டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்தியாவின் மாபெரும்அறிவுஜீவி என்பதற்கான 10 காரணங்களை தோழர் Indran Rajendran.
1. இந்தியாவிலேயே 50000 நூல்கள் கொண்ட தனிமனித நூலகம் இவரது ராஜ்கிர் எனும் வீட்டில் வைத்திருந்தார்.
2. 64 பாடங்களில் முதுகலைப் பட்டமும், இந்தி, பாலி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மராத்தி, பாரசீகம், குஜராத்தி மொழிகள் பயின்றவர்.
3. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் 8 ஆண்டு படிப்பை 2 ஆண்டு 3 மாதங்களில் முடித்தவர்.இதற்காக இவர் தினந்தோறும் 21 மணி நேரமும் படித்தவர்.
4. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 23 , வரலாற்றில் 11 , சமூகவியலில் 6 , தத்துவத்தில் 5 , மானிடவியலில் 4, அரசியலில் 3, பாடங்களில் தேரியவர்.
5. உலகிலேயே “Doctor of All Science” பட்டத்தை லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பெற்ற ஒரே மனிதர்.
6 இந்தியாவிலேயே முதல் முதலாக வெளிநாட்டில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
7. லண்டன் நூலகத்தில் காரல் மார்க்ஸ் சிலைக்கு இணையாக இவருக்குத்தான் சிலை வைக்கப்பட்டுள்ளது.
8. ”என் பொருளாதாரத்தின் தந்தை” என்று பொருளாதாரத்தில் நோபல் பரிசுபெற்ற அம்ரித்யா சென் பாராட்டியுள்ளார்.
9. கொலம்பியா பல்கலைக்கழகம் 2004இல் வெளியிட்ட உலகின் 100 மாபெரும் அறிஞர்கள் பட்டியலில் அம்பேத்கரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
10. “விசாவுக்காக காத்திருத்தல்” (“Waiting for a visa”) எனும் அம்பேத்கரின் சுருக்கமான சுயசரிதை கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டு இருக்கிறது.
– இந்திரன்