Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Vendhan
பண்டிகைகளில் விஜய தசமி எனும் மாமன்னர் அசோகரின் வரலாற்றில் அறவெற்றி நாளின் முக்கியத்துவத்தையும், விநாயக சதுர்த்தி போன்ற இந்துத்வாமயமான பண்டிகையையும் சேர்த்து இப்பண்டிகைகளை கொண்டாடலாமா என சில பௌத்தர்கள் குழப்பிக்கொள்கிறார்கள். விஜயதசமி எனும் அறவெற்றி நாளுக்கு புத்தர், அசோகர், பிக்கு நியாகரோதர், பிக்கு மொகாலி புத்த, கலிங்கம், அசோக சக்கரம், சிங்க முத்திரை என நீண்ட வரலாறு உள்ளது. அது ஒரு வரலாற்று நிகழ்வு. ஆனால் விநாயகர் சதுர்த்தி வெறும் பண்பாட்டு பண்டிகை. அசோகரின் வரலாற்றை இந்துத்வாவால் அபகரிக்க முடியாதது. ஆயுத பூஜை எனும் பெயரில் காளி கொண்டாட்டத்தை செய்யலாமே தவிர அசோகரின் அறவெற்றி நாளின் வரலாற்றை அழிக்க முடியாது. அசோகரின் விஜய தசமியை பௌத்தர்கள் கட்டாயம் கொண்டாடவேண்டும். அதன் தேவை சமூகத்தில் இன்றும் உள்ளது. கொடிநாள் என்பது தியாகிகளை நினைவு கூருவது போன்று “போர் மறுப்பு நாள்” என போருக்கு எதிரான நாளாக அறவெற்றி நாளை (விஜய தசமியை) கொண்டாடவேண்டும்.…
நாளை தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய குடியரசு நாள் அணிவகுப்பில் பாபாசாகேப் அம்பேட்கர் அவர்களின் உருவச்சிலை இல்லை என சிலர் சொல்கிறார்கள். இது உறுதியான தகவலா என தெரியவில்லை. நாளை நடப்பது தமிழ்நாட்டை சார்ந்த தைப்பூசம் சிறப்பு நாள் அணிவகுப்பு நிகழ்ச்சியாக இருந்திருந்தால், அதில் பாபாசாகேப் சிலை ஏன் இல்லை என கேட்பது முட்டாள்தனமானது. ஆனால் நடக்க இருப்பதோ இந்திய குடியரசு நாள் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி. அதாவது இந்தியா குடியரசு என பிரகடனப்படுத்திக்கொள்வதற்கு ஆதாரமான இந்திய அரசமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள். அந்த இந்திய அரசமைப்புச் சட்டக்குழுவிற்கு தலைவராக இருந்த பாபாசாகேப்பை புறக்கணித்துவிட்டு இந்தியாவில் ஒருவர் குடியரசு நாளை கொண்டாடுகிறார் என்றால், அவருக்கு ஒன்று வரலாறு தெரியவில்லை என்று பொருள் அல்லது தெரிந்து புறக்கணிக்கப்பட்டால் அது அவரின் மீதான வன்மம் என்று பொருள். இந்திய குடியரசு நாள் என்பதே அம்பேட்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் கொண்டாடுவதை பார்த்து வருகிறோம். இந்த எளிய…
ஆசை தான் துன்பத்திற்கு காரணமா? புத்தரின் பல கோட்பாடுகள் சமூகத்தில் பல குழப்பட்டும் தவறாக கருதப்பட்டும் உள்ளன. அதில் ஒன்று தான் புத்தரின் * ஆசையே துன்பத்திற்கு காரணம் / அவா அறுத்தல்*. ஆசை / அவா இந்த சொற்களுக்கான உண்மையான பொருள் தெரியாததால், இந்த கோட்பாடே தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு பொதுசமூகத்தில் பல எதிர் கேள்விகளை கேட்கவைக்கிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் என்றார் புத்தர். ஆசையில்லாமல் மனிதர்கள் எப்படி வாழ முடியும். இந்தியா விடுதலையடைய வேண்டும் என்கிற ஆசை இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா விடுதலை பெற்றிருக்குமா? தீண்டாமையற்ற சாதியற்ற சுரண்டலற்ற சமூகம் அமைய தலைவர்கள் ஆசைபடாமல் இருந்திருந்தால் போராட முடியுமா? * தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி சுகாதாரம் கொடுக்க பெற்றோர் ஆசைப்படுதலே தவறா? குழந்தையில்லாத தம்பதிகள் தனக்கு குழந்தை வேண்டும் என ஆசைப்படுதலே தவறா? எல்லா கேள்விகளையும் மிஞ்சும் வகையில் உள்ள கேள்வி இதுதான். புத்தரே தன் தம்மம் பரவ…
மனித வாழ்வை நாசமாக்கும் மூன்று நச்சுகள் பிறக்கும் போதே நாம் ஒவ்வொருவரும் தீய சிந்தனைகள் எனும் நச்சுகளை தாங்கிக்கொண்டு பிறப்பதில்லை. நாம் மற்றவர்களை துன்புறுத்துவதும் கூட நம் பிறவி குணமல்ல. நாம் வளரும் போது, நமக்கு சொல்லித்தரப்படுகிற, நாம் பார்க்கின்றவைகளே நச்சுகளை நம் மனதில் உருவாக்குகின்றன. புத்தர் மனித வாழ்வை நாசமாக்கும் அடிப்படையான மூன்று நச்சுகளை வகைப்படுத்துகிறார். அவை புற உலகின் மீது நாம் கொள்ளும் ஆசை, வெறுப்பு, அறியாமை. மூன்று நச்சுகளை விளக்கும் ஓவியம் இது. சேவல் ‘ஆசை’யின் குறியீடாகவும், பாம்பு ‘வெறுப்பு’ என்பதின் குறியீடாகவும், பன்றி ‘அறியாமை’யில் உழல்வதின் குறியீடாகவும் ஓவியம் விளக்குகிறது. இதையே தமிழில் திருவள்ளுவப் பெருந்தகை காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் – 360 என மெய்யுணர்வு அதிகாரத்தில் நமக்கு உரைக்கிறார். (காமம் – ஆசை வெகுளி – வெறுப்பு மயக்கம் – அறியாமை) அதீத ஆசை சுரண்டலுக்கு வழிவகுக்கிறது. நுகர்வு…
இரண்டு ஆண்டுகள் இருக்கும், இணைய திமுக நண்பர்கள் சிலர் அமேசான் கிண்டில் தளத்தில் தங்களது புத்தகங்களை அறிமுகம் படுத்தும் நிகழ்வு ஒன்றை அன்பகத்தில் முன்னெடுத்தனர். அதில் பேசிய ஒவ்வொருவரும் தங்கள் புத்தகம் குறித்தும் அதற்கு உந்து சக்தியாக இருந்த திராவிட இயக்கம் குறித்தும் பல விஷயங்களை விரிவாக பகிர்ந்து கொண்டனர். அதில் ஒரே ஒருவர் மட்டும் ஒரே ஒரு செய்தியை மட்டும் இரத்தின சுருக்கமாக சொல்லி உருக்கமாய் கலைஞரை நினைவுக்கூர்ந்தார். அந்த ஒருவர் மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் எம்.எம்.அப்துல்லா அவர்கள். பெரியதாய் வாக்கு வங்கி ஏதும் இல்லாத சொற்ப எண்ணிக்கையிலே வாழும் ஒடுக்கப்பட்டோர்களிலும் ஒடுக்கப்பட்டோரான “புதிரை வண்ணார்” சமூகத்தினரின் நலன் குறித்தும் சிந்தித்து அவர்களுக்கான நலவாரியத்தை அமைத்தவர்தாம் தலைவர் கலைஞர் என்று உருக்கமாய் பேசியதுதான் அந்த ஒரே ஒரு செய்தி.ஆம், உண்மை. கடைக்கோடியில் இருக்கும் ஒற்றை தமிழனின் நிலையும் உயர சிந்திக்கும் உன்னத தலைவர்தாம் கலைஞர். இந்த விஷயத்தில் நாம்…
ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைகழகம் பாபாசாகேப் அம்பேத்கரின் சிறப்புகளையும், சாதனைகளையும் மதித்துப் போற்றுகின்ற வகையில் ‘இலக்கியத்தில்’ அவருக்கு சிறப்பு டி.லிட் டாக்டர் பட்டம் வழங்கிய நாள் இன்று. 12 ஜனவரி 1953 *** 1953 ஜனவரி 12 அன்று இதே நாளில் பாபாசாகேப் அவர்களுக்கு உஸ்மானியா பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. இந்த கவுரத்துக்கு பின்னால் மறைந்துள்ள அவமானம் என்ன தெரியுமா? இந்தியாவில் பிறந்த ஓர் ஒப்பற்ற தலைவருக்கு இந்தியாவில் உள்ள எந்த பல்கலைகழகமும் அவரது சமூக பணிக்காகவோ, அரசியல் சட்ட பங்களிப்புக்காகோ, அறிவாற்றலுக்காகவோ கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கவில்லை. (ஏற்கெனவே 1917லேயே முனைவர் (Phd) எனும் டாக்டர் பட்டம் வாங்கிவிட்டார் என்பது வேறு செய்தி) 1952ல் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகம் தான் முதன் முதலில் பாபாசாகேப் அவர்களுக்கு அவரது சமூகப்பணியை பாராட்டி “A Great Social Reformer and A Valiant upholder of Human Rights”…