“டைம்ஸ் ஆப் இந்தியா”
அம்பேட்கர் ஆற்றல் மிககக, அருந்திறன் வாய்க்கப்பெற்ற பல்துறை வல்லுனராக விளங்கினார். இந்நாட்டிற்கும் அவருடைய வகுப்பு மக்களுக்கும் சிறந்த முறையில் அவர் தொண்டாற்றினார்.
`இந்துஸ்தான் னடைம்ஸ்”
அம்பேட்கர் இந்நாட்டிற்கு ஆற்றிய அருந்தொண்டுகள் அழியாத நினைவுச் சின்னங்களாக என்றும் வாழும். அவர் காலத்தில் வாழ்ந்தவர்களின் நெங்சங்களில் அவரிடம் இருந்த பல்துறை சான்ற பண்புகள் நிலைத்து நிற்கும்.
“ ஸ்டேட்ஸ் மேன்”
அம்பேட்கர் கொண்டிருந்த ஆழ்ந்த கல்வியறிவும், சட்டம், பொருளியல், சமூகவியல், தொழிலாளர் நலன், அரசியல் போன்ற பல்வேறுபட்ட குறைகளில் அவர் பெற்றிருந்த அனுபவமும் அவருக்கு இன்னும் நல்லிணக்கமான சூழ்நிலை வாய்க்கப் பெற்றிருப்பின் எழுத்துலுகிற்கு மேலும் ஒப்பரிய பங்களிப்பை ஆகியிருப்பார்.
“ நியூயார்க் டைம்ஸ்”
தீண்டப்படாத வகுப்பு மக்களின் விடுதலைக்காகப் போராடும் தலைவர் என்ற முறையில்தான் அம்பேட்கரை அனைவரும் அறிந்திருக்கிறார்கள்; மதிக்கிறார்கள், ஆனால் இந்தியாவிற்கான பெரும்பகுதிச் சட்டங்களின் உருவாக்கத்தில் அவர் மாபெரும் பங்களிப்பை அளித்திருக்கிறார் என்பது இன்னும் பரவலாக அறியப்படாமலிருக்கிறது.