Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » கோகுல்ராஜ் வழக்கில் உண்மைகளை மறைத்தாரா ஸ்வாதி?
    வன்கொடுமைப் பதிவுகள்

    கோகுல்ராஜ் வழக்கில் உண்மைகளை மறைத்தாரா ஸ்வாதி?

    Sridhar KannanBy Sridhar KannanSeptember 12, 2018No Comments9 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சேலம் பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அரசு தரப்பு வழக்கறிஞராக சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதியும், கோகுல்ராஜ் தாயாரின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜும் ஆஜராகி வருகிறார்கள்.

    கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வனின் வாக்குமூலமும், குறுக்கு விசாரணையும் முடிவடைந்த பிறகு, இவ்வழக்கின் முக்கியச் சாட்சியான ஸ்வாதியிடம் ரகசிய விசாரணையும், திறந்தவெளி விசாரணையும் நடைபெற்றது. அதற்காக ஸ்வாதி முகத்தை மூடியவாறு தன் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞரோடு 12 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். திருச்செங்கோடு மலைக்கோயிலிலிருந்து யுவராஜ் மற்றும் அவருடைய ஆட்கள் கோகுல்ராஜை கடத்திச் சென்றதாகக் கைப்பற்றப்பட்ட வெள்ளை நிற டாடா சபாரி காரும் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.

    கோகுல்ராஜ் வழக்கு

    நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை பகல் 12:30 மணிக்குத் தொடங்கியது. கோகுல்ராஜை இறுதியாகப் பார்த்தவரும், அவரை யுவராஜ் கடத்திச் சென்றதாகச் சொல்லப்பட்ட நேரடி சாட்சியும் ஸ்வாதிதான் என்பதால், அவரை பாதுகாப்பு கருதி திரை மறைவு (இன்கேமரா) விசாரணை மேற்கொண்டதால், இவ்வழக்கில் குற்றம் செய்தவர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள், அவர்களுடைய வழக்கறிஞர்கள், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீஸார் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    மற்ற வழக்கறிஞர்களோ, பத்திரிகையாளர்களோ, பார்வையாளர்களோ உள்ளிட்ட எவரும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும், ஆதாரமற்ற நீதிமன்ற வட்டாரத்தில் பெறப்பட்ட முழுமையான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஸ்வாதி கூண்டில் ஏறி நின்றதும், புரஜக்டர் மூலம் திருச்செங்கோடு மலைக்கோயிலில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா 1, கேமரா 5 மூலம் பதிவாகி இருந்த வீடியோவை நீதிமன்றச் சுவரில் ஓட்டினார்கள். அதை ஸ்வாதி கூண்டில் நின்று திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

    அந்த வீடியோ காட்சியிலிருந்து…

    கோகுல்ராஜ்நிறைய பேர் கோயிலுக்குள் செல்கிறார்கள். அதன்பிறகு கோகுல்ராஜும், ஸ்வாதியும் சேர்ந்தவாறு கும்பலாக இல்லாமல் தனியாகக் கோயிலுக்குள் செல்கிறார்கள்; சாமி கும்பிடுகிறார்கள். பிறகு, உட்காருவதற்காகத் திண்ணையை நோக்கி வருகிறார்கள். அப்போது யுவராஜ் (வெள்ளை நிறச் சட்டை, காக்கி நிற பேன்ட் அணிந்திருக்கிறார்) மற்றும் அவருடைய ஆட்கள் கோயிலுக்குள் செல்கிறார்கள். அதன்பிறகு ஓர் ஆணும், ஒரு பெண்ணும் ஸ்வாதியைக் கோயிலுக்குள்ளிருந்து வெளியே அழைத்துச் செல்கிறார்கள். இதையடுத்து, கோகுல்ராஜை யுவராஜ் உட்பட 7 பேர் கோயிலுக்குள்ளிருந்து வெளியே அழைத்துச் செல்கிறார்கள். இந்த வீடியோ இரண்டரை நிமிடம் முதல் மூன்று நிமிடம் வரை ஓரளவுக்குத் தெளிவாகவே ஓடுகிறது.

    அதையடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, ஸ்வாதியிடம் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தார்.

    வழக்கறிஞர் கருணாநிதி: “வீடியோவைப் பார்த்தீங்கள்ல. அதுல இருப்பது நீங்கதானே?”

    ஸ்வாதி: “வீடியோ கிளியரா இல்லை. அதிலிருக்கும் உருவம் என்னுடையதில்லே”.

    (இந்தப் பதிலைக் கேட்டதும் அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி மற்றும் கோகுல்ராஜ் தாயார் சித்தராவின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஆகியோர் அதிர்ச்சியடைந்தார்கள்…)

    வழக்கறிஞர் கருணாநிதி: (அதிர்ச்சியடைந்தவாறு…) “நல்லாப் பாருங்கம்மா… உங்களை ரெண்டு பேர் கூட்டிட்டுப் போறாங்க…. கோகுல்ராஜை, யுவராஜ் உட்பட 7 பேர் கூட்டிட்டுப் போறாங்க”.

    ஸ்வாதி: “இந்த வீடியோவுல இருப்பது நான் இல்லே. இதைப்பத்தி எனக்குத் தெரியாது”.

    வழக்கறிஞர் கருணாநிதி: “நீங்களும், கோகுல்ராஜும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குப் போனீங்கதானே?”

    ஸ்வாதி: “திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலைப்பத்தி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இதுநாள் வரை அந்தக் கோயிலுக்குப் போனதில்லே”.

    வழக்கறிஞர் கருணாநிதி: “கோகுல்ராஜையாவது தெரியுமா?”

    ஸ்வாதி: “கோகுல்ராஜ் என்னோடு கல்லூரியில் படித்திருக்கலாம். ஆனா, அவர் யார் என்று எனக்குத் தெரியாது”.

    வழக்கறிஞர் கருணாநிதி: “திருச்செங்கோடு காவல் நிலையத்திலும், பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் விசாரணையிலும் இந்த வீடியோவில் இருப்பது நானும் கோகுல்ராஜும்தான் என்றும், கோகுல்ராஜைக் கடத்திச் செல்லும் 7 பேரில் வெள்ளை நிறச் சட்டை, காக்கி கலர் பேன்ட் அணிந்திருப்பவர் யுவராஜ் என்றும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள். அதை, 164 ரிப்போர்ட்டில் ஜே.எம்.2 நீதிமன்றத்திலும் சொல்லி இருக்கிறீர்கள்”.

    ஸ்வாதி: “ஆமாம் சொன்னேன். போலீஸ் சொல்லிக்கொடுத்து சொல்லச் சொன்னார்கள்”.

    வழக்கறிஞர் கருணாநிதி: “அதை நீதிபதியிடம் போலீஸ்காரர்கள் என்னை நிர்பந்தப்படுத்திச் சொல்லச் சொல்கிறார்கள் என்று சொல்லி இருக்கலாமே?”

    ஸ்வாதி: “அதைச் சொல்லவில்லை”.

    மதியம் 1:15 மணியோடு திரை மறைவு விசாரணை நிறைவுபெற்று மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. பத்திரிகையாளர்கள்வழக்கறிஞர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத் தயாரானதைத் தெரிந்துகொண்ட ஸ்வாதி, முகத்தை மூடியவாறு பெற்றோர் மற்றும் உறவினர்கள் சூழ வெளியே ஓடிவந்து ஆம்னி வேனில் ஏறிப் பறந்து சென்றார்.

    யுவராஜ் மற்றும் அவர்களுடைய ஆட்கள் முகத்தில் சிரிப்பலை வீசியது. நீதிமன்ற விசாரணையைப் பார்வையிட வந்த யுவராஜின் ஆதரவாளர்களுக்கு உணவு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அந்த டோக்கன்களை நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள உணவகங்களில் கொடுத்து அசைவு உணவு சாப்பிட்டார்கள்.

    உணவு இடைவேளை முடிந்து மிகவும் பாதுகாப்பாக ஸ்வாதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்தார். அதை, பத்திரிகையாளர்கள் வீடியோ எடுக்க… ஸ்வாதியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டவாறே நீதிமன்றத்துக்குள் சென்றார்கள். மதியம் சரியாக 2:50 மணிக்கு நீதிமன்ற விசாரணை தொடங்கியது. தற்போது திரைமறைவு (இன்கேமரா) நடைமுறை விலக்கப்பட்டு திறந்தவெளி நீதிமன்ற நடைமுறை செயல்பட்டது. அதையடுத்து அனைவரும் நீதிமன்ற விசாரணையை உற்று நோக்கினோம்.

    ஸ்வாதி கூண்டுக்குள் நின்றவுடன்…

    ஸ்வாதி: “ஐயா என்னைப் பத்திரிகையாளர்கள் வீடியோ, போட்டோ எடுக்கிறார்கள். அவர்களை எடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்”.

    நீதிபதி: “அவர்கள் வீடியோ, போட்டோ எடுத்தால் முகத்தை மூடிக்கொள்ள வேண்டியதுதானே… யார் எடுத்தா?”

    ஸ்வாதி: “ஓர் அண்ணன் வீடியோ எடுத்தார்”

    நீதிபதி: “பத்திரிகையாளர்களிடம் நீயே சென்று, `என்னை போட்டோ அண்டு வீடியோ எடுக்க வேண்டாம்’ என்று தாழ்மையாகக் கேளு”.

    அதையடுத்து, நீதிமன்றத்துக்குள் பத்திரிகையாளர்களை அனுமதிக்கப்பட்டனர். ஸ்வாதி கூண்டைவிட்டு இறங்கிவந்து,  பத்திரிகையாளர்களை எல்லாம் பார்த்து, “என்னை போட்டோ எடுங்காதீங்க” என்றார். அதற்கு அவர்களும், “சரி” என்று சொன்னார்கள்.

    அதன்பிறகு கூண்டேறிய ஸ்வாதியிடம், அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்ட கேள்விகளும் அதற்கு ஸ்வாதியின் பதில்களும்…

    வழக்கறிஞர் கருணாநிதி: “போலீஸ் விசாரணையின்போது உங்க போட்டோவைக் கொடுத்தீர்களா? இல்லை, அவர்கள் உங்களைப் போட்டோ எடுத்தார்களா?”

    ஸ்வாதி: “நான் போட்டோ கொடுக்கவில்லை. ஆனால், அவர்கள் என்னை போட்டோ எடுத்தார்கள்”.

    (அப்போது குறுக்கிட்ட நீதிபதி….)

    நீதிபதி: “ஏன் இப்படிக் கும்பலாக நிற்கிறீர்கள். அனைவரும் போய் அமருங்கள். வழக்கறிஞர்கள் சத்தமாத்தானே பேசுறாங்க?” (கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் போய் அமர்ந்துகொண்டார்கள். ஆனால், யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் உட்காராமல் நின்றுகொண்டிருந்தனர்.)

    வழக்கறிஞர் கருணாநிதி: (சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பிருந்தா, புகைப்படங்களை வழக்கறிஞரிடம் கொடுக்க… அதை ஸ்வாதியிடம் காட்டி …) “இதில் இருப்பது உங்களுடைய புகைப்படம்தானே?”

    ஸ்வாதி: “ஆமாம்”.

    (யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் கும்பலாகத் தொடர்ந்து  நின்றுகொண்டிருந்ததைக் கண்ட நீதிபதி, `இங்கு நிறைய எவிடென்ஸ் (evidence) இருக்கு. தொலைந்தால் உங்கமீது நடவடிக்கை எடுக்கப்படும். நான் வழக்கை அப்சர்வேஷன் (observation) செய்யணும். ஆர்க்யூ செய்பவர்களைத் தவிர, மற்ற அனைவரும் போய் அமருங்கள்” என்றார். ஆனால், அவரது பேச்சையும் கேளாமல் மீறிக் கொண்டிருந்த நின்றுகொண்டிருந்தனர் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள். இதைக் கண்ட நீதிபதி… எழுத்தரிடம், “நான் சொல்வதை அப்படியே எழுதுங்கள். எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் பல முறை சொல்லியும் வழக்குக்கு இடையூறாக நின்றுகொண்டிருக்கிறார்கள்” என்று சொல்ல… அதன் பிறகே, அவர்கள் போய் அமர்ந்தனர்.)

    வழக்கறிஞர்

    வழக்கறிஞர் கருணாநிதி: (சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பிருந்தா, செல்போன் வாங்குவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட படிவத்தில் கொடுத்த போட்டோ, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டுகளைக் கொடுத்தார்) “இதில் இருக்கும் போட்டோ உங்களுடையதுதானே?”

    ஸ்வாதி: “ஆமாம் என்னுடையதுதான்”.

    வழக்கறிஞர் கருணாநிதி: “இந்த போட்டோக்கள் உங்களுடையது என்றால், வீடியோவில் இருப்பதும் நீங்கள்தான்?”

    ஸ்வாதி: “அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை”.

    அதையடுத்து வழக்கறிஞர் கருணாநிதி, நீதிபதியைப் பார்த்து…. ஆவணங்களைக் காட்டி, “இந்த போட்டோவில் இருப்பது ஸ்வாதி என்றால், அந்தக் கோயில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கும் புகைப்படமும் ஸ்வாதியுடையதுதான் என்று லேப்பில் (Lab) கொடுத்து உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறி நிறுத்திக்கொண்டார். அதன் பிறகு, இவ்வழக்கின் மூன்றாம் தர வாதியும், கோகுல்ராஜ் அம்மா சித்ராவின் வழக்கறிஞருமான நாராயணன் தொடர்ந்தார்…

    (வழக்கறிஞர் நாராயணன், மரணத்தின்போது கோகுல்ராஜ் அணிந்திருந்த ஆடையை அடையாளம் காட்ட எடுத்து வரச் சொன்னார். அதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் கோகுல்ராஜின் ஆடைகளைக் கொண்டுவந்து காட்டினார்கள்.)

    வழக்கறிஞர் நாராயணன்: “நீங்கள் கோகுல்ராஜைப் பார்த்தபோது இந்த ஆடைகளைத்தான் கடைசியாக அணிந்திருந்தாரா?”

    ஸ்வாதி: “தெரியாது”.

    வழக்கறிஞர் நாராயணன்: “இந்த ஆடைகளைத்தான் கோகுல்ராஜ் கடைசியாக அணிந்திருந்தார் என்று காவல் துறை விசாரணையில் அடையாளம் காட்டி இருக்கிறீர்களே?”

    ஸ்வாதி: “இல்லை”.

    வழக்கறிஞர் நாராயணன்: (சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கொடுத்த ஒரு துண்டுச்சீட்டைக் காட்டி…) “இது உங்களுடைய கையெழுத்துதானே?”

    ஸ்வாதி: (தயங்கியவாறு…) “என்னுடைய கையெழுத்துதான்”.

    வழக்கறிஞர் நாராயணன்: (துண்டுச்சீட்டைக் காட்டி…) “இது அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருந்தபோது… யுவராஜ் உங்கள் முகவரியையும், செல் நம்பரையும் எழுதிக் கொடுக்கச் சொன்னபோது எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டு. இதில் இருப்பது உங்கள் கையெழுத்துதான்”.

    ஸ்வாதி: “என்னுடைய கையெழுத்துதான். ஆனால் கோயிலுக்குப் போகவில்லை. எப்போது எழுதியது என்று தெரியாது”.

    வழக்கறிஞர் நாராயணன்: நீங்களும், கோகுல்ராஜும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றீர்களா?”

    ஸ்வாதி: “நான் கோயிலுக்குப் போகவே இல்லை”.

    வழக்கறிஞர் நாராயணன்: “23.6.2015 அன்று கோகுல்ராஜ் உங்களுக்கு போன் செய்து உங்களிடம் 1,000 ரூபாய் பணம் கேட்டார்?”

    ஸ்வாதி: “இல்லை”.

    வழக்கறிஞர் நாராயணன்: (சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பிருந்தா ஆவணத்தைக் கொடுக்க..) “நீங்கள் கோயிலுக்குச் செல்வதற்கு முன்பு… அதாவது, 22-ம் தேதி கோகுல்ராஜ் உங்களுக்கு போன் செய்து 1,000 ரூபாய் பணம் கேட்டிருந்தார். அவருடைய போன் நம்பர் இதுதானா” என்று இரண்டு செல்போன் நம்பர்களைக் காட்டினார்.

    ஸ்வாதி: “தெரியாது”.

    வழக்கறிஞர் நாராயணன்: “கோகுல்ராஜும், நீங்களும் திருச்செங்கோடு அர்ந்தநாரீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிட்டீர்கள்தானே?”

    ஸ்வாதி: “நான் கோயிலுக்கே போகவில்லை”.

    வழக்கறிஞர் நாராயணன்: “சாமி கும்பிட்டுவிட்டு அங்கிருக்கும் திண்ணையில் உட்கார்ந்து பேசினீர்களா?”

    ஸ்வாதி: “இல்லை”.

    வழக்கறிஞர் நாராயணன்: “கோகுல்ராஜும், நீங்களும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருந்தபோது யுவராஜும் அவருடைய ஆட்களும் உங்களிடம் வந்து பேசினார்களா?”

    ஸ்வாதி: “நான் கோயிலுக்கே போகவில்லை”.

    வழக்கறிஞர் நாராயணன்: “நீங்கள் கோயிலில் இருந்தபோது யுவராஜ் உட்பட அவருடைய ஆட்கள் 7 பேர் வந்து உங்களுடைய செல்போன்களைப் பறித்துக்கொண்டது உண்மைதானே?”

    ஸ்வாதி: “இல்லை. நான் கோயிலுக்கே போகவில்லை”.

    வழக்கறிஞர் நாராயணன்: “அவர்களில் வெள்ளைச் சட்டை அணிந்துகொண்டு ஒல்லியாகச் சிவப்பாக ஒருவர் இருந்தார். போலீஸார் விசாரணை மூலம் அவர் பெயர் ரஞ்சித் எனத் தெரிந்துகொண்டேன் என்று கூறி இருக்கிறீர்கள்?”

    ஸ்வாதி: “தெரியாது”.

    வழக்கறிஞர் நாராயணன்: “வெள்ளைச் சட்டை, காக்கி பேன்ட் அணிந்துகொண்டு சிவப்பாக ஒருவர் இருந்தார். அவர் பெயர் யுவராஜ் என்பது பின்னிட்டுத் தெரிந்துகொண்டது உண்மைதானே?”

    ஸ்வாதி: “தெரியாது”.

    வழக்கறிஞர் நாராயணன்: “நீல நிறச் சட்டையில் மாநிறமாக ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஶ்ரீதர் என்பது பின்னிட்டுத் தெரிந்துகொண்டது உண்மைதானே?”

    ஸ்வாதி: “தெரியாது”.

    வழக்கறிஞர் நாராயணன்: “ `குண்டாக, கறுப்பாக விபூதி பட்டை அணிந்துகொண்டு முகத்தில் அம்மைத் தழும்பு புள்ளிகளுடன் தாடி பெரிய மீசையோடு ஒருவர் இருந்தார். அவர் பெயர் சிவக்குமார் என்பது போலீஸார் விசாரணையில் பின்னிட்டுத் தெரிந்துகொண்டேன்’ என்பது உண்மைதானே?”

    ஸ்வாதி: “தெரியாது”.

    வழக்கறிஞர் நாராயணன்: “டி ஷர்ட் அணிந்துகொண்டு சிவப்பாக ஒல்லியாக ஒருவர் இருந்தார். அவர் பெயர் செல்வராஜ் என்பதைப் போலீஸ் விசாரணையில் தெரிந்துகொண்டேன் என்பது சரிதானே?”

    ஸ்வாதி: “தெரியாது”.

    வழக்கறிஞர் நாராயணன்: “கோயிலில் நீங்கள் இருந்தபோது யுவராஜும் அவருடைய ஆட்களும் உங்களிடம் ஒரு துண்டுச் சீட்டு கொடுத்து, உங்க வீட்டு முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை எழுதிக் கொடுக்கச் சொல்லிக் கூறினார்களா?”

    ஸ்வாதி: “இல்லை”.

    வழக்கறிஞர் நாராயணன்: “அந்தத் துண்டுச் சீட்டில் இருப்பது, உங்கள் கையெழுத்துதானே?” (அப்போது, சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் துண்டுச் சீட்டை நாராயணனிடம் கொடுக்க… அவர் அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதியிடம் கொடுத்தார். கருணாநிதி ஸ்வாதியிடம் காட்டினார்.)

    யுவராஜ்

    ஸ்வாதி: (அந்தத் துண்டுச் சீட்டைப் பார்த்து..) “இதில் உள்ள கையெழுத்து என்னுடையதுதான். ஆனால், கோயிலுக்கும் போகவில்லை. யாருக்கும் எழுதியும் தரவில்லை”.

    வழக்கறிஞர் நாராயணன்: “நீங்களும், கோகுல்ராஜும் கோயிலில் இருந்தபோது யுவராஜும், அவருடைய ஆட்களும், `உங்க சாதி என்ன… அம்மா, அப்பா யார்… அவர்கள் என்ன செய்கிறார்கள்’ என்ற விவரங்களைக் கேட்டார்தானே?”

    ஸ்வாதி: “நான் கோயிலுக்கே செல்லவில்லை”.

    வழக்கறிஞர் நாராயணன்: “யுவராஜ், உங்களிடம்… `நீங்களும், கோகுல்ராஜும் காதலிக்கிறீர்களா’ என்று கேட்டாரா?”

    ஸ்வாதி: “இல்லை”.

    வழக்கறிஞர் நாராயணன்: “அப்போது, `நாங்கள் காதலிக்கவில்லை. இருவரும் கல்லூரி நண்பர்கள்’ என்று சொன்னீர்கள்தானே?”

    ஸ்வாதி: “நான் கோயிலுக்குப் போகவில்லை”.

    வழக்கறிஞர் நாராயணன்: “கோகுல்ராஜும் அதேபோலச் சொன்னாரா?”

    ஸ்வாதி: “தெரியாது”.

    வழக்கறிஞர் நாராயணன்: “கோகுல்ராஜை யுவராஜ் தரப்பினர் மிரட்டினார்களா?”

    ஸ்வாதி: “எனக்குத் தெரியாது”.

    வழக்கறிஞர் நாராயணன்: “யுவராஜோடு வந்த சந்திரசேகர் அவரது மனைவி ஜோதிமணி ஆகியோர் உங்களை மட்டும்  தனியாக கோயிலிலிருந்து அழைத்துச் சென்றார்களா?”

    ஸ்வாதி: “கோயிலுக்குப் போகவில்லை”.

    வழக்கறிஞர் நாராயணன்: “ `சந்திரசேகரும், ஜோதிமணியும்தான் என்னைக் கோயிலிலிருந்து அழைத்துச் சென்றார்கள்’ என்று போலீஸ் வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறீர்கள்?”

    ஸ்வாதி: “நான் கோயிலுக்குப் போகவில்லை”.

    வழக்கறிஞர் நாராயணன்: “சந்திரசேரரும், ஜோதிமணியும், `என்ன காதல் தகராறா’ என்று கேட்டார்களா?”

    ஸ்வாதி: “தெரியாது”.

    வழக்கறிஞர் நாராயணன்: “ `பஸ்ஸில் அழைத்துச் சென்றபோது எனக்கும் சேர்த்து சந்திரசேகர் டிக்கெட் எடுத்தார்’ என்று சொன்னது உண்மையா?”

    ஸ்வாதி: “தெரியாது”.

    வழக்கறிஞர் நாராயணன்: “கோகுல்ராஜை வெள்ளை நிற டாடா சபாரி காரில்தான் கடத்திச் சென்றார்களா?”

    ஸ்வாதி: “எனக்குத் தெரியாது”.

    வழக்கறிஞர் நாராயணன்: “நான், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Union Public Service Commission) தேர்வுக்காகப் படிக்கச் சென்றுவிட்டு மீண்டும் ஊர் வந்தபோது யுவராஜ் அனுப்பியதாக ஒருவர் என்னை வந்து அணுகினார். அந்த நபர், `உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் லஞ்சமாகக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். நீங்களும் யுவராஜும் ஒரே சாதிக்காரர்கள். அதனால் அவரை அடையாளம் காட்டிக் கொடுக்கக் கூடாது’ என்றார். அதற்கு நான், `கோகுல்ராஜ் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். அதனால் கண்டிப்பாக யுவராஜை அடையாளம் காட்டுவேன்’ என்று கூறினேன். அதற்கு அந்த நபர், `அப்படியென்றால் உன்னையும், உன் தங்கை மற்றும் உன் தாய் தந்தையரையும் கோகுல்ராஜ் அனுப்பிய இடத்துக்கே அனுப்பிவிடுவோம்’ என்று மிரட்டினார் என விசாரணையில் சொல்லி இருக்கிறீர்கள்”.

    ஸ்வாதி: “தெரியாது”.

    வழக்கறிஞர் நாராயணன்: “சேலம் மத்திய சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பின்போது ஒருவரை மட்டுமே அடையாளம் காட்டினீர்கள். பின்னிட்டு, போலீஸார் விசாரணையில் அந்த நபர் யுவராஜின் கார் டிரைவர் அருண் எனத் தெரிந்துகொண்டேன் என்பது சரிதானா?”

    ஸ்வாதி: “தெரியாது”.

    வழக்கறிஞர் கருணாநிதி: “காவல் துறையிலும், ஜே.எம். 2 நீதிமன்றத்திலும் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருக்கிறீர்கள்?”

    ஸ்வாதி: “அப்போது என் அம்மா, அம்மாவை போலீஸார் பிடித்து வைத்திருந்தனர். நீதிமன்றத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பதைப் போலீஸார் ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்தார்கள். அதைப் படித்துப் பார்த்து போலீஸாரின் நிர்பந்தத்துக்குப் பணிந்து நீதிமன்றத்தில் சொன்னேன்”.

    வழக்கறிஞர் கருணாநிதி: “அப்பா, அம்மாவை போலீஸார் காவல் நிலையத்தில் வைத்திருந்ததையும், போலீஸார் நிர்பந்தப்படுத்தி மிரட்டினார்கள் என்பதையும் ஏன் அப்போது நீதிமன்றத்தில் சொல்லவில்லை?”

    ஸ்வாதி: “ஆமாம். சொல்லவில்லை”.

    வழக்கறிஞர் கருணாநிதி: “உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை வெளிப்படையாக, எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் சொல்வதற்கான இடம் நீதிமன்றம் என்பது உங்களுக்குத் தெரியுமா?”

    ஸ்வாதி: “தெரியும்”.

    வழக்கறிஞர் கருணாநிதி: “இறந்துபோன கோகுல்ராஜ் தலித் இனத்தவர் என்பதாலும் நீங்களும், யுவராஜும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், யுவராஜ் தரப்பினர் உங்களைக் கேட்டுக் கொண்டதாலும் நடந்தவற்றை அனைத்தையும் மறைத்து எதிரிகளுக்கு ஆதரவாகப் பொய்யாகச் சாட்சியம் அளித்திருக்கிறீர்கள்?”

    ஸ்வாதி: “இல்லை. எனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லி இருக்கிறேன்”.

    இந்த விவாதங்கள் அனைத்தையும் போலீஸ்காரர் ஒருவர் தன் செல்போனில் ரெக்கார்டு செய்துகொண்டிருப்பதாகச் சந்தேகம் அடைந்த நீதிபதி, நீதிமன்ற காவலர்களைக் கூப்பிட்டு… ”அவருடைய செல்போனை ரெக்கவர் செய்து… அதில், ஏதாவது இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளதா” என்று பார்க்கச் சொன்னார். அந்த செல்போனில் இந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதால், செல்போன் அவரிடமே கொடுக்கப்பட்டது. பிறகு நீதிபதி இளவழகன், இந்நீதிமன்றம் 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.

    நீதிமன்றம் முடிந்த பிறகு ஸ்வாதியைப் பத்திரிகையாளர்கள் கண்களில் படாமல் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பத்திரமாக காரில் ஏற்றிவிட்டனர். ஸ்வாதியும், கோகுல்ராஜூம் இணைந்து எடுத்துக்கொண்ட பல படங்கள் இந்த வழக்குக்குப் பின்னர் வெளியாகின. ஏற்கெனவே போலீஸ் விசாரணையின் போது, யுவராஜூக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருந்தார் ஸ்வாதி. நிச்சயம் குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தருவேன் என ஸ்வாதி சொன்னதாகக் கூடச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் ஸ்வாதி பிறழ் சாட்சியம் அளித்திருப்பதற்கு பின்னணியில் ஏதோ ஒரு நிர்பந்தம் இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

    இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. வட்டாரத்தில் விசாரித்தபோது, “இதுபோன்று நாங்கள் ஆயிரம் கேஸ் பார்த்திருக்கிறோம். அரசு சாட்சியங்கள் எப்போதும் நிலையாக இருக்காது. மாறிவிடும் என்பது எங்களுக்கும் தெரியும். அதனால்தான் 164 ரெக்கார்டுபடி ஜே.எம். 2 நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு வாக்குமூலம் பெறவைத்தோம். இவ்வழக்கில், ஸ்வாதியைவிட முக்கிய ஆதாரமாக இருப்பது சி.சி.டி.வி. புட்டேஜ். அதிலுள்ளவர் ஸ்வாதிதான் என்று சென்னையில் உள்ள லேபில் ஆய்வுக்கு அனுப்பி உறுதிப்படுத்தியிருக்கிறோம். இதுபோன்ற பல அறிவியல்பூர்வமான ஆதாரங்களை மறுக்க முடியாது. `கோயிலுக்குப் போனதும், கோகுல்ராஜைச் சந்தித்ததும், இந்த வீடியோவில் இருப்பதும் நான்தான். மேற்கொண்டு எனக்கு எந்தச் சம்பவமும் தெரியாது’ என்று ஸ்வாதி சொல்லி இருந்தால் இவ்வழக்கு வலுவிழந்திருக்கும். ஆனால் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல இந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நீதிமன்றத்தைக் கேலிக்கூத்தாக்கி இருக்கிறார், ஸ்வாதி. நாங்கள், இதை ப்ளஸ் பாயின்ட் ஆகத்தான் பார்க்கிறோம். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனை கிடைக்க ஸ்வாதியின் பதில்கள் வலு சேர்த்திருக்கின்றன” என்றனர், மிகத் தெளிவாக.

    சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது கோகுல்ராஜ் வழக்கு.

    நன்றி : விகடன்

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleஅனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குங்கள் என்பது எல்.இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரை!
    Next Article கண்முன்பே கொல்லப்பட்ட காதல் கணவன்… நிலைகுலைந்த கர்ப்பிணி மனைவி.. அதிரவைத்த ஆணவக்கொலை!
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல்கள்: காரணம் என்ன?

    March 5, 2023

    Economics Of Oppression: The Growing Precarity Of Dalit Lives In India

    September 12, 2022

    Dalit boy beaten up by teacher for touching drinking water pot in Rajasthan school, dies

    August 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    Random Posts

    For the cause of Dalit women

    May 3, 2021

    கயர்லாஞ்சி

    November 14, 2006

    அசோகர் விஜயதசமி

    October 13, 2013

    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க ரயில் மறியல்: தலித், பழங்குடி அமைப்புகள் முடிவு

    June 27, 2018
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d