Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

புரட்சிப்பாடகர் தலித் சுப்பையா அவர்கள், சர்க்கரை நோயின் தீவிரத் தாக்குதலால் புதுவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இயற்கையடைந்துள்ளார் என்கிற துயர்மிக்கச் செய்தி வந்துள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், முனியாண்டிப்பட்டி எனும் சிற்றூர்ச் சேரியில் கருப்பன் என்னும் நாட்டு வைத்தியருக்கு மகனாகப் பிறந்தவர் பிச்சை. தமிழகத்தில் உள்ள சாதிய கொடுமைகள் நிறைந்த கிராமங்களைப் போன்ற கிராமம்தான் முனியாண்டிப்பட்டி. சாதி இந்துக்களே நிலவுடைமையாளர்கள். குறிப்பாக, கள்ளர்களின் ஆதிக்கம் உள்ள கிராமம். வேளாண் தொழிலாளியாகவும், சிறு வைத்தியங்களை செய்து வந்தவருமாகவும் இருந்த கருப்பனின் வீட்டிற்கு மாலை நேரத்தில் மக்கள் வருவதுண்டு. அப்படி வருபவர்கள் அமர்வதற்காக, இரண்டடி அகலமும் ஐந்தடி நீளமும் உடைய பாறை ஒன்றை வாசலில் வைத்திருந்தார் கருப்பன். தாங்கள் அந்த வழியாக வரும்போது அந்த பாறையில் சேரிக்காரர்கள் உட்கார்ந்திருப்பதா என்று கோவப்பட்டார்கள் கள்ளர்கள். வேறு வழியின்றி அந்த பாறையை அகற்றினார் கருப்பன். இப்படி பல்வேறு ஒடுக்குமுறைகளைக் கொண்டிருந்த அந்த கிராமத்தில்…

Read More

சாதியொழிப்பில் அம்பேத்கர் பயன்படுத்திய கருத்தியல் ஆயுதங்கள்பற்றி ஒரு பார்வை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மாபெரும் போராளியாக இருக்கும் அதே நேரத்தில், உலகெங்கும் மதிக்கப்படும் மகத்தான அறிஞராகவும் இருப்பது டாக்டர் அம்பேத்கரின் தனிச்சிறப்பு. சாதிக்கு எதிரான யுத்தத்தில் அம்பேத்கரின் கைகளில் இரண்டு ஆயுதங்கள் இருந்தன. ஒன்று, இடைவிடாத களச்செயல்பாடு. இன்னொன்று, கருத்தியல் ஆயுதம். இந்த இரண்டு ஆயுதங்களையும் தன் வாழ்நாள் முழுவதும் கூர்மையாகத் தீட்டிக்கொண்டும், லாவகமாகப் பயன்படுத்தியும் வந்திருக்கிறார் அவர். கருத்தியலைப் பொறுத்தவரை அவரது வலுவான ஆயுதங்களுள் ‘இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் தோற்றம் வளர்ச்சி’ என்ற ஆய்வுக் கட்டுரையும், ‘சாதியை அழித்தொழித்தல்’ நூலும் அடங்கும். ‘இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் தோற்றம் வளர்ச்சி என்கிற ஆய்வுக் கட்டுரை’ மே 9, 1916-ல் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடந்த மானுடவியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது. அம்பேத்கர் தனக்கு முன்னதான ஆய்வாளர் களின் கருத்துகளை ஏற்றும் எதிர்த்தும் இதில் தெளிவாக்குகிறார். சாதியும் அகமண வழக்கமும் ஒன்றே!…

Read More

அரசமைப்புச் சட்டத்தின் 15வது பிரிவில் புதிய இணைப்பு (திருத்தம்) தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த விரும்பத்தகாத சூழலுக்கு மூலகாரணம், நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள்தான். இந்தத் தீர்ப்பை வழங்கியது, சென்னை உயர்நீதிமன்றம். 1. சென்னை (எதிர்) திருமதி செண்பகம் துரைராஜன் 2. வெங்கட்ராமன் (எதிர்) சென்னை அரசு. இந்த இருவரின் வழக்குகளால், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற நிலை உருவாகியுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற கருத்தை மய்யமாகக் கொண்டு நீதி மன்றம் தன்னுடைய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் விளைவாக, சாதி ரீதியான அரசாணை (Communal G.O.) உருவானது. இந்த அரசாணை செல்லாது என்று சட்ட வல்லுனர்களும், நமது மேதகு நாடாளுமன்ற அங்கத்தினர்களும் கூக்குரலிடுகின்றனர். அரசியல் அமைப்புச் சட்டம் 16(4) பிரிவு, மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி அல்லது எழுந்துள்ள…

Read More

அமெரிக்காவின் கொலராடோ மற்றும் மிஷிகன் மாகாணங்கள் சமீபத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதியை டாக்டர் பிஆர் அம்பேத்கர் சமத்துவ தினமாக அறிவித்தன. அதற்கு சில நாட்களுக்கு முன்பு, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணமும் ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக அறிவித்தது. இந்திய அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கர், சாதி படிநிலையில் அடியில் இருந்த தலித்துகளின் மாபெரும் தலைவர் ஆவார். இவர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தார். இந்தியாவின் அரசியலமைப்பும், நீதிமன்றங்களும் நீண்ட காலமாக தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கும் சாதிகள் மற்றும் தலித்துகளை, வரலாற்று ரீதியாக பின்தங்கிய குழுக்களாக அங்கீகரித்து, ஒதுக்கீடுகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்களின் வடிவத்தில் பாதுகாப்புகளை வழங்கியுள்ளன. இப்போது தலித் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களும் மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில், இதேபோன்ற அங்கீகாரத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர். ஆர்வமும், விடா முயற்சியும் கொண்ட இந்திய புலம்பெயர்ந்தோர் “முன் மாதிரி சிறுபான்மையினராகத் திகழ” கடும் முயற்சிகளை…

Read More

கதிரவன் ஒளி விழும் உலகின் நிலமனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் முடிவு 1947ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு, தனது மாட்சிமையைக் காத்துக் கொள்ளவும் தனக்கென தனித்த அரசமைப்பு அடிப்படையிலான அரசை நிர்மாணித்துக் கொள்ளவும் கடுமையான நிர்பந்தத்தில் துணைக்கண்டம் அப்போது நின்றது. சுதந்திர இந்தியாவின் தேச நிர்மாணம் என்பது அவ்வளவு எளிதான காரியமா? எந்தவித முன்பயிற்சியுமற்ற தலைவர்கள் மாபெரும் இந்தியக் கூட்டரசை நிர்மாணிக்க பெரும் முயற்சிகளை எடுத்தார்கள் என்று நமது வரலாறு நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் அந்த வரலாற்றில் புரட்சியாளர் அம்பேத்கரின் பங்கு என்ன என்பதைப் பற்றி மிக லாவகமாக மறைத்திருக்கிறது. மறைத்தது ஆதிக்கச் சாதி புத்திதான். ஒருவரின் பங்களிப்பை நன்றியோடு நினைவுக்கூர்வது ஒரு நேர்மையுள்ள சமூகத்திற்கு அழகு. அந்த அழகு இந்தியச் சமூகத்திற்கு என்றைக்கும் வாய்த்ததில்லை. சேரிகளில் உழலும் தலித்துகளின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டு, எந்தவித உறுத்தலும் இன்றி சுரண்டிப் பிழைக்கும் சாதி…

Read More

பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 32   உள்ளடக்கம் பக்கம் எண்   இந்து சட்டத் தொகுப்பு மசோதா (கூறுவாரியான விவாதம்) 1-809   டொமினியன் அந்தஸ்து பற்றிய குறிப்புகள் 811-830

Read More

பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 24   உள்ளடக்கம் பக்கம் எண்   பொதுச் சட்ட நெறி 3   டொமினியன் அந்தஸ்து பற்றிய குறிப்புகள் 73   குறித்தவகை மாற்றிடுச் சட்டம் 95   பொறுப்புரிமைச் சட்டம் 141   இந்தியக் காலவரையறைச் சட்டம் 219   பிரிட்டிஷ் இந்தியாவில் குற்ற விசாரணை முறைத் தொகுப்புச் சட்டம் 245   சொத்துரிமை மாற்றச் சட்டம் 345   சான்றுச் சட்டம் 412

Read More

ஒருவனால் உலகு பாழ்படும் எனில் அவ் ஒருவனை ஒழித்ததல் உலகின் கடமை! ஒரு சமயத்தால் ஓரினத்தவரின் இருட்டெண்ணத்தால் என்றோ வகுத்த சாதி மதத்தால் தகாவிதித முறைகளால் மோதியழியும் இவவுலகெனில் அவற்றை மோதி மிதித்தல் அழித்தல் முதற்கூடன்! நிறத்திமிர் கொண்டு நிலத்தில் புகுந்தவர் நிறவெறி யாலே கொலைத் திருவிழாவினை நடத்தியோர் நாகரீக மிலாத ஆரியர், கடந்த காலக் கதைத் தொடர்;சசியை வேற்றுமை உணர்ச்சியை, வெற்றித் திமிரினைக் காட்ட நினைப்பது கயமைத் தனமே! சூழ்ச்சியால் மூடநம்பிக் கையை வீழ்ச்சிக் குரியதாய் வேடதாரிகள் காலம் காலமாய்க் காட்டிக் கொடுத்தே இருபதாம் நூற்றாண்டிலும் இனப்போருக்குரிய கருத்து நஞ்சினைக் கலப்பதும் விளைப்பதும் நாட்டை உலகை நலிவிப்ப தாகும். இரண்டா யிரமாண் டில்லா திருத்த திரண்ட நாகரிக திராவிடர்க் கிடையில் பொல்லாங்கனைத்தையும் புகுத்தி வெளியுள எல்லா நாட்டவரையும் இங்கே பாய்விரித்தழைத்த ஒரே ஒரு பரம்பரை பார்ப்பனப் பரம்பரை! ஆரியப் பதர்களே ஆரியர் என்ன தூய்மை யானவரா? பூரித்துவக்கும் இந்திய ஆரியர்…

Read More

இந்திய தகவல் ஏடு, அக்டோபர் 1, 1945, பக்கங்கள் 345-49) (“தாமோதர் ஆற்றுநீரைப் பயன்படுத்த வகுக்கப்பட்டுள்ள) இத்திட்டத்தினை இந்திய அரசு வரவேற்கிறது. ஆற்றையும், ஆற்றுவெள்ளத்தையும் கட்டுப்படுத்துவதுடன், நிலையான பாசனப் பரப்பை உருவாக்கி பஞ்சத்துக்கெதிரான காப்பீடு அமைத்து, அவசியத் தேவையான மண்ணாற்றல் உற்பத்திக்கு வழிவகுத்தும் அருமையானதோர் திட்டமாகக் காட்சியளிக்கிறது இத்திட்டம். தமது மாகாண மக்களுக்குக் கிடைக்கப் பெறும் நலன்களை நன்கு உணர்ந்தால், வங்காள, பீகார் அரசுகள் இத்திட்டத்தை உவகையுடன் வரவேற்கும் என்பது உறுதி.” (1945) ஆகஸ்டு 23 ஆம் நாள் கல்கத்தாவில் நடைபெற்ற வங்காள, பீகார் அரசுகளின் சார்பாளர்களது மாநாட்டில் உரையாற்றிய, இந்திய அரசின் தொழிலாளர் நலத்துரை உறுப்பினர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இவ்வாறு குறிப்பிட்டார். தாமோதர் பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம் குறித்த தொடக்கக் கருத்துருவை விவாதிப்பதற்காக நடைபெற்ற இரண்டு நாள் மாநாடு தொழிலாளர் நலத்துறை உறுப்பினரின் தலைமையில் நடைபெற்றது. டாக்டர் அம்பேத்கர் நிகழ்த்திய முழுமையான உரை வருமாறு: “தாமோதர் ஆற்று நீரைப் பயன்படுத்திக்…

Read More

“நாட்டின் நீர்வள ஆதாரங்கள் விஷயத்தில் தற்போது நிலவும் நிலைமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பிரதிகூலங்களையும் இந்திய அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது. இந்த வள ஆதாரங்களை அனைவரது நலன்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கொள்கையை, இந்த வளங்களை ஏனைய நாடுகள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறேன் என்னும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கையை உருவாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அது விரும்புகிறது.” தாமோதரப் பள்ளத்தாக்கை அபிவிருத்தி செய்வதற்கான வழிமுறைகளை ஆராயும் பொருட்டு ஜனவரி 3ஆம் தேதி கல்கத்தாவில் வங்காள மாகாண தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினரான மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மத்திய அரசாங்கத்தையும் மற்றும் வங்காள, பீகார் அரசாங்கங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கு கொண்டனர்.             டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரையின் முழுவிவரம் வருமாறு:             இவ்வாறு குறுகிய காலத்தில், எத்தனையோ சிரமங்களுக்கு இடையே இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு இணங்கியமைக்காக…

Read More