Author: யாழன் ஆதி

யாழன் ஆதி தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர்களில் ஒருவர். தலித் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாக செயல்பட்டுவரும் யாழன் ஆதி தலித் முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதிவருகின்றார்.இசை உதிர் காலம், செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா, போதலின் தனிமை, காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும், யாருமற்ற சொல், மனிதம் கொன்ற சாதியம், ஆம்பூர் (ஊர் வரலாற்று நூல்) ஆகிய படைப்புகளை வெளியிட்டுள்ளார். தம்மபதம் என்னும் புத்தரின் போதனைகளை ஆங்கிலம் வழி தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஒவ்வொரு தருணத்திலும் மானுடத்திற்குத் தேவையான பணிகள் எங்கேனும் ஒரு மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட பணிகள்தான் உண்மையான மக்கள் பணியாளர்களுக்கும் மக்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கக் கூடியனவாக இருக்கும். அத்தகையதொரு பணியை தொடர்ந்து  ஆற்றிவருகிறார் மா. அமரேசன். அமரேசன்  அடிப்படையில் ஒரு தொழில் நுட்பவியலாளர். “நடுங்கும் நிலம் நடுங்கா மனம்’ என்னும் அவருடைய கட்டுரைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்திருக்கிறது. கட்டுரைகள் என்ற அளவில் இல்லாமல் அவை மக்கள்  பிரச்சினையை விரிவாகப் பேசுகின்றன. தொழிற்கல்வி முடித்த அமரேசன் இளம் வயதிலேயே மார்க்சியம், தமிழ்த்தேசியம் குறித்து ஆழமாகக் கற்றிருக்கிறார். இவருடைய தீவிர வாசிப்பு, பொதுவாக இவரை மற்றவர்களிடமிருந்து விலக்கியே வைத்திருக்கிறது. இவர் பணியாற்றிய நிறுவனத்திலும் இறக்குமதியாகும் எந்திரங்களைக் குறித்த அதிகமான செய்திகளை அவர் தெரிந்து வைத்திருந்ததால், தனது மேலதிகாரிகளிடம் கெட்டபெயர் வாங்குபவராகவே இருந்திருக்கிறார். இதுவே, அவரை மக்கள் பணிக்கு அழைத்து வந்தது. அமரேசனின் கட்டுரைகள் மிகவும் அவசியமானவை. “புலப்படாத் தண்ணீர் வணிகம்’ என்னும் கட்டுரை…

Read More

பழங்குடிச் சமூகங்கள் குறித்த ஆய்வும், அவை குறித்த இனவரைவியலும் இல்லாத சூழலில் குறவர்கள் திணைவழிச் சமூகமாக இன்றுவரை அறியப்படுகின்றனர்.இம்மக்களின் இன வரைவியலை, தன் பட்டத்திற்கான ஆய்வாக எடுத்துக் கொண்டு – விளிம்பு நிலை சமூகங்களின் அறியப்படாத வரலாறுகளைத் தொகுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் முக்கியப் பங்கினை ஆற்றியவர் மணி கோ. பன்னீர் செல்வம். காலனிய ஆதிக்கம் அழிந்து போன இக்காலங்களிலும் குற்றப்பரம்பரையாகப் பார்க்கப்படும் குறவர் சமூகத்தின் வரைவியலை வரைந்ததன் மூலம், தன் அறிவால் மானுட சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய அரும்பணியை மிகவும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் செய்திருக்கிறார் பன்னீர். திண்டுக்கல் மாவட்டம் சில்க்வார்பட்டியில் பிறந்து தஞ்சையில் தொடக்கக் கல்வியும், பூண்டி புஷ்பம் கல்லூரியில் இளங்கலையும், கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் முதுகலையும் பயின்றார் பன்னீர் செல்வம். பிறகு தன் ஆய்வுப் படிப்பை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும், முனைவர் படிப்பை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறைத் தலைவர் பேரா. ஆ.தனஞ்செயன் அவர்களிடம்…

Read More

“உங்க புத்தகம் படிச்சேன். கதைகள்ல சத்தம் அதிகமாக இருக்கிறதே!” – இது அவருடைய “பம்பாய் கதை’களைப் படித்த ஒருவரின் விமர்சனம். “ஆமா எங்க வாழ்க்கை சத்தமாக இருக்கு. அதனால்தான் என் கதைகளும் அப்படியிருக்கு. உங்கள ஒரு ஊசியால குத்துனா, நீங்க ஆலாபனை பண்ணுவீங்களா, இல்ல கத்துவீங்களா? எங்கள் வாழ்க்கை குத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அதனால் எங்கள் எழுத்துகள் சத்தம் போட்டுக் கொண்டே இருக்கின்றன” – இது, அந்த விமர்சனத்திற்கு அவர் அளித்த பதில். இந்த பதில்தான் ஒட்டுமொத்த தலித் இலக்கியத்தின் குரலாகவும் இருக்க முடியும். இந்த பதிலை இவ்வளவு அழகாக அனைவருக்கும் புரியும் வகையில் சொன்னவர் – கவிஞர், கதையாளர், சிறு பத்திரிகையாளர் எனப் பன்முகங்களைக் கொண்ட அன்பாதவன்! அன்பாதவன் – தலித் இலக்கியச் சூழலில் முக்கியமானவர். அவருடைய கவிதைகளைப் போலவே, அவருடைய பணிகளும் தலித் விடுதலைக்கானவை. பத்தாம் வகுப்பு படிக்கிற காலத்திலேயே நூலகத்தைப் பயன்படுத்தும் பழக்கம் அவருக்கு இருந்தது. அதனால்…

Read More

“போதி மரத்தடியில் பிள்ளையார் சிலை பார்ப்பனிய வெற்றி” “தடா’ நல்லரசன் கவிதை இது. ஓர் அதிர்ச்சி அலை உங்களுக்குள் ஓடியிருக்கலாம். இப்படி பெயருக்கு முன்னால் “தடா’ என்றும் “மிசா’ என்றும் வைத்துக் கொள்வது தமிழ்நாட்டில் புதிதல்ல. “மிசா’வில் கைதானவர்கள் “மிசா’ என்றும் “தடா’வில் கைதானவர்கள் “தடா’ என்றும் முன்னொட்டுகளை வைத்துக் கொள்வது அரசியல் செயல்பாடு. அது, இலக்கியச் செயல்பாடாகாது. ஆனால், கைதும் சிறையும் அவரை வருத்தியபோதெல்லாம்கூட, கவிதையை விடாமல் அவர் தொடர்கிறார் என்னும்போது அங்கே இலக்கியம் வாழ்கிறது. பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர். தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய சிறைகளிலும் அடைக்கப்பட்டவர். “விதைநெல்’, “வாக்குமூலம்’, “தழும்புகள்’, “திசைகள்’, “முகங்கள்’ ஆகிய அய்ந்து தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். எல்லா கவிதைகளையும் சிறையில்தான் எழுதியிருக்கிறார். தூக்கம் வராத இரவுகள், கொசுக்கடிகள், எதையாவது எழுதவேண்டும் என்னும் ஆர்வம் இவையெல்லாம் அவரை எழுத வைத்திருக்கிறது. அதனால்தான் அவருடைய நூல்களிலும் வீணான எழுத்து என்று ஒன்றுகூட இல்லை. காரணம், அவருடைய நேர்மை; சாதி,…

Read More

தனி இருட்டு – தய். கந்தசாமியின் ஒரே தொகுப்பு. ஆனால், தலித் இலக்கியம் குறித்த எந்த ஆய்வானாலும் இவருடைய “தனி இருட்டு’ தொகுப்பிலிருந்து தரவுகளை எடுத்தாளாமல் அந்த ஆய்வு நிறைவடையாது! அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது அவருடைய எழுத்து. தான் எந்தக் கூட்டத்தில் பங்கேற்றாலும் தனக்கான கோரிக்கையை, உரிமையை அடையாமல் அவர் சமரசமானதில்லை. அப்படியானதொரு கலகக்காரர் அவர்! சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும்போது அவர் இங்கு நிகழ்த்திய இலக்கியக் களங்கள், சாதி ஒழிப்பு இலக்கியமான தலித் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தன. எந்தவொரு தொகுப்பிலும் உள்ள முதல் கவிதை, அந்த எழுத்தாளனின் கவிதை கோட்பாட்டைப் பேசிவிடும். “உயிராசுவாசம்’ என்ற கந்தசாமியின் முதல் கவிதையும் அப்படித்தான் பேசுகிறது. தொகுப்பு வெளிவந்த 2000 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் முக்கிய தலித் பிரச்சினைகளான மேலவளவு, பாப்பாபட்டி, மலந்திணிக்கப்பட்ட கொடுமை ஆகியவை நிகழ்ந்தபோது எழுதப்பட்டவை. எழுதவே முடிந்ததில்லை எல்லாரும் மெச்சும்படியான சொல்லொன்றையும் – எனத் தொடங்கி மலம்…

Read More

கருங்கல்லின் மீது வரையப்பட்ட பழங்குடி மக்களின் ஓவியங்களைப் போல, காலத்தால் அழிக்க முடியாத வகையில் தலித் எழுத்துகளை மாற்றுவது – அவ்விலக்கியங்களின் மீது நடத்தப்படும் ஆய்வுக் கூறுகளே. ஆய்வுகள், இலக்கியத்தை அழியாமல் காக்கின்றன என்ற நிலையிலிருந்து உயர்ந்து, அவற்றைச் செழுமைப்படுத்தவும் பயன்படுகின்றன. அது மட்டுமல்ல, இலக்கியங்களைப் பாடத்திட்டமாக மாற்றும் வல்லமை ஆய்வுகளுக்கே உண்டு. அத்தகைய ஆய்வுகளை ஊக்கப்படுத்தி, தலித் எழுத்துகளின் மீது நடத்தப்படுவதற்கும், தானே ஆய்வாளராக இருந்து வரலாறுகளை எடுத்துத் தருவதற்கும் – தன் நேரம் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் பேராசிரியர் க. ஜெயபாலன். சென்னை நந்தனம் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையில் பணியாற்றும் ஜெயபாலன், நுண்ணிய ஆய்வுகளை அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர் போன்ற ஆளுமைகளைக் கடந்தும் நடத்திக் கொண்டிருப்பவர். புகழின் வெளிச்சத்திற்கு வராத முக்கிய தலித் எழுத்தாளர்களைப் பற்றி ஆய்வு செய்து, அவர்களின் எழுத்துகளை வெளியிட்டுக் கொண்டிருப்பவர் ஜெயபாலன். அண்மையில் பூங்குயில் வெளியீடாக வெளிவந்திருக்கும் “மாமதுர கவிஞர் வீ.வே. முருகேச…

Read More

“ஆகப்போவது ஒன்றுமில்லை எல்லா எத்தனமும் வீணேயெனினும் முளையொன்றோடு பிணைத்துன் கழுத்தைச் சுற்றிக்கிடக்கும் வலிய சங்கிலியின் இரும்புக் கண்ணிகளைக் கடித்துக் கொண்டாவது இரு.” மதிவண்ணனின் கவிதை இது. அநீதிக்கு எதிராக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையே தன் பயணத்தின் லட்சியமாகக் கொண்டிருப்பவர் களப்பணியாளர் இன்பகுமார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிக்கும் இவர், தன்னுடைய தொடக்கக் கல்வியை பாணாவரத்திலும், மேனிலைக் கல்வியை அரக்கோணத்திலும் முடித்தõர். வேலூர் ஊரிசு கல்லூரியில் விலங்கியல் பட்டம் பெற்ற இவர், சுமார் ஆறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பிறகு ஆசிரியர் பணியை கைவிட்டு, தொண்டு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தõர். ஒன்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் இவருக்கு, 1995 ஆம் ஆண்டு வரை சாதியம் குறித்த எந்தப் புரிதலும் இன்றி தன் ஆசிரியப் பணியிலேயே கவனம் செலுத்தியிருக்கிறார். 1996 ஆம் ஆண்டு மும்பைக்கு ஒரு பயிற்சிக்காகச் சென்றபோது, அங்கு அவர் ரமணி என்ற பழங்குடியினப் பெண்ணை சந்திக்க…

Read More

பாரதி நிவேதன் எழுத்து குறித்து நவீன எழுத்தின் ஓர்மையை தன் எழுத்தில் வருவித்து, அதன் மூலம் புதிய ஆக்கவெளியினை உருவாக்கும் தன்மை பாரதி நிவேதனுடையது. பாரதி நிவேதன் தன்னுடைய கவிதைகளில் வைத்திருக்கும் பூடகமும் உட்பொருளும் – சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட “இறைச்சி’, “உள்ளுறை’, “உவமம்’ ஆகியவற்றிற்கு ஒத்த பண்புடையவை. பாரதி நிவேதனுடைய கவிதைகளும் அவருடைய ஆக்கத் திறனும் பலராலும் பாராட்டப்படுகிற ஒன்று. அவருடைய இரண்டு தொகுப்புகள் “ஏவாளின் அறிக்கை’, “வேறுகாலம் மறுத்து தாயம் போடுபவர்கள்’ ஆகியன நவீன இலக்கிய வட்டத்தில் அறியப்பட்டவை. பாரதி நிவேதன் குழந்தைகளுக்கான தனித்த உலகொன்றை உருக்கொள்ள வைத்து, அவர்களின் வாழ்வை அதில் பதியமிடுகிறார். குழந்தைகளின் மீதான அவருடைய பார்வையும், அதனை கவிதைக்காகப் பயன்படுத்தும் உத்தியும் மிகவும் சிறப்பானவை. அதிக பூடகத்தன்மையுடன் அவருடைய கவிதைகள் இருந்தாலும், அதனால் வெளிப்படும் கவித்துவமும் கவிதை உணர்வும் நம்மை மேலும் வாசிக்கத் தூண்டுகின்றன. செடிகள் அசைகின்றன மேகங்கள் மடியிறக்கும் கதிர்வீச்சை தூசுகளைப் பரப்பிய…

Read More

பூந்தோட்டம் வளர்த்த என்னை பெருங்காட்டில் தள்ளிப் போகிறீர்கள் ஞானம் பெற்றுத் திரும்புவேன் அப்பெருங்காட்டிலிருந்து பவுத்தக் கூறின் தொன்மையுடன் மிளிரும் இந்தக்கவிதை, வாசகனுக்குப் பல சாளரங்களைத் திறக்கிறது. எளிமையான சொற்களாலான, பல்வேறு பரிமாணங்களைத் தரக் கூடிய இக்கவிதையை எழுதியவர் யாழினி முனுசாமி. வாழ்வின் அடர்ந்த இருளிலிருந்து வெளியேறி, வெளிச்சங்களை விழிகள் சுவைக்கும் ஒரு தலித் வாழ்வின் மனவெளியை அப்படியே பதிவு செய்வது, யாழினி முனுசாமியின் கைவண்ணம். அவருடைய முதல் தொகுப்பு “உதிரும் இலை.’ கவிஞர், கட்டுரையாளர், கலை இலக்கிய விமர்சகர், பதிப்பாளர் என்ற அடையாளங்களுடன் தமிழ்த்துறை பேராசிரியராகவும் பணிபுரியும் இவர், “முரண்களரி’ என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார். கிராமத்து வாழ்விலிருந்து புலம் பெயர்ந்து, நகர வாழ்க்கைக்கு வரும் மக்களுக்கு எத்தனையோ இடர்ப்பாடுகள் இருக்கின்றன. கிராமத்திலிருந்ததைப் போன்ற அகன்ற வாசல்களோ, இயற்கை தரும் தூய்மையான காற்றோ நகரத்தில் இல்லை. ஆனால் மிக முக்கியமான பயன் ஒன்று இருக்கிறது. அதைத் தன் கவிதையில் மிக லாவகமாகப் பதிவாக்குவார் யாழினி முனுசாமி. நகரத்தின் மீது பிறர் சுமத்தும் குற்றச்சாட்டுகளையெல்லாம் அடுக்கிக் கொண்டே…

Read More

வாழ்வின் சுமைகளை அவற்றின் புரியாத பாரங்களோடு சுமப்பதும், அதிலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுவதும் அல்லது அதை ஒரு கனவாக மாற்றிக் கொண்டு உழைப்பதுமே தலித் வாழ்வியலாக இருக்கிறது. எந்த மூலையிலும் தன்னுடைய இருப்பை உழைப்பின் மூலமாகவே வெளிக்காட்டும் சாகசங்கள் நிறைந்தது அது. உண்மைதான். அய்நூறு குடும்பங்கள் வாழும் கிராமத்தின் உயிர்நாடியாக இருந்த நூற்றைம்பது ஏக்கர் நிலத்தைப் புதுச்சேரியிலிருந்து வந்த பெரும் பணக்காரனிடம் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, வாழ்வதற்கு சாராயம் காய்ச்சும் தொழிலை செய்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போயிருக்கும், வெள்ளம் கொண்ட அகரம் மக்களுக்கு. அடிக்கடி ஆற்றில் தண்ணீர் வந்து வீடுகளில் தீண்டாமை பார்க்காமல் புகுந்து கொள்ளும் தலித் கிராமம் அது. அதனால்தான் அந்த கிராமத்திற்கு அப்பெயர். காஞ்சிபுரத்தின் கடைசி எல்லையில், மரக்காணத்திற்கு பத்து கிலோ மீட்டர் தொலைவில் செய்யூருக்கு அருகில் இருக்கும் ஒரு தலித் கிராமம். தலித்துகள் மட்டுமே வாழும் அக்கிராமத்திலிருந்து வந்தவர்தான் முத்துவேல். தொலைக்காட்சியைப் பார்த்து, அதில் வரும்…

Read More