அண்ணல் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலைக் குரல் வடிவில் தரும் ஒலி வட்டு இது. 26 தலைப்புகளில் அமைந்த அம்பேத்கரின் உணர்வு மயமான கருத்துகளை தோழர் யாக்கன் எழுச்சி மயமான குரலில் தந்துள்ளார். 1936_ல் லாகூரில் இருந்த இந்து மத சீர்திருத்த அமைப்பு ஒன்றின் மாநாட்டின் தலைமை உரையாற்ற அம்பேத்கர் அழைக்கப்பட்டார். ஆனால், அம்மாநாடு நடைபெறவில்லை. இம்மாநாட்டில் அம்பேத்கர் பேச இருந்த உரையில் சில திருத்தங்களைச் செய்யவேண்டும் என்ற மாநாட்டுக் குழுவினரின் கோரிக்கையை அம்பேத்கர் நிராகரித்தார். உரையை எள்ளளவும் மாற்றமுடியாது என்று கூறிவிட்டார். இதனாலேயே மாநாடு நடைபெறவில்லை. ஆனாலும்,இவ்வுரையை அம்பேத்கர் ஒரு நூலாக ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் வெளியிட்டார். ஒன்பது மொழிகளில் வெளிவந்துள்ள இந்நூல் இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு ஓர் உந்து சக்தியாக விளங்குகிறது. இந்து மதத்தின் கொடூர ஜாதி முறையை தோலுரிக்கும் இந்நூலை காலத்தின் தேவைக்கேற்ப ஒலிப் புத்தக வடிவத்தில் கொண்டு வந்தது www.ambedkar.in அமைப்பு.
Author: Sasikumar
1935-ஆம் ஆண்டு இதே நாளில், இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க சட்டக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பம்பாய் (தற்போது மும்பை) அரசு சட்டக் கல்லூரியின் முதல்வராக டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக, டாக்டர் அம்பேத்கர் 1928-ஆம் ஆண்டு முதல் அதே கல்லூரியில் சட்டப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். சட்டத்துறையில் அவர் கொண்டிருந்த அசாத்தியப் புலமை, கல்விசார் சாதனைகள் மற்றும் ஒரு பொது அறிவுஜீவியாக அவர் பெற்றுவந்த வளர்ந்துவரும் செல்வாக்கு ஆகியவற்றிற்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாகவே இந்த நியமனம் அமைந்தது. 1935-ஆம் ஆண்டிற்குள்ளாகவே, டாக்டர் அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பொருளாதாரப் பள்ளி (London School of Economics) ஆகியவற்றிலிருந்து முனைவர் பட்டங்களைப் பெற்றிருந்தார்; ஒரு முன்னணி சட்ட வல்லுநராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்தார்; மேலும் ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் மிக முக்கியமான போராளிகளில் ஒருவராகவும் அவர் உருவெடுத்திருந்தார். முதல்வராகப் பொறுப்பு…
இவர் பாபா சாகேப் (“மதிப்பிற்குரிய தந்தை”) என்ற புனைப்பெயரால் அடைமொழி இட்டு அழைக்கப்படுகிறார். அம்பேத்கர் பிரித்தானிய இந்தியாவில் மாவ் எனுமிடத்தில் (இப்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ளது) 14 ஏப்ரல் 1891-இல் ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அம்பேத்கர், தற்போதைய மகாராட்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இராம்ஜி சக்பால் பிரித்தானிய இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். https://www.youtube.com/watch?v=cVcS6Dg-pEk ZEE TAMIL தொலைகாட்சியில் https://www.youtube.com/watch?v=mUa8gQonse4 டானாகாரன் திரைபடத்தில் அம்பேத்கரின் பாடல் ஒன்று.. அம்பேத்கர் காட்சி அம்பேத்கர் திரைபட காட்சி எப்போதும் பாபாசாகேப் பே எங்களின் பாதுகாப்பு
அனுபவம்தான் பெரிய ஆசான். அனுபவத்தின் வாயிலாக கல்வி கற்பவனே சிறந்த மனிதனாவான் என்பது ஒரு தத்துவக் கோட்பாடு. அதற்கேற்ப தன் வாழ்நாட்களை நீக்கமற நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்த பெருமை திரு. கன்சிராம் அவர்களைச் சாரும். அவர் ஓர் அரசியல்வாதி, பௌத்த அறிஞர், சமூக செயற்பாட்டாளர், சாதியை முற்றும் முழுவதுமாக அழித்தொழிக்க எண்ணிய மாமனிதர், அம்பேத்கரின் சிந்தனையாளர், வகுப்புவாத சக்திகளை எதிர்த்து களமாடிய களப்போராளி, பகுஜன் சமாஜ் கட்சியை தோற்றுவித்தவர், தேசியத்தலைவர், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர் இப்படி அவரின் பெருமையை அடுக்கிக்கொண்டே செல்லலாம் ஆனாலும் சிறந்த மனிதன் என்பதைத் தவிர வேறு எந்த படமும் அவரை அலங்கரிக்காது. திரு. கன்சிராம் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் ரூட் நகர் மாவட்டத்தில் 1934 மார்ச் திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார். அவர் ஒரு சீக்கிய இனத்தைச் சார்ந்தவர். ஆனாலும் தன் வாழ்நாள் எல்லாம் சனாதன கோட்பாட்டை வலியுறுத்தும் சாதி மேலாதிக்கத்தை எதிர்த்தும், ஒடுக்கப்பட்ட மக்களின்…
இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் என்ன? இதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு. தங்களுடைய நாடு ஏற்கனவே ஒரு ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று பெரும்பாலான இந்தியர்கள் மிகவும் பெருமையாகப் பேசுகின்றனர். வெளிநாட்டினர்கூட, இந்தியாவுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் விருந்துகளில் மாபெரும் இந்தியப் பிரதமர் பற்றியும், மாபெரும் இந்திய ஜனநாயகம் பற்றியும் பேசுகின்றனர். குடியரசு (Republic) இருந்தால், அங்கு ஜனநாயகம் (Democracy) தழைத்தோங்கும் என்றொரு முடிவுக்கு எல்லோரும் வந்து விடுகின்றனர் என்பது இதன் மூலம் விளங்குகிறது. மேலும், வயது வந்தவர்கள் வாக்களிப்பதன் முலம் உருவாக்கப்படும் நாடாளுமன்றத்தில், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநதிகள், சில சட்டங்களை உருவாக்குவதன் மூலம் அங்கு ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் கருதப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், ஜனநாயகம் என்பது அரசியல் சார்ந்த ஒன்றாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா? அல்லது ஜனநாயகம் இந்தியாவில் இல்லையா? உண்மை நிலை என்ன? ஜனநாயகத்தை குடியரசுடனும், நாடாளுமன்ற அரசாங்கத்துடனும் இணைத்துப்…
ரமாபாய் அம்பேத்கர் 1898 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி பிறந்தார்.(ரமாயி அல்லது தாய் ரமா என்றும் அழைக்கப்படுகிறார்) அவரது அசைக்க முடியாத ஆதரவும் தியாகங்களும், உயர்கல்வி பெறுவதற்கும், அவரது உண்மையான திறனை அடைவதற்கும் உதவியதாக டாக்டர் அம்பேத்கர் பாராட்டியுள்ளார். பல வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களுக்கும் அவர் பொருளாக உள்ளார். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கையில் அவர் அளித்த ஆதரவையும் பங்களிப்பையும் கௌரவிக்கும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள பல அடையாளங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரமாபாய் 1906 ஆம் ஆண்டு பைகுல்லாவின் காய்கறி சந்தையில் மிகவும் எளிமையான விழாவில் அம்பேத்கரை மணந்தார். அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்: நீண்ட கால நோயால் ரமாபாய் 1935 மே 27 அன்று காலை 9 மணிக்கு இறந்தார். அம்பேத்கரை மணந்து 29 ஆண்டுகள் ஆன நிலையில். 1941 இல் வெளியிடப்பட்ட டாக்டர் அம்பேத்கரின்…
அம்பேத்கரை முழுமையாகப் படித்தவர்’ அம்பேத்கர் தலித் பவுன்டேசன் என்ற அமைப்பு துவங்கி செயல்பட்டு வந்தார்,தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தீவிரமாக பேசி பல சட்ட போராட்டங்களை நடத்தியவர்,தமிழ்நாட்டில் புத்த விகாரை நிறுவியவர்,17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த சமத்துவ தலைவர். மேலும், “அம்பேத்கரின் எழுத்துகளை முழுமையாக வாசித்தவர் , யாராவது அவரைப் பார்க்கச் சென்றால், அம்பேத்கரின் நூல்களை எடுத்துக்காட்டி கருத்துகளை முன்வைப்பார்,” அதில் இருந்து பாபாசாகேப் என்ன சொன்னார் என்பதை படித்துகாட்டி விளக்கமளிப்பார்!தேடி வந்தவர்களுக்கு உடனடியாக பிரச்சனையை தீர்த்துவைப்பார்,படிப்பு உதவியாகட்டும்,சட்டபோராட்டமாகட்டும் இன்னும் இப்படி பல உதவிகளை செய்து வந்தார் அண்ணன் ஆம்ஸ்டாங் அவர்கள்! https://www.youtube.com/watch?v=8EZ2LiaO6h4&list=RD8EZ2LiaO6h4&start_radio=1
கதிரவன் ஒளி விழும் உலகின் நிலமனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் முடிவு 1947ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு, தனது மாட்சிமையைக் காத்துக் கொள்ளவும் தனக்கென தனித்த அரசமைப்பு அடிப்படையிலான அரசை நிர்மாணித்துக் கொள்ளவும் கடுமையான நிர்பந்தத்தில் துணைக்கண்டம் அப்போது நின்றது. சுதந்திர இந்தியாவின் தேச நிர்மாணம் என்பது அவ்வளவு எளிதான காரியமா? எந்தவித முன்பயிற்சியுமற்ற தலைவர்கள் மாபெரும் இந்தியக் கூட்டரசை நிர்மாணிக்க பெரும் முயற்சிகளை எடுத்தார்கள் என்று நமது வரலாறு நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் அந்த வரலாற்றில் புரட்சியாளர் அம்பேத்கரின் பங்கு என்ன என்பதைப் பற்றி மிக லாவகமாக மறைத்திருக்கிறது. மறைத்தது ஆதிக்கச் சாதி புத்திதான். ஒருவரின் பங்களிப்பை நன்றியோடு நினைவுக்கூர்வது ஒரு நேர்மையுள்ள சமூகத்திற்கு அழகு. அந்த அழகு இந்தியச் சமூகத்திற்கு என்றைக்கும் வாய்த்ததில்லை. சேரிகளில் உழலும் தலித்துகளின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டு, எந்தவித உறுத்தலும் இன்றி சுரண்டிப் பிழைக்கும் சாதி இந்து…
பொதுவாக கிராமங்களில் நிலவும் சிக்கலான சமூக அமைப்பு அதன் அரசியல் பொருளாதரத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள இந்தியாவில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 12,000க்கும் அதிகமான கிராம ஊராட்சிகள் உள்ளன. சாதி ஆதிக்கத்தின் அதிகார படிநிலைகளை தக்கவைக்கும் இடமாக இந்திய கிராமங்களை அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். “ சாதிய குறுகிய எண்ண மனோபாவம் கொண்ட பாகுபாடுகளின் தொட்டி” ( What is a village but a sink of localism, a den of ignorance, narrow mindedness, caste and communalism) ஆக கிராமங்கள் செயல்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இந்த 21ம் நூற்றாண்டிலும் சாதி வேறுபாடின்றி சமூக நல்லிணத்துக்கடன் வாழக்கூடிய கிராமங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இப்படியிருக்க விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவில் அமைந்துள்ள பரையந்தாங்கல் கிராமம் சமூக நீதி பேசும் இடமாக மாறியிருக்கிறது. சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் முன்மாதிரி கிராமமாக உயர்த்த வேண்டுமென பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றியதன் காரணமாக மத்திய அரசு ஐஎஸ்ஓ தர சான்று அளித்து…
பெங்களூரு: கர்நாடகாவில் சாதி, மத, ஆணவ கொலைகளை தடுக்கும் நோக்கில் தனிச்சட்டம். கர்நாடக மாநிலத்தில் அண்மைக்காலமாக சாதி, மதம் கடந்து காதல் திருமணம் செய்யும் தம்பதிகள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மஹாதேவப்பா உள்ளிட்டோரும் முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை தயாரிக்கும் படி சித்தராமையா சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார். இதற்கான சட்ட மசோதா கடந்த மாதம் தயாரான நிலையில், அதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, ஒப்புதல் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது 10 ஆண்டுகள் வரை தண்டனை இந்த சட்ட மசோதாவில், ‘‘18 வயதான பெண்ணும், 21 வயதான ஆணும் தங்களின் விருப்பத்தின்பேரில் திருமணம் செய்துகொள்ள முழு உரிமை இருக்கிறது. அவர்களை சாதி, மதம், மொழி, வர்க்கம், இனம், ஊர் ஆகியவற்றின் பெயரில் பாகுபாடு காட்டி, கவுரவத்தின் பெயரில் திருமணம் செய்வதை தடுக்கவோ,…