“இயற்கையைக் கடந்த தத்துவத்தைப் புறக்கணிப்பதில் புத்தருக்கு மூன்று நோக்கங்கள் இருந்தன. அவருடைய முதல் நோக்கம், மனிதனைப் பகுத்தறிவுப் பாதையில் வழிநடத்துவது. அவருடைய இரண்டாவது நோக்கம், உண்மையைத் தேடிச்செல்ல மனிதனை சுதந்திரமானவனாக்குவது. அவரது மூன்றாவது நோக்கம், மூட நம்பிக்கைகளின் பலமான மூலத்தை – எதையும் தீர விசாரித்தறியும் உணர்வைக் கொல்லும் தன்மையை – தகர்த்தெறிவது. பவுத்தம் என்பது பகுத்தறிவின்றி வேறல்ல.”
– டாக்டர் அம்பேத்கர், “புத்தரும் அவர் தம்மமும்’, பக்கம் : 250