Author: Deva Sundaradass

போபால், ஏப். 2 – தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு தலித் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உடனடியாக மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்; தலித்துக்கள் மற்றும் பழங்குடியினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆவேசமிக்க போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.அதனொரு பகுதியாக, திங்கட் கிழமையன்று நாடு தழுவிய ‘பந்த்’ போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த தலித் அமைப்பினர், சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களையும் நடத்தினர். இப்போராட்டங்களால் உத்தரப்பிர தேசம், பீகார், ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்கள் ஸ்தம்பித்த நிலையில், தலித் மக்களின் எழுச்சியை சகித்துக் கொள்ள முடியாத, மத்தியப் பிரதேச மாநில பாஜக அரசு, தனதுகாவல்துறை மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தி தலித்துக்கள் 7 பேரை படுகொலை செய்துள்ளது. மேலும், பல இடங்களில் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களில் ஒன்றான பஜ்ரங்-தள்…

Read More