Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»சிறப்புப் பக்கம்»அலசல்»அதிகாரம், வர்க்கம், அம்பேத்கர்
    அலசல்

    அதிகாரம், வர்க்கம், அம்பேத்கர்

    Sridhar KannanBy Sridhar KannanMay 12, 2020No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கு மறு பெயர்தான் சீர் திருத்தம். லட்சக் கணக்கான தொழிலாளர்களை காண்டிராக்ட், காஷுவல் லேபராக வைத்துச் சுரண்டும் முதலாளிகள் இப்போது வேலைநேரத்தை அதிகரிக்க வேண்டும், குறைந்தபட்சக் கூலியைய் மேலும் குறைக்க வேண்டும் என்று கூக்குரலிட வாடிய முதலாளியைக் கண்ட போதெல்லாம் வாடும் அரசுகளும் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றத் துணிந்து விட்டன.
    வேறு வழியில்லாத தொழிலாளர்களும் வேலை இருந்தால் போதும் என இதை ஏற்றுக் கொண்டு வேலை செய்யும் கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். கட்டாய வேலை என்பது துப்பாக்கி முனையில் நடப்பதல்ல. பொருளாதார, அதிகார ஏற்றத் தாழ்வு நிறைந்த சமுதாயத்தில் பெரும்பாலான மக்களின் பொருளாதார வாழ்வைக் கட்டுப்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் தன்னிச்சையாக எவ்விதக் கட்டுப் பாடுகளையும் தன் கீழ் வேலை செய்பவர்கள் மீது விதிக்கலாம். இதுவும் ஒரு வகையான கட்டாய வேலைதான். இது அரசியல் சட்டம் வழங்கியிருக்கும்
    அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும். ஆனால் அதே அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை வைத்துதான் முதலாளிகளும் செயல் படுகின்றன. இதில் முரண்பாடு இல்லையா? இதற்கு விளக்கமளிக்கிறார் அரசியல் சட்ட வரைவுக் கமிட்டியின் தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கர்.
    அடிப்படை உரிமைகள் குறித்து ஒரு குறிப்பு தருமாறு அவரிடம் கேட்கப் பட்டது. அரசின் அதிகாரத்தைக் குறைத்து தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதுதான் அரசியல் சடத்தின் நோக்கம் என்று அப்போது ஒரு கருத்து நிலவியது. ஆனால் அது ஒரு குறுகலான பார்வை என்றார் அம்பேத்கர். ஏனெனில் நாட்டின் சமூக, பொருளாதார வாழ்வில் பெரும் செல்வாக்கு செலுத்துவது தனி மனிதர்களும், தனியார் தொழில் நிறுவனங்களும்தான் என்ற உண்மையை தனி நபர் சுதந்திர வாதம் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை என்றார் அவர். அடிப்படை உரிமைகள் என்ற பெயரில் ‘தனியார் முதலாளியின் சர்வாதிகாரத்திற்கு’ வழிவகுக்கும் சாத்தியத்தை இல்லாமல் செய்வதே அரசியல் சட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.
    தொழிலாளர் இயக்கங்களின் நீண்ட போராட்டத்தினால் கிடைத்தவைதான் நாட்டின் சுதந்திரமும், தொழிலாளர் நலச் சட்டங்களும். அவற்றின் நோக்கம் அதிகார ஏற்றத்தாழ்வைக் குறைப்பதுதான். எட்டு மணி நேர வேலையை உறுதி செய்யும் சட்டம் இயற்றப் படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் அம்பேத்கரr
    (இன்றைய இந்து ஆங்கில இதழில் கவுதம் பாட்டியா  எழுதியிருக்கும் கட்டுரையின் அடிப்படையில் எழுதப் பட்ட பதிவு)

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleநாளொன்றுக்கு சராசரியாக 4 பேர் ஆணவக்கொலை… அதிர்ச்சியளிக்கும் என்.சி.ஆர்.பி ரிப்போர்ட்!
    Next Article பௌத்த அலை இந்தியாவில் ஒரு போதும் ஓயாது
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    ரமாபாய் அம்பேத்கர் பிறந்த தினம்

    February 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • சாதி ஒழிப்பு (Annihilation of Caste)
    • 1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    Random Posts

    சாகடிக்கும் சாதி… எப்போது கிடைக்கும் நீதி? – நந்தீஷ் – சுவாதி படுகொலை…

    November 22, 2018

    “சாதிகள் இல்லை என்பது வடிகட்டிய பொய்!” – நீரஜ் கைவான்

    April 30, 2021

    Huawei Planning World’s First 3-Nanometer Mobile Chipset

    January 13, 2021

    Outrage in India after Dalit couple thrashed, crops bulldozed

    July 17, 2020
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.