Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: யாக்கன்
தமது முல்லை அச்சகத்தின் வழியாக மாற்று சிந்தனைக்கான களத்தை உருவாக்கி வருபவர். கழகம் வெளியீட்டகம் மூலமாக 80க்கும் மேற்பட்ட சிறந்த தலித் படைப்புகளை வெளியிட்டுவருகிறார். தலித் முரசு இதழின் ஆசிரியர் குழுவிலும் முற்றுகை இதழின் நிறுவன ஆசிரியராகவும், மாற்றுப்பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் பேரவையின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். நாவலாசிரியர்,சிறுகதையாளர், கவிஞர், பதிப்பாசிரியர் என பன்முகம் கொண்டவர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் பௌத்த நெறியேற்பு குறித்து ஒடுக்கப்பட்ட மக்கள் மிக நீண்டகாலமாக நடத்தி வரும் சமூக விடுதலைப் போராட்டம், அண்மைக் காலமாக, தேக்கநிலையை எட்டிவிட்டதாகப்பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதில் உண்மையில்லை. முன்னெப்போதையும்விட மிகக் கூர்மையான கருத்தியலுடன் போராட, தலித் மக்கள் முனைப்புக் காட்டி வருகிறார்கள். அரசியல் தளத்தில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடத்திய எழுச்சியான செயற்பாடுகளின்மூலம், மதிக்கத்தக்க அரசியல் சக்தியாக அம்மக்கள் திரண்டிருக்கிறார்கள். அரசியல் அதிகாரத் தின் முக்கியத்துவத்தையும் உணரத்தொடங்கியிருக் கிறார்கள். அதே வேளையில் பண்பாட்டுத் தளத்திலும், புதிய எழுச்சி உருவாகி வருகிறது. பன்னெடுங்காலமாகச் சாதி இழிவில் அமிழ்த்தி வைத்திருக்கும் இந்துப் பண்பாட்டிலிருந்து வெளியேறி, பூர்வீக பௌத்தத்தில் இணைவதற்கான கருத்தியல், தலித் இளைஞர்களிடையே பொங்கிப்பெருகி கொண்டிருக் கிறது. பூர்விகத் தொல்குடிகளின் பௌத்தப் பண் பாட்டை மீட்டுரு வாக்கம் செய்யும் நோக்கோடு, மகா பண்டிதர் அயோத்திதாசர் காலம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை, எழுச்சியான பௌத்த இயக்கங்கள் தோன்றி வளர்ந்த…
கொடிய இடைநிலைச் சாதியம் கொடிகட்டிப் பறக்கும் – தமிழகத்தின் மிகப்பெரும் கிராமமான மதுரையின், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் 30.6.1997 அன்று மாலை 5 மணிக்கு, மேலவளவு கள்ளர்ளுடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, மதுரை மேலூரிலிருந்து இரவு 11 மணி பேருந்தில் தங்கள் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, 50 பேர் கொண்ட கள்ளர் சாதிக்கொலை வெறிக்கும்பல், நள்ளிரவில் மேலூர் – நத்தம் சாலையில், சென்னகரம்பட்டி வளைவில் மறைந்திருந்து, ஓடும் பேருந்தை வழிமறித்து மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட தலித் சமூகத்தவர் ஏழு பேரை வெட்டிக்கொன்றது, இப்போது நினைத்தாலும் பழிவாங்கும் உணர்வை உசுப்பி விடும் அந்த கொடிய படுகொலை நடந்து இன்றோடு இருபத்தி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தலித் மக்களுக்கென ஒதுக்கப் பட்ட மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டதற்காக அந்தப் படுகொலையை நிகழ்த்தினர். முருகேசனை பேருந்திற்குள்ளேயே வைத்து தலை வேறு உடல் வேறாக வெட்டிப் படுகொலை…
பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமைக் குற்றமாகும் என இந்தியத் தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கூடுதலாக ‘இந்தியத் தண்டனைச் சட்டம் 375’ பிரிவு 2-ஐ, (‘15 மதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்துகொண்ட கணவன்மார்கள் பாலியல் உறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது’) தலைமை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்திய நாடாளுமன்றம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றிய ‘குழந்தைகள் பாலியல் வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டம்’ (POCSO) பிரிவு 5 “ 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகளிடம் பாலியல் வல்லுறவு செய்வது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்” எனக் கூறுகிறது. ‘இந்திய தண்டணைச்சட்டம் 375’ பிரிவு 2 மற்றும் ‘குழந்தைகள் பாலியல் வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டம்’ (றிளிசிஷிளி) பிரிவு 5 ஆகிய இரண்டிற்கும் உள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிமன்றம், எதிரெதிர் இரட்டைத்தன்மை கொண்ட சட்டங்களை அனுமதித்தற்காக மத்திய அரசை கடுமையாகக் கண்டித்துள்ளது.…
ஆட்சி முடிய இன்னும் இரண்டே ஆண்டுகள்தான் இருப்பதால், பா.ஜ.க. தனது கனவுத்திட்டங்களான புதிய கல்விக் கொள்கையையும் பொது சிவில் சட்டத்தையும், உடனே நடைமுறைக்குக்கொண்டுவரத்துடித்துக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். கொடுத்துள்ள வழிகாட்டலின் அடிப்படையில் மோடியின் அமைச்சரவை சகாக்கள் புதிய கல்விக்கொள்கை குறித்த அவசரச்சட்டத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம்! பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாண்டு கால ஆட்சியை நடத்தி முடித்துள்ளார். கடந்த மூன்றாண்டுகளில் அவர் அறிவித்த திட்டங்களையும் ஆணைகளையும் ஆய்வு செய்து பார்த்தால், அவரது ஒவ்வொரு நடவடிக் கைக்கும் ஆர்.எஸ்.எஸ். என்ற இந்து பயங்கரவாத அமைப்பு பின்புலமாய் இருந்து வருவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். பெரும்பான்மை பலத்துடன் கூடிய நிலையான ஆட்சி, வலிமையான பிரதமர், கருப்புப்பண மீட்பு, பொருளாதார வளர்ச்சி போன்ற கவர்ச்சி மிகுந்த, வெளிமுலாம் பூசப்பட்ட முழக்கங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்ததன் மூலம், இந்தியா முழுவதிலும் பரவலான ஆதரவைப் பெற்று எதிர்பாராத…
[quotes quotes_style=”bquotes” quotes_pos=”center”]ஏறக்குறைய ஐம்பதாண்டு காலம் தலித் மக்களின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு போராடிவரும் தலைவர் அ. சக்திதாசன். ‘சக்தியார்’ என அன்போடு அழைக்கப்படும் இவரைச் சந்திக்கச் சென்றபோது, சென்னை, சேத்துப்பட்டில் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் தலித் தலைவர்களுக்கே உரித்தான எளிமையோடும் ஏழ்மையோடும் இருப்பதைக் கண்டோம். திராவிட இயக்கத்தில் இணைந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், ‘ஷெட்யூல்டு காஸ்ட் பெடரேசன்’, ‘ஷெட்யூல்டு காஸ்ட் லிபரேசன் மூவ்மென்ட்’ ஆகிய இயக்கங்களில் முன்னணித் தலைவராகச் செயலாற்றினார். 1959ல் தந்தை சிவராஜ் அவர்களின் தலைமையின் கீழ் இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்து இன்று வரை பணியாற்றிக்கொண்டிருக்கும் மூத்த தலைவராகிய இவர், முதலில் நேர்காணல் தர தயக்கம் காட்டியது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. சமகால தலித் அரசியல் கட்சித் தலைவர்களின் போக்கு குறித்து தான் கூறும் கருத்துகள் முரண்பட்ட சூழலை உருவாக்கக்கூடும் என்றார். ஆயினும் எங்களின் வற்புறுத்தலால் நேர்காணல் தர முன் வந்தார். ஒடுக்கப்பட்ட மக்கள்…
அன்பிற்குரிய பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களுக்கு, வணக்கம், விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. சிந்தனைச்செல்வன், தலித் மக்கள் பௌத்த மதத்திற்கு மாறவேண்டும் என்று பரப்புரை நிகழ்த்திவருவது குறித்து நீங்கள் உங்கள் முகநூலில் எழுதிய கருத்துகளை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தது. தலித் மக்களின் உயிராதாரச் சிக்கலைக் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது, மேலோட்டமான முறையில் நீங்கள் பேசுவது கண்டு வருத்தமடைந்தேன். அதோடு, பாபாசாகேப் அம்பேத்கரின் பௌத்த மதமாற்றம் குறித்து, தெளிவான சிந்தனையை நீங்கள் எட்டவில்லை என்பதையும் அறிந்துகொள்ளமுடிந்தது. தமிழகத்தைப் பொருத்தவரை, பாபாசாகேப் அம்பேத்கர் மறைந்து 58 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தான் பௌத்த மதமாற்றம் குறித்த உரையாடல்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் உங்களின் கருத்துகள் குட்டையைக் மேலும் குழப்பிவிடுவதைப்போல அமைந்திருப்பது வருத்தமளிக்கிறது. [quotes quotes_style=”bpull” quotes_pos=”left”]பௌத்த மதத்திற்கு மாறிவிட்டாலே அடுத்தநொடியில் அனைத்துச் சிக்கலும் தீர்ந்துவிடும் என்று…
[quotes quotes_style=”bpull” quotes_pos=”left”]தொழில்நுட்ப வீச்சால், தொலைவுகளற்றதாக பூமி மாற்றப்பட்டு விட்டதாலும், பேரண்டம் சுருங்கத் தொடங்கியதாலும், உற்சாகமடைந்திருக்கிறார்கள் மனிதர்கள். தத்துவம், அரசியல், சமூகம், உரிமை, உயிர் அனைத்தும் விற்பனைப் பண்டங்களாகின்றன. உடல் மட்டும் கொண்ட மனிதர்களுக்கு இனி இடமில்லை என்கிறது உலகு. ஆனாலும், அநீதிக்குள்ளாகிய மனிதர்கள் மூடப்பட்டுவிட்ட வழிகள் முன் காத்துக் கிடக்கிறார்கள். இந்தியாவிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. நெடுங்காலமாகச் சுமந்து திரியும் அவலங்களைத் துடைக்க, அதிகாரத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள் ஒடுக்கப்பட்ட மக்கள். ‘மக்களுக்காக மக்களால்’ என வர்ணிக்கப்பட்ட மக்களாட்சி நெறிமுறைகளைப் புதைக்க, பன்னாட்டு பெருமுதலாளிகளுடன் கை கோர்க்கிறார்கள் ஆட்சியாளர்கள். சமூகத்தில் வாய்க்காது போன உரிமைகள், அரசியல் தளத்தில் மட்டும் வாய்க்குமா? கனவுகளைச் சுற்றிப் படரும் ஜனநாயக இருளை பவுத்த ஒளி துலக்கட்டும். அதைத் தேடிய பயணம் இது. – யாக்கன்[/quotes] மனித இனத்தின் நீண்ட நெடிய சிந்தனை அனுபவங்களால் செழிப்புற்றிருக்கிறது உலகம். முடிவற்றுத் தொடர்ந்து கொண்டிருக்கும் மனிதத் துயரங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும்…