Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ஆதவன் தீட்சண்யா
எழுத்தாளர் கெளரவ ஆசிரியர்.: புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழ் ;துணை பொதுச்செயலாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞ்ர்கள் சங்கம் ;மாநிலச் செயலாளர்: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன்ணி
தலித்துகளின் விடுதலைக்குப் பாடுபட்டவர், சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்தவர். இவை இரண்டும்தான் அதிகம் அறியப்பட்ட அம்பேத்கரின் இரண்டு பக்கங்கள். இவை அம்பேத்கரின் முக்கியமான பங்களிப்புகள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவரது பணிகளும், வாழ்வும் மேலும் பல பரிமாணங்களை கொண்டவை. அமைச்சராக இருந்து பிரம்மாண்ட நீராதாரத் திட்டங்களை வகுத்தது, நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக இன்றும் பொருந்தும் கருத்துகளை வலியுறுத்தியது முதல் எட்டு மணி நேர வேலை உரிமை இந்தியாவில் அமலாகக் காரணமாக இருந்தது வரை பரந்த சமூகம் பலன்பெற அவர் செய்தவை பல. அவரது பிறந்த நாளை ஒட்டி அந்தப் பணிகளைப் பற்றிய ஒரு பார்வை. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை, அதிகாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்கு அம்பேத்கரின், அம்பேத்கரியத்தின் பங்களிப்பு என்ன? சாதியோ பொருளாதார நிலையோ ஒருவரின் கற்கும் ஆர்வத்தையும் அறிவார்ந்த சாதனைகளையும் தடுத்துவிட முடியாது என்கிற மிகப்பெரும் நம்பிக்கையே அவரது வாழ்க்கை நமக்குத் தரும்…
“உலகிலுள்ள அனைத்துமே பார்ப்பனர்களின் உடமையாகும். பார்ப்பனனது மிக உயர்ந்த பிறப்பின் காரணமாக உண்மையில் அவனே எல்லாவற்றுக்கும் உரியவனாகிறான்….” – மனுஸ்மிருதியின் இந்த வாசகம் சமூகத்தின் எல்லா வளங்களையும் வசதிகளையும் பார்ப்பனனுக்கு மட்டுமே தாரை வார்த்தது. மற்றவர்களை வெறுங்கையர்களாய் தாழ்த்தியது. உடலுழைப்பில் ஈடுபடாமலும் தகுதி திறமை எதையும் நிரூபிக்காமலும் பார்ப்பனனாய் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு தேவையான எல்லாமும் கிடைத்தன. வாழ்க்கைத் தேவைகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான விவசாயம் தொழில் சார்ந்த அறிவைக் கொண்டிருந்த உழைப்பாளி மக்களை கீழ்மைப்படுத்த, வேதங்களை கற்பதும் ஓதுவதுமே ஆகச்சிறந்த அறிவென உயர்த்தினர் பார்ப்பனர்கள். வேதத்தின் முப்பதாயிரம் வரிகளை 2496 நாட்களில் படிக்கின்றன பார்ப்பனக் குழந்தைகள். அதாவது நாளொன்றுக்கு 12 வரிகள் படிப்பதைத்தான் தங்கள் சாதியால் மட்டுமே முடியுமென்று வேலி கட்டிக் கிடந்தனர். மன்னர் ஒரு பெண்ணை தன்னுடைய மனைவியாக தேர்ந்தெடுத்ததும் பிராமணர்களில் மிகச் சிறந்தவனை மிகவும் தகுதியானவனை அழைத்து தன்னுடைய மனைவியைக் கன்னிக்கழிக்கும்படி கேட்கிறான்… அதற்காக அவனுக்கு…
அதிகாலை 2.31 மணி. அதிகாரபூர்வமாக கண் விழிப்பதற்கான அலாரம் ஒலிப்பதற்கு இன்னும் 29 நிமிடங்களிருந்தன. அதற்குள்ளாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது. விழித்ததுமே அவனுக்கு எழுந்த முதல் சந்தேகம், தூங்கினோமா என்பதுதான். இமைகளின் உட்புறத்தில் கங்கு மூட்டித் தீய்ப்பதுபோல கண்களில் அப்படியொரு எரிவு. தூக்கத்தின் போதாமை, உடலெங்கும் அணுவணுவாக நகரும் நோவாகித் தன்னைப் பெரிதும் வதங்கச் செய்திருப்பதாக உணர்ந்தான். நள்ளிரவு 12 மணிக்கு வேலை முடிந்ததும் விர்ரென வண்டியை முறுக்கிக்கொண்டு வந்தும்கூட வீடு சேரும்போது இன்றைக்கும் 12.32 மணி ஆகிவிட்டிருந்தது. நாடு முழுவதும் வேலை முடிவது அந்நேரம்தான் என்பதால், சாலைகளில் மிதமிஞ்சிய போக்குவரத்து நெரிசல். திருத்தியமைக்கப்பட்ட புதிய வேலைநேரம் அமலுக்கு வந்த கடந்த 18-ம் தேதியிலிருந்து இதே அக்கப்போர்தான். வேலைக்கு வரும்போதும் திரும்பும்போதும் சாலையின் ஒவ்வோர் அங்குலத்திலும் மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. புகையும் அழுக்கும் படிந்த உடம்பை நசநசப்புத் தீரக் கழுவிக்கொள்ளவும் முடியாத அசதி. தூளியில் உறங்கும் குழந்தையின் முகத்தைக்கூட பார்க்கத் தோன்றவில்லை. சாப்பிட்டு…
தருமபுரி மாவட்டத்தில் மூன்று தலித் ஊர்கள் கொள்ளையழிப்புக்கு ஆளாகி ஒன்றரை மாதங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் அதுபற்றிய பேச்சு இன்னும் ஓயவில்லை. அழிக்கப்பட்ட விதமும் அழிமானத்தின் அளவும் பலரையும் அங்கு கண்குவிக்கச் செய்திருக்கிறது. வன்கொடுமைகள் பரவலாக வெளித்தெரிகிற போதெல்லாம் சாதிய ஒடுக்குமுறைக்கும் பாரபட்சங்களுக்கும் முடிவு கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்பதுபோல கொந்தளிக்கிறவர்கள் பின்பு தணிந்தடங்கி காணாமல் போய்விடுகிற வழக்கம் இவ்விசயத்தில் உதவாது என்பது பலருக்கும் தெரிந்திருக்கிறது. தொடர்ந்து களத்தில் இருந்தேயாக வேண்டிய கட்டாயத்திற்குள் தாங்கள் தள்ளப்பட்டிருப்பதை சாதி மறுப்பாளர்களும் சமத்துவ விரும்பிகளும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் மெதுவாகவேனும் உணரத்தலைப்பட்டிருக்கிறார்கள். அப்படியொரு கட்டாயத்திற்குள் நெட்டித் தள்ளி அவர்களது நிகழ்ச்சிநிரலை முடிவு செய்கிறவர்களாக சாதியவாதிகள் மாறியிருக்கிறார்கள். அழித்தொழிப்பை நியாயப்படுத்த அவர்கள் வெளிப்படையாக சொல்லிக் கொள்ளும் காரணங்களைவிடவும் வலுவான காரணங்கள் அவர்களது ஆழ்மனதிலும் இயல்புணர்ச்சியிலும் படிந்திருக்கின்றன. அவற்றை நிறுவ முடியாது, ஆனால் யூகிக்கலாம் அல்லது உணரலாம். அவர்களது சாதிப் பற்றானது தலித் விரோதத்தை ஆதாரமாக கொண்டுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த விரோத…
[dropcap bgcolor=”#1e73be” style=”dropcap2″]1.[/dropcap] “என்னைப் பொறுத்தவரை இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது. ஒன்று – பிராமணியம். இரண்டு- முதலாளித்துவம்” என்று 1938 பிப்ரவரி 12,13 தேதிகளில் மன்மத் நகரில் நடைபெற்ற கிரேட் இந்தியன் பெனின்சுலா ரயில்வேயில் பணிபுரிந்த ஒடுக்கப்பட்ட தொழிலாளர் மாநாட்டின் தலைமையுரையில் அம்பேத்கர் விடுத்த இந்த அறைகூவல் இன்றளவும் மிகுந்த பொருத்தப்பாட்டுடன் நிலைத்திருக்கிறது (அ.தொ.நூ.37 பக்- 227). இதன்பொருள் தொழிலாளர்களை ஒரு வர்க்கமாக அணி திரட்டுவதில் அக்கறையுள்ளவர்கள் அம்பேத்கரின் இந்த அறைகூவலுக்கு இன்னும் செவிசாய்க்கவில்லை என்பதே. அம்பேத்கர் முதன்மைப்படுத்திக் காட்டும் இரு பகைமைச் சக்திகளும் வெவ்வேறானவை என்று புரிந்துகொள்ளத் தேவையில்லை. பிராமணியமும் முதலாளித்துவமும் ஒன்றை யொன்று தாங்கி வளர்க்கும் உரமாகவும் களையாகவும் இருக்கின்றன என்பதை அம்பேத்கர் அனேக சந்தர்ப்பங்களில் விளக்கிச் சொல்லியிருக்கிறார். ஆகக்கொடிய சுரண்டல் சக்தியான முதலாளித்துவத்திற்கு இணையாக அவரால் முன்னிலைப்படுத்தப்படும் பிராமணியம் என்பதுதான் என்ன? இன்னும் யானை தன்னியல்பில்தான் இருக்கிறது, வியாக்கியானம் செய்கிறவர்கள் தான் குறைந்தபாடில்லை…