Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » எங்கள் அறிவு ஆசான் பண்டிதர் க.அயோத்தி தாசர்
    வாழ்க்கைக் குறிப்புக்கள்

    எங்கள் அறிவு ஆசான் பண்டிதர் க.அயோத்தி தாசர்

    Sridhar KannanBy Sridhar KannanJanuary 11, 2009No Comments6 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    தமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெடுத்தார் அறிவு ஆசான் பண்டிதர் அயோத்திதாசர். வர்ணத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை தமிழகத்தில் மீட்டெடுக்க தத்துவ பிரம்பெடுத்தவர் பண்டிதர் ஆவார்.
    
    லூதரால் தொடங்கப்பட்ட மதச் சீர்த்திருத்தம், ஐரோப்பிய மக்களின் விடுதலைக்கு துணை இருந்தது. முகமது நபியின் மதப்புரட்சி அரேபியர்களின் அரசியல் எழுக்ச்சிக்கு வழிவகுத்தது. இந்தியாவில் சந்திரகுப்த மௌரியரால் நடத்தப்பட்ட அரசியல் புரட்சிக்குப் புத்தரின் மதப்புரட்சியும் சமுதாயப் புரட்சியும் முன்னோடியாக இருந்தது என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறுவார். அதைப்போலவே அம்பேத்கரின் பௌத்தமதப் புரட்சி தலித் மக்களின் விடுதலைக்கு வழி வகுத்தது என்றால் அதற்கு அயோத்தி தாசரின் பௌத்தமே முன்னோடியாக இருந்தது.
    
    தமிழகத்தில் தலித் மக்களின் அரசியல் மறுமலர்ச்சிக்கும், மதமறுமலர்ச்சிக்கும் தோற்றுவாயாக இருந்தவர், தமிழ் மண்ணில் தத்துவத்தையும், தன்மானத்தையும் அனைவருக்கும் கற்றுக் கொடுத்தவர் அயோத்தி தாசர் ஆவார்.
    
    பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கிற ஆரிய, திராவிட போர் தமிழகத்தில் வீரியமாய் நடந்த காலத்தில் அதற்கு அடித்தளமாய் பல ஆண்டுகளுக்கு முன்னால் வேத எதிர்ப்பு, சாதி மறுப்பு என்று வருண சனியை வலு கொண்டு தன் கருத்து ஆயுதத்தால் அடித்து நொறுக்கியவர்.

    வாழ்க்கைச் சுருக்கம்

    பண்டிதர் அயோத்திதாசர் 20.05.1845 இல் தமிழகத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஊர் குறித்து ஆய்வாளர் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றார்கள். ராயபுரத்தில் பிறந்தார் என்றும், தேனாம்பேட்டை மங்கித்தோட்டத்தில் பிறந்தார் எனவும், மேலும் கோவை அரசம்பாளையம் எனவும் எழுதி வருகின்றார்கள்.
    
    இவருடைய தந்தை பெயர் கந்தசாமி, தாயார் பெயர் தெரியவில்லை. இவரின் பாட்டனார் பெயர் பட்லர் கந்தப்பன் ஆகும். ஆங்கிலேயரிடம் பட்லராகப் பணிபுரிந்த இவர், பாதுகாத்து வைத்திருந்த ஓலைச்சுவடியில் உள்ள திருக்குறளை எல்லிசு துரைக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் ஒடுக்கப்பட்டவர்களே தேச வரலாறையும் இலக்கிய வரலாறையும் பாதுகாத்தார்கள் என்பதற்கு இது மாபெரும் எடுத்துக்காட்டாகும்.
    
    அயோத்திதாசருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் காத்தவராயன் ஆகும். பிறகு தன் பெயரை அயோத்திதாசர் என்று மாற்றிக் கொண்டார். தோடர் குலப்பெண்ணை அக்காலத்திலேயே சீர்திருத்தத் திருமணம் செய்து புரட்சி செய்தார். இருவருக்கும் தசரதராமன் என்கிற மகன் இருந்தார் எனவும் தெரிகிறது. இவரது மனைவியார் மரணமடைந்தபிறகு பண்டிதர் உறவினர்களின் வற்புறுத்தலினால் சமூகப்போராளி இரட்டைமலை சீனிவாசன் தாத்தா அவர்களின் சகோதரி தனலட்சுமி அம்மையாரை மணம் முடித்துக் கொண்டு இல்லற வாழ்வை நடத்தினார். தசரத ராமனோடு இவருக்கு ஐந்து மகன்களும் இரண்டு பெண் பிள்ளைகளையும் பெற்றெடுத்தார்.

    பண்டிதரின் அறிவுத் தேடல்

    ஒவ்வொருவரும் இந்து சதுர்வர்ண சதியை புரிந்து கொள்ளும்போது அதன் கொடூரம்  வெளிப்படும். அந்த வகையில் அயோத்தி தாசர் தன் சமூகம் சாதிய வன்கொடுமையை அனுபவிப்பதற்கு காரணங்களை ஆராய்ந்து தெளிந்த போது இந்து சமயத்தையே உதறித் தள்ளுகின்றார்.
    
    பண்டிதர் இளமையிலேயே கற்கும்  ஆர்வத்தினை கொண்டு, குருகுலத்தில் சேர்ந்து கல்வி கற்றார். மானுடத்தில் ஒடுக்கப்பட்ட என்று சொல்லப்படுகின்ற பூர்வகுடி தலித் மக்கள் கல்வி கற்றால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற மடையன் மனுவின் அதர்மத்தை தான் அனைத்தையும் கற்று பயின்றதின் மூலம் உடைத்தெரிகிறார் அயோத்தி தாசர். ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினைவினை பூர்வ குடிமக்கள் தருவோம் என்று அயோத்தி தாசர் படித்து கல்வி மாமேதை அம்பேத்கருக்கு முன்னால் எதிர்வினையாற்றினார்.
    
    தமிழ், ஆங்கிலம், பாலி மொழிகளில் தேர்ச்சி பெற்றார். இஸ்லாம், கிருத்துவ இந்து சமய தத்துவங்களை ஆழ கற்று உணர்ந்தார். அனைத்து துறைகளிலும் கற்று உணர்ந்து கொள்வதின் மூலம் அறிவுடைய சமூகமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அரசர்கள், ஆங்கிலேயர்களுக்கு அடிவருடியாக இருந்த ஆரியவர்க்கத்தின் ஆணிவேரை வெட்டி எரிய முடியும் என்றும் அறிந்தார் போலும்.

    பண்டிதரின் பன்முகம்

    19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை அயோத்தி தாசரின் காலம் என குறிக்கலாம். தமிழ் அறிவு, சமூக அறிவு, மருத்துவ அறிவு, ஆரிய எதிர்ப்பு, பகுத்தறிவு புரட்சி, திராவிட எழுச்சி, தமிழ் உணர்வு, இன உணர்வு என்று அனைத்திலும் பண்டிதரே தமிழகத்திற்கு மட்டும் அல்லாது இந்தியாவிற்கே தத்துவ நோக்கில் வழிகாட்டி வழி நடத்தினார் என்றால் மிகையல்ல.
    
    தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஆழமாக கற்றுணர்ந்து தமிழ் அறிஞராக இருந்தார். இவர் கற்ற பழந்தமிழ் நூல்கள் இன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் கல்வியும் புலமையும் ஆதிக்க வல்லுறுக்களின் வன்கருத்தியலை சிதைத்தது. அனைத்து துறைகளிலும் கற்று வல்லவராக இருந்தார் என்பது மட்டுமல்ல களப்பணியாற்றி பூர்வகுடிமக்களின் உரிமையும் பெற்றுத் தந்தார்.
    
    1870களில் தமிழகத்தில் பதிவுச் செய்யப்படாத பல ஆதித்திராவிட சங்கங்கள் இயங்கி வந்தன.
    
    1870-ல் அத்வைதானந்த சபையை நீலகிரில் நிறுவினார். 1882 தியோசபிகல் சொசைட்டி அடையாற்றில் இயங்கி வந்தது. இந்த சொசைட்டியில் ஹென்றி ஆல்காட், அயோத்தி தாசர், பேரா பி.லட்சுமிநரசு என வேத எதிர்ப்பு போராளிகள் ஒன்றிணைய தியோசபிகல் சொசைட்டி வழிவகுத்தது.
    
    1890 இல் திராவிட சங்கத்தை நிறுவினார். திராவிடர்களை அமைப்பாக்குகின்ற பணியை அயோத்திதாசர் இச்சங்கத்தின் மூலம் செய்தார்.
    
    1891 இல் திசம்பர் 1 ஆம் தேதி திராவிட சங்கத்தின் முதல் மாநாடு நீலகிரியில் அயோத்திதாசர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தலித் மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, அதிகார பகிர்வு, சமூக இழிவு நீங்க போராடுவது என அத்தீர்மானங்கள் முன்மொழிந்தன. இந்த மாநாடே ஆதிக்க வர்கத்தின் அடிதளத்தை அசைத்தது.
    
    1892 அன்றைய ஆளும் ஆங்கிலேயே அரசுக்கு அயோத்தி தாசர் இரண்டு கொள்கைகளை முன்வைத்தார்.
    
    (i) பூர்வகுடி மக்களுக்கு 4 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும்.
    
    (ii) பூர்வகுடி மக்களுக்கு புறம்போக்கு நிலம் இலவசமாக வழங்க வேண்டும் என்ற இந்த கோரிக்கையே பின்னாளில் தலித்துக்களுக்கு பஞ்சமி நிலம் ஆங்கில அரசு வழங்க தோன்றலாய் அமைந்தது.
    
    அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஹென்றி ஆல்காட் (Colonal Hendry Olcott) அவர்களின் நட்புறவு அயோத்தி தாசர் களப்பணிகளுக்கும், அவர் மேற்கொண்ட உரிமைப் போர்களுக்கும் மேலும் வலு சேர்த்தது.
    
    1894-ல் ஆல்காட் மற்றும் அன்னிபெசன்ட் அம்மையாரின் உதவியோடு சென்னையில் ஐந்து இடங்களில் பஞ்சமர் பள்ளிகளை நிறுவி சாதி இந்துக்களின் கல்வி கற்கும் பள்ளிகளில் தலித் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டது கல்வி அருமை தெரிந்த அயோத்தி தாசர் தலித்துக்களின் கல்வி உரிமையை மீட்டெடுத்தார்.

    பௌத்த மாற்றம்

    இந்துமத தத்துவங்கள், தலித் மக்களின் வாழ்வுரிமையை பறிப்பதை நன்குணர்ந்தார் அயோத்தி தாசர். தன் சமூக மக்கள் சமூக  இழிவுகளுக்கு இந்து மதம் உட்படுத்துவதாலும் சதுர்வர்ண சாதி கட்டமைப்பை கட்டுடைக்கவும், சமூகத் தலித்தில் தலித் மக்களின் வாழ்வை மீட்டெடுப்பதற்காகவும் அக, புற, சுதந்திர உணர்வோட தம் மக்களின் வாழ்க்கையை நிலை நிறுத்த அயோத்தி தாசர் பௌத்தத்தை முன்மொழிந்தார்.
    
    பௌத்த ஆர்வலர்களை நாடியே அவரின் சிந்தனை நகர்ந்தது. 1898 ஹென்றி ஆல்காட்டையும், அனகாரிகா தர்மபாலாவையும் சந்தித்து, தானும் தம் மக்களும் பௌத்த மதத்தை தழுவ இருப்பதாகத் தெரிவித்தார்.
    
    அதனடிப்படையில் அயோத்தி தாசர், ஆல்காட் பஞ்சமர் பள்ளி ஆசிரியர் பி.கிருஷ்ணசாமி முதலியோர் 1898-இல் கொழும்புக்கு சென்று பௌத்த சமயத்தைத் தழுவி தலித் மக்களின் விடுதலைக்கும், தலித் மக்கள் பூர்வ பௌத்தர்கள் என்பதை நிலை நிறுத்தினார்.
    
    சென்னை ராயப்பேட்டையில் 1898-இல் இதன் இந்திய சாக்கிய பௌத்த சங்கத்தை நிறுவினார். விகார்களையும் நிறுவி பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்கினார். தமிழகத்தில் கி.மு.300 முதல் கி.பி.600 வரை எழுச்சியோடு இருந்த பௌத்தத்தை இந்து மதம் தன்வயப்படுத்தியது. அந்தப் பண்பாட்டின் மீட்டெடுப்பை 1898-இல் அயோத்தி தாசர் மீட்டெடுத்து பௌத்தத்தை மீண்டும் தமிழகத்தில் வலுப்பெறச் செய்தார்.
    
    தமிழகத்தில் திராவிட உணர்வையும் பகுத்தறிவு உணர்வையும் ஆழமாக உள்வாங்கி கொண்டு, பிராமணீய எதிர்ப்புக்கிடையில் பத்திரிக்கை நடத்தி காட்டினார்.

    தமிழ்த் தேசியத் தந்தை

    ''தமிழ்த் தேசியத் தந்தை'' என்று அயோத்தி தாசர் அவர்களை முன்னிறுத்தலாம். 1907 இல் ஒரு பைசாத் தமிழன் என்ற செய்தி வார ஏட்டை தொடங்கினார். ராயப்பேட்டையில் இருந்து 19.06.1907 முதல் வெளிவந்து தமிழகத்தின் மூட வழக்காறுகளை, புராணங்களை, இந்துமத வெற்று கருத்துக்களை எதிர்த்து பிராமணியத்தின் வேரறுக்க தமிழன் வெளிவந்தது.
    
    திராவிடன் ''தமிழன்'' என்கிற உணர்வை திராவிடர்களுக்கு உணர்த்தவும், தமிழனின் பண்பாட்டை காக்கவும், தமிழகத்தில் வீற்றிருந்த தலைவர்களுக்கு தத்துவார்த்த, பகுத்தறிவு வழிக்காட்டவும் அயோத்தி தாசர் வெற்றிகரமாக தமிழன் இதழை 19.06.1907 முதல் 1914 வரை நடத்தினார். பிறகு தமிழன் இதழை அடுத்த தலைமுறையினர் நடத்தினர்.

    அயோத்திதாசர் இதழின் வாயிலாக

    பூர்வ குடிமக்களே தமிழகத்தில் பகுத்தறிவையும், தமிழ் உணர்வையும், இன உணர்வையும், உணர்த்தினார்கள் என்ற வரலாறையும் மற்றும் சாதியத்தின் வேர் அறுக்க அஞ்சாத சிங்கங்களாக இருந்தார்கள் என்ற வரலாற்றை தமிழகத்து அறிவுலகம் மறைத்தது என்பது (அயோத்தி தாசர்) வரலாற்று இரட்டிப்பாகும்.

    அயோத்திதாசரின் சிலபடைப்புகள்

    அயோத்தி தாசர் 1912-இல் புத்தரின் வரலாற்றை ''புத்தரது ஆதிவேதம்'' என்ற நூலாக எழுதி பெரும் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டும் அல்லாது ஸ்ரீ முருகக் கடவுள் வரலாறு அரிச்சந்திரன் பொய்கள், இந்திரர் வேத சரித்திரம், திருவள்ளுவர் வரலாறு யதார்த்த பிராமண வேதாந்த விவரம் வேஷ பிராமண வேதாந்த விவரம் விபூதி ஆராய்ச்சி என்று முதலிய பல்வேறு ஆராய்ச்சி நூல்களையும் எழுதினார்.
    
    தன் தலித் இனத்தின் வரலாற்றை தாங்கியும், இந்த இனத்தில் இழிவுகளை ஆய்ந்து தன் இழிவுகளை துடைக்க முற்படாத எவரும் வரலாற்றில் இடம்பெற மாட்டார்கள். தன் இனத்தின் மீது ஏவப்பட்ட சமூக கொடுமைகளை கண்டு தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு துயரங்களுக்கு இடையில் தன் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தந்து தன் சமூக விடுதலைக்கு பௌத்தத்தை முன்வைத்து, தன் வாழ்வை அர்பணித்து பணியாற்றிய அயோத்திதாசர் அவர்கள் 05.05.1914-இல் பரிநிர்வாணம் அடைந்தார்.
    
    அவரின் கொள்கையைப் பரப்பவேண்டும். அவரது வரலாற்றை வன்கொடுமை செய்தவர்களின் அடுத்த தலைமுறை அவரது கொள்கைகளைப் படிக்க வேண்டும். தலித் பூர்வகுடிமக்களின் முழு வரலாறாகவும் தமிழகத்தில் அயோத்தி தாசர் விளங்குகிறார். திராவிட பண்பாட்டின் தாயாகவும், தமிழ்த் தேசியத்தின் தந்தையாகவும், அயோத்தி தாசர் விளங்குகிறார் என்பதை தமிழகம், ஏற்றுக் கொள்வதே அறிவுடைமையாகும். தலித் அறிஞர்களும், ஆய்வாளர்களும் அயோத்திதாசரின் கருத்தை மக்கள் மன்றங்களுக்கு எடுத்துச் செல்வதும், அவரின் சிந்தனைகள் எளிய பிரதிகளாக அடுத்த தலைமுறைக்கு அறிவுறுத்துவதும் உடனடித் தேவையாகும். ஒரு நூற்றாண்டுகளாக தாசரின் வரலாற்று, அவரின் நூற்றாண்டு இறுதியில் தான் பரப்புரையானது என்பது இந்த சமூகத்திற்கு மேலும் செய்த சிந்தனை வன்கொடுமையாகும். இனி மறைந்த வரலாறுகளை மீட்டெடுப்போம் அயோத்தி தாசரின் பௌத்த நெறியில் அணிவகுப்போம்.

    து.பார்த்திபன்
    நாள்: 09.01.2009

    இடம் : பெருமாட்டு நல்லூர்
    கூடுவாஞ்சேரி

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleவன்முறையின் வேர் எது?
    Next Article மாற்றுப்பாதை – சுதாகர் கத்தக்
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    பி. வி. கரியமால்

    October 10, 2025

    ராஜ் கௌதமன்: நவீனத்துக்குப் புதிய வரையறை

    December 19, 2024

    சமூக வீரன் -ஆம்ஸ்ட்ராங்

    July 12, 2024
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    Random Posts

    தலித் வரலாற்றியலில் உள்ளூர் ஆவணங்கள்

    August 9, 2025

    For the cause of Dalit women

    May 3, 2021

    அம்பேத்கரியப் பொருளாதாரம் ஓர் அறிமுகம்

    September 30, 2017

    தோல்வி மனப்பான்மை எனக்கு இல்லை

    May 15, 2021
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d