Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
தமிழ்நாட்டையே அவமானப்படச் செய்த திண்ணியம் வன்கொடுமை வழக்கும் மிக மோசமான முறையில் முடிவுக்கு வந்தது. திருச்சி அருகேயுள்ள திண்ணியம் என்ற கிராமத்தில், தொகுப்பு வீடு ஒதுக்கித் தர கள்ளர் சாதியைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராஜலட்சுமியின் கணவர் சுப்பிரமணியனிடம் ரூபாய் இரண்டாயிரத்தைத் தலித் சமூகத்தைச் சார்ந்த கருப்பையா என்பவர் லஞ்சமாகக் கொடுத்திருந்தார். இரண்டு ஆண்டுகள் ஆகியும், வீடு ஒதுக்கித் தரவில்லை என்பதால், கருப்பையா தான் கொடுத்தத் தொகையை திருப்பித் தருமாறு பலமுறை சுப்ரமணியனிடம் கேட்டு கெஞ்சியுள்ளார். தொகை யைத் திருப்பித் தர ராஜலட்சுமியும், சுப்பிரமணியனும் மறுத்ததினால், பணத்தை திருப்பித் தரச் செய்யும்படி கிராம மக்களுக்கு அறிவிப்புச் செய்யும் நோக்கத் தோடு தண்டோரா அடித்துத் தெரியப்படுத்தினார் கருப்பையா. அப்போது அவருடன் ராமசாமி, முருகேசன் என்ற இரு தலித் சமூகத்தவரும் சென்றுள்ளனர். அதை அறிந்த ராஜலட்சுமியும், சுப்பிரமணியனும் தங்களைக் கேவலப்படுத்தி விட்டதாக ஆத்திரம் கொண்டு, கருப்பையாவை வீட்டுக்கு அழைத்து வரச் செய்து கடுமையாகத்…