்கப் பாதையிலேயே மிக்குயர்ந்தது நல்நோக்க மாகும். உயர் வாழ்க்கையிலும் அறியாமையிலும் மற்ற அனைத் தினுக்கும் முன்னுரையாகவும் திறவுகோலாக வும் உள்ளது நற்சிந்தனையே ஆகும்.” ‘எனவே நீங்கள் நிற்கையிலும் நடக்கையிலும் இருக்கையிலும், படுக்கையிலும் ஆற்றல்கள் அனைத்தி னோடும் உங்களுக்குள் ஆழமாய் சிந்தியுங்கள்ƒ இதுவே நனிமிகச் சிறந்த நன்னிலை”. ‘பரந்து உயர்ந்த நன்னெறிகளுக்காக, உயர்ந்த உன்னத நன்முயற்சிகளுக்காக, தேர்ந்து தெளிந்த நல்லறிவிற்காக— இவைகளுக்காகவே நாம் போர்த்தொடுக் கிறோம்ƒ எனவேதான் நாம் போராளிகள் என்று அழைக்கப்படுகிறோம்.” ‘எங்கெல்லாம் நன்னெறி அபாயத்தில் உள்ளதோ அங்கெல்லாம் போராடுவதைத் தவிர்க்காதீர்கள் – வாயடைத்து நிற்காதீர்கள்.”

Read More

‘இல்லறத்தோரே‚ ஈண்டு, ஒரு கணவனும் மனைவியுமாகிய இருவரும் கொலைப் புரிவதினின்றும், திருடுதலினின்றும், மாசுகளினின்றும், பொய்ப்புகல்வதினின்றும், போதை தரும் மதுவருந்தலினின்றும், தவிர்ந்து தற்காத்தவராய், நல்லொழுக்கமும் நன்னடத்தையும் உடையவராய், பேராசையின் கறைகளினின்று விடுபட்ட மனத்தினராய், ஒழுக்க முடையோரை ஏசிப்பேசாதவராய் இவ்வாழ்வு வாழ்வர். உண்மையில், இல்லறத்தோரே‚ இவ்வாறாகவே நனிச்சிறந்த நல்மனிதர் ஒருவர் நனிச்சிறந்த நல்மங்கையுடன் வாழ்கிறார்.” ‘சகோதரர்களே‚ எவர்; தன் சொந்த நலத்திற்காகவும். பிறர் நலத்திற்காகவும் ஆன இரண்டிற்காகவும் உழைக் கிறாரோ அவரைப் பொறுத்தவரை — இந்நான்கு பேர்களிலும் அவரே சிறந்தவர்—- தலையானவர் — உயர்வெய்தியவர் — மேலானவர்; மிக்குயர்ந்தவர்;”. “பிறர் உண்மை பற்றியும், விடுதலை பற்றியும் தவறானக் கருத்துடையோ ராயிருப்பினும், நீ உண்மையை பற்றியும், விடுதலையை பற்றியும் சரியான கருத்துடனிருக்க வேண்டும்” ‘எழு‚ அசட்டையாயிராதே‚ போதனையின் நல்வழியில் நட‚ போதனை வழி நடப்பவன் உலகெங்கிலும் இன்புறுகிறான்.”

Read More

என்னுடைய 55வது பிறந்த நாளை முன்னிட்டு உங்களுடைய சிறப்பு மலருக்கு ஒரு செய்தி அனுப்புமாறு என்னை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவில் அரசியல் தலைவர் தீர்க்கதரிசியின் அந்தஸ்தில் வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது துரதிருஷ்டவசமான உண்மை யாகும். இந்தியாவுக்கு வெளியில் தமது தீர்க்கதரிசிகளின் பிறந்த நாளை மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் மட்டுமே தீர்க்கதரிசிகளின் பிறந்த நாட்கள் போன்றே அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களும் கொண்டாடப் படுகின்றன. அது இவ்வாறு இருப்பது பரிதாபத்திற்குரியதே. தனிப்பட்ட முறையில், என்னுடைய பிறந்த நாள் கொண்டாடப் படுவதை நான் விரும்பவில்லை. நான் ஓர் அதீத ஜனநாயகவாதியாக இருப்பதால், மனித வழிபாட்டை நான் விரும்புவதில்லை. இதை ஜனநாயகத்தின் ஒரு வக்கிரம் என்று கருதுகிறேன். ஒரு தலைவரைப் பாராட்டுவது, நேசிப்பது, மரியாதை செய்வது, மதிப்பது ஆகியவை அவற்றிற்கு அவர் தகுதியுடையவராயிருந்தால் அனுமதிக்கப் படக்கூடியவையே. தலைவருக்கும் அவரைப் பின்பற்று பவர் களுக்கும் இது ஏற்புடையதாகும். ஆனால் தலைவரை வழிபடுவது நிச்சயமாக அனுமதிக்கப்பட முடியாதது.…

Read More

கச்சநத்தம் கிராமத்தில் சாதி வெறியர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் பட்டியல் சாதி பள்ளர் சமூகத்தை சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.ஆறு பேர் கடும் காயத்துடன் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தனர்.இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் சிகிச்சை எடுத்துவந்த சந்திரசேகர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். லாரி ஓட்டுனராக பணியாற்றும் சந்திரசேகர் அவர்களுக்கு தவமணி என்கிற மனைவியும் 6 வயதில் மகளும் 5 வயதில் மகனும் இருக்கின்றனர்.

Read More

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கொலைகள் சாதிய கொலைகளின் முதன்மை மாவட்டமாக சிவகங்கை சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், பழையனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் கச்சநத்தம். இக்கிராமத்தில் வசித்து வருகிற இந்து பட்டியல் சாதி பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் (31) த.பெ.அறிவழகன் மற்றும் ஆறுமுகம் (65) த.பெ.கோனான் ஆகியோரை சுமார் 20 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் நேற்று 28.05.2018 அன்று இரவு சுமார் 9.00 மணியளவில் அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தனசேகரன், மலைச்சாமி, சுகுமார், சந்திரசேகர், தெய்வேந்திரன், மகேஸ்வரன் ஆகிய 6 பேருக்கு கடுமையான அரிவாள் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து பழையனூர் காவல்நிலையத்தில் குற்றஎண்.32/2018 பிரிவுகள் 147, 148, 294(b), 324, 307, 302 இ.த.ச. மற்றும் பசடடஈக அஸ்ரீற் மற்றும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவுகள் 3(1)(r),…

Read More

சில காரணங்களை மனதில் வைத்தே அம்பேத்கர் அவர்கள் fools rushing in where the angels fear to tread என்ற முதுமொழியை ஏன் பயன்படுத்தினார் என்று முகநூல் தோழர்களிடத்தில் கேள்வி எழுப்பினேன். வழக்கமாக அறிவுத் தளத்தில் விவாதிக்கத் தெம்பற்று வெறும் படங்களைப் போட்டு தன்னை முன்னிருத்திக் கொள்ளத் துடிக்கும் போக்கிலிருந்து நமது தோழர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கையில்தான்.. சரி மூதுரையினை அம்பேத்கர் ஏன் பயன்படுத்தினார் என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்பு அதன் மூலத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் அம்பேத்கரின் மேதமையைப் புரிந்துக்கொள்ளத் தொடங்குவோம். fools rushing in where the angels fear to tread சொற்றொடரை முதலில் பயன்படுத்தியவர் Alexonder Pope என்று தோழர் ரூபா நேட் அவர்கள் சொன்னது உண்மை. அலெக்சாண்டர் போப் தான் எழுதிய An Essay on Criticism என்ற நூலில்தான் முதன்முதலில் எழுதினார், அந்த நூல் 1711 மே மாதம் 15ம் நாள்…

Read More

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கேரளாவில்  30 தலித் அமைப்புகள் இன்று நடத்தி வரும் வேலைநிறுத்தத்தால்  இயல்பு வாழ்க்கை முடங்கியது.. ஏப்ரல் 2 ம் தேதி நாடுமுழுவதும் சில குறிப்பிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்துக்கு அழைப்பு விடுத்திருந்த போது கேரளாவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. மாநிலஅரசின் போக்குவரத்துக் கழகம், தனியார் பேருந்து இயக்குநர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் வழக்கம்போல இயங்கும் என்று முன்னதாகவே அறிவித்திருந்தன. ஆனால் மாநிலத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களை ஓடுவதை தடுத்து நிறுத்தும் வகையில் வழிமறித்தனர். கொச்சியில், போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்த தலைவர்களில் முக்கியமானவரான கீதானந்தன் இன்று கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் கைதுசெய்யப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்., கைது செய்யப்படுவதற்கு முன் கீதானந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கேரளா முழுவதும் பெருமளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வகையில் எங்கள் ஆர்ப்பாட்டம் வெற்றியடைந்துள்ளது. நாங்கள் கைது செய்யப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை.. ” என்றார். கண்ணூர்…

Read More