பேரறிஞர் பாபாசாஹேப் அம்பேத்கர் பற்றி வீ.வே. முருகேச பாகவதரின் பாடல்.
பேரறிஞர் அம்பேத்கர் என்னும் தலைப்பின் கீழ் ஐந்து விருத்தங்களை முருகேச பாகவதர் எழுதியுள்ளார். அவற்றில் ஒன்று வருமாறு:
“ஒடுக்குற்ற எண்கோடி மக்கள் உள்ளத்து
ஒளிர்கின்ற திருவிளக்கு! பேதத்தாலே
தடுக்கப்பட்டு உழல்கின்ற வழக்கம் தன்னை
தகர்த்தெறியும் அணுகுண்டு! தாழ் நிலத்தில்
எடுத்துற்ற பெரும் புதையல்! அறிவின் ஊற்றாம்!
இயற்கை என்னை ஈன்றெடுத்து நம்பால் இன்று
கொடுத்துற்ற குடியரசின் தலைமைச் சிற்பி!
கொள்கையிலே மாறாத வைரநெஞ்சன்!”
(பக்:105: தமிழமுதம், மங்கள நிலைய வெளியீடு,1960)