www.ambedkar.in நடத்திய
பௌத்த நெறியேற்பு விழா
பௌத்த நூல்கள் வழங்கும் விழா
புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற வரலாற்று சிறப்பு மிக்க அக்டோபர் 14 ஆம் தேதியில்
www.ambedkar.in ஏற்பாடு செய்திருந்த விழாவில் சுமார் 100 க்கும்மேற்பட்டோர்
தம்மை பௌத்ததில் இணைத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், அவர்கள் கலந்து கொண்டு பெளத்த நூல்களை வெளியிட்டு தம்ம உரை ஆற்றினார் .
பௌத்தம் தழுவியவர்களுக்கு அதற்குரிய சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்..
அவர் தனது தம்ம உரையில் “புரட்சியாளர் அம்பேத்கர் ,அசோகருக்கு பின்னர் பௌத்தத்தில் மிக பெரும் புரட்சியை ஏற்படுத்தினர்.., இந்து மதத்தை பின்பற்றாத எவரும் பௌத்தர்களே… இயேசு கடவுளால் உருவாக்கப்பட்ட குழந்தை என்று தன்னை சொல்லிக்கொண்டார், முகமது நபிகள் தன்னை கடவுளால் அனுப்பப்பட்ட கடைசி தூதர் என்று சொன்னார்,கிருஷ்ணன் தான் தான் கடவுள் என்னை வணங்குங்கள் என்று சொன்னார். இவற்றை பௌத்ததோடு ஒப்பிடுகையில் கவுதம புத்தர் கடவுள் என்ற கருத்துக்குள் நுழையவே இல்லை. கடவுள் என்ற கருத்தையே அவர் பேசவில்லை தன்னை கடவுள் என்றும் சொல்லவில்லை …உலகின் முதல் பகுத்தறிவு தந்தை கவுதம புத்தர் ,
உலகின் முதல் விஞ்ஞான பூர்வமான ஞானி கவுதம புத்தர் ,
மனிதனின் உணர்வுகளை ஆராய்ந்து மானுடத்தின் வாழ்க்கை முறைகளை ஆராய்ந்து இந்த மானுடம் அமைதியாக வாழவேண்டும் என்று சிந்தித்து ஞானம் பெற்றவர் கவுதம புத்தர்”, என்றார்
திரு.ஆம்ஸ்ட்ராங் தலைவர் தமிழ்நாடு BSP அவர்கள் கலந்து கொண்டு பௌத்தம் ஏற்ற அனைவர்க்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்…அவர் தனது உரையில் “இஸ்லாமியர்களுக்கு மெக்கா எப்படியோ, கிறிஸ்துவர்களுக்கு பெதலகேம் எப்படியோ அதை போல பௌத்தர்களுக்கு நாக்பூர் எனவே பௌத்தம் ஏற்ற அனைவரும் நாக்பூர் தவறாது பயணம் செய்ய வேண்டும்” என்றார்
திரு.கவுதமசன்னா கருத்தியல்பரப்பு செயலாளர், வி.சி.க பௌத்தத்தின் அவசியத்தையும் அது குறித்த அரிய தகவல்களை பரிமாறினார்…
திரு .யாக்கன் பொதுச்செயலாளர், மாற்றுப் பத்திரிக்கையாளர் எழுத்தாளர்பேரவை, மற்றும்
பேரா.ஜெயபாலன், ஆகியோர் பௌத்தம் குறித்து எழுச்சி மிகு கருத்துரைஆற்றினார்கள்
பர்மா – பவுத்த பிக்கு அசின்வக்கவா அவர்கள் பௌத்தம் தழுவியோருக்குதீட்சையளித்தார்.
அவரது முன்னிலையில் பஞ்சசீலம், திரிசரணம் வழங்கப்பட்டது… பின்னர் அனைவரும் தங்களை பெளத்தர்களாய் பதிவு செய்தனர் .
டாக்டர் .அம்பேத்கர் இன்டர்நேஷனல் மிசன் தலைவர் திரு. சாந்தமூர்த்தி அவர்கள் பஞ்சசீலத்தின் விளக்கத்தையும் உறுதிமொழியையும் வழிநடத்தினார்..
அனைவரும் எழுந்து நின்று டாக்டர் .அம்பேத்கர், அக்டோபர் 14 , 1956 அன்று நாக்பூரில் பௌத்த மதத்தைத் தழுவியபோது எடுத்துக்கொண்ட 22 உறுதி மொழிகளை வாசித்த போது… அம்பேத்கரின் பயணம் தொடர்வதை உணர்ந்தோம் ……
ஸ்ரீதர், இரமணன், சசிகுமார் ஆகியோர் விழாவில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு www.ambedkar.in சார்பாக நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்….
கழகம் வெளியிட்டகம், அம்பேத்கர் இண்டர்னேஷ்னல் ஒருங்கிணைப்பில் www.ambedkar.in ஏற்பாடு செய்த இவ்விழாவில் வன்னியரசு – மாநிலச் செய்திதொடர்பாளர், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், உஞ்சை அரசன், எழில் கரோலின், இரா.செல்வம், துடி பாரதிபிரபு, உலகத்தமிழ் மக்கள் அரங்க தோழர்கள் மற்றும் எழுத்தாளர்கள், தலித், பெளத்த அமைப்புகளை சேர்த்த ஐநுற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஒரு டன் பௌத்த புத்தகங்கள் விழாவில் கலந்து கொண்டோருக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
அம்பேத்கர் தொடங்கி வைத்த யுத்தம் தொடர்கிறது….!
மதமாற்றப்போரில் சேரிகள் திரள்கிறது…!!