Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
#ஊர்-#சேரி-#காலனி – மாற்றத்திற்கானத் தருணம். #இதுஒருகட்டுரைஅல்ல பல நூற்றாண்டுகளாக நிகழம் ஓர் அநீதியினைச் சகித்துக் கொள்வதற்கு ஒரு பண்பாட்டுப் பின்புலம் இருக்கும் என்பதை மறுக்க முடியுமா? அல்லது ஒரு நாடே தனது மனசாட்சியினைக் கொன்றுவிட்டு அதை கடந்துக் செல்கிறது என்று எடுத்துக் கொள்ள முடியமா..?? சாதியின் அடிப்படைகளைப் பற்றி பேசுவதற்கு ஏராளமான பேர் இருக்கிறார்கள். அதை எதிர்ப்பதின் மூலம் ஒரு முற்போக்கு அடையாளம் கிடைப்பதால் அதற்கு எப்போதும் ஒருவகை மவுசு இருக்கிறது. இது சமூகவியல் ஆய்வுக்கு மட்டுமின்றி அரசின் செயல்பாடுகளுக்கும் பொருந்தும். சாதியின் மூலத்தினை ஆய்ந்த டாக்டர் அம்பேத்கர் தொடக்கத்தில் ஒரு பேரதிர்ச்ச்சியைக் கண்டார். ஆமாம், அவர் காலத்தில் சாதியை ஆய்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் இருந்தார்கள். ஆயினும் அவர்கள் எல்லோரும் கவனிக்க மறந்த ஒன்று.. இந்தியாவில் கிராமங்கள் ஏன் இரண்டாக இருக்க்கின்றன? நமது சொல்லில் சொல்வதென்றால் ஊர்-சேரி என ஏன் இரண்டாக பிரிந்து இருக்கின்றன?. இந்தப் பிரிவினை…
காதல் திருமணம் செய்து வைத்ததற்காக சில நாட்களுக்கு முன்பாக திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பாக சென்னையிலேயே ஒரு ஆணவக் கொலை நடைபெற்றது. இந்த வாரம் மதுரையில் ஒரு ஆணவக் கொலை நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக் காரணம் என்ன? விருதுநகர் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த அழகேந்திரன் என்ற இளைஞர் தான் வசிக்கும் பகுதியில் பட்டியலினத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் 24ஆம் தேதி மதுரைக்குத் தன் உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு அழகேந்திரன் சென்றிருக்கிறார். பிறகு தலை துண்டிக்கப்பட்ட அவரது சடலம் மதுரை வேளான்பூர் கண்மாய் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. உறவினரின் வீட்டிற்கு வந்த அவரை, பெண்ணின் சகோதரரான பிரபாகரன் அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டதாக அந்த இளைஞரின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இப்போது பிரபாகரன் கைது…
மகிழ்வான வாழ்வுக்கான தேடல் ஏ.பி. ராஜசேகரன் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் தொகுக்கப்பட்ட ஆங்கில எழுத்துகளும் உரைகளும் 12 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன. பல கட்டுரைகள் இன்னமும் மராத்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட வில்லை. அசலான அறிஞர் அவர். மேல்நாட்டு ஆய்வு முறையில் பயின்ற அவர் தமது கருத்துகளை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் எடுத்துரைத்தார். மறுக்கவே முடியாத ஆதாரங்கள் அவை. இந்தியாவில் தோன்றிய மூல ஆக்கங்களுடன் மேலை நாட்டு அறிஞர்களின் புதிய தத்துவங்களையும் சிந்தனைகளையும் அவர் முழுமையாக கற்றுத்தேர்ந்தார். இந்திய சமூகத்திற்கு மேலை நாட்டு அறிஞர்களின் புதிய தத்துவங்களையும் சிந்தனைகளையும் பயன்படுத்தும்போது அவற்றை இந்திய சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மாற்றம் செய்தார். டாக்டர் அம்பேத்கர் ஜனநாயகத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்தார் எனலாம். சமத்துவம், தனியுரிமை, சகோதரத்துவம் ஆகியவையே ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளாக அவர் பார்த்தார். இவை மூன்றும் ப்ரெஞ்சு புரட்சியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதாக தோன்றினாலும் அவை பௌத்த சங்கங்களிருந்தும் பௌத்த சமூகத்திடமிருந்து பெறப்பட்டவை என…
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் அனைத்திலும் பாபா சாகேப் அம்பேத்கரின் உருவப் படத்தை கட்டாயம் நிறுவ வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் பாபாசாகேப் அம்பேத்கரின் உருவ படத்தை நிறுவ வேண்டும் என அங்குள்ள பட்டியலின அமைப்பினர் நீண்ட காலமாக கோரி வந்தனர். இதேபோல அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் அன்றாடம் வாசிக்க வேண்டும் வலியுறுத்தினர். கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் அன்றாடம் அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். இதை வரவேற்ற பட்டியலின அமைப்பினர், ‘அரசமைப்பு சட்டத்தை எழுதிய பாபாசாகேப் அம்பேத்கரின் படத்தை நிறுவ உத்தரவிடாதது ஏன்?’ என கேள்வி எழுப்பினர். நேற்று முன்தினம், முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வரா,…
தமிழகத்தில் புத்தமதத்தின் தொடக்கநாள்களில் புத்தரின் முழு உருவச்சிலை வழிபாடு இல்லை. பாதங்களும் பீடிகையும் திறந்த வெளியில் வைத்து வழிபடப்பட்டன. காவிரிப் பூம்பட்டினத்தில் புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்த சுண்ணாம்புக்கல்லில் செய்யப்பட்ட புத்தரின் பாதங்கள் சான்று. சங்க காலம் கி.மு. 3 முதல் கி.பி. 2 வரை தமிழுக்கும் சங்க இலக்கியத் திற்கும் பவுத்த சமயமும் அதன் தத்துவமும் புதிதில்லை. ஒரு வளமையான தத்துவ விசாரம் தமிழிலும் பாலியிலும் காஞ்சியில் நிகழ்ந்திருக்கிறது.தமிழகத்தில் பவுத்தம் குறித்து முதலில் பேசியது ‘மணிமேகலை’ காப்பியம். ” பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை”யில் மணிமேகலை புத்த பீடிகையின் அமைப்பைப் பேசுகிறது. “பவத்திறம் அறுக” எனப் பாவை நோற்றக் காதையில் மணிமேகலை திருவடியே சரண் எனச் சங்கத்தில் சரணாகதி அடைவதை சாத்தனார் பேசுகிறார். பெளத்த மரபின் இப்பாதவழிபாட்டினைப் பின்னாளில் வைணவ மரபும் ஏற்றுக் கொண்டது. ”அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று சைவமும் திருவடி பெருமை பேசத் தொடங்கியது. “பிறவிப்…
பௌத்தமும் சமணமும் தமிழ்நாட்டின் பிரதான மதங்களாக இருந்த ஒரு காலத்தில் புத்தர் கருடன் மீது சவாரி செய்யும் தொன்மம் சிற்பங்களாக இன்றைக்கும் கிடைக்கின்றன. விஷ்ணு கருடன் மீது சவாரி செய்யும் இந்து மதத் தொன்மம் பௌத்தத்திலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியப்படுத்துகிறது. இந்திரன்
ஷரன் ஷர்மா இயக்கத்தில் ராஜ்குமார் ராவுடன் இணைந்து ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி’ திரைப்படத்தில் நடித்திருக்கும் பிரபல இந்தி நடிகையான ஜான்வி கபூர், அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருக்கிறர். அந்த பேட்டியில் வரலாற்றின் எந்த காலக்கட்டத்துக்கு செல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “தேசத்தந்தை மகாத்மா காந்திக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவின் தலைவராக இருந்த அம்பேத்கருக்கும் இடையில் சாதி குறித்த அவர்களின் பார்வையையும், கருத்துகளையும், விவாதங்களையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். சாதி குறித்த கண்ணோட்டத்தில் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையேயான விவாதங்களையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அது காண்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அவர்களின் சித்தாந்தங்களுக்கு இடையேயான உரையாடலையும், அவர்களின் திட்டங்கள் எவ்வாறு உருவாகின, அது எப்படி மக்களைப் பாதித்தது ஆகிய அந்த உரையாடல், ஒரு அழுத்தமான சொற்பொழிவாக இருக்கும். சாதிப் பிரச்னைகளில் அம்பேத்கர் – காந்தியின் கருத்துகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். சாதி அடிப்படையில் அம்பேத்கரின் பார்வை ஆரம்பத்திலிருந்தே…
புத்தரிடம் போத்தபாதா கேட்டார். 1 உலகம் என்றைக்கும் நிலைத்திருக்கக் கூடியதா? 2 ஆன்மாவும் உடலும் ஒன்றுதானா? 3 உண்மையை அடைந்த ஒருவன் மரணத்திற்குப் பிறகு மீண்டும் வாழ்கிறானா? இந்த எல்லா கேள்விகளுக்கும் புத்தர் ஒரே பதிலை அளித்தார். ” நான் கருத்து எதுவும் சொல்லாத ஒன்றில் இதுவும் ஒன்று. ஏனென்றால் இந்த கேள்விகள் பயன் எதுவும் விளைவிக்க கூடியவை இல்லை. ” இந்திரன்
ஏப்ரல் மாதம் ‘தலித் வரலாற்று மாதமாக’ கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தலித்துகள் தங்களது அடையாளத்தை கொண்டாடவும், தலித் வரலாற்றில் நடந்த போராட்டங்கள் மற்றும் நினைவுகளின் சின்னமாகவும் இந்த மாதம் உள்ளது. கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் அல்லது அமெரிக்கா என எங்கு வசித்தாலும், உலகம் முழுவதும் வாழும் தலித்துகளின் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த உதாரணமாக இந்த மாதம் கருதப்படுகிறது. பாபா சாகேப் ஏப்ரல் மாதத்தில் பிறந்தார் என்பதால் மட்டுமல்ல, சாதியத்தை எதிர்த்துப் போராடிய பல மாவீரர்களும் இந்த மாதத்தில் தான் பிறந்தார்கள். இவர்களில் பாபு ஜெகஜீவன் ராம் மற்றும் மகாத்மா ஜோதிபா பூலே ஆகியோரும் அடங்குவர். ஏப்ரல் 4ஆம் தேதி, இந்தியாவின் சுதந்திரத்திற்காக துணிச்சலாகப் போராடிய போர் வீரன் ஜல்காரி பாய் உயிர் நீத்த தினம். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதி அமைப்பின் ஆழமான பிரிவினைகளில் விழுந்து தொலைந்து போகிறார்கள். சமூகத்தின் முக்கிய நாட்கள் மற்றும் கொண்டாட்டங்களில் இருந்து அவர்கள் என்றென்றும் மறக்கப்பட்டு,…
CHENNAI: The United Nations celebrated the 133rd birth anniversary of Dr B R Ambedkar with global leaders for two days, on April 18 and April 23, at its headquarters in New York. According to a press release, leaders and representatives from 195 countries participated in the events, organised by the Foundation For Human Horizon. It was the first time in UN history that two full days were dedicated to Dr Ambedkar. India’s ambassador was absent at the event due to the ongoing elections in India. Prime Minister Narendra Modi congratulated the event organiser Deelip Mhaske. Discussions were held as part…