பாடியவர்: கே. பி. சுந்தராம்பாள்
படம்: மணிமேகலை அல்லது பாலசன்யாசினி (1940)
புத்தர் பிரானே
நின் சத்வகுண போதம்
உலகெல்லாம் பரவுதல் வேண்டும்
புத்தர் பிரானே
நின் சத்வகுண போதம்
உலகெல்லாம் பரவுதல் வேண்டும்
புத்தர் பிரானே….
சித்த மலமகல (சித்தம் மலம் அகல – மன மாசுக்கள் நீங்க வேண்டும்)
வேண்டும் – என் சித்த மலமகல வேண்டும் – சகல
ஜீவ இம்சை நினைவும் ஒழிய வேண்டும்
புத்தர் பிரானே….
புவியில் பிறந்து பிறந்து
அலுத்தேன்
நான் புவியில் பிறந்து பிறந்து அலுத்தேன்
நான் புவியில் பிறந்து பிறந்து அலுத்தேன்
நான் புவியில் பிறந்து பிறந்து அலுத்தேன் …..
நான் புவியில் பிறந்து பிறந்து
நான் அலுத்தேன்
ஒரு புண்யமின்றி காலம்
கழித்தேன் – என்ன
தவமோ நின் திருவடி
அடுத்தேன் – நான் செய்த தவமோ நின் திருவடி அடுத்தேன்
ஒரு தாய் வயிற்றில் பிறவாப்
பேரின்பம் படைத்தேன்
இனியொரு தாய் வயிற்றில் பிறவாப்
பேரின்பம் படைத்தேன்
புத்தர் பிரானே
நின் சத்வகுண போதம்
உலகெல்லாம் பரவுதல் வேண்டும்
புத்தர் பிரானே நின் ….
Lyrics & Music composition: Papanasam Sivan, Rajagopala Iyer
Film: Manimeghalai or Bala Sanyasini
Censored on: 29.10.1940
Released in: November 1940
Thanks
DISC. LABEL
Source: Mr.Sunny Mathew
Discs and Machines Archieve
Lyrics: Akila Vijayakumar
Old songs collector Natarajan R.
KBS image: thehindu.com
Film details: Film News Anandan
