Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: யாழன் ஆதி
யாழன் ஆதி தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர்களில் ஒருவர். தலித் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாக செயல்பட்டுவரும் யாழன் ஆதி தலித் முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதிவருகின்றார்.இசை உதிர் காலம், செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா, போதலின் தனிமை, காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும், யாருமற்ற சொல், மனிதம் கொன்ற சாதியம், ஆம்பூர் (ஊர் வரலாற்று நூல்) ஆகிய படைப்புகளை வெளியிட்டுள்ளார். தம்மபதம் என்னும் புத்தரின் போதனைகளை ஆங்கிலம் வழி தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.
நான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்? புலியத்தான் கூண்டுல அடைப்பானுங்க. பசுவ மரத்துல கட்டுவானுங்க. ஏந்தெரியுமா?புலி என்øனக்காவது ஒரு நாளைக்கு பாஞ்சிடும்” என்று உணர்ச்சிப் பொங்க பேச, எதிர்முனையில் என்னால் அமைதியாக கேட்டுக் கொள்ளத்தான் முடிந்தது. அத்தனை உணர்வுப் பெருக்கும் நேர்மையும் பற்றியெரிய பேசியவர் கரன்கார்க்கி. சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். “கறுப்பர் நகரம்’ என்று ஆங்கிலேயர்களால் அடையாளப்படுத்தப்பட்ட வடசென்னை அவர் வாழிடம்.கிராமத்தில் வாழ்ந்து, தங்களுடைய முன்னோர்களின் வாழ்வியலைக் கதையாடல்களாக்கிய தலித் எழுத்தாளர்களில், சென்னையில் பிறந்து கூவத்தின் கரைகளில் வாழ நிர்பந்திக்கப்பட்ட சென்னை நகர தலித் மக்களின் வாழ்க்கையை – “அறுபடும் விலங்கு’ என்னும் நாவலால் பேசியவர் கரன்கார்க்கி. தினகரன் என்ற தன் இயற்பெயரை மக்சீம் கார்க்கியின் நினைவாகவும், ரஷ்ய இலக்கிய வாசிப்பின் ஆழத்தை உணர்த்துவதற்காகவும் கரன்கார்க்கி என்று புனைந்து கொண்டவர். கரன்கார்க்கியின் உரையாடல்கள் தீர்க்க முடியாத அவலங்களைப் பேசுவதாகவும், சதா கேள்விகளை எழுப்புவதாகவும், தன்மீதும்…
“மதம் மாறுவதாலே பெயர்கள் மாறிவிடும் / பெயர்கள் மாறுவதால் உறவுகள் வலுவடையும் / உறவுகள் வலுவடைந்தால் உரிமைப் போர் தொடங்கும் / யுத்தப் பாதை ஒன்றே அமைதிக்கு வழிவகுக்கும்” – என்ற தலித் சுப்பையாவின் பாடல், பெயர்களை மாற்றுவதால் நிகழும் சமூக மாற்றத்தை தமிழகத்தின் தலித் மேடைகள் தோறும் ஒலிக்கிறது. இக்கருத்துக்கு வலுசேர்க்கிறது தமிழ் முதல்வனின் பெயர் மாற்றம். கண்ணன் என்ற பெயர் தனித்தமிழ் சார்ந்த பெயராக இருப்பினும், அதில் அடிக்கும் ‘இந்துக்கவுச்சி’யால் அதை நிராகரித்து, தொல் குடிகளே தமிழர்களில் முதலானவர்கள் என்பதை அறிவிக்கும் பொருட்டு, தமிழ் முதல்வன் என்று பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்! உலகப் புகழ் பெற்ற கீரிப்பட்டியினை பூர்வீகமாகக் கொண்டவர் தமிழ் முதல்வன். நாட்டுப்புறக் கலைகள் மிகுந்திருக்கும் ஆ. கொக்குளத்தில் பிறந்தவர். பவுத்த நெறியில் வாழ்ந்த தம் முன்னோர்கள் கீரிப்பட்டியிலிருக்கும் தங்களின் நிலங்களை எல்லாம் ஏழை எளியவர்களுக்கு கொடுத்து விட்டு இங்கு குடியேறியபோது, அழகன் – கருப்பாயம்மாள் ஆகிய…
தலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவுபெற இருக்கிறது. இந்த 20 ஆண்டுகளில் வலுவானதும் குறிப்பிடத்தகுந்ததுமான ஆக்கங்கள் உருவாகியிருக்கின்றன. கவிதை, கதை, கட்டுரை, நாவல், ஓவியம், நாடகம், இசைப்பாட்டு எனப் பல்வேறு துறைகளில் தலித் இலக்கியம் வலுவாகத் தடம் பதித்திருக்கிறது. தமிழக அளவில் மட்டுமின்றி, இந்திய அளவிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்த எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். இத்தகு எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தமிழ் மொழியைக் கடந்து ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பிற மொழிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த 20 ஆண்டு கால இலக்கியச் செயல்பாட்டை நாம் இரண்டு வகையாகப் பகுக்கலாம்: கருத்தியல் தாக்கம், இலக்கியத் தாக்கம் என இவற்றின் எதிர்வினைகளைப் பிரித்து அலசலாம். கருத்து நிலைகளில் அளப்பரிய மாற்றத்தை தலித் இலக்கியம் உருவாக்கியிருக்கிறது. இலக்கியத் தளத்திலும் புதிய முகத்தை, வீச்சை, பாய்ச்சலை தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியிருக்கிறது. சொல்லப் போனால், தமிழ் இலக்கியத்தை அடுத்த கட்ட நகர்வுக்கு தலித் இலக்கியம்…
கல்வியும் சமூகமும் நவீன வாழ்வியலில் பிரிக்க முடியா தவை. அறியாமை, மூட நம்பிக்கை ஆகியவற்றை வேரறுக்க, கல்வி என்னும் கத்தியைப் பயன்படுத்த வேண்டும். எழுதப்படும் இலக்கியங்களும், சமூக மாற்றத்திற்கான ஆக்கங்களும் படிக்கப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் இருக்குமானால் அது சமநிலை சமூகத்தை உருவாக்கி இருக்கும். கல்வியறிவைப் பெறுவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கும் தலித் சமூகம், அதை சமூக மாற்றத்திற்காகவும் பயன்படுத்த வேண்டும் என அழுத்தமாக தன் எழுத்துகள் மூலம் சொல்கிறார் ஜெனிபர். திண்டுக்கல்லில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் ஜெனிபருடைய கல்வியியல் சிந்தனைகளும், தலித் பெண்ணியக் கோட்பாடுகளும், தலித் குழந்தைகளின் மீதான அக்கறையும் அவருடைய எழுத்துகளில் நிறைந்திருப்பதால், படைப்பாக்க வெளியைக் கடந்தும் வாசிப்போரின் கவனத்தை ஈர்க்கிறார். ஜெனிபர் எழுதத் தொடங்கியது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது. அப்போதே அவர் சிறுகதைகளை எழுதி இருக்கிறார். பெண்ணடிமைத்தனத்தையும், வரதட்சனைக் கொடுமைகளையும் அவர் கதைகளில் சித்தரித்திருக்கிறார். படிக்கும் காலங்களில் சாதி இந்து மாணவிகளிடமிருந்த வேறுபட்ட போக்கு அவரை மேலும் சாதிக்கு எதிரான…
“பறையதிர்வில் கனன்றெரியும் தோள்களைப் போல் வீங்கித் தவிக்கிறது மனசு” விதை வாசிக்கப்படும் இடங்களிலோ, சமூகம் சார்ந்த எந்த நிகழ்வுகளிலோ “புத்தம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி’ என்னும் பெண் குரல் கேட்குமெனில், சந்தேகமேயின்றி சொல்லிவிடலாம் அங்கே கு. உமாதேவி இருக்கிறார் என்று. இளம் வயதில் தலித் செயல்பாட்டுக்கான அனைத்து முன்னெடுப்புகளுடன் எழுத்திலும் களத்திலும் இயங்கும் ஆற்றலுடையவர் உமாதேவி. தன்னுடைய முதல் தொகுப்பினை, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சமர்ப்பிக்கும் பொது சிந்தனை மரபினை கடந்து, “தலித் சமூக விடுதலையை முழு மூச்சாக முன்னெடுத்து இயங்கும் களப்போராளிகளுக்கு…” சமர்ப்பணம் செய்து, தன் எழுத்தின் லட்சிய நோக்கை அழகாக வெளிப்படுத்தியவர். வந்தவாசியை அடுத்துள்ள அத்திப்பாக்கம் என்ற சிற்றூர், ஆண்கள் அதிகம் படித்தாலே மூக்கில் விரல் வைத்துப் பேசும். ஊர் தெருவில் வேலை செய்யாத சேரிக் குடும்பமே இல்லாத அவ்வூரில், ஊருக்குள் கால் பதிக்காமல் படிக்க வைக்கப்பட்டவரில் உமாதேவியும் ஒருவர். எல்லைகளைக் கடந்து இன்றும் முனைவர் பட்டத்திற்காகப்…
இயற்கைச் சூழலும், தாத்தா – பாட்டிகளும் சூழ்ந்த ஒரு கதை வாழ்வியல் கம்பீரனுக்கு. அவருடைய கதைகளில் முன்னோர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் அசைவையும் விழிபிதுங்கும் உடல்மொழிகளையும் கையாண்டு, தன்னை ஒரு முக்கியமான “கதைசொல்லி’யாக மாற்றிக் கொண்ட கவிதைக்காரர் கம்பீரன். நாட்டார் வழக்காற்றியலில் புழங்கும் சொலவடைகளையும், அவற்றுள் இருக்கும் இலக்கியத்தையும் – எழுத்து வடிவமைக்கும் ஒரு சிலரில் கம்பீரன் ஒருவர். “சொலவடைகளும் சொல்கதைகளும் இல்லை என்றால், தமிழ்மொழி ஓர் எலும்புக்கூடாகத்தான் இருக்கும்’ என்று கூறும் அவருடைய இலக்கியப் பங்களிப்பு, தற்பொழுது குழந்தைகளை நோக்கி மய்யம் கொண்டிருக்கிறது. “பிரியாத மழை நினைவு’, “ஒரு சாண் மனுஷன்’ ஆகிய இரு நூல்களை எழுதியிருக்கும் கம்பீரனின் இயற்பெயர் நீதிமணி. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகில் உள்ள சின்ன தாமல் செருவு என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை திராவிட இயக்க தீவிரப் பற்றாளராக இருந்திருக்கிறார். அண்ணா போன்றோர் அந்தக் காலங்களில் எழுதியவற்றை எடுத்துக் கொண்டு வந்து,…
தலித்துக்கள் தங்கள் மீது திணிக்கப்பட்ட சாதி இழிவைப் போக்கிக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பது ஒரு பெரிய பட்டியலுக்குரியது. ஆனால் அத்தகைய செயல்பாடுகள் எல்லாம் ஜாதியின் வேரை இன்னும் அசைக்கக் கூட இல்லை! இந்தியாவின் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படும் கல்வி சாதியைக் காப்பாற்றும் கல்வியாகவே இருக்கிறது. இங்கிருக்கும் பண்பாடுகளும் தேசிய சிந்தனைகளும் சாதியை நிலைப்பெறச் செய்வதாகவே இருக்கின்றன. இந்நிலையில் சாதி ஒழிப்புக்காக இசையைக் கருவியாக்கி வருகிறார் இசையரசு. இசையரசின் இயற்பெயர் பார்த்தசாரதி. பேறுகாலவலியெடுத்து இசையரசின் அம்மாவை திருவல்லிக்கேணி குழந்தைப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பார்த்தசாரதி கோயிலுக்கு எதிரிலேயே பிறந்துவிட்ட குழந்தைதான் இவர். அதனால் இவர் பெயரை பார்த்தசாரதி என்று இவருடைய தந்தை வைத்திருக்கிறார். ஒரு பெயர் எத்தகைய அரசியலை நிகழ்த்துகிறது என்பது இசையரசின் அனுபவங்களிலிருந்து நமக்கு கிடைக்கிறது. இசையரசு பத்தாம் வகுப்பு முடித்த பிறகு திருவல்லிக்கேணியிலிருக்கும் ஒரு பெரிய காபித்தூள் கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.சேர்ந்த அன்று அவருடைய பெயரைக்…
திருமகன். தமிழ்ச்சூழலில் பரபரப்பாக அறியப்பட்டிருக்க வேண்டிய பெயர். மூன்று கவிதைத்தொகுப்புகளை இவர் வெளியிட்டிருக்கிறார். ஆனால், இன்றையதமிழ்க் கவியுலகம் இவரை இதுவரை அடையாளப்படுத்தியிருக்கிறதா? ‘எனக்காக / நானொரு பாடலைப் பாட முடியாது / ஏனென்றால் / எனக்கும் சேர்த்து அவர்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள்’ திருமகனின் இந்த வரிகள்தான் தமிழ் இலக்கியம் இன்னும் யாரிடம் இருக்கிறது என்று உணர்த்தும் வரிகள். இது இலக்கியத்தைக் கடந்தும் பொருந்துகிறது. கவிதையில் ‘பாடலை’ என்ற இடத்தில் ‘வாழ்க்கை’ என்று போட்டால் தலித் வாழ்க்கை. ‘அரசியல்’ என்று எழுதிக் கொண்டால் தலித் அரசியல். இப்படி ஒரு ஓவியத்தை திருமகன் வரைந்திருக்கிறார். முத்து என்னும் இயற்பெயர் கொண்ட திருமகன், தூத்துக்குடி மாவட்டம் உழக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர். நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்டைகளுக்கு வயல்வெளிகளில் வேலை செய்வதற்காக தலித்துகளைக் கொண்டு வந்து இங்கு குடியமர்த்தி உருவாக்கப்பட்டிருக்கிறது இவருடைய ஊர். இந்நிலத்தின் ஆதிக்கம் முன்பொரு காலத்தில் பார்ப்பனர்களிடமும் தற்பொழுது பிள்ளைமாரிடமும் இருக்கிறது. ஜாதி…
வாழ்க்கையை அதன் போக்கில் பார்ப்பதைக் காட்டிலும் தன் வாழ்வை எதார்த்தமாய் மாற்றி, அதிலிருந்து தன் இலக்கியத்தைக் கட்டமைக்கிறார் சி. முத்துக்கந்தன். “செந்தலைக் குருவி’ என்ற கலை இலக்கியக் காலாண்டிதழை தமிழ் மக்களுக்கென இவர் வெளியிட்டு தமிழ்த் தொண்டாற்றுகிறார். தலித் இலக்கியத்தின் அரசியல் என்பது அதிகாரத்தின் வழிநடைக் குறிப்புகளாய்ப்போகிற சூழ்நிலையில் சி. முத்துக்கந்தனின் கவிதைகள் வந்துத் தெறிக்கிற இடங்கள் எல்லாம் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையாகிவிடுகின்றன. அவர் உருவாக்கும் படிமங்களும் சொற்கட்டுகளும் பாசாங்கில்லாத பாமர மொழியிலானவை. இனியும் இப்படி இருக்க முடியாது கவனி கூர்முனைக் காட்டி தலைகீழாய் நிற்கிறது பம்பரம் சிதறுகின்றன குத்தும் பம்பரங்கள்! பம்பரத்தைப் படிமமாக்கி அவர் காட்டும் வாழ்வியல் தலித் வாழ்க்கையின் இன்றைய தேவையாக இருக்கிறது. நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டு காசு பார்த்து கட்சி கட்டியவர்களிடையே முத்துக்கந்தனின் பம்பரம், தனது ஆணியை நிமிர்த்தி தாக்குதலுக்குத் தயாராய் நிற்கிறது. தாக்க வரும் பம்பரங்கள் அனைத்தும் பிளந்து சிதறுகின்றன. குத்து வாங்குவதற்கு…