ஓதியுயர் மெய்ஞா னங்கள்
உலகினிலே புத்தர் தந்தார்!
போதிமரம் அமர்ந்த காலை
புத்தரெனும் அறிவன் கண்ட
ஆதிவேதம் தமிழ்தா னென்றே
அயோத்திதாசர் எடுத்து ரைத்தார்!
பாதியிலே மாற்றி வைத்த
பார்ப்பனியம் வேசம் என்றார்!
அறிவினிலே உயர்ந்து நின்றார்!
ஆக்கங்கள் போதம் செய்தார்!
செறிவுறுமச் சேதி எல்லாம்
செந்தமிழில் உள்ள தென்றார்!
திறமெல்லாம் ‘தமிழன்’* தொண்டால்
திக்கெட்டும் பரவச் செய்தார்!
அறமொன்றே உலகோர் வாழ்வாம்;
அயோத்திதாசர் அறமாய் நின்றார்!
தமிழ்பௌத்த மறும லர்ச்சி
தமிழர்க்கு மீட்சி என்றார்!
அமிழ்தெனவே குறளைத் தந்த
ஆசானை அரசன் என்றார்!
அமிழ்தான ஆத்திச் சூடி
அவ்வையே அம்மன் என்றார்!
தமிழொன்றே தீர்வாய்ச் சொன்ன
தமிழ்த்தாத்தா
(பண்டிதர் க. அயோத்திதாசர் அவர்களின் 107 ஆவது நினைவு நாள் இன்று)
முனைவர் சிவ இளங்கோ புதுச்சேரி.