மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரில் அம்பேத்கர் சிலையை சாட்சியாக வைத்து தலித் ஜோடி தங்கள் திருமண வைபவத்தை நடத்தி முடித்தனர்.
ஏழைப்பெண்களின் திருமணத்திற்கான அரசு உதவி கிடைக்கப்பெறாமல் பணமற்ற முறையில் அம்பேத்கர் சிலைக்குக் கீழ் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
கல்லு ஜாதவ், வைஜயந்தி ரஜோரியா ஆகிய இந்த இருவரும் அம்பேத்கர் சிலையை 7 முறை சுற்றி வந்து திருமணம் செய்து கொண்டனர்.
இதன் மூலம் ‘ஆடம்பர’ மரபு திருமணங்களுக்கு ஒரு மாற்றை அறிவிப்பதாக இந்தத் திருமணம் நடந்துள்ளது. அம்பேத்கர் சிலையருகே புத்தர் விக்ரகஹத்தை வைத்து இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.
முதல்வர் கல்யாந்தான் யோஜனாவின் கீழ் உதவி பெற முயற்சி செய்தோம், ஆனால் கிடைக்கவில்லை என்றார் ஜாதவ்.
இரு குடும்பத்தாரும் ஏழைகள் என்பதால் ஊரைக்கூட்டி மரபான திருமணச் சடங்குகளுடன் திருமணத்தை நடத்த வசதியில்லாதவர்கள் இது சமூக ஆர்வலர் நரேந்திர கங்ராலேயின் கவனத்துக்கு வந்த போது இந்த முறையில் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளார்.