Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு ஐந்து நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோதி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை புதுதில்லியில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட்டார். இதுமட்டுமின்றி அம்பேத்கர் ஜெயந்தி அன்று நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமிக்கும் பிரதமர் செல்ல திட்டமிடப்பட்டது. பின்னர் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையையும், அம்பேத்கர் ஜெயந்தியன்று பிரதமர் நரேந்திர மோதியின் உரையையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது முக்கியமாகிறது. ஏனென்றால் பிரதமருக்கு 400 எம்பிகளின் ஆதரவு கிடைத்தால் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை மாற்றிவிடுவார் என்ற எதிர்க்கட்சிகளின் மிகப்பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இது முக்கியமானது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை பாரதிய ஜனதா கட்சியும், நரேந்திர மோதியின் அரசும் பல முறை நிராகரித்துள்ளது. “அரசியலமைப்புதான் எங்களுக்கு கீதை, பைபிள், குரான் எல்லாமே. அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது.…
டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் – ஏப்ரல் 14 – அரசு விழாவாக மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களால் ஒவ்வோர் ஆண்டும் தன்னெழுச்சியாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. தீண்டாமைக்கு எதிரான போர்க்குணம், அயல்நாடு சென்று கடுமையாக உழைத்துப் பெற்ற பட்டங்கள், வியக்கவைக்கும் மேதைமை, உலக வட்டமேசை மாநாடுகளில் சிறப்புமிக்கப் பங்களிப்பு, நாடாளுமன்ற அரசியல் செயல்பாடுகள், உலகின் நெடிய அரசமைப்பைத் தலைமையேற்று உருவாக்குவதில் சீரிய பணி, பெளத்த மறுமலர்ச்சிக்கு நல்கிய வரலாற்றுப் பங்களிப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக அம்பேத்கர் போற்றப்படுகிறார். ஆனால், அவர் தமது பேராற்றலையும் நாற்பது ஆண்டுகாலப் பொது வாழ்வையும் எத்தகைய லட்சிய நோக்கத்துக்காக அர்ப்பணித்தார் என்பது குறித்த விவாதங்கள் குறைவு. அவரைப் போற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே தவிர, அவருடைய லட்சிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு யாரும் தயாராக இல்லை. தடை நீக்கும் புரட்சி: மகாராஷ்டிரத்தில் உள்ள மஹாட் குளத்தில் சாதி இந்துக்களுக்கும் இந்துக்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கும் நீரருந்தும் உரிமை இருந்தது; ஆனால் இந்துக்கள்…
சமூகத்தில் நிலவும் சாதி, தீண்டாமைக் கொடுமைகளையும் பாகுபாடுகளையும் அரசியல் பங்கேற்பின் வழி நேர் செய்துவிடலாம் என்று அரசியல் செயல்பாட்டாளர்களும் மக்களும் நம்புகின்றனர். அதனால்தான் சமூக, பண்பாட்டு மாற்றத்துக்கான செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை. சமூக, பண்பாட்டுத் தளங்களில் தலித்மக்கள் புறக்கணிக்கப்படுவதைப் போலவேஅரசியல் தளத்தில் தலித் கட்சிகளும் புறக்கணிக்கப்படுகின்றன. தலித் தலைமையிலான ஓர் அரசியல் கட்சியை எல்லோருக்கும் பொதுவானதாக இச்சமூகம் பார்ப்பதில்லை. ஆனால், தலித் அல்லாதவர்களால் தொடங்கப்படும் கட்சியை எல்லோருக்குமான ஒரு கட்சியாகவே ஏற்கிறது. அம்பேத்கர் 1942இல் தொடங்கிய ‘அனைத்திந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு’ பொதுச் சமூகத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்த இயலாமல் போனதற்கு இவையெல்லாம் காரணங்கள். அதே நேரத்தில், அம்பேத்கர் 1951இல் இக்கூட்டமைப்பு சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கை, நாட்டின் வளர்ச்சியிலும் பெரும்பான்மை மக்களின் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டு – இன்றளவும் பின்பற்றத்தக்க – தொலைநோக்குத் திட்டங்களை முன்வைத்திருந்தது. அம்பேத்கரின் லட்சியங்கள்: பிற்படுத்தப்பட்ட, தீண்டத்தகாத, பழங்குடி மக்களை உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்த்துவதே…
உலகின் பல நாடுகளில் வாக்குறுதிகளை அளித்து தேர்தலை எதிர்கொள்வது அரசியல் கட்சிகளின் வழக்கமான நடைமுறை. சில நாடுகளில் தேர்தல் அறிக்கைகளை முன்கூட்டியே தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆணையம் அதை ஆய்வுக்கு உள்படுத்தி பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கிய பிறகே, தமது வாக்குறுதிகளைச் சொல்லி வாக்குச் சேகரிப்பில் கட்சிகள் ஈடுபட முடியும். அத்தகைய நடைமுறை இந்தியாவில் இல்லை. தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தாமே அறிக்கைகளைத் தயாரித்து வெளியிடுகின்றன. ஆனால், தேர்தலுக்கு முன்போ பின்போ அனைத்துக் கட்சிகளின் வாக்குறுதிகளுக்கும் சமூகத்தின் மேம்பாட்டுக்குமான தொடர்புகள் குறித்துப் போதுமான உரையாடல் நிகழ்வதில்லை. வருங்காலத்தில் அது நிகழுமானால், கட்சிகளுக்கும் சமூகத்துக்குமான வரையறுக்கப்பட்ட மேம்பாட்டு நகர்வுக்கான பாதைகளைக் கண்டடைய முடியும். உதாரணமாக, 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களையொட்டி வெளியான அறிக்கைகளில் இடம்பெற்ற பட்டியல் சாதியினருக்கான வாக்குறுதிகளை மையப்படுத்தி யோசிக்கலாம். கடந்த காலத் தேர்தல் அறிக்கைகள்: கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களையொட்டி வெளியான அனைத்துக் கட்சிகளின்…
The works of Vikrant Bhise are connected by the hope for justice and equality that they express There are traditions that are held close by people who draw on their lineage to give themselves meaning in the world. But traditions are not necessarily linear; at times they are built on fictions that represent a grandiose retelling of the past and of the lives of ancestors. Some traditions are built upon people’s fiction; some combine imagination and relative truth. Historian Eric Hobsbawm famously commented on the tenor of what constitutes tradition and how customs are created: he rejected the argument about…
பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கிற மூன்று கருத்தியல்களில் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கருத்தியல்களுக்கு ஏற்ற நிறமாக நீலத்தை அவர் கருதியிருக்கிறார். நீல நிற வானத்தின் கீழ் எல்லா மக்களும் சமம் என்பது ஒரு குறியீடு. அதுமட்டுமின்றி நிறங்களின் குணாதிசயங்களை பார்த்தால் நீல நிறத்திற்கு அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், எல்லையற்ற காதல் என்றெல்லாம் பொருள் சொல்லப்படுகிறது. எனவே அவர் நீல நிறத்தை தெரிவு செய்தார் என்று கருதுகிறேன். அவர் தன்னுடைய வாழ்நாளில் பல அமைப்புகளைத் தொடங்கினார். அவற்றுள் சில: 1.பகிஷ்கரித் ஹித்காரினி சபா (1924) 2.தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நிறுவனம் (அ) சிவில் உரிமை இயக்கம் (1925) 3.சுதந்திரத் தொழிலாளர் கட்சி (1936) 4.அனைத்து இந்திய பட்டியலினத்தோர் கூட்டமைப்பு (1942) 4.சமதா சைனிக் தளம் (1944) 5.மக்கள் கல்வி கழகம் (1945) 6.அனைத்திந்திய பட்டியல் வகுப்பினர் மாணவர் கூட்டமைப்பு (1946) 7.தீண்டப்படாதோர் சமூக மையம்…
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்தியாவின் மாபெரும்அறிவுஜீவி என்பதற்கான 10 காரணங்களை தோழர் Indran Rajendran. 1. இந்தியாவிலேயே 50000 நூல்கள் கொண்ட தனிமனித நூலகம் இவரது ராஜ்கிர் எனும் வீட்டில் வைத்திருந்தார். 2. 64 பாடங்களில் முதுகலைப் பட்டமும், இந்தி, பாலி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மராத்தி, பாரசீகம், குஜராத்தி மொழிகள் பயின்றவர். 3. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் 8 ஆண்டு படிப்பை 2 ஆண்டு 3 மாதங்களில் முடித்தவர்.இதற்காக இவர் தினந்தோறும் 21 மணி நேரமும் படித்தவர். 4. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 23 , வரலாற்றில் 11 , சமூகவியலில் 6 , தத்துவத்தில் 5 , மானிடவியலில் 4, அரசியலில் 3, பாடங்களில் தேரியவர். 5. உலகிலேயே “Doctor of All Science” பட்டத்தை லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பெற்ற ஒரே மனிதர். 6 இந்தியாவிலேயே முதல் முதலாக வெளிநாட்டில் பொருளாதாரத்தில்…
Caste is so well ingrained in society that many Dalit students say they go to schools several kilometres away from their villages to escape discrimination. TIRUNELVELI: Vivid shades of yellow, red, green and blue paint dot electric poles and public walls in some of Tamil Nadu’s villages. These colours are not meant to add to the vibrancy of the villages but to distinguish and assert the pride of various castes. Caste pride has become blatant in some districts of Tamil Nadu — the state that has a history of progressive movements inspired by the legendary E V R Periyar, who…
நம் நாட்டின் எதிர்காலம் பற்றிய சிந்தனையிலேயே நான் மூழ்கியிருக்கிறேன். 26 சனவரி 1950இல் இந்தியா ஒரு சுதந்திர நாடாக இருக்கும். ஆனால், இந்த நாட்டின் சுதந்திரம் எந்த நிலையில் இருக்கும்? தன்னுடைய சுதந்திரத்தை அது தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது மீண்டும் இழக்க நேரிடுமா? என்னுடைய சிந்தனையில் எழுந்துள்ள முதல் கேள்வி இது. இந்தியா, இதற்கு முன்பு சுதந்திர நாடாக இருந்ததில்லை என்பதல்ல. ஆனால், ஏற்கனவே இருந்த சுதந்திரத்தை அது இழந்திருக்கிறது. இரண்டாவது முறையும் அது தனது சுதந்திரத்தை இழக்க நேரிடுமா? இந்த எண்ணம்தான், இந்த நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் அதிகமாக கவலை கொள்ள வைக்கிறது. இதைவிட என்னைப் பெரிதும் குழப்பும் செய்தி: இந்தியா இதற்கு முன்பு தனது சுதந்திரத்தை இழந்தது என்பது மட்டுமல்ல; நம் சொந்த மக்களின் துரோகத்தினால்தான் அது சுதந்திரத்தை இழக்க நேர்ந்தது. சிந்து மாகாணத்தை முகமதுபின் காசிம் படையெடுத்து வந்தபோது, தாகர் அரசனின் ராணுவத் தளபதிகள்,…
விழுப்புரம்: பட்டியலின சமுதாய மாணவர்களிடம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சாதி ரீதியாக பாகுபாடு காட்டுவதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் முதலமைச்சருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். எனது கடைசி மகன் ஜான் திலீப் டி சில்வா கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி படித்து வருகிறார். அந்த தேர்வில் நான்கு பாடங்களில் தோல்வியுற்றுள்ளார். எனவே நான் உடனடி தேர்வுக்கான கட்டணத்தை ரூ.305/-யை பள்ளி தலைமை ஆசிரியரிடம் செலுத்தினேன். சில நாட்கள் சென்ற பின் தேர்வு நுழைவுச்சீட்டு அனைவருக்கும் வந்துள்ளது எனது மகனுக்கு வரவில்லை. இதனை அறிந்த எனது மகன் வகுப்பு ஆசிரியரிடம் கூறியுள்ளார். வகுப்பு ஆசிரியர் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகுமாறு கூறியுள்ளார். தலைமை ஆசிரியரை அணுகி கேட்டபோது அவர் அலட்சியமாக அடுத்த ஆண்டு எழுதிக்கொள்ளலாம் என பதிலளித்துள்ளார் . மேலும் இந்த ஆண்டு பணம் கட்டி அடுத்த ஆண்டு எழுத சொன்னால்…