உனது மயிரை
உனக்கு சிரைக்கத் தெரியாது
உனது செருப்பை
உனக்கு தைக்கத்தெரியாது
உனது நெல்லை
உனக்கு விதைக்கத் தெரியாது
உனது பானையை
உனக்கு வனையத் தெரியாது
உனது பிணத்தை
உனக்கு புதைக்கத் தெரியாது
என்றாலும் சொல்கிறாய்
நீ என்னை தீண்டத்தகாதவன் என்று
என்னை தீண்டாமல்
வாழுமுன் கீர்த்தியை
பார்க்க நான் காத்திருக்கிறேன்..
நீ வாழவும் நான் வேண்டும்
நீ செத்தாலும் நான் வேண்டும்
சொல்
நீ என்னை தீண்டாமல்
உன் நூலை பிடித்தபடி
எத்தனை காலம் பட்டினி கிடப்பாய்?
உன் மனு
என் மயிர்
-உதயகுமார் கருணாநிதி