Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»செய்திகள்»ஆணவ கொலைக்கு எதிராக கர்நாடகாவில் தனிச் சட்டம்: 10 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம்!
    செய்திகள்

    ஆணவ கொலைக்கு எதிராக கர்நாடகாவில் தனிச் சட்டம்: 10 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம்!

    SasikumarBy SasikumarJanuary 23, 2026No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பெங்களூரு: கர்நாடகாவில் சாதி, மத‌, ஆணவ கொலைகளை தடுக்கும் நோக்கில் தனிச்சட்டம்.

    கர்நாடக மாநிலத்தில் அண்மைக்காலமாக சாதி, மதம் கடந்து காதல் திருமணம் செய்யும் தம்பதிகள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மஹாதேவப்பா உள்ளிட்டோரும் முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை தயாரிக்கும் படி சித்தராமையா சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார். இதற்கான சட்ட மசோதா கடந்த மாதம் தயாரான நிலையில், அதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, ஒப்புதல் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது

    10 ஆண்டுகள் வரை தண்டனை இந்த சட்ட மசோதாவில், ‘‘18 வயதான பெண்ணும், 21 வயதான ஆணும் தங்களின் விருப்பத்தின்பேரில் திருமணம் செய்துகொள்ள முழு உரிமை இருக்கிறது.

    அவர்களை சாதி, மதம், மொழி, வர்க்கம், இனம், ஊர் ஆகியவற்றின் பெயரில் பாகுபாடு காட்டி, கவுரவத்தின் பெயரில் திருமணம் செய்வதை தடுக்கவோ, தாக்கினாலோ, கொலை செய்தாலோ குற்றமாகும். உயிருடன் மகளுக்கோ, மகனுக்கோ இறுதி சடங்கு, திதி போன்ற சடங்குகள் செய்வது, மன‌ரீதியாக தொல்லை கொடுப்பது, மிரட்டல் விடுப்பது, குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைப்பது போன்றவையும் இந்த சட்டத்தின்படி குற்றமாகும்.

    ஆணவக் கொலையில் ஈடுபடும் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    அபராதமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை விதிக்கப்படும். காதலர்கள் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி, காவல் நிலையத்தில் புகார் அளித்த 6 மணி நேரத்துக்குள் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – தொடர்பு எண்கள்
    Next Article அம்பேத்கரின் கனவு கிராமம்!வியந்து பார்த்த மத்திய அரசு!தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு கிராமமா?
    Sasikumar
    • Facebook

    அம்பேத்கரியர், கற்பி அறக்கட்டளையின் நிறுவனர். அம்பேத்கர்.இன் இணையதளத்தின் உறுவாக்கத்திற்கு காரணமானவர்களின் ஒருவர்.

    Related Posts

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    அம்பேத்கரின் கனவு கிராமம்!வியந்து பார்த்த மத்திய அரசு!தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு கிராமமா?

    January 23, 2026

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – தொடர்பு எண்கள்

    January 18, 2026

    Comments are closed.

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.