[metaslider id=3036]
ட்ரீ இந்தியா அறக்கட்டளை சார்பில் எமது அம்பேத்கர்.இன் வெளியீடான ‘புரட்சியாளரின் சாதி ஒழிப்பு ஒலிநூல்’ அறிமுக விழா 05.08.2012 அன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் ஜி.என்.ஜெ திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பேரா.முனைவர்.அம்பேத்கர் பிரியன், அய்யா திருவள்ளுவர், தோழர் யாக்கன், ச.சு.ஜைனுதீன், பேரா.சு.சக்திவேல், முனைவர் ஜெ.மகாலட்சுமி, ஆசிரியர் பேபிகலா ஆகியோர் நிகழ்ச்சியில் சாதிஒழிப்பு நூல் குறித்து சிறப்புரையாற்றினர். அம்பேத்கர்.இன் சார்பில் சென்னையிலிருந்து சசிகுமார், லெமுரியன், கமல் மற்றும் நானும் விக்ரவாண்டியிலிருந்து தோழர் கருணாநிதியும் கலந்து கொண்டோம். நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.