பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து அறிஞர் அண்ணாவின் மூன்று எழுத்தோவியங்கள்.
தொகுப்பு முனைவர் க.ஜெயபாலன்.
அறிஞர் அண்ணா தமிழக அரசியலில் ஒரு புயல் போல் தோன்றி தென்றல் போல் மொழி நடையால் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்து விரைவில் காலம் கடந்து சென்று விட்டாலும் அவரது பேச்சும் எழுத்தும் இன்றைக்கும் என்றைக்கும் நின்று நிலவும் வகையில் சமத்துவ விடுதலைத் தேடலோடுஆற்றொழுக்கான நடையைக்கொண்டவை என்றால் மிகை இல்லை. அவர் பல்வேறு உரைகளிலும் இதழ்களிலும் கடிதங்களிலும் டாக்டர் அம்பேத்கர் பற்றிய குறிப்புகளை வழங்கி உள்ளார். அவை யாவும் தொகுக்கப்பட வேண்டும். இங்கே அவர் எழுதிய மூன்று பதிவுகளை காண்போம்.
1. டாக்டர் அம்பேத்கரின் பௌத்த மதமாற்றம் பாராட்டுக்குரியது.
திராவிட நாடு 21/ 10/ 1956
அம்பேத்கரின் மதமாற்றம் பாராட்டுக்குரியது!
– அறிஞர் அண்ணா
இந்து மதத்தைவிட்டு உளம் வெந்து கூட்டம் கூட்டமாக வெளியேறுகிற மக்களை, தனது அரவணைப்புக்குள் அன்புடன் தழுவிக் கொள்ளும் பணியினை, இப்போது புத்தநெறி ஆற்றி இருக்கிறது.
ஒரே இடத்தில், ஒரே நாளில், ஆடவரும் பெண்டிரும் சிறார்களுமாகச் சேர்ந்து மூன்று இலட்சம் மக்கள், ஒரு மதத்தைவிட்டு வேறொரு மதம் புகுந்த சம்பவம், அதிலும் இந்து மதத்தைவிட்டுப் புத்த மதம் தழுவிய செய்தி, இதுவரை வரலாற்றில் இடம்பெற்றிருக்கவில்லை. இம்மத மாற்றச் செய்தியைச் சித்தரித்துள்ள ஒரு நிருபர், உலகில் வேறு எங்கும் நடைபெறாத இந்தச் சம்பவம் நடைபெற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று இலட்சம் மக்கள் கூடியிருந்த காட்சியையும், அந்த இடத்தின் பரப்பையும், அதே நிருபர், நகருக்கு வெளியே 10 இலட்சம் சதுர அடி விஸ்தீரணமுள்ள மைதானம் என்றும், மைதானம் முழுதும் ஒரே ஜனசமுத்திரமாகக் காணப்பட்டது என்றும் வரைந்துள்ளார்.
இந்து மதத்தைவிட்டு வெளியேறும் திருப்பணி இன்று நேற்று ஏற்பட்டதன்று. இவ்வெளியேற்றம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
இருந்தாலும், மூன்று இலட்சம் மக்கள் ஒரே நாளில் ஒரே இடத்தில் கூடி, இந்து மதத்திலிருந்து நீங்கிப் புத்த மதம் புகுந்திருப்பது, இந்து மதப் பாதுகாப்பாளர்களுக்குப் பேரதிர்ச்சி தரும் சம்பவமாகும்.
இதற்குமுன் மதம் மாறி இருப்பவர்கள், பொன்னாசைக்கும் பொருளாசைக்கும் பலியாகியும், அந்தஸ்துக்கும் அதிகாரத்துக்கும் அடிமையாகியும், மதம் மாறி இருப்பவர்களாகும் எனக் கூறுவது மிகைப்படக் கூறியதாகாது.
ஆனால், மூன்று இலட்சம் மக்களுடன் இன்று புத்த நெறியில் புகுந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் மதமாற்றச் செய்தி, அப்பட்டியலில் சேர்த்து எண்ணத்தக்கதன்று.
டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தின் உள்ளடக்கத்தை நன்கு கற்றிருப்பவர்; அவர் கற்காத இந்துமதத் தொடர்புடைய வடமொழி வேதாகம நூல்கள் இல்லை என்றே சொல்லலாம்.
இந்திய அரசியல் சட்டங்களை உருவாக்கக்-கூடிய அளவிற்கு சட்ட நூல் பயிற்சி பெற்றிருப்பவர்.
அத்தகைய ஒரு பேராசிரியர் இந்து மதத்தை உதறித் தள்ளிவிட்டு, மூன்று இலட்சம் மக்களுடன் புத்த நெறியை மேற்கொண்டார் என்பது சாதாரணமானவர்கள் இந்து மதத்தை வெறுத்து ஒதுக்கிவிட்ட சம்பவம்போல் கருதக்கூடியது அல்ல.
புத்தநெறி தழுவிய டாக்டர் அம்பேத்கர்,
பிரம்மா, விஷ்ணு, மகேஷ், கபாலி, கணபதி மற்றும் இந்துமத தெய்வங்களைக் கடவுள்களாகக் கருதமாட்டேன். கடவுள் அவதாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. எந்த விதச் சடங்கிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. புத்தரை விஷ்ணு அவதாரமாக நம்பவில்லை, சடங்குகள் செய்விக்கப் பார்ப்பனர்களை அழைக்க மாட்டேன். எல்லா மனிதர்களையும் சமமாகக் கருதுவேன். பஞ்சசீலக் கொள்கையை அனுஷ்டிப்பேன்.
என உறுதிமொழி எடுத்துக் கொண்டு இருக்கிறார்.
அந்த உறுதிமொழியே இந்து மதத்தின் உட்பொருளையும், புத்த நெறியின் கோட்பாடுகளையும் தெளிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது.
இம்மதமாற்றச் சேதி, இந்துமதக் காப்பாளர்களிடம் என்றும் போல் சிந்தனையைத் தூண்டத் தவறிவிட்டது. வழக்கமாக அவர்களுக்கு ஏற்படுகிற எரிச்சல், இச்சேதி கேட்டு ஏற்பட்டு இருக்கிறது.
காங்கிரஸ் ஆளவந்தார்களும், இம்மத-மாற்றத்தை வழக்கம்போல் நையாண்டி செய்வதிலும், இம்மத மாற்றத்தின் நடுநாயகமாக இருக்கும் டாக்டரைத் தூற்றுவதிலும் மனச் சாந்தி தேடிக்கொள்ள முன்வந்திருக்கின்றனர்.
இப்பெரும் வரலாற்றுச் சம்பவத்தை, மிகமிகச் சாதாரண சம்பவம்போல் நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் பாணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை, சிறிய சம்பவமெனக் காட்ட அவர்கள் எவ்வளவுதான் முயன்றபோதிலும், அவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும்.
அவர்கள் இயல்பு அது; அதை மாற்ற எவரால் முடியும்? சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொள்ள ஒப்புமா?
இவர்கள் வாயுரையைக் கேட்டா உலக மக்கள், இம்மதமாற்றத்திற்குத் தரப்பட வேண்டிய மதிப்பின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளப் போகிறார்கள்? ஒருக்காலுமில்லை.
டாக்டர் அம்பேத்கரின் மத மாற்றச் சம்பவம், உலக மக்களின் சிந்தனையைத் தூண்டத் தவறிவிடாது.
மூன்று இலட்சம் மக்களை உடனழைத்துக்-கொண்டு டாக்டர் அம்பேத்கர் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறத் துணிந்தார் என்ற கேள்வியை, பல்வேறு நாடுகளிலுமுள்ள அறிஞர் பெருமக்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்-கொள்ளத்தான் போகின்றனர்.
சட்டப்படி தீண்டாமை இந்தியத் துணைக் கண்டத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற விதியைக் கொண்டுள்ள இந்திய அரசியல் சட்டம் அதற்குரிய விடையைத் தராது.
இந்தியத் துணைக் கண்டத்தில் மதமாற்றத்திற்காக வெளிநாட்டினர் ஒன்பது கோடி ரூபாயைச் செலவிடுகின்றனர் என நியோகியின் நியாயத்தை எடுத்துக்காட்டி காஞ்சி காமகோடி பீடத்தார் இந்து மதத்தை அழிக்க அந்நிய நாட்டினர் இவ்வளவு பெருந்-தொகையைச் செலவிட்டுள்ளனரே! எனப் பேசும் பேச்சு, மேற்குறிப்பிட்ட வினாவிற்குத் தக்க விடையாக அமைய முடியாது.
உலக அமைதிக்குப் பாடுபடுவதாகக் கூறிவரும் நேருவின் நாட்டில், ஒரே நாளில் மூன்று இலட்சம் பேர் இந்து மதத்தைத் துறக்கும் அளவிற்கு, இன்னமும் தீண்டாமை-யின் கொடுமை இருந்து வருகிறது என்றுதான், உலக மக்கள் முடிவு கட்டுவர். அந்தக் கருத்தை மாற்ற நேருவின் பஞ்சசீலப் பேச்சும், இந்திய அரசியல் சட்ட சமரசப் பூச்சும், தேசிய ஏடுகளின் தூற்றல் கணைகளும், பயனற்றவை-களாகும்.
இந்து மதத்தைவிட்டு மக்கள் ஏன் கூட்டம் கூட்டமாக இப்பொழுதும் வெளியேறி வருகிறார்கள் என்பதற்கான மூல காரணத்தைத் தேடிக் கண்டறிந்து, அதைக் களைந்தெறிய வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் ஆளவந்தார்-களுக்குக் குறைவாக இருக்கலாம்; அப்பணி தங்கள் பொறுப்பு அல்ல என்றுகூட அவர்கள் கருதலாம்.
ஆனால், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியாரின் நிலை அதுவாக இருக்க முடியாது.
தனது மதிப்புக்கும், வருவாய்க்கும் இந்து மதத்தை மட்டுமே நம்பி உயிர்வாழ்ந்து உயர்நிலையில் வீற்றிருப்பவராவர், சங்கராச்-சாரியார்.
எப்பொழுதும்போல், சரிந்து வரும் தனது மதிப்பையும், குறைந்துவரும் தனது வருவாயையும், இருக்கும் நிலையளவாவது பாதுகாத்துக் கொள்ளும் போக்குடையதாகத்-தான், சங்கராச்சாரியாரின் இப்பொழுதைய செய்தியும் அமைந்திருக்கின்றதேயல்லாது, இந்து மதத்தை மற்றவர்கள் விரும்பி ஏற்கும் வகையில் இல்லையானாலும், இருக்கிறவர்களாவது தாங்கள் இறக்கும்வரை அதிலேயே ஒட்டிக்-கொண்டு இருக்கும் வகையில், அதைப் புனிதமுடையதாக ஆக்கும் விருப்புக் கொண்டிருப்-பதாகத் தெரியவில்லை.
9 கோடி ரூபாய் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு இந்து மதத்திலிருப்-போரைத் தங்கள் மதத்துக்கு மாற்றுவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்று ஓலமிடும் சங்கராச்சாரியார், இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களை முன்னுக்குக் கொண்டுவர, கோடிக் கணக்கு இருக்கட்டும் – எத்தனை இலட்சம் எத்தனை ஆயிரம் செலவிட்டிருக்கிறார்? புள்ளி விபரம் காட்ட முடியுமா என்று கேட்கிறோம்.
அரேபியாவிலிருந்து இஸ்லாம் மார்க்கம்-தான் இறக்குமதியாயிற்றே தவிர, இன்றுள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் அங்கிருந்து இங்கு வந்து குடியேறினவர்களன்று. என்றோ ஒரு நாள் இந்து மதத்திலிருந்தவர்கள்தான் இன்று முஸ்லிம்களாக இருப்பவர்கள் அனைவரும்.
அன்றொரு காலத்தில் நூற்றுக்கணக்கில் இருந்து வந்த முஸ்லிம்கள், இன்று ஒன்பதுகோடி என்ற கணக்கில் பெருகி-விட்டனர் என்பதற்குரிய நியாயமான காரணத்தை இந்துமதத்தில்தான் கண்டு-பிடித்தாக வேண்டும்.
இதுபோலவே கிருத்துவ மதம் இங்கு ஏன் _ எப்படிப் பரவ முடிந்தது என்பதனை அம்பேத்கரின் மதமாற்றத்தை நையாண்டி செய்யும் போக்கினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மூன்று இலட்சம் மக்களுடன் டாக்டர் அம்பேத்கர் மட்டுமல்ல, வேறு பல இலட்சக்கணக்கானவர்களும் வெளியேறிச் செல்லும் நிலை இருக்கத்தான் செய்கிறது.
தீண்டாமை, பாராமை, நெருங்காமை, பிறப்பினால் உயர்வு தாழ்வு போன்ற மிக மிகக் கொடிய தொற்றுநோய்க் கிருமிகள் குடியேறியுள்ள மாளிகை, தங்கத்தால் ஆக்கப்பட்ட அரண்மனையாக இருந்தாலும், அங்கு டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் நீண்ட நாள் வாழ ஒப்பமாட்டார்கள்; வெளியேறித்தான் தீருவர்.
டாக்டர் அம்பேத்கரின் இந்த மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்.
– திராவிட நாடு 21.10.1956
2. டாக்டர் அம்பேத்கர்’8 12 1956 நம் நாடு இதழ் தலையங்கம்.
“டாக்டர் அம்பேத்கர் மறைவு, தாழ்த்தப்பட்டும் ஒதுக்கப்பட்டும் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களை மட்டுமே கொடுத்துன்பத்தில் ஆழ்த்தக் கூடிய சோகச் செய்தியாக இருக்கவில்லை.
பிறப்பில் உயர்வு, தாழ்வு கற்பிக்கும் ஆணவப் போக்கை எதிர்த்துவரும் அனைவருக்கும் நெஞ்சைப் புண்படுத்தும் செய்தியாகும் அவர் மறைவு.
பிறப்பினால் தாழ்ந்தவன் எனக் கூறப்படுவதனால் இழவேது, இன்னல்தான் ஏது என வாதிடும் சாதித் திமிர் கொண்டோர் இன்றும் உளர். அப்பெரும் குணவான்களால், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சேவையில் மறைந்து கிடக்கும் உண்மையை உணர்ந்து கொள்வது இயலாததாகும்.
சாதிப் பாகுபாடு உள்ளவரை தீண்டாதார் எனப்படுவோர் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பது மறைந்த அண்ணலாரின் உள்ளக் கிடக்கையாகும். அது மிகைப்படுத்திக் கூறப்படுகிறது எனக் கோபப்பட்டோர் பல்லோர். அக்கருத்தை எதிர்த்துப் போரிட்டவர் பலர்.
ஆனால், அவருடைய உள்ளக் கிடக்கையின் உண்மை இன்று தீண்டாதார் எனப்படுவோரின் துன்பம் துடைக்க எடுத்துக் கொள்ளப்படும் நடவடிக்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மெய்ப்பிக்கப்பட்டு வருவதை நாம் அனைவரும் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
தம் மாணவப் பருவம் முதற் கொண்டே, தாம் பிறந்த குடியின் தலைமீது தொன்று தொட்டுச் சுமத்தப்பட்டுள்ள தீமையை வேருடன் கல்லியெறிவதில் கருத்துச் செலுத்தலானார்.
தமது புரட்சிப் பணிக்குத் தம்மக்களைத் திரட்டுவதில் கணிசமான வெற்றியும் பெற்றார். தமது போக்கில் அவர் முழு வெற்றி பெறத்தவறிவிட்டார் எனக் கருதிக் கொண்டிருக்கும் அவரது எதிர்ப்பாளர்கள்கூட, தீண்டாமை குறித்துத் தாங்கள் கொண்டிருந்த கருத்து, அவருடைய தீவிர உழைப்பால் எந்த அளவு மாறி வந்திருக்கிறது என்ற உண்மையை ஒப்ப மறுப்பது கிடையாது.
தொடக்க முதற்கொண்டே காங்கிரஸ் கட்சியுடன், அம்பேத்கர் ஒவ்வொரு துறையிலும் பிணங்கியே வந்திருக்கிறார். அப்படி இருந்தாலும் இந்தியத் துணைக் கண்டம் சுதந்திரம் பெற்ற பிறகு, அரசியல் சட்டத்தை ஆக்குவதில் அவருடைய ஒத்துழைப்பைக் காங்கிரசுத் தலைமை கோரியபொழுது, அவர் தயக்கம் ஏதும் காட்டாது தமது ஒத்துழைப்பை அளித்தார்.
அதன் விளைவுதான் இந்திய அரசியல் சட்டம். அவர் நேரு பண்டிதரின் முதல் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்து உருவாக்கிய இந்து தொகுப்பு மசோதா, காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்குள்ளாகவே பெரும் எதிர்ப்பைக் கிளப்புவதற்குக் காரணமாக அமைந்தது.
இருந்தாலும், அம்மசோதா சிற்சில உருமாற்றங்களுடன், பல துண்டுகளாக்கப்பட்டு இன்று சட்டமாக்கப்பட்டு வருகிறது.
அரசியல் சட்டத்தை உருவாக்கிய முழுப் புகழுக்கும் உரியவர் அவர்தான் என்றாலும், ‘அதைத் தீயிட்டுக் கொளுத்துவேன்’ என்று முதல் முதலாகக் கூறியவரும் அவர்தான் என்பதை மறப்பதற்கில்லை.
அவர் பொருள், நூல், சட்டம், சமூக இயல் ஆகிய அருங்கலைகளைக் கற்றுத் தெளிந்தவர். விவாதத் திறமை மிக்கு உடையவர். சிறந்த நூலாசிரியர்.
அவர் எழுதிய நூல்களில், ‘பாகிஸ்தான் சிந்தனைகள்’ என்ற நூலும், ‘காந்தியாரும் காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் சாதித்துள்ளது என்ன?’ என்ற நூலும், ‘சூத்திரர்கள் யார்?’ என்ற நூலும் என்றென்றும் டாக்டரின் பெரும் புலமையையும் எழுத்துத் திறமையையும் எடுத்துக் காட்டிக் கொண்டிருப்பவையாகும்.
அவர் மிகுதியும் சிறந்த நூற்களைப் படிப்பதில் விருப்பமுடையவர். அதன் பலனாக, சொந்தத்தில் ஒரு நூல் நிலையத்தையே ஏற்படுத்திக் கொண்டார்.
இரண்டு தினங்களுக்கு முன், இரண்டு லட்சம் பழங்குடி மக்களுடன் நாகபுரியில் புத்த நெறி தழுவியதை, இதற்குள் எவரும் மறந்திருக்க முடியாது. அதே நேரத்தில் அனைத்திந்திய ரீதியில் ஒரு அரசியல் கட்சி பற்றி அறிவித்திருந்ததும் மறக்கத்தக்கதன்று.
தாம் அறிவித்திருந்த கட்சிக்கு, ‘உரிமை – சமத்துவம் – சகோதரத்துவம்’ என்ற மூன்று இலட்சியங்களை அடிப்படைகளாகக் குறிப்பிட்டிருந்தார். அம்மூன்று இலட்சியங்களையும் தமது கட்சியின் குறிக்கோள்களாகக் கொண்டது சிந்திக்கத்தக்கதாகும்.
டாக்டர் அம்பேத்கரின் மறைவு குறிப்பிட்ட ஒரு சாராருக்கு நஷ்டத்தைத் தந்திருக்கிறது எனக் கூறுவதைவிட மனித அறநெறிக்கே ஈடுசெய்ய முடியாத நஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது எனக் கூறுவதே பொருந்தக் கூடியதாகும்.
அவர் பிரிவால் வருந்தித் கிடக்கும் அனைவருடனும் நாமும் பங்கு கொள்ளுகிறோம்.”
– நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ள க.திருநாவுக்கரசின் ‘திமுக வரலாறு’ நூலிலிருந்து)
3. நமது அஞ்சலி-திராவிட நாடு 16/ 12 /1956
அம்பேத்கர் அவர்கள் இருந்த இடமும், தூரமும் மிக அதிகம். எனினும், இங்கு பற்ால இடங்களில், ‘அம்பேத்கர் மன்றம் என்றும், ‘அம்பேதகர் படிப்பகம்’ எனவும், ‘அமபேர் பட்சிறப்பு !’ என்றும் அவரது பெயரைச் சொல்விச் சொல்லி உலகை கொள்வதண்டு காம். எல்லோ பிறந்து, எப்படியோ படித்துப் பட்டம் பெற்று, எவ்வனவோ பதவிகளையும் பாராளும் பொறுப்பினையும் ஏற்றிருந்த போதுகூட அவருக்குத் தான் பிறந்த குடிமீது நீங்காப்பற்று கொண்டு கேடுகெட்ட நிலையினின்றும் மீண்டும் புது உரு பெறவேண்டு மெனும் ஆசையும் கொண்டவராக அரும பெரும் பணிகளைச் செய்தார், என்பதுதான், இந்துமதக் கொடுமைகளின் நிலைக்களளாக விளங்கும் இந்தப் பரந்த பூடாகத்தில், எவ்களம் திரு இடம், அயலார்தம் கொள்கைக்கு ஆட்பட்டு அழிந்ததோ அதுபோலவே இந்த உபகண்டத்தின் ஒவ்வொரு பகுதியி மிருந்த ஆதிமக்கள் ஆரியக் கொள்கைகளால் அடிப்பட்டு, மிதிப்பட்டு, அடிமைகளாய்க் கருதப் பட்டு, அமுக்கப்பட்டனர் ! அப்படிப்பட்டோருக்காக, வாதாடி ஓரளவு வெற்றியைப் பெற்றவர். அம்பேத்கராகும்.
வாயிருந்தும் ஊமையாய், கண்ணிருந்தும் குருடராய், காலிருந்தும் கொண்டிகளாய் சமூ கத்தில் கருதப்பட்டு வருகிற பழங்குடி மக்கள் இந்து சமூகத்தில் படும்பாட்டினைக் கண்டு பீவர்லி நிகோலஸ் போன்ற வெள்ளை எழுத்தாளர்கள் மனம் வெதும்பி எழுதினர். ஆண்ட வென்னையலும் ‘அகியாயம் இது’ என்று உணர்த்தப்பட்டபோது. அதனைத் துடைக்கத் தன்னாலான முயற்சிகளைச் செய்ய முயன்றான். அப்போதெல்லாம், உயர்சாதிக்காரர்கள் எழுப்பிய உறுமல்களை எதிர்த்து நிற்க அம்பேத்கர் போன்றார் இல்லாதிருந்தால், இன்று கிடைத்திருக்கும் பல உரிமைகள் பறிக்கப்பட்டு போயிருக்கும் !/
பழங்குடி மக்களின் கேடுற்ற நிலைகண்டு,அப்போதைய காங்கிரசின் தலைவர்களில் சிலருக்கு, அனலும் புனலும் வழிந்கதுண்டு ஆனால், அந்த அக்கிரமத்தைக் கண்டித்தால், எங்கே தேசிய இயக்கத்துக்குத் திரள வேண்டிய சக்தி சிதறுண்டு போய்விடுமோ எனும் கலக்கத்தில் அவர்கள பூசியும் மெழுகியும் வந்த காலம அது. 1918-ல் பம்பாயில் பரோடா மன்னர் தலைமையில் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் மாநாடு கூடியபோது, காங்கிரஸ் கேசரி திலகர் கர்ச்சித்தாராம். “சடவுளாக இருந்தாலும் அவர் தீண்டாமையை அனுமதித்தாரானால், அவரைக் கடவுள் என்று கான் கூறமாட்டேன். எப்படியோ. முற்காலத்தில் சில பிராமணர் களால் இந்தப் பழக்கம் புகுத்தப்பட்டு விட்டது. தீண்டாமை ஒரு கொடிய நோய்: அது ஒழிக்கப் படவேண்டும்,” என்று இப்படி கர்ச்சனை எழுப்பிய அவரிடம் மாகாட்டு முடிவில் “அகில இந்திய தீண்டாமை மறுப்பு அறிக்கை” என்று ஒன்று தயாரித்து அவரது கையெழுத்தையும் கேட்டனர். மாநாட்டினர் மறுத்துவிட்டாராம் திலகா ! “என் வாழ்வின் முக்கிய இலட்சியம் தீண்டாமையை அகற்றுவதே” என்று வாழ்வெல்லாம் கூறிய காந்தியடிகளே, தன்னுடைய இலடசியத்தைச் சாதிக்க, இந்நாட்டு பழங்குடி மக்களுக்கு, “ஹரிஜனர்,” என்னொரு புதுப்பெயர் கொடுக்கவேண்டி யிருந்தது அதன்முலம் பழமை விரும்பிகளின் கண்களுக்குத் திரைபோட நேர்ந்தது. என்றால் அப்போது இருந்த அச்சமும் திகிலும் சாமான்யமானதென்று கூறமுடியாது ! அம்பேத்கர் போன்றவர்கள் இல்லாதிருந்தால், தமது குடிக்கு நியாயம் தேட கடுமையான வாதங்களையும், காரசாரமான தாக்குதல்களையும் மேற்கொள்ளாமலிருந்திருந்தால், பழங்குடி மக்கள் எங்கு போயிருப்பார்களோ.
93 சமயம் அம்பேத்கர் கோரியதுபோல டாது, கூடாது. அவர்கள் எனது அங்கம். அந்த அங்கத்தை, இத்த முறையால் பிரிப்பதா? தாழ்த்தப்பட்டவர்களுக்கு எனத் தனித ஓப்பேன் ! உண்ணாவிரதம் மேற்கொள்வேன்!” என்று எதிர்த்தபோது, துளியும் பணியாது உறுதியோடு இருந்தவர், அம்பேத்கர், இந்த உறுதியினையே பாராளும் சபையில் அம்பேத்கர் புலருடைய மனம் புண்படும் விதத்தில் பல சமயங்களில் நடந்து கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கடகு அனுதாபம் தெரிவித்தபோதுகூட கேருபண்டிதர், குறிப்பாகத் கூறினார் “அவர். அந்ததாயுண்மையிறுக்கப்படம் ஒரு சபையிளரும், என்று வர்ணிக்கும் போக்ககும் பரினை இந்துமதம் என்று மிரும், வகுப்புவாதி என் அம்பேத்கரின் பணிகு வொயம் பெரில்ெ பேசிய இ ஆல்லா இன்று ஏற்கபணியாற்றிய னெவரும், ஒரே குரலிஸ்டு அம்பெதிளரும் ஏனைய பிறகும் மக்களுக்குப் பணியாற்றிய ஒப்பற்ற தலைவர் என்பதை வாயாக கூறிடக சேடகிறோம். இத்தனககுந்தததைக் மானம், அம்பேத்கர் அவர்கள், எப்பதவி வகித்த போதினும், தன் னுடைய சமூகத்தை மறந்துவிடாமல், அதற்கு நீதிபெறப் போராடுவதில், சிறிதும் பிட்டுள் கோடாமலிருந்ததுதான் !
பெரிய தலைவரானாலும் உலகமே போற்றும் உன்னத நிலையிலிருந்தாலும் எனக்கென்ன எனது சமூகத்துக்கேள்ள- அதைப்பற்றி முதலில் பேசு, என்று ஒரே பிடிவாதமாக இருந்த காரணத்தால்தான், அவரையே மாற்றார் எனத் தெரிந்தும், இந்திய அரசியலமைப்பைத் தயாரிக்கும் பெரும் பொறுப்பில் அமர்த்தினார் நேரு பண்டிதர் எங்கே இவரும் ஜோதி’யில் உலந்து, இதுகாறும் பழங்குடி மக்கள் அனுபவித்த சலுகைகளையும் தததம் செய்துவிடுவாரோ என்று பலர் அச்சப்பட்டனர். முத்தியவைகளை விட்டுவிடாமல் பெற்றுக்கொவண் பழங்குடி மக்களுக்கிருந்த ‘தனித்தொகுதி சோடும் இக்காட்டுப் பழங்குடி மக்களுக்கு நீதிதேடிடும் சீயமாக இவர் இருந்ததால்தான் அதே கொள்கைக்காகப் போராடிய நீதிக கட்சியின் வழிவந்த நமக்கும், அம்பேத்கர் எனும் திருநாமமே திக்திக்கிறது. இப்படி உறுதியோடும் ஒரே மூச்
அத்தகைய ஒரு வீரர் இழிவு துடைக்கத் தன் வாழ்காள் முழுவதும் போராடிய ஒரு உத்தமர் அரசியல் துறையில் சலுகைகள் பல அடைந்திடினும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம் என்று கூறிக்கொண்டிருக்கும் வரையில் நமக்கு உயர்நிலை கிடைக்காது இந்து மதம், வாணாச் சீரமிகளின் கூடாரம் அங்கே ஒருபோதும் சமதர்மம் தழைக்காது எனக்கண்டு, அன்புமதமாம் பந்தத்தோடு சேர்ந்தாவது புதுவாழ்வு காண்போம் என்று முயன்ற ஒரு நல்லவர், நம்மை யெல்லாம் விட்டுப் போய்விட்டாரே என்று நினைக்கிறபோது நம்மிலோருவரை இழந்து விட்டோமே என்கிற ஏக்கமும் துக்கமும் எழுகிறது.
மராட்டியத்தில் தாழ்ந்த குலமாகக் கருதப்படும் ‘மஹரா’கப் பிறந்தாலும், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவில் வாழும் எட்டுக்கோடி பழங்குடி மக்களுக்கும் நல்வாழ்வு பெறப் பாடுப்பட்டார். பழங்குடி மக்களுக்காகவே பணியாற்றும் இயக்கத்தைச் சார்ந்தோர் நாம், அவரைப்போல இங்கும் அக்கிரமங்களை ஒழிக்கப் பாடுபட்டுக்கொண்டு வருவோர் நாம், என்பதால் அவருடைய மறைவு. நமக்கு அளவிலாத துயரைத் தருகிறது, அம்பேத்கர் அவர் களுக்கு தென்னகத்தில் இருப்பதைப்போல உருவான இயக்கம் அமையவில்லை ஆனால். இங்கே, நரம் இருக்கிறோம் – இரட்டைமலை சீனிவாசன் போன்ற மறைந்த பழங்குடி மக்களின் தலைவர்களின் வழித்தோன்றல்கள் ஏராளம இருக்கிறார்கள், அவர்களனைவரும், தென்னகத்தில், அளபுமார்க்கத்தை நிலைநாட்டவும், அதன் அடிப்படையில் புதியதொரு அரசை நிறுவவுமான, திலட்சியத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களால் நிச்சயம் வீழ்ந்தோரை, வாழச்செய்ய இயலும் அண்ணல் அம்பேத்கர் போன்றோர் நமது வாழ்நாளில் காணவிரும்பிய புத்துலகை நிச்சயம் உருவாக்கியே தீருவார்கள் 1.
கன்றி
திராவிட நாடு
(16-12-66)
முடிவுரை:
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் வளர்ச்சி பெற்ற காலத்தில் காங்கிரஸ் இயக்கம், அகில இந்திய அளவில் ஷெட்யூல்டு காஸ்ட் பெடரேஷன், கம்யூனிச இயக்கங்கள் மிகப்பெரிய அளவில் இருந்தன என்றால் மிகையில்லை. எனவே இத்தகைய இயக்கங்களின் பல்வேறு கருத்துக்களை, சிந்தனைகளை நன்கு உள்வாங்கிக் கொண்டு திராவிட இயக்கம் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ச்சி பெற்றது என்பதை ஆய்வாளர்கள் அறிஞர் அண்ணாவின் பேச்சையும் எழுத்தையும் கவனிக்கும்பொழுது நன்கு புரிந்து கொள்ள முடியும். வளருகின்ற ஒரு இயக்கம் மாற்று இயக்கங்களின் நற்கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதன் மூலமாக அதன் மனிதர்களை வென்றெடுக்க முடியும் என்பதை அறிஞர் அண்ணா அவர்கள் நன்கு உணர்ந்தவர். அவ்வகையில் அண்ணல் அம்பேத்கரின் பேச்சையும் எழுத்தையும் பல்வேறு செயல்பாடுகளையும் நன்கு உள்வாங்கிக் கொண்டு வெளிப்பட்டதற்கான இன்னும் பல கூறுகள் அண்ணாவின் வாழ்வில் நாம் காண முடியும். பண்டிதா அயோத்திதாசர் திவான் பகதூர் ரெட்டைமலை சீனிவாசனார் அறிஞர் அண்ணா அரசியல் இயக்கத்தில் வந்த காலத்தில் விளங்கிய ராகுதூர் எம் சி ராஜா தந்தை சிவராஜ் உள்ளிட்ட பல்வேறு தமிழகத்தின் முன்னோடிகளையும் நன்கு புரிந்தவர். சீனிவாச சாஸ்திரி ராஜாஜி சத்தியமூர்த்தி என்று காங்கிரஸ் ஆளுமை சார்ந்து இருந்த அகில இந்திய அளவில் நன்கு அறியப்பட்ட பல பேர் ஆளுமைகளும் தமிழகத்தில் இருந்தனர் என்பதும் அந்த பின்புலங்களையும் நன்கு அறிஞர் அண்ணா உள்வாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இது பற்றி விரிவாக இன்னொரு பதிவில் எழுதலாம்.

