அமைதியின் பேருருவத்தை உருவாக்கி
முடிக்கும் அத்தருணம் உன்னதமானது
சுரண்டல்களற்ற பொழுதொன்று வரும்
வானம் எல்லாருக்குமானது
போரின்றி கைகள் தழுவும் அந்த நொடி
மனிதம் முளைக்கவுமானது
அடிமைகள் என்று யாருமில்லா
சமூகம் அப்பட்டமானது
யாரும் கேட்க முடியாத அதிகாரத்தின்
குரல் வீணானது
புறக்கணிப்பின் வலியறியா மக்கள்
சூழ்ந்த வாழ்வு சகோதரத்துவமானது
மேடுகள் சமனுறும் செதுக்கல்கள்
சமத்துவமானது
பிணைகளற்று வீசி நடக்கும்
கைகளும் கால்களும் சுதந்திரமானது
ஆயினும் இவற்றை அடைய
எளியோர் வெல்லும் போரே தேவையானது.