Author: க ஜெயபாலன்

ஜெயபாலன் சிறந்த உரையாளர். அம்பேத்கரியலையும், பவுத்தத்தையும் ஓயாமல் பரப்பும் ஆற்றலாளர். தொடர்ந்து படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கும் அவர் – ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நதியின் தன்மையுடையவர்.

பகுதி இரண்டுநீதிக்கட்சி பவள விழா மலரில் அன்னை மீனாம்பாள் பேட்டி.1902 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ம் நாள் இரங்கூனில் பிறந்த மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் கண் பார்வையற்ற நிலையிலும் இன்றும்கூட பழைய செய்திகளை நினைவாற்றலுடன் கூறுவதில் திறமை உடையவராக இருக்கி றார் என்பதை 6.11.90 அன்று அவரை சென்னை டிரான்சன் கார்டன் தெருவில் உள்ள (கெல்லீஸ்) அவரது இல்லத்தில் சந்தித்தபோது தெளிவாக உணர முடிந்தது. காவல்துறையில் துணை ஆணையாளராக பதவியாற்றி ஓய்வுபெற்ற அவரது மகன் தயாசங்கர் இல்லத்தில்தான் மூதாட்டியார் அவர்கள் இருந்து வருகிறார்கள்.நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்துடன் துவக்கத்தில் தொடர்பு கொண்டுஉயிரோடு இருக்கக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுள் ஒருவராக இருக்கக்கூடியவர் என்ப தால், நீதிக்கட்சி பவள விழா மலரில் அவரை நேர்முகமாகக் கண்டு பழைய நினைவுகளை புதிய தலைமுறையினரின் வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஆவலில் அவரைச் சந்தித்தோம். திராவிடர் கழகத் தலைமை நிலைய செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றனுடன் வடசென்னை மாவட்ட…

Read More

அன்னை மீனாம்பாளின் இரு நேர்காணல்கள். தொகுப்பு முனைவர் க.ஜெயபாலன். முதல் பகுதி. உரிமைகளைப் போராடிப் பெற ஒன்றுபடுவோம்! (அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி) தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்விலும் வரலாற்றிலும் அழிக்க முடியாத பெயர் தியாகத்திற்கும் தொண்டுக்கும் நல்ல தொரு உதாரணமாய் நிற்கும் பெயர் குடும்பம் குழந்தைகள் வீடு வாசல் என்ற குறுகிய மனப்பான்மையோடு இராமல் நமது மக்கள் நமது சமுதாயம் நமது தேசம் போன்ற உயர்ந்த குறிக் கோள் களுக்காக தம்மைத் தாமே அர்ப்பணித்துக் கொண்ட லட்சியத் தம்பதிகள். அரை நூற்றாண்டு காலம் இல்வாழ்க்கை நடத்திய இந்த இல்லற ஜோதி இன்றைய தலைமுறைக்கு இணையற்ற வழிகாட்டியாக விளங்குகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்லாண்டு காலம் உழைத்து எண்ணற்ற போராடடங் களில் பங்கேற்று பல்வேறு பொறுப்பு களையும் பதவிகளையும் வகித்து அரிய சேவை செய்த அன்னை மீனாம்பாள் சிவராஜிக்கு இப்போது வயது 86. (பேட்டி எடுக்கப்பட்ட காலம் 1988) தளர்ந்த உடல் நிலையிலும் தளராத…

Read More