புத்தர் உலக புத்தராம்
புனிதம் நிறைந்த புத்தராம்
உலகம் போற்றும் புத்தராம்
உயர்ந்த அன்பின் புத்தராம்
அன்பினாலே உலகமெங்கும்
அருள் விதைத்த புத்தராம்
பண்பினாலே யாவருக்கும்
பான்மை சொன்ன புத்தராம். ….(புத்)
அன்பு அறிவு சமத்துவமே
அறங்கள் என்ற புத்தராம்
துன்பம் நீங்க யாவருக்கும் தோணியாகும் புத்தராம். …….(புத்)
கட்டுடைத்த புத்தராம்
கருணை வடிவு புத்தராம்
எட்டு திக்கும் போற்றவே எண்மார்க்கமான புத்தராம்….. (புத்)
பஞ்ச சீல புத்தராம்
பார தத்தின் புத்தராம்
நெஞ்சில் கருணை ஓங்கவே
நியாயம் சொன்ன புத்தராம்…(புத்)
ஆதி வேந்தன் அருமை ஞானி
அகிலம் புகழ் புத்தராம்
நீதி வேந்தன் நேர்மைஞானி
போதி வேந்தன் புத்தராம். (புத்)
பேரா.ஜெயபாலன்