அம்பேத்கரை முழுமையாகப் படித்தவர்’
அம்பேத்கர் தலித் பவுன்டேசன் என்ற அமைப்பு துவங்கி செயல்பட்டு வந்தார்,தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தீவிரமாக பேசி பல சட்ட போராட்டங்களை நடத்தியவர்,தமிழ்நாட்டில் புத்த விகாரை நிறுவியவர்,17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த சமத்துவ தலைவர்.
மேலும், “அம்பேத்கரின் எழுத்துகளை முழுமையாக வாசித்தவர் , யாராவது அவரைப் பார்க்கச் சென்றால், அம்பேத்கரின் நூல்களை எடுத்துக்காட்டி கருத்துகளை முன்வைப்பார்,” அதில் இருந்து பாபாசாகேப் என்ன சொன்னார் என்பதை படித்துகாட்டி விளக்கமளிப்பார்!தேடி வந்தவர்களுக்கு உடனடியாக பிரச்சனையை தீர்த்துவைப்பார்,படிப்பு உதவியாகட்டும்,சட்டபோராட்டமாகட்டும் இன்னும் இப்படி பல உதவிகளை செய்து வந்தார் அண்ணன் ஆம்ஸ்டாங் அவர்கள்!
