Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»சிறப்புப் பக்கம்»அலசல்»குழந்தை திருமண ‘தனிப்பட்ட சட்டங்களை’ மக்களிடையே பரப்பி வரும் ‘மத ஏஜென்ட்கள்’ குற்றவாளிகளாக்கப்படவேண்டும்
    Social evil: A file photo of an awareness campaign against child marriage in Bikaner, Rajasthan. | Photo Credit: PTI
    அலசல்

    குழந்தை திருமண ‘தனிப்பட்ட சட்டங்களை’ மக்களிடையே பரப்பி வரும் ‘மத ஏஜென்ட்கள்’ குற்றவாளிகளாக்கப்படவேண்டும்

    யாக்கன்By யாக்கன்October 13, 2017No Comments4 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமைக் குற்றமாகும் என இந்தியத் தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கூடுதலாக ‘இந்தியத் தண்டனைச் சட்டம் 375’ பிரிவு 2-ஐ, (‘15 மதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்துகொண்ட கணவன்மார்கள் பாலியல் உறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது’) தலைமை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்திய நாடாளுமன்றம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றிய ‘குழந்தைகள் பாலியல் வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டம்’ (POCSO) பிரிவு 5 “ 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகளிடம் பாலியல் வல்லுறவு செய்வது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்” எனக் கூறுகிறது. ‘இந்திய தண்டணைச்சட்டம் 375’ பிரிவு 2 மற்றும் ‘குழந்தைகள் பாலியல் வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டம்’ (றிளிசிஷிளி) பிரிவு 5 ஆகிய இரண்டிற்கும் உள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிமன்றம், எதிரெதிர் இரட்டைத்தன்மை கொண்ட சட்டங்களை அனுமதித்தற்காக மத்திய அரசை கடுமையாகக் கண்டித்துள்ளது. நாடு முழுவதும் பரவலாக நடைபெற்று வருகிறது என்பதற்காக குழந்தைத் திருமணங்கள் ஏற்கத் தக்க மரபு அல்ல என்றும் குழந்தைத் திருமணங்கள் குறித்து அதிகம் பேசாமல், பெண் குழந்தைகளின் உரிமைகள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் கவலைப்பட வேண்டும் என்றும் தலைமை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்திய நாட்டில் மிகவும் கொடியமுறையில் கையாளப்பட்டு வரும் பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருந்தும்கூட மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தாலும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அலுவலர்கள் சட்டத்தையே மதிக்காதவர்களாக இருப்பதாலும் பெண் குழந்தைகளின் உரிமைகள் மதிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. தடைசெய்யப்பட்டிருக்கிறபோதிலும் நாடு முழுவதிலும் குழந்தைத் திருமணங்கள் கள்ளத்தனமாக நடைபெற்று வருகின்றன. இந்திய தண்டனைச் சட்டம் 375’ பிரிவு 2ஐ இரத்து செய்திருப்பதன் மூலம், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளோடு பாலியல் வல்லுறவு கொள்வது இனி எந்த வகையான சட்டப்படியும் ஏற்கத்தக்கது அல்ல என்பதைத் தலைமை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படும் இந்தத் தீர்ப்பு, குழந்தைத் திருமணங்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    [quotes quotes_style=”bpull” quotes_pos=”right”]ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் இந்திய சாதியச் சமூக அமைப்பினால் காப்பாற்றப்பட்டுவரும் குழந்தைத் திருமணங்களை எதிர்த்து பலர் போராட்டடங்களை முன்னெடுத்த போதிலும், அந்த கொடிய திருமணமுறைகள் இன்றும் நீடித்து வருகின்றன. பாபாசாகேப் அம்பேத்கர் குறிப்பிடுவதைப் போல, குழந்தைத் திருமணங்களுக்கு மத அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதே அதற்குக் காரணமாகும். சட்ட விரோதமானது என்றாலும்கூட, சாதியைக் காப்பாற்றும் நோக்கில்தான் குழந்தைத் திருமணங்களை, இந்துக்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சாதியும், குழந்தைத் திருமணங்களும் ‘மதக் கடமை’ என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகிறது என்பதை பாபாசாகேப் அம்பேத்கர் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.[/quotes]

    1916-ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் வாசித்தளித்த ‘இந்தியாவில் ஜாதிகள் : தோற்றமும் அதன் அமைப்பியக்கமும்’ என்ற ஆய்வுக்கட்டுரையில், சாதிகளின் அமைப்பியக்கம் ‘அகமண முறையில் அமைந்துள்ளது. ஒரு சாதியில் அகமணமுறை குழப்பமில்லாமல் நீடிக்க வேண்டுமானால் ஆண்-பெண் சம எண்ணிக்கையில் இருந்தாக வேண்டும். மண வயதுடைய ஆண்-பெண் சமமின்மையை ஒழுங்குபடுத்துவதைச் சுற்றியே சாதி சுழல்கிறது. திருமணமான ஆண், திடீரென இறக்க நேர்ந்தால், மனைவியை இறந்த கணவனோடு சேர்த்து எரித்துவிடுவதன் மூலமும், திருமணமான பெண் இறந்துவிட்டால் அவளது கணவனுக்கு பெண் குழந்தை ஒன்றை திருமணம் செய்து வைப்பதன் மூலமும் அந்த இழப்பை சரிசெய்து விடமுடியும். அதன் மூலம் ஒரு சாதியைச் சார்ந்த ஆண்-பெண் சம எண்ணிக்கை யில் இருப்பதை சாதிய சமூகம் உறுதி செய்தது.’ போன்ற கருத்துகளை முன்வைத்துள்ளார். அதன் மூலம் சாதிய சமூகத்தைக் காப்பாற்றவே குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருவதை பாபாசாகேப் அம்பேத்கர் உறுதி செய்தார். பின்னாளில் ஆணோ பெண்ணோ தனது சாதியை விட்டு வேறு சாதியில் திருமணம் செய்துகொண்டுவிடக்கூடாது என்பதற்காகவும், புதிய சாதியை உருவாக்கவும், ஒரு சாதியின் சொத்துகள் வேறு சாதிகளைச் சார்ந்த குடும்பங்களுக்குச் சென்றுவிடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் குழந்தைத் திருமணமுறை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, நிலைத்துவிட்டது.

    ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் இந்திய சாதியச் சமூக அமைப்பினால் காப்பாற்றப்பட்டுவரும் குழந்தைத் திருமணங்களை எதிர்த்து பலர் போராட்டடங்களை முன்னெடுத்த போதிலும், அந்த கொடிய திருமணமுறைகள் இன்றும் நீடித்து வருகின்றன. பாபாசாகேப் அம்பேத்கர் குறிப்பிடுவதைப் போல, குழந்தைத் திருமணங்களுக்கு மத அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதே அதற்குக் காரணமாகும். சட்ட விரோதமானது என்றாலும்கூட, சாதியைக் காப்பாற்றும் நோக்கில்தான் குழந்தைத் திருமணங்களை, இந்துக்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சாதியும், குழந்தைத் திருமணங்களும் ‘மதக் கடமை’ என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகிறது என்பதை பாபாசாகேப் அம்பேத்கர் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.

    தலைமை நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்துள்ளன. ‘ஷரியா சட்டத்தின்படி, 13 வயது நிரம்பிவிட்டாலே பெண் குழந்தைகள் பெரியவளாகிவிட்டள்’ என்றும், ‘ 13 வயது நிரம்பிய பெண், ஒரு ஆணைத் திருமணம் செய்துகொள்வாளேயானால், அவளுக்கு பாலியல் இன்பத்தை அனுபவிக்க உரிமை உண்டு’ என்றும், ‘தலைமை நீதிமன்றத்தின் தீர்ப்பை சட்டப்படி எதிர்கொள்வது குறித்து ஆலோசிப்போம்’ என்றும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆனாலும் ‘ஷரியா சட்டங்கள் எங்கு நடைமுறையில் உள்ளனவோ அங்குதான் இது பொருந்தும் என்றும், இந்தியா போன்ற நாடுகளில் அந்த நாட்டின் சட்டம் எதுவோ அதற்கு கீழ்ப் படியவேண்டும்’ என்றும் சில இஸ்லாமிய தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குழந்தைத் திருமணங்களை வெளிப்படையபகவே ஆதரித்துப் பேசிய காஞ்சி ஜியேந்திரன் போன்ற இந்து மத ஏஜெண்ட்களிடமிருந்தும், கொடிய பயங்கரவாத இந்து மத அமைப்புகளிடமிருந்தும் இன்னும் வெளிப்படையான கருத்துகள் வெளிவரவில்லை.

    18 வயதுக்குக் கீழுள்ள பெண் குழந்தையைத் திருமணம் செய்துகொண்ட போதிலும், பாலியல் உறவு செய்வது தண்டனைக்குரிய குற்றம் என கூறும் இந்தியத் தலைமை நீதிமன்றம் அத்தகையத் குழந்தைத் திருமணங்களுக்கு அளிக்கப்படும் மத அங்கீகாரத்தையும் ரத்து செய்ய முன்வரவேண்டும். பெண் குழந்தைகளைத் திருமணத்தை அங்கீகரிக்கும் எந்தவொரு மதத்தின் ‘தனிப்பட்ட சட்டங்களை’ இந்தியத் தலைமை நீதிமன்றம் தடை செய்ய வேண்டும். அத்தகைய ‘தனிப்பட்ட சட்டங்களை’ மக்களிடையே பரப்பி வரும் ‘மத ஏஜென்ட்கள்’ குற்றவாளிகளாக்கப்படவேண்டும். அப்போதுதான் குழந்தைத் திருமணங்கள், பெண் குழந்தைகப் பாலியல் வல்லுறவு, குழந்தைளைப் பலியிடுதல் போன்ற கொடிய ஈவு இரக்கமற்ற குற்றங்கள் குறையும்.

    • யாக்கன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous ArticleCops Register Case Against Dalit Writer Kancha Ilaiah Over His Book
    Next Article Freedom of speech: SC refuses to ban Dalit writer Kancha Ilaiah book
    யாக்கன்

    தமது முல்லை அச்சகத்தின் வழியாக மாற்று சிந்தனைக்கான களத்தை உருவாக்கி வருபவர். கழகம் வெளியீட்டகம் மூலமாக 80க்கும் மேற்பட்ட சிறந்த தலித் படைப்புகளை வெளியிட்டுவருகிறார். தலித் முரசு இதழின் ஆசிரியர் குழுவிலும் முற்றுகை இதழின் நிறுவன ஆசிரியராகவும், மாற்றுப்பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் பேரவையின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். நாவலாசிரியர்,சிறுகதையாளர், கவிஞர், பதிப்பாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

    Related Posts

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    ரமாபாய் அம்பேத்கர் பிறந்த தினம்

    February 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • சாதி ஒழிப்பு (Annihilation of Caste)
    • 1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    Random Posts

    மாற்றுப்பாதை – மதிவண்ணன்

    June 28, 2019

    மனு நீதி எரிப்போம் மகத் நீரைக் குடிப்போம்

    August 23, 2017

    நான் சாதித் தலைவன் அல்ல சமூகத் தலைவன்!

    August 30, 2019

     விதவிதமாய் வடிவமெடுப்பேன்

    July 6, 2017
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.