ஆர்ய வைஸ்யர்கள் பற்றிய தனது புத்தகம் குறித்து தனக்கு மிரட்டல்கள் வருவதாக தலித் சிந்தனையாளர், எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா போலீஸ் புகார் அளித்துள்ளார்.
“நான் ஏன் இந்து அல்ல” என்ற புகழ்பெற்ற நூலின் ஆசிரியரான காஞ்சா அய்லய்யா ஓஸ்மேனியா பல்கலைக் கழக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Samajika Smugglurlu Komatollu (வைஸ்யர்கள் சமூகக் கடத்தல்காரர்கள்) என்ற புத்தகம் தொடர்பாக காஞ்சா அய்லய்யாவுக்கு தொடர்ந்து வசை போன்கால்களும், மிரட்டல்களும் வந்து கொண்டிருக்கின்றன. இவரது புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஆர்ய வைஸ்ய சஙக்த்தினர் இந்தப் புத்தகத்தில் தங்களைப் பற்றி அவதூறு பேசப்பட்டுள்ளதாக போராட்டம் நடத்தினர்.
மிரட்டல் குறித்து காஞ்சா அய்லய்யா கூறும்போது, “நான் பயங்கரமாக அச்சுறுத்தப்படுகிறேன். தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்தி மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. தெருக்களில் எனக்கு எதிராக பயமூட்டும் செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.