Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » பண்டிதமணி க. அப்பாதுரையார்
    வாழ்க்கைக் குறிப்புக்கள்

    பண்டிதமணி க. அப்பாதுரையார்

    Sridhar KannanBy Sridhar KannanNovember 13, 2018No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பண்டிதமணி

    க. அப்பாதுரையார்

    ஆசிரியர்: தமிழன் (கோலார்)

    1890 – 1962

     

    இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து, வரலாறு உணர்ந்து தருக்க ரீதியாக ஆதாரங்களோடு வாதிட்ட பகுத்தறிவாதிகள் தமிழகத்தில் மிகக் குறைவு.  அவர்களில் சிறந்தவர் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார். அவர் வாதத்தில் அன்றையக் காலத்துத் தமிழ்நாடு தூயத் தமிழகம், இணைந்தோடும்-கருத்தில் தரம் தெரியும், திறன் பேசும், அறம் ஒளிரும், சிந்தனையிலே உணர்வு பொங்க, சிந்தையிலே உரத்தைத் தேக்கி செயலிலே வீரத்தைக் காட்டி வாழ்ந்தார் அப்புலவர் பெருமகனார்.

     

    இவர் 1890-இல் கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளர்ந்தார்.  தமிழ் ஆர்வமும் அறிவும் பெற்று பண்டிதரானார்.  இளமையிலே கழைக்கூத்து, மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்றவைகளில் நாட்டங் கொண்டிருந்தார் என்பார்கள்.

     

    1907-இல் இவர் வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது.  இதற்கு,  தமிழகத்து முதல் பகுத்தறிவாதியான தண்டமிழ் செல்வன் பண்டித  க. அயோத்திதாச தம்ம தாயகா அவர்களால் சென்னை ராயப்பேட்டையிலிருந்து வெளியிடப் பட்டுவந்த ‘தமிழன்’ பத்திரிகையும், அயோத்திதாசரின் எண்ணற்ற விளக்கக் கூட்டங்களே காரணமாகும் – சமயம், சமுதாயம், இலக்கியம் ஆகியத் துறைகளில் வல்லவர்களோடு வாதிட்டு வெற்றிக் காணுவது இவருக்கு கைவந்த கலையாயிருந்தது.  1912 லிருந்து திராவிடன், நவசக்தி, விலாசினி, குடியரசு போன்ற பத்திரிகை களிலும், சிறப்பாக தமிழன் பத்திரிகையிலும் பல்வேறு வகை யான அரிய கட்டுரைகளை எழுதி புகழ் பெற்றார்.

     

    ஆரம்ப காலத்தில் கிருத்துவ சமயத்தை ஏற்றியிருந்த இவர் 1911-இல் தமது 21-வது வயதில் பௌத்த நெறியை தழுவினார்.  இதில் மிகவும் ஈடுபாடு கொண்டு ‘இளைஞர் பௌத்த சங்கத்தை’ கோலார், வேலூர், சென்னை, செங்கற்பட்டு போன்ற இடங்களில் ஏற்படுத்தினார்.  சிறு நூல்கள் பல எழுதினார்.  எண்ணிலடங்கா அறியைக்கக் கூட்டங்களை நடத்தினார்.  இவரது நீத்தார் நினைவு நாளில் “எங்களுக்கெல்லாம் முன்பே பகுத்தறிவு பிரச்சாரம் செய்து மக்களை திருத்தியவர் இவர்”  என்று பெரியார் ஈ.வெ.ரா. அவர்களால் புகழப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

     

    1917-இல் மாண்டேகு சேம்ஸ் போர்ட் குழுவினருக்கு சமுதாய நிலையை வளக்கியது, 1924-இல் காந்தியடிகளோடு சமுதாயச் சீர்த்திருத்தத்தைப் பற்றி வாதிட்டது, ஆகியவை இவரது தொண்டின் சிறப்புகளாகும்.  1926-லிருந்து பள்ளி ஆசிரியராகவும், கோலார் “தமிழன்” பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றினார்.  புத்தர் அருளறம் என்ற நூலினை படைத்துள்ளார். 1930-லிருந்து 1955 வரை அவர் செய்த தொண்டு மகத்தானதாகும்.  1962-ல் உடல்நலங்குன்றி பஞ்சஸ்கந்த பிரிவினையடைந்தார்.

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous ArticleDr.அம்பேத்கர் – பிபிசி உரையாடல்
    Next Article சாகடிக்கும் சாதி… எப்போது கிடைக்கும் நீதி? – நந்தீஷ் – சுவாதி படுகொலை…
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    பி. வி. கரியமால்

    October 10, 2025

    ராஜ் கௌதமன்: நவீனத்துக்குப் புதிய வரையறை

    December 19, 2024

    சமூக வீரன் -ஆம்ஸ்ட்ராங்

    July 12, 2024
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • சாதி ஒழிப்பு (Annihilation of Caste)
    • 1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    Random Posts

    புத்தர் பொன்மொழி நூறு

    May 22, 2021

    காந்தி ஒரு மகாத்மாவா?

    October 2, 2018

    சாதி உணவான சத்துணவு!

    July 19, 2018

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – தொடர்பு எண்கள்

    January 18, 2026
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

     

    Loading Comments...
     

      %d