Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » அமெரிக்காவில் இந்துகோயில் கட்டும் பணியில் தலித் தொழிலாளர்கள் சித்திரவதை
    Atrocities

    அமெரிக்காவில் இந்துகோயில் கட்டும் பணியில் தலித் தொழிலாளர்கள் சித்திரவதை

    Sridhar KannanBy Sridhar KannanMay 12, 2021No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கட்டப்பட்டுவரும் பிரம்மாண்ட இந்து கோயிலுக்கு  இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட தலித் பணியாளர்கள் மீது கொடும் சித்ரவதைகளை செய்வதாக கட்டுமானத்தை மேற்கொண்டு வரும் பேப்ஸ் அமைப்புக்கு எதிராக அந்நாட்டின் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் இந்து கோயில் கட்டுமான பொறுப்பை பொச்சன்வாசி ஸ்ரீ அக்‌ஷர் புருஷோத்தம் சுவாமிநாரயண் சன்ஸ்தா (பேப்ஸ்) என்னும் இந்து அமைப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் செய்துவருகிறது. இந்திய வம்சாவழியைச் சேர்ந்த சுமார் நான்கு லட்சம் பேர் வசிக்கும் நியூ ஜெர்சியில், அமெரிக்க நாட்டிலேயே மிகப் பெரிய இந்து கோயிலை கட்டும் நோக்கோடு அக்கோயில் கட்டும் பணி   நடைபெற்று வருகிறது.

    இங்குப் பணி புரிய இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை (பெரும்பான்மை தலித்துகள்) இந்த அமைப்பு பணி அமர்த்தி அமெரிக்காவுக்கு அழைத்து வந்துள்ளது.

    நியூஜெர்சியில் குறைந்த பட்ச ஊதியமாக மணிக்கு $12 டாலர் என அரசு நிர்ணயம் செய்துள்ளது.  மேலும் அவர்கள் ஒரு வாரத்தில் 40 மணி நேரத்துக்கு மேல் பணி செய்தால் மேலும் அரை மணி ஊதியம் அதிகப்படியாக அளிக்க வேண்டும். ஆனால் இங்கு குறைந்த ஊதியமாக மாதத்துக்கு $450 அல்லது மணிக்கு $1.20 எனப் பணி புரிய அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

    கடந்த 2020 ஆம் ஆண்டு, அக்கோயில் கட்டுமான பணியில் ஈடுப்பட்டிருந்த  தொழிலாளர் ஒருவர் மரணமைடைந்ததாகவும்,  இதன் பின்னர்,  இந்தியா திரும்பிய தொழிலாளர்களில் ஒருவரான முகேஷ் குமார்,  இவ்விவகாரத்தை வாஷிங்டனில் செயல்படும் தலித் உரிமைகளுக்கான சர்வதேச ஆணையத்தின் இயக்குநரும், வழக்கறிஞருமான ஸ்வாதி சாவந்திடம் கொண்டு சேர்த்ததன் அடிப்படையில், பேப்ஸ் அமைப்புக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    அவர்கள் தாக்கல் செய்த மனுவில்,  ”இந்தியாவைச் சேர்ந்த 200 ஊழியர்கள் (பெரும்பான்மை தலித்துகள்) ஒப்பந்த அடிப்படையில் கோயில் கட்டும் பணிக்கு அழைத்துவரப்பட்டனர். இந்த தொழிலாளர்களிடமிருந்து பல்வேறு ஆவணங்களில் கையொப்பம் வாங்கி, அவர்கள் தேர்ந்த ஓவியர்கள் என அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் பொய் சொல்லக் கூறி, அவர்கள் அமேரிக்காவுக்கு வழவழைக்கப்பட்டனர்”  என்று தி நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.

    ”அவர்கள் நியூ ஜெர்சி வந்தவுடன், கோயில் நிர்வாகிகளால் அவர்களுடைய பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களுடனும் கோயிலில் உள்ள பிரதிநிகளுடனும் பேசக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிறு வகைகளையும் உருளைக்கிழங்களையும் மட்டும் உணவாக கொடுத்து, சிறிய விதிமுறை மீறீனால் கூட அவர்களுடைய சம்பளத்தில்  கோயில் நிர்வாகம் பிடித்தம் செய்துள்ளனர்” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பேசிய வழக்கறிஞர்கள், ”அவர்கள் காலை 6.30 முதல் இரவு 7.30 வரை, பெரிய கற்களை தூக்குதல், சாலைகள் போடுதல், சாக்கடையை சுத்தம் செய்தல், பெரும் இயந்திரங்களை இயக்குதல் உட்பட பல்வேறு கடினமான வேலைகளை செய்தாலும் அவர்களுக்கு மாதம் 33,000 ரூபாய் தான் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. அதிலும் 3,672 ரூபாய் தான் அவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. மீதமுள்ள சம்பள தொகை அவருடைய இந்திய கணக்கில் செலுத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளதாக தி குவிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

    பேப்ஸ் அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி கான் படேல் உள்ளிட்ட பலரின் பெயர் மனுவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பேசிய படேல்,  “ஊதியம் தொடர்பாக அவர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டை முற்றும் முழுதுமாக மறுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். பேப்ஸ் அமைப்பின் தலைவர்கள் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், ஊதிய சட்டத்திற்கு புறம்பாக ஊதியம் வழங்கியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து, நேற்றைய தினம், எஃப்பிஐ , உள்நாட்டு பாதுகாப்புத் துறை, தொழிலாளர் துறை ஆகியோர் கோயிலில் நடத்திய சோதனையில், 90 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக தி குவிண்டின் செய்தி கூறுகிறது.

    இந்த வழக்கை தொடர்ந்துள்ள டேனியல் வெர்னர் எனும் வழக்கறிஞர், தன்னுடைய அனுபவத்தில், தொழிலாளர்களை குறைந்த ஊதியத்துக்கு கட்டாயப்படுத்தி வேலை வாங்கும் முதல் சம்பவம் இது தான் என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் தாய்லாந்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ஸ்வாதி சாவந்த், “அவர்கள்  நல்ல வேலைவாய்ப்பு, அமெரிக்காவை காண வேண்டும் எனும் எண்ணத்தில் இங்கு வந்துள்ளனர். அவர்கள் மிருகங்களை விட மிக மோசமாக நடத்தப்படுவோம் என்றோ, பழுதடையாத இயந்திரத்தைப் போல வேலை வாங்கப்படுவோம் என்றோ சிறிதும் யோசித்திருக்க மாட்டார்கள்” என்று தி நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.

    ***

    1907 ஆம் ஆண்டு, ஷாஸ்திரிஜி மகராஜ் எனும் நபரால் தொடங்கப்பட்ட பொச்சன்வாசி அக்‌ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (பேப்ஸ்- Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha )எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும், பாரதிய ஜனதா கட்சியினுடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக தி குவிண்ட் இணையதளம் தெரிவித்துள்ளது.

    I am very proud of my association with the @BAPS family, known for its impeccable service world-wide. I thank HH Mahant Swami Maharaj Ji.

    I also pay tributes to HH Pramukh Swami Maharaj Ji. https://t.co/m7fMGyQDdV

    — Narendra Modi (@narendramodi) September 17, 2020

    பேப்ஸ் அமைப்பின் ஆன்மிக தலைவர் பிரமுக் சுவாமி மகராஜ், மறைவின் போது பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. பேப்ஸ் அமைப்பு, அபுதாபியில் கட்டும் இந்து கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    dalit in abrod dalit live matter Hindu outfit Hindu temple Indian labors Newjersey Swati Sawant இந்து அமைப்பு இந்து கோவில் நியூஜெர்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleஅடிமைகளாக வாழ விரும்புவோர் இதைப் படிக்கத் தேவையில்லை
    Next Article தம்மபதம்
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    அம்பேத்கரின் கனவு கிராமம்!வியந்து பார்த்த மத்திய அரசு!தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு கிராமமா?

    January 23, 2026

    ஆணவ கொலைக்கு எதிராக கர்நாடகாவில் தனிச் சட்டம்: 10 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம்!

    January 23, 2026

    Comments are closed.

    Newsletter

    Recent Posts
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    Random Posts

    No new courts yet to try SC/ST cases

    November 27, 2017

    வரலாற்றை நினைவு கூர்வோம்!

    January 1, 2018

    சனாதன தர்மமா? அரசியல் சட்டமா?

    September 14, 2023

    புத்த பகவான் அருளிய போதனை

    June 23, 2018
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

     

    Loading Comments...
     

      %d