Author: ஏ.பி.வள்ளிநாயகம்

ஏ. பி. வள்ளிநாயகம் (1953 ஆகத்து 19 – 2007 மே 19)விளிம்புநிலை வரலாற்று வரைவாளர்; சமநீதி எழுத்தாளர்; இதழாளர்; அரசியல் ஆசிரியர்; சமூகச் சீர்திருத்தக்காரர். ஒடுக்கப்பட்டோர் விடுதலையும், பவுத்தமும், பெண்ணியமும், சமூக நீதி விழுமியங்களும் இவரது எழுத்தின் அடிநாதமாக அமைந்தது. தன்னலமற்ற, கொள்கை சமரசமற்ற, சுயமரியாதை வீரராகவும் சமூக மனிதராகவும் வாழ்ந்தவர். தமிழகம் எங்கும் சுற்றுப் பயணம் செய்து நாங்கள் இந்துக்கள் அல்லர்'என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை வெற்றிகரமாக நடத்தியவனார். கடந்த இருபது வருடங்களாக சமூக மாற்றத்திற்கான அவாவுடன் பவுத்தம், அம்பேத்காரியம், பெரியாரியம் ஆகிய கொள்கைகளைத் தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு, களப்பணியாற்றியதோடு, 25க்கும் மேலான நூல்களை தலித் இயக்கத்திற்கான கொள்கைப் படைக்கலன்களாக கொண்டு எழுதியிருக்கிறார். இவர் 2007-ல் காலமானார்.

தங்கம் கோலார் தங்கவயலில் தனது இருப்பை உணர்த்திய காலத்திலிருந்தே தொல் தமிழர்களும், அய்ரோப்பிய நிபுணர்களும் நீங்க முடியாத பிணைப்புகளோடு இருந்தனர். தொல் தமிழர்களின் உழைப்பு மூலதனம்தான் கோலார் தங்கவயலில் தங்கம் எடுக்க, ஒரே உந்து சக்தியாக இருந்தது. தங்க வயலின் விளைச்சல் குறித்து அவர்களுக்குதான் தப்ப முடியாத பெரிய பெரிய உத்தேசங்கள் இருந்தன. தங்கத்தைத் தேடுவதில், தேடிக் கண்டதில், தேவையற்ற சேர்க்கைகளைக் கழித்து தனித்ததொரு தங்கமாக வார்த்தெடுப்பதில், வேட்கையும் வைராக்கியம் நுணுக்கம் அவர்களிடமே குடி கொண்டிருந்தன. இதில் குறிப்பிட்டுச் சொல்லித் தீரவேண்டிய மக்கள், வட ஆர்க்காடு மாவட்டத்திலிருந்து புலம் பெயர்ந்து, தங்களின் மனித ஆற்றலுக்கு உட்பட்ட வரையில் பூமியின் மய்யத்தை நோக்கிக் குடைந்து, கோலார் தங்க வயலில் உலகத்திலேயே மிக ஆழமான தூரத்தில் இறங்கி, தங்கத்தை வெட்டியெடுத்து அதை வெற்றிகரமான தொழிலாக்கினர். தொல் தமிழர்களோடு பிணைந்து சுரங்கத் தொழில் நடத்திப் புகழடைந்தவர்கள், இங்கிலாந்து நாட்டவரான ‘ஜான் டெய்லர் அண்ட் சன்’ நிறுவனத்தினர்.…

Read More

பார்ப்பனியத்தின் வெற்றிக்குப் பிறகு, அக்கருத்தாடல்களே தமிழைச் சுற்றிச் சுற்றி வளைத்துப் போட்டன. அதனைக் கடந்த உலகளாவிய பரந்த பார்வைக்கும், சமத்துவ வெளிப்பாட்டிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மொழியின் தத்துவ அடிப்படையான, அபூர்வமானதும் மேலானதுமான பவுத்த சாராம்சங்கள், சமஸ்கிருத உள்வாங்கலால் திரிபுகளாகி துருத்திக் கொண்டு நின்றது. தற்குடிகளின் பவுத்த அனுபவம், மானுடத்தின் வலிதீர்க்கும் செயலாடல்களும் பார்ப்பனியம் கவ்விய தமிழுக்கு அந்நியமானது. தமிழின் முப்பரிமாணங்களான இயல், இசை, நாடகம், பார்ப்பனியச் சமூக அமைப்பின் இயக்கப் பரிசோதனைக்குள் சிக்கியது.பார்ப்பனியத்தின் ஆக்கிரமிப்புக்கு முந்தைய தமிழின் மொழி முதல் வாதங்களான அறவியல், அறிவியல் சிதைக்கப்பட்டன. வெகுமக்களுக்கும் மொழிக்குமான உறவு, பார்ப்பனியத்தினுள் கொண்டுவிடும் ஒருவழிப்பாதை ஆனது. அதனைக் கடந்தோ, மறுத்துவிட்டோ தமிழின் இயல்பான பாதையில் செல்ல முயன்றவர்கள் ‘சமூக விலக்கம்’ செய்யப்பட்ட தற்குடிகளாக இருந்தனர். தமிழியல் பார்ப்பனியமாக நிர்மாணிக்கப்பட்டபோது, தமிழின் மூல வார்ப்புகள் மூளியாகி விட்டன. வேதாந்தத்தில் பின்னப்பட்ட வந்தேறிகளின், வந்தேறி அடிவருடிகளின் எதிர்மறைச் சரக்காகி, சாதிப்படிநிலையில் தங்களை உயர்த்திக் கொண்டோர்…

Read More

மானுட உலகின் தீரமிக்கதும் முற்றிலும் இயல்பான மனித வேட்கை வாய்ந்ததுமான பவுத்தத்தைப் புதுப்பித்து, கோலார் தங்கவயல் வரலாற்றுப் பெருமை அடைந்தது. இந்நிலையில், ஒரு சில சமூக ஆளுமைகளுக்கு பவுத்த அறிதலில் உள்ள ஓர் இடைவெளி – தன் ரசனையை அளவாகக் கொண்டு மதிப்பிடும் இந்து ஆன்மீகத்திலேயே முடிந்தது. நம் மாபெரும் பவுத்த மரபுடன் இணைவதற்கு, முழுத்தகுதி கொண்ட இவர்கள், தங்களின் ஆன்மீகத் தினவிற்கு கரைகட்டும் முயற்சியில், இவர்களுக்கேயுரிய திசை மறந்து, தெறித்து வைணவர்கள் ஆனார்கள். தங்களுக்குள் உறைந்து கிடக்க வேண்டிய தொல்குடி மரபின் எல்லைவரை தொட வேண்டிய சாக்கியத் தொன்மத்தின் அபூர்வ மனக் கிளர்ச்சி, இவர்களுக்கு ஏற்படவில்லை. மானுட வாழ்வின் பொலிவை அள்ளத்தக்க தங்கள் மூலாம்பர பவுத்தத்தை மறந்து, தங்கள் சாராம்சமான எரிபொருள் தீர்ந்த, அணைந்த மனிதர்களாய் ஆனதில், இவர்களின் ஆன்மீகத் தொடு வானத்தின் எல்லை – பவுத்தத்தை வீழ்த்திய வைணவமானது. தற்குடிகளின் சாக்கிய இனக்குழு வரலாற்றையும், சாக்கியம் – பவுத்தம்…

Read More